Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாயத்தில் முதலமைச்சர் பங்கேற்ககூடாது:த.தே.கூ.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

North_CM(2).jpg
-சுமித்தி தங்கராசா

எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்க கூடாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்று யாழ். பொது நூலகத்தில்  நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள், அந்த துறை சார்ந்த அவர்களது பொறுப்புக்கள் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இதன்போதே, பொதுநலவாய அரச தலைவர் மாநாட்டில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்பதில்லையென்பதுடன் இந்த மாநாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புறக்கணிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாய மாநாட்டில் சீ.வீ விக்கினேஸ்வரன் பங்கேற்கக்கூடாது கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் வலியுறுத்தல்:

26 அக்டோபர் 2013



'அதி உயர் மூவர் தலமை (supreme leaders) வடிவேலு பாணியில் போகலாம் ஆனால் போகமாட்டோம் என்ற ஆய்வில் ஈடுபட்டுள்ளது' இணைப்பு 2


Wigneswaran-with-Sambanthan_CI.jpg

பொதுநலவாய மாநாட்டில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கலந்துகொள்ளக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்களிடையேயான கலந்துரையாடல் யாழ்.நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (25.10.13) மூன்று மணி நேரம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் போதே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணசபையின் முதல் அமர்வு முடிவடைந்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினருக்கும் ஒவ்வொரு அமைச்சின் கீழான பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன், புளொட் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான த.சித்தார்த்தன், ரெலோவின் செயலாளர் நாயகமும் மாகாணசபை உறுப்பினருமான க.சிவாஜிலிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராஜா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த அமர்வு மூன்று மணி நேரம் நீடித்தது. தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் வடக்கு மாகாண சபையின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பிலும் இதில் ஆராயப்பட்டது.
அத்துடன் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கெடுப்பது தொடர்பாகவும், இங்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பங்கேற்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
 

இதன்போது அனைவரும் பொதுநலவாய மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்கக் கூடாதென்றே வலியுறுத்தி உள்ளனர். எனினும் பங்குபற்றுவதனால் ஏற்படக் கூடிய அனுகூலங்கள் பற்றிய கொள்கை விளக்கத்தை சுமந்திரனும் பங்கு பற்றாமல் விடுவதனால் ஏற்படக்கூடிய கொள்கை விளக்கத்தை இரா சம்பந்தனும், இடையிட்டு முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தனது கருத்தினையும் விளக்கியதாக தெரியவருகிறது.
இந்த வகையில் நேற்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் பொதுநலவாய மகாநாடு குறித்த கலந்துரையாடலில் வடிவேலு பாணியில் போகலாம் ஆனால் போகமாட்டோம் என்ற வகையிலேயே அதி உயர் மூவர் தலமையின் (supreme leaders)  கருத்து அமைந்ததாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது.
இதேவேளை இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளாமல் விடுவதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதி உயர் மூவர் தலமையின் (supreme leaders)  மெல்லிதான கவலையை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தியா கலந்து கொள்ளாமல் விட்டால் 13ஆவது திருத்தத்தை இலங்கை ரத்துச் செய்தால் அதன் பின் கேட்பதற்கு யாரும் அற்றுப் போய்விடுவார்கள் என்றெல்லாம் அதி உயர் மூவர் தலமையின் (supreme leaders) புதிய வியாக்கியானங்களை கொண்டிருப்பதாக இவர்களுக்கு மிகவும் நெருக்கமான கொழும்பு தகவல் ஒன்று இன்று அதிகாலை குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தது.

எனினும் ஏற்கனவே  இந்த மகாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என கனடா அறிவித்துள்ளது. கம்பியா இந்த அறிவிப்பை நேற்று (25.10.13) வெளியிட்டுள்ளது. இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளக் கூடாது என தமிழகத்தில் மாபெரும் போராட்டங்கள் தொடர்வதோடு தமிழக சட்டசபையில் கட்சிவேறுபாடு இன்றி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால் அதி உயர் மூவர் தலமை (supreme leaders) வடிவேலு பாணியில் போகலாம் ஆனால் போகமாட்டோம் என்ற ஆய்வில் ஈடுபட்டு உள்ளமை கவலை அளிப்பதாக இந்த அதி உயர் தலைமைக்கு நெருக்கமான ஒருவர் கொழும்பில் இருந்து இன்று அதிகாலை தொலைபேசியில் தெரிவித்தார்.

TNAயின் தலைவர்கள் ஒன்று கூடினார்கள் யாழ்ப்பாணத்தில்:- பொதுநலவாய மகாநாடு குறித்தும் உரையாடினார்களாம்:-
25-10-2013 - 15:20
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் கூட்டம் இன்றுமாலை யாழ். நகரில் நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சரவணபவன் ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.கே.சிவாஜிங்கம் மற்றும் ஹென்ரி மகேந்திரன், ராகவன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இக்கூட்டத்தின்போது தற்போதைய அரசியல் நிலைமைகள் பற்றி; விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பொதுநலவாய நாடுகளின் மகாநாடு சம்பந்தமான விடயங்கள் தொடர்பிலும் மிகவும் ஆழமாக ஆராயப்பட்டது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவின் கூட்டத்தினை கொழும்பில் நடத்துவதென்றும் இக்கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.

எதிர்வரும் பொதுநலவாய மகாநாட்டிற்கு அரசாங்க தரப்பிடம் இருந்து அழைப்பு கிடைக்கும் பட்சத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை முதல்வர்கள் என்ற அடிப்படையில் என்ன முடிவை எடுக்கலாம் என்பது குறித்தும் இங்கு நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரியவருகிறது.
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98128/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சித்தருக்கு அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதற்க்காக குளோபல் தமிழ் கூட்டமைபை உடைக்கும் வேளையில் இறங்கிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

பு.புக்கள் ஒன்றும் சொல்லவில்லை என்பது கவனத்தில் கொள்ளக்கூடியது.....

 

முடிவு சரியா?

தப்பா?

காலம் சொல்லும்.........

த .தே .கூ பின் முவரனியில் ஒருவர் நவம்பர் முதல் வாரத்தில் கனடா வரவுள்ளார் .விரும்பினால் கனடாவில் உள்ள யாழ்கள உறவுகள் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைக்கமுடியும் .விரைவில் அறிவித்தல் வெளிவரும் .

சித்தருக்கு அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதற்க்காக குளோபல் தமிழ் கூட்டமைபை உடைக்கும் வேளையில் இறங்கிவிட்டது.

 

முன்னர் உடைக்க வெளிக்கிட்டு காத்து போன சைக்கிள் பற்றி அவர் நிச்சயம் அறிந்துவைத்திருப்பார் என்று நம்புவோம்.
 
அடுத்தது நக்கல் பாணியில் செய்திகளின் இடையில் தனது தனிப்பட கருத்தக்களை புதைத்து ஆதாரபூர்வமான செய்திக்கும் அபிப்பிரயா கட்டுறைக்கும் இடையிலான வித்தியாசம் தெரியாத அளவுக்கு உயர்ந்து ஊடக நாகரீகத்தின் உச்சத்துக்கு சென்றுள்ள இந்த ஊதகம் செய்யும் சேவை ஆருக்காக?
 
பொதுநலவாய மகாநாட்டு விடயத்தில் அழைப்பு வந்தால் அந்த களத்தை ஏவாரு சாமர்த்தியமாக பாவித்து எமது போராடத்தை முனெடுத்து செல்லமுடியும் என்று ஆராயவேண்டும். இதை தான் அன்று தந்தை செல்வா செய்ய முனைந்தார். ஆனால் அவருடைய கருத்தை அன்று இலங்கையில் நடந்த மகாநாட்டில் பதிய மறுத்த போதும் அவர் அங்கு வந்தவர்களுக்கு தமிழ்றின் அபிலாஷைகளை விளக்கி ஒரு விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பம், "20தாவது பொதுநலவாய மகாநாட்டில் பங்குபற்றுவோருக்கு சிலோன் தமிழரின் விண்ணப்பம்"  (A MEMORANDUM FROM THE TAMILS OF CEYLON TO ALL DELEGATES ATTENDING THE 20TH COMMONWEALTH CONFERENCE IN SRI LANKA FIRST SEPTEMBER 1974.) என்று தலைப்பிட்டு புராட்டாததி 1974ல் வெளிவந்தது. அதில் சில முக்கிய பகுதிகள் தமிழில் வருமாறு:
 
1). உலகின் மனசாட்சியை தட்டி எழுப்பி இஙகே இன பாகுபாடு அடிப்படையில் பல்வேறு வழிகளில்,  மனித உரிமைகளை மறுத்தல் உள்ளாகி வருகின்றன தமிழர்களின் நிலை இனப்படுகொலைக்கு வழிவகுக்கும்.
 
2). இலங்கை தமிழர்கள் மொழி, மதம் மற்றும் கலாச்சார அடிப்படியில் ஒரு தனித்துவமான தேசம்
 
3). ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு முன் இலங்கையில் மூன்று தனித்தனி அரசாட்சி இருந்தன. வட தமிழ் இராச்சியம் மற்றும் தென் இரண்டு சிங்களம் அரசுகல் அவை.
 
4). பிரிட்டிஷார் நிர்வாக வசதிக்காக ஒரு நிர்வாக அலகாகா எல்லா அர்சுக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தனர். உண்மையில் கண்டி சிங்களம் இந்த ஒருங்கிணைப்பு எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
5). சொல்பெர்ரி ஆணைக்குழுவில் இருந்து அன்று வரை தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை பூர்த்திசெய்ய எடுத்த முயட்சிகள் எல்லாம் ஏவாரு தோல்வியில் முடிந்தன என்று விலாவரியாக எடுத்து கூறி மேலும் சொல்கிறார்
 
6). பாரம்பரிய தமிழர்களின் பகுதிகளில் குடியேற்ற திட்டங்கள் நடத்தி அதன் மூலம் எம்மக்களை அப்புறப்படுத்துவதுடான் சிங்களவரின் பாராளுமன்ற பலத்தை கூடும் வகையிலும் அரசு தீத்தாமிட்த செயல்களில் இறங்கியுளாதது.
 
7). எம்மை மொழி ரீதியாகவும் உயர்கல்வி ரீதியாகவும் வன்செயல்கள் ஊடாகவும் எம்மை அளிகின்றார்கள் என்று ஆதாரத்துடான் விலாவரியாக கூறினார்
 
 
 
பின்னர் சொல்கிறார்:  தமிழ் பிரச்சினை உள்நாட்டு விவகாரம் அல்ல. இந்த நாட்டில் இரு தேசியங்கள் இருக்கின்றன. தமிழ் பிரச்சினை உள்நாட்டு விவகாரம் என்று எண்ணுவது இந்த நாட்டின் அரசியல் மற்றும் சமூக யதார்த்தங்களை மறுக்கின்ற ஒரு செயல். இன்றைய யதராககளை புரிந்து நீங்கள் ஒன்றும் செய்யாமல் இருந்தால் இந்த நிலமை மீள முடியாத ஒரு நிலைக்கு சென்றுவிடும். மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத சிறுபான்மை இன விடயங்களை ஏவாறு விவாதிக்க முடியும் என்ற கேள்வி எழலாம். நிகழ்ச்சி நிரலில் இல்லை என்றாலும் மாநாட்டில் காஷ்மீர் மற்றும் நிறவெறி போன்ற பாடங்களில் கருத்தில் கொண்டது மாதிரி எமது நிலையையும் கருத்தில் எடுங்கள்.
 
பின்னர் அவர் "பெரும்பாலான தனியார் தவறுகள் குடும்ப சுவர்களுக்குள் நடக்கின்றன. பொது தவறுகள் நாடுகளின் எல்லைக்குள் நடக்கின்றன. நாடுகளின் எல்லைக்குள் நடக்கின்ற தவறுகள் என்று தட்டிக்கேக்முடியாத நிலமை வருகின்றதோ அன்றே இந்த உலகம் கொடுங்கோன்மைக்கு பட்டயம் கொடுத்ததாக முடியும் என்று ஸ்ரீ ராஜகோபாலாச்சாரி, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலை மேட்கோள் காட்டி எமது இனத்தின் நிலமையை தெளிவாகவும் நிதானமாகவும் சொன்னார்.
 
ஆங்கில மூலம்: http://www.sangam.org/FB_HIST_DOCS/Commonwealth.htm. எனது தமிழாக்கத்தில் பிழை இருப்பின் மன்னிக்கவும்
 
இந்த ஊடக வியாபாரிகளுக்கு உண்மையில் எங்களின் நலனில் ஆர்வம் இருந்தால் எங்களை மந்தைகள் போல நடத்த்தமாட்டார்கள். நிலமை ஈவாரு இருக்க இன்றைய ஊதகங்களும் அவர்களின் பால் ஈர்க்கப்ப்டு அவர்கள் சொல்வது வேதவாகென்று நினப்போரும் ஒன்றை கருத்தில் கொள்ளவேண்டும். தமிழ் தேசியம், தமிழ் தேசியம் என்று மட்டும் சொல்லிக்கொண்டு வருகின்ற களங்களை அறிவு ரீதியாகவும் கேந்திர நோக்கோேடும் அணுகாமல் விட்டால் தமிழ் தேசியம் சொல்லில் மட்டும் இருக்குமே தவிர நடைமுறையில் ஒரு முடிவிலாத பயணமாகவே இருக்கப்போகிறது. 
 
இன்று எனக்கொரு சந்தர்ப்பம் வந்தால் தந்தை செல்வா அன்று என்ன சொன்னாரோ அது நடந்துவிட்டது. நீங்கள் அதை தடுக்கவில்லை என்று சொல்லி அவர்கள் அடுத்து இந்த நிலமையை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்று சொல்வேன்

Edited by puthalvan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.