Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராணுவ மேலாதிக்கத்தில் துப்பாக்கி முனைகளின் கீழ் நடத்தப்படுவது பாலியல் வல்லுறவேயன்றி பாலியல் தொழில்ல - அனந்தி சசிதரன் (எழிலன்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவ மேலாதிக்கத்தில் துப்பாக்கி முனைகளின் கீழ் நடத்தப்படுவது பாலியல் வல்லுறவேயன்றி பாலியல் தொழில்ல
24 அக்டோபர் 2013


அனந்தி சசிதரன் (எழிலன்)


முள்ளிவாய்க்கால் பேரவலத்தினிலிருந்து ஒருவாறு மீண்டெழுந்து கொண்டிருக்கும், வட-கிழக்கு பெண் சமூகத்தினை மீண்டும் மீண்டும் சகதிக்குள் இழுத்து வீழத்த கொழும்பு ஆட்சியாளர்களும், அவர்களது நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுத்து வரும் சில தரப்புக்களும் முற்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. அவ்வகையிலே தற்போது ஒருங்கிணைந்;த பிராந்திய தகவல் வலையமைப்பு (IRN) இனால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையும் அமைந்துள்ளது.

தமிழர் தாயக ஊடகங்கள் பெரும்பாலும், இத்தகைய உள்நோக்கம் கொண்ட போலி அறிக்கைகளை புறந்தள்ளி விடுகின்றபோதும் மற்றொரு புறம் சில தரப்புக்கள், புலம்பெயர்தேசங்களில் அவற்றை தூக்கி ஆரவாரப்படுத்திக் கொண்டிருக்கின்றன. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னதாக, இவ்வாறான பாலியல் தொழலில் ஈடுபடுவது தொடர்பான குற்றச்சாட்டுக்களை போலியாக கட்டவிழ்த்து விடுவதும், பின்னர் அவை நிஜத்திற்கு முன்னதாக, தோற்றுப்போய் விடுவதும் வழமையானதே.

அவ்வகையிலேயே தற்போதும், ஸ்ரீலங்காவின் வடக்கில் பாலியல் வியாபாரத்துக்காக வாடிக்கையாளர்களுக்கான வலிந்தழைப்பு எனும் தலைப்பில் ஒருங்கிணைந்த பிராந்திய தகவல் வலையமைப்பு (IRN) அறிக்கையொன்றை வெளிக் கொணர்ந்திருக்கின்றது.

' வடக்கிலுள்ள கடுமையான இராணுவ பிரசன்னம் அத்தோடு வடக்கில் கட்டுமான வேலைகளை ஏறெடுத்து நடத்துவது என்பன பாலியல் வியாபாரம் அதிகரித்திருப்பதற்கான காரணமென இவ்வறிக்கை கூறுகின்றது. ஆனால் இராணுவ மேலாதிக்கத்தின் கீழ் துப்பாக்கி முனைகளின் கீழ் நடத்தப்படுவது பாலியல் வல்லுறவேயன்றி வெறுமனே இவர்கள் அடையாளப்படுத்துவது போன்று பாலியல் தொழில்ல. அண்மையில் பூநகரியில் சீருடை அணிந்தோரால் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், அந்தபெண் உயிருக்குப்போராடிய போதும் வைத்திய சிக்சைகளிற்கு அனுமதி மறுக்கப்பட்டது இவர்களிற்கு தெரியாததொன்றா?

அதே போன்று புலம்பெயர் சமூகத்திலுள்ள ஸ்ரீலங்காவில் பிறந்த தமிழர்கள் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களின் பின் தங்கள் சொந்த இடங்களிற்கு வருகை தருவதும் பாலியல் வியாபாரத்திற்கான கிராக்கியை அதிகரித்திருப்பதாக கூறிக்கொள்வதன் மூலம், யுத்தத்தின் பின்னரான மீள் கட்டுமானத்திற்கு தம்மால் இயன்ற உதவிகளை வழங்கி வரும் புலம்பெயர் உறவுகளை பிரித்து வைக்க முன்னேடுக்கப்படும் சூழ்ச்சியேயன்றி வேறொன்றல்ல.

இங்கு தமது அறிக்கையின் மூலோபாயத்தை நிரூபிக்க, சாட்சியமாக்கப்பட்டுள்ள பலரும் உள்ளுர் மற்றும் சர்வதேச நிதி ஈட்டங்களிற்காக எதையும் பேசவோ, எழுதவோ தயாராக உள்ளவர்களேயென்பது அனைவரிற்கும் நன்கு தெரியும். உத்தியோக பூர்வ புள்ளி விபரங்களோ சான்றாதாரங்களோ இன்றி, வெறுமனே கருத்துக்களை ஆதாரமாக்கி வெளியிடும் இத்தகைய அறிக்கைகள் சம்பந்தப்பட்டவர்களின் கூட்டுக்களவாணித்தனமே அன்றி வேறொன்றல்ல.

புனிதநகராக கூறிக்கொள்ளும் அனுராதபுரத்தில் மட்டும் 18 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாலியல் ரீதியிலான தொழில்களில் ஈடுபட்டுவருவதாக தெற்கு ஊடகங்கள் கூறிவருகின்றன. இன்று நேற்றல்ல, கடந்த பத்துவருடங்களிற்கு மேலாக அத்தகைய நிலை தொடர்கின்ற சூழலில் இவர்கள் என்ன செய்தார்கள்?.

உண்மையில் வடக்கினை வைத்து வர்த்தகம் செய்வதாலேயே இவர்களிற்கு வருமானமும், நிதி ஒதுக்கீடுகளும் கிடைக்குமென்பதே உண்மை. அதற்காகவே நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்களே அன்றி வேறெதுவுமேயில்லை. யுத்தத்தின வடுக்களை தாங்கி இயல்பு வாழ்விற்கு திரும்ப போராடிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பத்தலைவிகளை நான் அறிவேன். ஏனெனில் அவர்களுள் ஒருத்தியாக நானும் வாழ்கின்றேன்.

மரணித்த, காணாமல் போயுள்ள தமது குடும்பத் தலைவர்களை அவர்கள் நினைவுகளில் சுமந்துள்ளார்கள். அந்நினைவுகளினூடேயே தமது குடும்ப பாரங்களை அவர்கள் சுமக்கிறார்கள். அதே போன்றே தடுப்புகளிலுள்ள போராளிகளது குடும்பங்களது நிலையும் உள்ளது. எவ்வாறேனும் தமது பிள்ளளைகளிற்கு கௌரவமான வாழ்க்கையொன்றை அமைத்து தரஅவர்கள் போராடுகிறார்கள்.

ஆனால், இத்தகைய அறிக்கைகளினூடாக அவர்களை விபசாரிகளாக சாயம் பூசி சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கவே சதிதிட்டம் வகுக்கப்படுகிறது. அவர்களது பிள்ளைகளும் அதே சாயலுக்குள் வீழ்த்தப்படுகிறார்கள். அங்கொன்று இங்கொன்றுமாகவுள்ள சில குறைகளை சீர் செய்ய வேண்டிய கடமை எமது அரசியல் தலைமைகளிற்கேயுள்ளது. அப்;பணியை ஆற்ற வட மாகாணசபையின் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் கௌரவ உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுப்பதுடன், எமது நாடாளுமன்ற உறுப்பினர்களையும், புலம்பெயர் உறவுகளையும் இணைந்து கொள்ள அழைக்கின்றேன்.

வெறும் பிழைப்பு வாதத்திற்காக அவர்களை விபசாரிகளாக்கும் அவர்களே உண்மையான எழுத்து விபசாரிகளாவர்.
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98078/language/ta-IN/article.aspx

' வடக்கிலுள்ள கடுமையான இராணுவ பிரசன்னம் அத்தோடு வடக்கில் கட்டுமான வேலைகளை ஏறெடுத்து நடத்துவது என்பன பாலியல் வியாபாரம் அதிகரித்திருப்பதற்கான காரணமென இவ்வறிக்கை கூறுகின்றது. ஆனால் இராணுவ மேலாதிக்கத்தின் கீழ் துப்பாக்கி முனைகளின் கீழ் நடத்தப்படுவது பாலியல் வல்லுறவேயன்றி வெறுமனே இவர்கள் அடையாளப்படுத்துவது போன்று பாலியல் தொழில்ல

 

வெறும் பிழைப்பு வாதத்திற்காக அவர்களை விபசாரிகளாக்கும் அவர்களே உண்மையான எழுத்து விபசாரிகளாவர்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Sri Lanka's unanswered questions over human rights

23 October 2013 Last updated at 22:49 BST

The BBC has spoken to people in Sri Lanka who say they have been threatened with rape and tortured at the hands of officials.

The group Human Rights Watch says rape and sexual violence are widely used against detainees, something the government denies.

Sri Lanka's Foreign Minister has said the country's investigations into human rights violations have been adequate.

With less than a month to go until the Commonwealth conference in Sri Lanka, the government there has rejected calls for it to co-operate with an international inquiry into human rights violations.

Fergal Keane reports.

 

http://www.bbc.co.uk/news/world-asia-24648595

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.