Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபைக்காக ரூ.17 பில்லியன் ஒதுக்கீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Northern_SLMAP.jpg

2014ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தில் வட மாகாண சபைக்காக 17 பில்லியன் 331 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டுவரும் செலவினமாக 11,500,000,000  ரூபாவும் மூலதன செலவினமாக 5,831,000,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

1987ஆம் ஆண்டுக்கு பின்னர் வடமாகாண சபைக்கான தேர்தல் 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்டது. 

இதேவேளை, கிழக்கு மாகாண சபைக்கு 15 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டுவரும் செலவினமான 12 பில்லியன் ரூபாவும் மூலதன செலவாக 3 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

உள்ளுராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சுக்கு 148 பில்லியன் ரூபா, 2014ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/86716--17-.html

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஆண்டில் சிறிலங்காவின் எந்த அமைச்சுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
[ புதன்கிழமை, 23 ஒக்ரோபர் 2013, 07:54 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

 

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட 2014ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில், அடுத்த ஆண்டிலும் பாதுகாப்புச் செலவுகளுக்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்றுமாலை இந்த நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை சமர்ப்பித்திருந்தார்.

இதன்படி, அடுத்த ஆண்டுக்கான மொத்த செலவினம், 30 சதவீதத்தினால் அதிகரித்து 1542 பில்லியன் ரூபாவாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டுக்கான மொத்த அரசாங்க செலவினம் 1335 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஆண்டுக்கு 289 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு, அடுத்த ஆண்டில் 253 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

சிறிலங்கா அதிபருக்கான செலவினங்களுக்கு இந்த ஆண்டில் ஒதுக்கப்பட்டுள்ள 74 பில்லியன் ரூபா, 2014ம் ஆண்டில் 85 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் வசம் உள்ள நிதி அமைச்சுக்கு, 164 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

மகிந்த ராஜபக்சவிடம் உள்ள மற்றொரு அமைச்சான, துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு, 144 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது, இந்த ஆண்டில் இந்த அமைச்சுக்கு 131.4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

சுகாதார அமைச்சுக்கு இந்த ஆண்டில், 93.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2014ம் ஆண்டில், 117.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

தகவல் ஊடகத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படவுள்ளது. இதன்படி இந்த ஆண்டில் 27.1 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள இந்த அமைச்சுக்கு அடுத்த ஆண்டில், 26.8 பில்லியன் ரூபாவே ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

கல்வி அமைச்சுக்கு, இந்த ஆண்டில், 37.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு, 38.8 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

மேலும், பொதுமக்கள் உறவுகள் அமைச்சுக்கு, 2.4 பில்லியன் ரூபாவும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 106 பில்லியன் ரூபாவும், சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு 52.3 பில்லியன் ரூபாவும், ஒதுக்கப்படவுள்ளன.

இந்த ஆண்டில் பிரதமருக்காக ஒதுக்கப்பட்ட 320 மில்லியன் ரூபா, அடுத்த ஆண்டில் 300 மில்லியன் ரூபாவாக குறைக்கப்படவுள்ளது. மேலும்,

*பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு 138.20 பில்லியன் ரூபாவும்,

*நிர்மாண பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சுக்கு 4.02 பில்லியன் ரூபாவும்

*உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சுக்கு 148.84 பில்லியன் ரூபாவும்

*கடற்றொழில் நீரியல் வள அமைச்சுக்கு 44.3 பில்லியன் ரூபாவும்

*மீள்குடியேற்ற அமைச்சுக்கு 357 மில்லியன் ரூபாவும்

*புனர்வாழ்வு, சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சுக்கு 5.71 பில்லியன் ரூபாவும்

*சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சுக்கு 13.67 பில்லியன் ரூபாவும்

*விவசாய அமைச்சுக்கு 44.47 பில்லியன் ரூபாவும்

*கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக அமைச்சுக்கு 1.72 பில்லியன் ரூபாவும்

*போக்குவரத்து அமைச்சுக்கு 58.56 பில்லியன் ரூபாவும்

*வெளிவிவகார அமைச்சுக்கு 9.30 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணசபைக்கு அடுத்த ஆண்டில், 17.33 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது. இதில், மீண்டெழும் செலவினம் 11.5 பில்லியன் ரூபா. மூலதனச் செலவினம் 5.83 பில்லியன் ரூபாவாகும்.

கடந்த ஆண்டில் வடக்கு மாகாணசபைக்கு 13.96 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, கிழக்கு மாகாணசபைக்கு அடுத்த ஆண்டு 16.04 பில்லியன் ரூபா ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.


http://www.puthinappalakai.com/view.php?20131023109301

  • கருத்துக்கள உறவுகள்
*மீள்குடியேற்ற அமைச்சுக்கு 357 மில்லியன் ரூபாவும்

 

கிருபன், இவ்வளவும் தானா, மீள் குடியேற்ற அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது?

 

அல்லது 'பில்லியனில்' வந்திருக்க வேண்டுமோ? :o

 

இணைப்புக்கு நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

வரவுசெலவுத் திட்டத்தில் 47 வீதமான நிதியை விழுங்கும் ராஜபக்ச சகோதரர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 29 ஒக்ரோபர் 2013, 08:20 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]


சிறிலங்காவின் 2014ம் ஆ ண்டுக்கான மொத்த செலவினத்தில் 47 சதவீதமான நிதி ராஜபக்ச சகோதரர்களுக்கே ஒதுக்கப்படவுள்ளதாக, ஐதேக குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க,

“2014ம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் நாட்டின் மொத்த செலவினமான, 1.54 ட்ரில்லின் ரூபாவில், 724 பில்லியன் ரூபா – மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச ஆகிய மூவருக்கும் ஒதுக்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டில் சிறிலங்கா அதிபருக்கு ஒதுக்கப்பட்ட 7.52 பில்லியன் ரூபா நிதி, 2014இல் 8.56 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

ஆனால், பிரதமருக்கு கடந்த ஆண்டில் ஒதுக்கியதை விட, 20 மில்லியன் ரூபா குறைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் வசம் உள்ள நிதி, துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சுக்காக 362.56 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.

பகில் ராஜபக்சவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு, 106 பில்லியன் ரூபாவும், கோத்தாபய ராஜபக்சவினால் இயக்கப்படும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு 253.9 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படவுள்ளது.

ஆனால், ஏனைய மற்றெல்லா முக்கிய அமைச்சுக்களுக்கும், 624 பில்லியன் ரூபா மட்டுமே ஒதுக்கப்படவுள்ளது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.


http://www.puthinappalakai.com/view.php?20131029109334

Northern_SLMAP.jpg

2014ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தில் வட மாகாண சபைக்காக 17 பில்லியன் 331 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டுவரும் செலவினமாக 11,500,000,000  ரூபாவும் மூலதன செலவினமாக 5,831,000,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

1987ஆம் ஆண்டுக்கு பின்னர் வடமாகாண சபைக்கான தேர்தல் 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்டது. 

இதேவேளை, கிழக்கு மாகாண சபைக்கு 15 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டுவரும் செலவினமான 12 பில்லியன் ரூபாவும் மூலதன செலவாக 3 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

உள்ளுராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சுக்கு 148 பில்லியன் ரூபா, 2014ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/86716--17-.html

இதுகளை எத்தனை கொடிகள் என்று யாராச்சும் சொல்லுங்கப்பா.

 

இது என்ன நூற்றி பதினைந்து கொடிகளா அல்லது ஆயிரத்தி நூற்றி ஐம்பது கொடிகளா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.