Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு தேர்தல் முடிவினால் சிறிலங்கா படையினர் குழப்பத்தில் – ஒப்புக்கொள்ளும் தளபதியின் உரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு தேர்தல் முடிவினால் சிறிலங்கா படையினர் குழப்பத்தில் – ஒப்புக்கொள்ளும் தளபதியின் உரை
[ புதன்கிழமை, 16 ஒக்ரோபர் 2013, 00:48 GMT ] [ வவுனியா செய்தியாளர் ]


வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக குழப்பமடையக் கூடாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்கா இராணுவத் தளபதி, வடக்கில் பயணம் மேற்கொண்டு படையினரை சந்தித்து வருகிறார்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்த அவர், நேற்று வவுனியாவில் உள்ள வன்னிப் படைத் தலைமையகத்துக்குச் சென்றிருந்தார்.

அங்கு படையினருடன் நடத்திய கலந்துரையாடலின் போதே, வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவு குறித்து குழப்பமடைய வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.

“சிறிலங்காப் படையினர் செய்த தியாகங்களை வைத்துப் பார்க்கும்போது, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளை விட, உண்மையான வெற்றி சிறிலங்காப் படையினருக்கு கிடைத்துள்ளது.

எந்தக் கட்சியையும் சாராத சிறிலங்கா படையினர், நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்காக பல்வேறு உயிர்த்தியாகங்களைச் செய்துள்ளனர்.

இந்தத் தியாகத்தின் மூலம் அவர்கள் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கின்றார்கள்.

ஆசியாவின் அதிசயமாக சிறிலங்காவை மாற்றுவதற்காக மேற்கொள்ளும் பயணத்தைக் குழப்ப முனையும், எவருக்கும் சிறிலங்காப் படையினர் இடமளிக்கமாட்டார்கள்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா படையினர் இடம்பெயர்ந்த மக்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்த போதிலும், மாகாணசபைத் தேர்தலில் அவர்கள் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.

இதனையிட்டு படையினர் குழப்பமடையத் தேவையில்லை.

ஏனென்றால், சிறிலங்கா இராணுவம் நாட்டைப் பாதுகாத்து, ஜனநாயகச் சூழலை உருவாக்குவதற்கே பாடுபட்டது. அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

எனவே தொடர்ந்தும் நாட்டைப் பாதுகாத்து, மக்களுக்காக சேவையாற்ற வேண்டியதே சிறிலங்கா படையினரின் கடமை.

இந்த வழிமுறையில் இருந்து சிறிலங்கா படையினர் வழி தவறக் கூடாது'' என்றும் இராணுவ தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றுக்காலை வன்னிப்படைத் தலைமையத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்க சிறிலங்கா இராணுவத் தளபதி, அதையடுத்து மன்னாரில் உள்ள 54 வது டிவிசன் தலைமையகம், பம்பைமடுவில் உள்ள 25வது இலகு காலாற்படைத் தலைமையகம், கனகராயன்குளத்தில் உள்ள 561வது பிரிகேட் தலைமையகம், வெலிஓயா, பராக்கிரமபுரவில் உள்ள 62வது டிவிசன் தலைமையகம் ஆகியவற்றுக்கும் சென்று சிறிலங்கா படையினர் மத்தியில் உரையாற்றினார்.


http://www.puthinappalakai.com/view.php?20131016109258

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்குத் தேர்தலின் பின் படையினர் மீது சீண்டல்; வவுனியாவில் கொந்தளித்தார் இராணுவத்தளபதி

வட மாகாண சபைத் தேர்தலின் பின்னர் இராணுவத்தினரைச் சீண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இதன் மூலம் எமது நாட்டைப் பிளவுபடுத்தும் நிலை ஏற்பட்டால், இராணுவம் அதனைத் தடுக்க - பதிலடி கொடுக்க - எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் - இவ்வாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயாரத்நாயக்க தெரிவித்தார்.

இராணுவத் தளபதியாகப் பொறுப்பெடுத்த பின்னர் வட பகுதிக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அவர் யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினருடனான சந்திப்புக்களை முடித்துக் கொண்டு வவுனியா மாவட்டத்துக்குச் சென்றிருந்தார்.

வன்னிப்பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது;

சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் பதுங்கு குழிகளில் இருக்கும் போது எமக்கு எதிரான நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டனர்.

அத்துடன் இராணுவத்தினரை நோகடிக்கும் செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்தனர். அப்போதெல்லாம், எமது இராணுவத்தினர் மிகவும் அமைதியாகவும் பக்குவமாகவும் செயற்பட்டனர்.

அதன் பின்னர் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது, எமது இராணுவத்தினர் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு நாட்டுக்கான பணியை மேற்கொண்டு பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தனர்.

இதன் பின்னர் இடம்பெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் அரசு தோல்வியடைந்தது. மக்களுக்காக இராணுவத்தினர் பெரும் சேவைகளை செய்த போதிலும் அரசுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்தனர்.

ஆனால் நாம் அரசியலுக்கு அப்பால் இந்த நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் வெற்றி கண்டுள்ளோம் என்பதில் பெருமையடைகின்றோம்.

தேர்தலின் பின்னர் இராணவத்தினரைச் சீண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. அவ்வாறான நிலை ஏற்பட்டு நாடு பிளவுபடும் நிலைமை தோன்றினால் எமது இராணுவம் அதனைத் தடுக்க தயாராக இருக்க வேண்டும்.

இராணுவத்தினருக்கு உள்ளே இருக்கும் சிலரும் சூழ்ச்சிகள் மூலம் குழுப்பங்களை ஏற்படுத்த சிலர் முற்படுவர். எனவே படையினர் அனைவரும் விழிப்பாக செயற்பட வேண்டும்.

தொப்பை இராணுவம்

இராணுவத்தில் இருப்பவர்களுக்கு தேகாரோக்கியம் முக்கியம். சிலர் பெருத்த வயிறுடன் காணப்படுகின்றனர். அவ்வாறானவர்கள் எமக்குள் இருந்தால் பதவியுயர்வுகள் கிடைக்காது என்பதை ஞாபகப்படுத்துகின்றேன் - என்றார்.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=464892365216393294#sthash.KpA7tEfX.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா அரசுக்கும் அப்பால் இந்த நாட்டின் ஜனநாயகத்தை இராணுவமே நிலைநாட்டுவதாக சூசகமாகத் தெரிவிக்கின்றார். தயக்கமின்றி சிறீலங்காவை இராணுவமே ஆட்சி செய்வதாக வெளிப்படையாகக் கூறலாமே.? :blink: 

 

தொப்பை இராணுவம்

இராணுவத்தில் இருப்பவர்களுக்கு தேகாரோக்கியம் முக்கியம். சிலர் பெருத்த வயிறுடன் காணப்படுகின்றனர். அவ்வாறானவர்கள் எமக்குள் இருந்தால் பதவியுயர்வுகள் கிடைக்காது என்பதை ஞாபகப்படுத்துகின்றேன் - என்றார். :huh: 

 

பெருத்த வயிறு பிணத்தைப் புணர்வதற்கு தடையாக இருக்குமோ.? :(  :icon_mrgreen:  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை துண்டாட முயற்சிப்போரின் தலை உடலில் இருக்காது என இராணுவத் தளபதி கடுமையான எச்சரிக்கை

17 அக்டோபர் 2013


புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர் - இராணுவத் தளபதி


தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.


நாட்டை பிளவுபடுத்த எத்தனிக்கும் எந்தவொரு தரப்பிற்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இராணுவத் தளபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் மேற்கொண்ட முதலாவது வடக்கு விஜயத்தின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


வட மாகாணசபைத் தேர்தல் வெற்றியானது பிரிவினைவாதத்திற்கான அங்கீகாரமாக சிலர் கருதிச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


நாட்டை துண்டாட முயற்சிப்போரின் தலை உடலில் இருக்காது என இராணுவத் தளபதி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.


என்ன விலை கொடுத்தேனும் நாட்டின் சமாதானத்தை பேணிப் பாதுகாக்க இராணுவத்தினர் நடவடிக்கை எடுப்பர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய ஆதரவாளர்களும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொடர்ந்தும் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருதாகத் தெரிவித்துள்ளார்.


ஜனநாயகக் கட்டமைப்பில் நாட்டின் எந்தவொரு பிரஜையும் வாழ்வதற்கு எவ்வித தடையும் கிடையாது, எனவும் வன்முறைகளைத் தூண்டும் நோக்கில் செயற்படுவோருக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


வடக்கில் தேர்தல் வெற்றியானது தனிப்பட்ட ஒர் கட்சிக்கு கிடைத்த வெற்றியல்ல, அது தேர்தலுக்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97747/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இராணுவத் தளபதி தனது இராணுவத்தைக் கட்டமைக்கவேண்டும். :icon_idea:  பொதுமக்களைக் கட்டமைப்பது அரசினுடைய வேலை. :icon_idea:  அரசினுடைய கட்டளைகளை ஏற்று நிறைவேற்றுவதே இராணுவத் தளபதியின் கடமையாகும். சிங்களப் பகுதிகளில் அரசினுடைய கட்டளைகளை ஏற்று நிறைவேற்றும் இராணுவம், <_<  தமிழ்ப் பகுதிகளில் தானே கட்டளை பிறப்பித்து நிறைவேற்றிக் கொள்கிறது. :blink:   அதற்கு சிறீலங்கா அரசும் அனுமதி அளித்துள்ளதையே தளபதியின் கூற்று நிரூபிக்கின்றது. இச் செயற்பாடுகள் சிறீலங்காவின் அழிவுக்குக் கட்டியம் கூறி நிற்கிறது. :( :o   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.