Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கம் இசைப்பிரியாவின் காணொளியை கணக்கெடுக்கவில்லை : கெஹெலிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  அரசாங்கம் இசைப்பிரியாவின் காணொளியை கணக்கெடுக்கவில்லை : கெஹெலிய

[Monday, 2013-11-04 09:50:16]
keheliya-rambukwella-seithy-20121012-150

இலங்கையை சர்வதேச மட்டத்தில் அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கத்துடனேயே செனல் 4 நிறுவனம் மீண்டும் ஒருமுறை வீடியோக் காட்சிகளை வெளியிட்டுள்ளது. இதனை இலங்கை அரசாங்கம் கணக்கில் எடுக்கவேயில்லை. செனல் 4 நிறுவனம் மீண்டும் ஒருமுறை தோல்விகாணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகளை இலங்கை முன்னெடுக்கும்போது இவ்வாறு வீடியோக் காட்சிகளை வெளியிட்டு இலங்கையை அபகீர்த்திக்கு உட்படுத்துவது செனல் 4 நிறுவனத்தின் வழமையாகிவிட்டது. எனவே அதனை நாம் கவனத்தில் கொள்ளவேயில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

  

இலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் சர்வதேச மட்டத்தில் புலி ஆதரவு புலம்பெயர் மக்களின் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த சவாலை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். விடுதலை புலிகளின் கேர்ணல் இசைப்பிரியா உயிருடன் பிடிபடும் காட்சியைக்கொண்ட புதிய வீடியோக் காட்சியை செனல் 4 நிறுவனம் வெளியிட்டுள்ளமை தொடர்பில் கருத்துக் கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,

செனல் 4 நிறுவனம் மீண்டும் ஒருமுறை இலங்கை அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உட்படுத்தும் முயற்சியில் வீடியோக் காட்சியை வெளியிட்டுள்ளது. இதனை எமது அரசாங்கம் கணக்கில் எடுக்கவேயில்லை. காரணம் செனல் 4 நிறுவனமானது பொய்யான விடயங்களையே இவ்வாறு வெளியிடும் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. சர்வதேசத்துக்கும் இந்த விடயம் தெரிந்துவிட்டது. எனவே செனல் 4 நிறுவனத்தின் இந்த தோல்வியடையும் முயற்சி குறித்து நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் கெலும் மெக்கரேக்கு பொதுநலவாய மாநாட்டின் செய்தி சேகரிப்புக்கு வருவதற்கு அனுமதி வழங்கவும் நாங்கள் தயாராகியுள்ளோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வுகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை அமர்வுகள் நடைபெறும்போதும் பிரித்தானியாவில் முக்கியமாக ஏதாவது நிகழ்வுகள் இடம்பெற்றாலும் செனல் 4 நிறுவனம் இவ்வாறு வீடியோக் காட்சிகளை வெளியிடுவது வழமையாகிவிட்டது. தற்போது இலங்கையில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இந்த வீடியோக் காட்சியை முன்வைத்துள்ளனர். எனினும் அந்த நிறுவனத்தின் இந்த முயற்சியானது தற்போது பெறுமதியற்றதாகிவிட்டது. பொய்யான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கும்போது இந்த நிலையேற்படும்.

நான் அந்த வீடியோக்காட்சியை பார்வையிடவுமில்லை. பார்க்கவேண்டிய அவசியமுமில்லை. காரணம் செனல் 4 நிறுவனம் தொடர்ந்து பொய்யான விடயங்களையே வெளியிட்டுவருகின்றது. எனவே அது குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டியதில்லை. அதாவது இலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் சர்வதேச மட்டத்தில் புலி ஆதரவு புலம்பெயர் மக்களின் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த சவாலை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என்றார்.

நன்றி - செய்தியிணையம்

  • கருத்துக்கள உறவுகள்

எப்படா, வாயைத் திறப்பீங்க எண்டு பாத்துக்கொண்டிருந்தன்! :D

 

சும்மா சொல்லக்கூடாது, வழமை போல, 'முத்து முத்தாக்' கொட்டாவிட்டாலும் 'கருத்து' சூப்பர்!

 

சனல் நாலின் கை ஓங்குகின்றது, என்று இதை எடுத்துக்கொள்ளலாமா? :icon_idea:

  

முகப்பு »  செய்திகள்
இசைப்பிரியா குறித்த காணொளியை காரணம் காட்டி பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்கக் கூடாது! - வாசுதேவ

 

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது உயிரோடு பிடிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா தொடர்பிலான காணொளியை காரணம் காட்டி, பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்கக் கூடாது என 
ஜனநாயக இடதுசாரி முன்னணயின் தலைவரும், சிறிலங்காவின் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார நேற்றுத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியா தெற்காசிய நாடுகளுடன் ஒன்றித்துச் செயற்பட்டாலே அந்நாட்டின் பலம் அதிகரிக்கும் என்பதை புதுடில்லி புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி உண்மையானது என்றும், மிகவும் கொடூரமான இச்செயல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்திய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் இந்தக் கண்டனம் தொடர்பில் சிறிலங்காவின் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் ஊடகங்கள் கருத்துக் கேட்ட போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'கொழும்பில் பொதுநலவாய அரசியல் தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இசைப்பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் இழுத்துக் கொண்டு செல்லப்படுகின்ற காணொளி காட்சியானது தமிழ் மக்களின் மனங்களை குழப்பும் விதமாகவே காணப்படுகிறது. இது சனல் 4 தொலைக்காட்சியின் திட்டமிட்ட ஒரு செயலாகும்.

ஏற்கனவே இந்தியத் தமிழர்கள் பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற நிலையில், இந்தக் காணொளியானது அவர்களை மேலும் தூண்டச் செய்யும் ஒரு செயலாகவே கருதப்படுகிறது.

ஆனால், இந்தக் காணொளி மூலம் பொதுநலவாய மாநாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனக் கூறமுடியும். அதிலும் இந்தக் காணொளியை காரணம் காட்டி பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்காது என்றும் எம்மால் உறுதியாகக் கூறமுடியும்.

இந்தியா தமிழகத் தமிழர்களை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இந்திய மத்திய அரசு அவர்களின் கருத்துகளுக்கு மட்டும் செவிசாய்க்கக் கூடாது. உண்மையை முழுமையாக உணர்ந்து கொள்ளவேண்டும்.

ஆகையால் இசைப்பிரியாவின் காணொளியை காரணமாக எடுக்காது, எல்லா தெற்காசிய நாடுகளையும் கவனத்தில் கொண்டு பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும். தெற்காசிய நாடுகளுடனும் ஒன்றித்து செயற்பட்டாலே இந்தியாவின் பலம் அதிகரிக்கும் என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்.

சனல் 4 தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ள காணொளியில் இருப்பது இசைப்பிரியாதான் என்றும், அவரைக் கொடூரமாக் கொலை செய்தது சிறிலங்கா படையினர் தான் என்றும் உறுதிப்படுத்தப்படுமாயின் சம்பந்தப்பட்டோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விடயத்தில் சிறிலங்கா அரசாங்கமம் ஒருபோதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிராது' என வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகம் விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளமை தெரிந்ததே.

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=2f4cec0c-6ea5-43b6-b9a7-f947efbabfde

 

எல்ல மந்த்ரிகளுக்கும் தாங்கள் விரும்பும் பொய்களை விரும்பும் இடத்தில் சொல்ல அதிகாரம் இருக்கிறது. ஆனால் உண்மையை வெளிவிடுபவர் பதவி நீக்கப்படுவார். 

 

இது வரையில் இலங்கையின் (மிக மிக மோசமான) அநீதி மந்திரி கக்கீம் எதுவும் சொல்லவில்லை. இவர் இதில் மௌனம் காது தான் தேவானந்தாவைவிட அநீதியானவர் என்பதை நிரூபிக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.