Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் விபரங்களைத் திரட்டும் மர்மக் குழு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
vote-seithy-20130822.jpg

கொழும்பில் தமிழர்கள், முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத குழுவினரால், குடியிருப்பாளர்களின் தனிப்பட்ட விபரங்களைக் கோரும் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தப் படிவத்தில், முழுப்பெயர், முகவரி, தேசிய இனம், தேசிய அடையாள அட்டை இலக்கம், கடவுச்சீட்டு இலக்கம், தொலைபேசி இலக்கம், தொழில் முகவரி, பணிசெய்யும் காலம் உள்ளிட்ட பல விபரங்கள் கோரப்பட்டுள்ளன. போர் நடந்த காலங்களில் கொழும்பில் வசிக்கும் தமிழர்கள், இதுபோன்று அடிக்கடி படிவங்களை நிரப்பி ஒப்படைக்க வேண்டியிருந்தது. சிறிலங்கா காவல்துறை, இராணுவம், காவல்துறை, விமானப்படை, கடற்படைப் புலனாய்வுப் பிரிவுகள் தனித்தனியாக இத்தகைய படிவங்கள் மூலம் விபரங்களை சேகரித்திருந்தன.

  

எனினும் தற்போது அத்தகைய பதிவு முறை இல்லாத சூழலில், அடையாளம் தெரியாத நபர்களால் இந்த படிவங்கள் வீடுவீடாக விநியோகிக்கப்பட்டுள்ளன. இது கொமன்வெல்த் மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடா அல்லது சிறுபான்மையினரைக் குறிவைக்கும் சிங்கள இனவாத குண்டர்களின் வேலையா என்று தெரியாமல் கொட்டாஞ்சேனை வாசிகள் குழப்பமடைந்துள்ளனர்.

இதுகுறித்து கொட்டாஞ்சேனை காவல்துறையிடம் முறையிட்டும், அவர்கள் அதுகுறித்து அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனினும், அரச புலனாய்வுச் சேவைகள் பொதுமக்களிடம் தகவல் திரட்டுவதற்கு முன்னர், காவல்நிலையங்களுக்கு அறிவிப்பது வழக்கம் என்று கொட்டாஞ்சேனை காவல்நிலைய பொறுப்பதிகாரி ஒவிற்றிகம தெரிவித்துள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=95375&category=TamilNews&language=tamil

கொழும்பில் மீண்டும் தமிழர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக முறைப்பாடு:-
20 அக்டோபர் 2013
 
lg-share-en.gif
 

கொழும்பில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

 

கொழும்பில் மீண்டும் தமிழர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக முறையிடப்பட்டு உள்ளது. கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் தமிழ் மக்களின் வீடுகளில் பொலிஸார் விண்ணப்பப் படிவங்களை கையளித்ததாகவும்  குடும்ப விபரங்களை நிரப்பிவிட்டு கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் கையளிக்குமாறு வலியுறுத்தியதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் விண்ணப்பப் படிவங்கள் பொதுமக்களிடம் கையளிக்கப்படவில்லை என கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேமந்த மறுத்துள்ளார்.

தமிழர்களை யுத்தகாலத்தில் பதிவு செய்தது போன்று மீண்டும் பதிவு செய்யும் நோக்கம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு கிரான்பாஸ் பிரதேசத்திலும் பதிவு செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மக்களிடம் வழங்கப்பட்டதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

பொதுநலவாய நாடுகளின் மாநாடு அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில் பொலிஸ் திணைக்களம் இவ்வாறு பதிவு செய்யும்  நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக மற்றுமொரு  தகவல் கூறுகின்றது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97897/language/ta-IN/article.aspx

இப்பிடி தகவல் எடுத்தது எடுத்து தமிழகளின் விபரங்கள் இலங்கையில் எல்லா அமைப்புகள் இடத்திலும் இருக்கும்.

 

எனக்குத்தெரிந்து இது சிங்கள கடும் போக்கு அமைப்புகள் தான் செய்கின்றதாம்.

இதுக்கு பாதுகாப்பு அமைச்சு மறைமுக அனுமதியும் கொடுத்திருக்காம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.