Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மனித உரிமை செயற்பாடு குறித்து மியன்மாரில் இருந்து கோரிக்கை! இலங்கை மீது திருப்தி இல்லை என்கிறார் கெமரூன்!!

Featured Replies

Cameron_Suu-Kyi.jpgமனித உரிமைகள் குறித்து இலங்கை கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என மியன்மாரின் எதிர்க்கட்சித் தலைவியும், நோபள் சமாதான விருது வென்றவருமான ஆங் சான் சூகி கோரியுள்ளார்.

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூனை நேற்று (23) லண்டனில் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும்போது மனித உரிமை குறித்த இலங்கையின் அணுகுமுறை குறித்து பிரித்தானியா ஆராய்ந்த பார்க்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

வெறுமனே அரசாங்கத் தரப்பை மட்டும் சந்திக்காது, அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிவது அவசியமானது எனவும் கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூன், ஆன் சான் சூ கீயின் கருத்து மிகவும் சரியானதுத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு அமர்வுகளை புறக்கணிக்க வேண்டும் என்ற தொழிற்கட்சியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது. யுத்தத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது. அமர்வுகளைப் புறக்கணித்துவிட்டு கேள்வி எழுப்பவோ குற்றஞ்சுமத்தவோ முடியாது. இதனால் தொழிற்கட்சியின் கோரிக்கை ஏற்புடையதாக இல்லை என டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார்.

http://tamilworldtoday.com/home

 

article-2474142-18EEC6A300000578-714_634

 

article-2474142-18EEC69C00000578-944_306article-2474142-18EEC68700000578-371_308

article-2474142-18EEFE0900000578-531_634

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் வடக்கு பகுதிக்கும் செல்வேன் – ஆங் சான் சூ கீயிடம் பிரித்தானியப் பிரதமர் உறுதி
[ வியாழக்கிழமை, 24 ஒக்ரோபர் 2013, 05:16 GMT ] [ கார்வண்ணன் ]


கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க சிறிலங்காவுக்குச் செல்லும் தான், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் வடக்குப் பகுதிக்கும் செல்லவுள்ளதாக, மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூ கீயிடம் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் உறுதியளித்துள்ளார்.

நேற்று லண்டனில் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூனை, ஆங் சான் சூ கீ சந்தித்துப் பேசினார்.

அப்போது, சிறிலங்காவுக்குச் செல்வதானால், அரசாங்கத்துடன் மட்டுமன்றி சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினருடனும், பேச வேண்டும் என்று டேவிட் கமரூனிடம், ஆங் சான் சூ கீ வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

அதற்கு அவர், ஆங்சான் சூ கீ சொன்னது மிகவும் சரியானதே என்று தாம் நினைப்பதாகவும், சிறிலங்கா செல்லும் போது தாம் நாட்டின் வடபகுதிக்கும் செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து தாம் மகிழ்ச்சி கொள்ளவில்லை என்றும், ஆனாலும், முன்னணி நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அங்கு செல்ல முடிவு செய்துள்ளதாகவும் டேவிட் கமரூன் குறிப்பிட்டுள்ளார்.

தாம் சிறிலங்கா அரசாங்கத்துடன் மிகவும் இறுக்கமான பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


http://www.puthinappalakai.com/view.php?20131024109306

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.