Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் அழிவு கண்டு பொங்கியெழும் தமிழகம்

Featured Replies

தமிழர்கள் அழிவு கண்டு பொங்கியெழும் தமிழகம்

`

"தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும்" என்பார்கள். அதுபோலவே ஈழத் தமிழர்களுக்காகத் தமிழகத்தில் ஓங் கிக் குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றது. புது அலை புது வேகத்தோடு வீசத் தொடங்கியிருக்கின்றது. ஈழத் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் வாழிடப் பிர தேசத்தால் வேறுபட்டவர்கள். எனினும் பேசும் மொழியால், வாழும் முறையால், பின்பற்றும் கலாசாரப் பண்பாடுகளால், இனத்தால் ஒன்றுபட்டவர்கள். இரு சாராருக்கும் இடையி லான தொடர்பு, தாய் சேய் வாஞ்சை போன்று தொப்புழ்க் கொடி உறவு. அதனால்தான், ஈழத் தமிழர்களின் அழிவு கண்டு கொதித்தெழுந்து நிற்கிறது தமிழகம்.

"சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி" என்பதுபோல இதுவரை ஈழத் தமிழர் விடயத்தில் நீறு பூத்த நெருப்பாகக் கிடந்த தமிழகத்தை, முல்லைத்தீவில் கொடூர விமானக் குண்டு வீச்சு நடத்தி, அந்த நெருப்பை ஊதிக் கனல வைத்துத் தகிக்கச் செய்திருக்கின்றது தென் னிலங்கை அரச நிர்வாகம். தமிழகத்தில் எழுந்துள்ள வெஞ்சின வெறுப்பு முழு இந்தியாவையும் பற்றிப் பிடித்து, அதனைக் கொழும்பு அரசுக்கு எதிராகத் திருப்பக்கூடிய ஏதுநிலைகள் தென்படுகின்றன.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக தென்னிலங்கை அரசு எடுக்கும் நடவடிக்கைகளை ஆட்சேபித்துத் தமிழக சட்ட மன்றமே அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டிருக் கின்றது. முல்லைத்தீவில் செஞ்சோலைச் சிறுவர் இல்ல வளாகம் மீது இலங்கை விமானப்படை நடத்திய கொடூரக் குண்டு வீச்சை மனிதாபிமானம் சிறிதும் அற்ற காட்டு மிராண்டித்தனம் என்று தமிழக சட்டசபை வர்ணித்திருக்கின்றது.

தமிழ்நாடு முழுவதிலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்களின் மனிதச் சங்கிலிப் போர், கண்டன ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் உண்ணாவிரதங் கள் என எழுச்சி அலை கரைபுரண்டு ஓடுகின்றது. ஈழத் தமிழர்களுக்காகத் தமிழக ஊடகங்கள் போட்டிபோட்டுக் கொண்டு குரல் எழுப்புகின்றன. இலங்கை அரசின் செயற்பாட்டைக் கண்டிப்பதில் தலை வர்கள் தமக்குள்ளான வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட் டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஒருபுறம் ஈழத் தமிழர்களுக்காகவும், தென்னிலங்கை அரசின் செயற்பாட்டைக் கண்டித்தும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியே குரல் எழுப்புகின்றார். மறுபுறத் தில் ஈழத் தமிழர் ஆதரவு விடயத்தில் தாங்களும் சளைத்த வர்கள் அல்லர் என்பதை எதிர்க்கட்சியான அ.தி.மு.கவின் தலைவி ஜெயலலிதாவும் அவரது கட்சியினரும் போட்டி போட்டு நிரூபிக்க முயன்றிருக்கின்றனர்.

முல்லைத்தீவு விமானக் குண்டு வீச்சுக் கொடூரத்தை சட்ட சபையில் கண்டிக்க ஆளும் தி.மு.க. நடவடிக்கை எடுக்க, ஈழத் தமிழர் தாயகம் மீதான கண்மூடித்தனமான விமானக் குண்டு வீச்சுக் கொடூரம் குறித்தும், யாழ். குடா நாட்டில் அகதிகளாக இடம்பெயர்ந்து அல்லற்படும் ஈழத் தமிழர்கள் குறித்தும் சட்டசபையில் தனியான விவாதத் துக்கு அ.தி.மு.க. கோரியிருக்கின்றது. சட்டசபையின் ஏனைய விடயங்களை ஒத்திவைத்து விட்டு ஈழத் தமி ழரின் துயரம் குறித்து ஆராய்வதற்கு விசேட விவாதம் நடத் தும்படி தமிழக சபாநாயகரைக் கடிதம் மூலம் அ.தி.மு.க. கேட்டிருக்கின்றது.

தற்சமயம் இலங்கைக்குக் கிரிக்கெட் விளையாட வந்திருக்கும் இந்தியக் கிரிக்கெட் அணியை ஈழத் தமி ழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூர நடவடிக் கைகளை ஆட்சேபித்துக் கண்டிக்கும் வகையில் திருப்பி அழைக்கவேண்டும் என்ற கோரிக்கை கூட தமிழக அரசி யல் மட்டங்களிலிருந்து எழுகின்ற சூழ்நிலைக்கு நிலைமை சூடுபிடித்திருக்கின்றது.

1983 இல் ஈழத் தமிழர்களுக்கு எதிராக வன்முறைப் புயலாக வீசிய கறுப்பு ஜூலைக் கலவரம், தமிழகத்தில் ஈழத் தமிழர் ஆதரவுப் பேரலையை எழுப்பியிருந்தது. சுமார் பதி னைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ராஜீவ்காந்தி படு கொலையை அடுத்துத் தணிந்த இந்தப் பேரலை இப்போது மீளக் கருக்கொண்டு உருவெடுத்துப் பெரும் சூறாவளி யாய்க் கிளம்பும் சாத்தியங்கள் தென்படுகின்றன.

ஈழத்தமிழர் விடயத்தைத் தவறான அணுகுமுறையோடு கையாண்ட தென்னிலங்கையின் போக்கே இந்த நிலை மாற்றத்துக்கு முழுக்க முழுக்கக் காரணம்.

ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழகத்தில் கிளம்பியுள்ள எழுச்சிப் பேரலையை ஒதுக்கிவிட்டு எதுவுமே செய்யமுடி யாது எந்த நடவடிக்கையுமே எடுக்க முடியாது என்ற இக்கட்டு புதுடில்லியில் உள்ள இந்திய மத்திய அரசின் நிர்வாகத்துக்கு ஏற்பட்டிருப்பதும் முக்கிய விடயமாகும்.

இலங்கையின் உள்நாட்டு யுத்த விவகாரத்தில் இந்தப் பிராந்தியத்தின் வல்லாதிக்க நாடான இந்தியாவை ஓரம் கட்டி விட்டு, அதையும் தாண்டி, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளை அரவணைத்துக் கூட்டு வைக்க முயலும் கொழும்பு நிர்வாகத்தின் போக்கால் ஏற்கனவே குழம்பிப் போய் இருக் கின்றது புதுடில்லி. இந்நிலையில் தமிழக மக்களின் உணர் வுப் பேரலையும் ஈழத்தமிழர்களுக்குச் சார்பானதாகப் பேரெழுச்சியுடன் கிளம்புமானால், நிச்சயமாகப் புதுடில்லி யின் ஆதரவை மட்டுமல்ல ஆசீர்வாதத்தையும் கூட கொழும்பு அரசு அறவே இழக்கும் நிலையே ஏற்படும்.

http://www.uthayan.com

எம் தோப்புள் கொடி உறவுகளுக்கு எங்கள் உள்ளத்தில் இருந்து நன்றிகள்

கடல் எம்மை பிரித்தாலும் தமிழ் என்மை இணைக்கிறது

புரட்சி

எம் தோப்புள் கொடி உறவுகள் எமக்கு ஆதரவு தருகையில் . இங்கே சில தழிழ் இன விரோதிகள் சிங்களம் விட்டெரியும் எலும்புக்கு வாழாட்டி நிக்கின்றனர் இது வேதனைக்குரியது இவர்கள் மணம் என்ன இரும்பா ? இப்படியான தமிழ் இன விரோதிகளை தமிழ் மக்கழுக்கு அடையாளம் காட்டவேண்டும். குறிப்பாக பிபீசி தமிழ் ஓசை சீவகன் . nஐயதெவன் பேன்றோர்கள் கண்டிப்பாக அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் இவர்கள் பற்றிய தகவல் இருப்பின் அறியத்தரவும்

புரட்சி

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இந்து அடிப்படைவாதம் இந்தியாவே

இவ்வுலகில் வலியதென்றால் இந்தியாவே

செந்தமிழர் அடிப்படையும் இந்தியாவே

சிறந்து நிற்க வழிகளுண்டு இந்தியாவே

புறக்கணித்துத் தமிழுணர்வை இந்தியாவே - நீ

போகவிட்டால் நெடுங்காலம் இந்தியாவே

மறக்கமுடியாப் பாடம் இந்தியாவே- சொந்த

மண்ணிலேயே நீ படிப்பாய் இந்தியாNவு

மொழியுணர்வை அழிப்பதற்கு இந்தியாவே - உன்றன்

முப்பாட்டன் வந்தாலும் இந்தியாவே

முடியுமென்று எண்ணினையோ இந்தியாவே - அது

மூடமதி நீயறிவாய் இந்தியாவே

எம் தோப்புள் கொடி உறவுகள் எமக்கு ஆதரவு தருகையில் . இங்கே சில தழிழ் இன விரோதிகள் சிங்களம் விட்டெரியும் எலும்புக்கு வாழாட்டி நிக்கின்றனர் இது வேதனைக்குரியது இவர்கள் மணம் என்ன இரும்பா ? இப்படியான தமிழ் இன விரோதிகளை தமிழ் மக்கழுக்கு அடையாளம் காட்டவேண்டும். குறிப்பாக பிபீசி தமிழ் ஓசை சீவகன் . nஐயதெவன் பேன்றோர்கள் கண்டிப்பாக அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் இவர்கள் பற்றிய தகவல் இருப்பின் அறியத்தரவும்

புரட்சி

:lol::lol::lol:

சென்னை சிறிலங்கா தூதரகம் முற்றுகை: 150 மாணவர்கள் கைது

சென்னையில் உள்ள சிறிலங்கா துணை தூதரகத்தை முற்றுகையிட்ட அகில இந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த 150 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அகில இந்திய மாணவர் பெருமன்றத் தலைவர் லெனின் தலைமையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள சிறிலங்கா தூதரகம் முன்பாக குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வளாகத்துக்குள் நுழைய முற்பட்ட போது அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் கூறியதாவது:

முல்லைத்தீவு படுகொலையானது ஒரு அரச பயங்கரவாதச் செயல். மிகக் கொடூரமான அந்தப் படுகொலையைச் செய்ததோடு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு அதை நியாயப்படுத்தும் வகையில் பொய்ச்செய்திகளை சிறிலங்கா துணைத் தூதுவர் வெளியிட்டு வருவதை எப்படி சகிக்க முடியும்?

ஆகவே எமது மாணவர் பெருமன்றம் சார்பாக இந்தப் போராட்டத்தை நடத்துகின்றோம் என்றனர்.

சிறிலங்காவில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுவதைக் கண்டித்தும், இனப்படுகொலையைத் தடுக்க இந்திய அரசு உடனே தலையிட வேண்டும் என்றும் பயங்கரவாதச் செயலை நியாயப்படுத்தும் சிறிலங்கா தூதரகங்களை மூட வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

newstamilnet.com

படங்கள்: மாலைமலர்

20060819001.jpg

20060819002.jpg

தமிழக அரசியல் தலைவர்களை எந்த அளவுக்கு நம்பலாம் என்று தெரியவில்லை... ஆனால் தமிழக மக்களின் ஆத்மார்த்தமான பகிரங்க ஆதரவு நிலை சிங்களத்துக்கு கிலியை கொடுத்து இருக்கும். இணையதளம் நடத்தும் சில புலி எதிர்ப்பாளர்கள் சிறார்கள் இறந்ததையும் விடுதலை புலிகள் இறந்ததாக செய்தி வெளியிடுகிறார்கள். குழந்தைகள் இறப்பை கூட கேவலமான செய்தியாக்கும் இவர்கள் முன்னால் விடுதலை வீரர்களாம்.... :lol::lol::lol:

ஆனால் தமிழக மக்களின் ஆத்மார்த்தமான பகிரங்க ஆதரவு நிலை சிங்களத்துக்கு கிலியை கொடுத்து இருக்கும்

எம் தோப்புள் கொடி உறவுகளுக்கு எங்கள் உள்ளத்தில் இருந்து நன்றிகள்

கடல் எம்மை பிரித்தாலும் தமிழ் என்மை இணைக்கிறது

நன்றிகள்

லட்சக்கணக்கில் இருந்த குரல்கள் கோடிக்கணக்கில் கேட்க்கும் போது சிங்களவனுக்கு கலக்கும்தானே...!

நண்றி எல்லாம் சொல்லாதேங்கோ.... அவர்களின் உதவி எங்களுக்கு இன்னும் தேவை....!

லட்சக்கணக்கில் இருந்த குரல்கள் கோடிக்கணக்கில் கேட்க்கும் போது சிங்களவனுக்கு கலக்கும்தானே...!

நண்றி எல்லாம் சொல்லாதேங்கோ.... அவர்களின் உதவி எங்களுக்கு இன்னும் தேவை....!

கருனாநிதி சொன்னா வர்த்தை நினைவில்: நான் ஒரு போது ஈழத்தமிழருக்கு தூரோகம் செய்ய மாட்டேன்

தமிழக மக்களின் ஆத்மார்த்தமான பகிரங்க ஆதரவும், கோடிக்கணக்கில் கேட்க்கும் தமிழக குரல்கள்,சிங்களவனுக்கு கலக்கும்!

நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.