Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மங்கள சமரவீர சரணடைந்தார்!

Featured Replies

Mangala-Samaraweera.jpgஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மாத்தறை பொலிஸ் நிலையத்தில் அவரது சட்டத்தரணி ஊடாக சரணடைந்தார்.
 
மங்கள சமரவீர உள்ளிட்ட 11 பேரை கைதுசெய்வதற்கான பிடியாணையை மாத்தறை மாவட்ட நீதிமன்றம் நேற்று பிறப்பித்திருந்தது. கடந்த 05அம் திகதி மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணையின் போது நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
 
இந்த நிலையில், தான் சட்டத்தரணி ஊடாக பொலிஸ் நிலையத்தில் சரணடைவதாக மங்கள சமரவீர நேற்று அறிவித்திருந்தார்.
 
இந்த நிலையில், இன்று முற்பகல் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் மங்கள சமரவீர சரணடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
 
சந்திரிக்கா குமாரதுங்க அரசாங்கத்தில் மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்திருந்ததுடன், மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்துடன் முரண்பட்டு 2006ஆம் ஆண்டு அரசாங்கத்தைவிட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

என்னதாம்பா வழக்கு?

 

யாரும் தெரிந்திருந்தால் சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

மங்கள சமரவீரவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

15 அக்டோபர் 2013



ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர மாத்தறை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அண்மையில் மாத்தறையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மாத்தறை நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன் ஏழு காயமடைந்திருந்தனர். சம்பவம் தொடர்பில் மங்கள சமரவீர உள்ளிட்ட சிலர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே 30 பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்றைய தினம் மங்கள சமரவீர உள்ளிட்ட 11 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவினைத் தொடர்ந்து மங்கள சமரவீர உள்ளிட்டவர்கள் இன்று மாத்தறை காவல் நிலையத்தில் சட்டத்தரணியுடன் சரணடைந்தனர். பிணையில் செல்வதற்கு அனுமதிக்குமாறு மங்கள உள்ளிட்டவர்கள் சட்டத்தரணி ஊடாக கோரியுள்ளனர்.


http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97665/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.