Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா – களமும் புலமும் இணைந்த கவனயீர்ப்புப் பேரணி !

Featured Replies

சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பு மற்றும் தமிழர் நில அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு கண்டனம் தொரிவிப்பதுடன,; அதனை தடுத்து நிறுத்துமாறு சர்வதேசத்தை வேண்டியும்,
பெண் ஊடகவியலாளர்; இசைப்பிரியா உட்பட ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் இதற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன்
தமிழினப் படுகொலை புரியும் சிறிலங்கா அரசிற்கு எதிராக சுதந்திரமான சர்வதேச நீதி விசாரனையை வலுயுறுத்தியும்

களமும் புலமும் இணைந்த கவனயீர்ப்புப் பேரணி !

கொமன்வெல்த் மாநாடு நடக்கவுள்ள இவ்வேளையில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக தாயகத்தில் எம் உறவுகளினால் மேற் கூறிய கோரிக்கைகளை முன் வைத்து வருகின்ற வாரம் நடத்தவுள்ள ‘மாபெரும் கண்டனப் போராட்டத்திற்கு”வலுச் சேர்க்கும் முகமாக கனடிய புலத்தின் கண்டனக் குரலையும் வலிமையாக எழுச்சியோடு எழுப்பும் பொருட்டு “களமும் புலமும் இணைந்த மாபெரும் கண்டனக் குரலாக” ஒலிக்க கனடிய மக்களும் தயாரவோம்.

இடம் :அமெரிக்கத் துணைத் தூதுவராலையம் முன்பாக
ரொறன்ரோ

360 University Ave, Toronto
காலம்: பின்னர் அறியத்தரப்படும்

மொன்றியல்
அமெரிக்கத் துணைத் தூதுவராலையம் முன்பாக

455 Bou Rene Levesque West, Montreal
காலம்: பின்னர் அறியத்தரப்படும்

இந்த கவனயீர்ப்புப் போராட்டதில் கனடா வாழ் அனைத்து தமிழ் அமைப்புகளையும்; இணைந்து செயல்பட முன்வருமாறு வேண்டுகின்றோம்

ஒன்றுபட்ட இனமாக ஓரணியில் அணிதிரள்வோம்

கனடிய தமிழர் சமூகம்

 

1425641_419117864883835_1440435956_n.jpg

 

 

(NCCT - facebook)

Edited by துளசி

கண்டனப் போராட்டம்

 

கொழும்பில் பொதுநலவாய நாட்டுத் தலைவர்களின் மாநாடு  நடைபெறும் நாட்களில் நில அபகரிப்புக்கு  எதிராக வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் நொவெம்பர் 15, 16 நாட்களில் நடைபெற இருக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களும் த் ததேகூ நடத்தும் போராட்டத்துக்கு   ஆதரவு  தெரிவுக்கும் முகமாக  கண்டனப் போராட்டங்கள் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிலஅபகரிப்பு இனவழிப்பு, இராணுவ மயப்படுத்தல், சிங்கள மயப்படுத்தல், பவுத்த மயப்படுத்தல்,  காணாமல் போனவர்கள்சிறைகளில் விசாரணையின்றி ஆண்டுக்கணக்காக அடைத்து வைக்கப்பட்டிருக்கும்  அரசியல் கைதிகள்  மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்  போன்றவற்றைக் கண்டித்தும்  அனைத்துலக போர்குற்ற விசாரணையை வலியுறுத்தியும்   எதிர்வரும்

2013 நொவம்பர் 14 ஆம்  நாள்   (வியாழக்கிழமை

டொராண்டோவில் உள்ள ஸ்ரீலங்கா துணை தூதரகத்தின் முன்பாக (36 Eglinton Ave. West, Toronto, Intersection Eglinton & Yonge)

பிற்பகல் 3.30 மணியிலிருந்து 6.30 மணிவரை

ஒரு கண்டனப் போராட்டத்தை  கனடிய தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்துள்ளன்ன.

இன்றைய நெருக்கடியான கால கட்டத்தில்   நடக்கும் இப் போராட்டத்திற்குத்  தமிழ்த் மண்ணையும் மக்களையும் நேசிக்கும்  கனடிய தமிழர்கள் அனைவரும் வருகை தந்து தங்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்யுமாறு  அன்போடு அழைக்கிறோம்.

"இனப்படுகொலைகளின்  சூத்திரதாரி மகிந்த இராஜபக்சே பொது நலவாய நாடுகளின் தலைவனா

முடிவு காண வாரீர் அணி திரண்டு !! 

தொடர்புகளுக்கு :

கனடிய தமிழர் அமைப்புகள்

 

416-888-1128 ,  நாடு கடந்த தமிழீழ அரசு.

416-240-0078 ,  கனடியத் தமிழ் காங்கிரஸ்

416-917-8951 ,  நாம் தமிழர் - கனடா

416-402-9393 ,  கனடாத் தமிழர் இணையம்

416-281-1165 .  தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பு.

 

எனது e-mail இல் கிடைக்கப்பெற்றது .

 

  • தொடங்கியவர்

சபாஸ்! சரியான போட்டி!   :lol:  :lol:  :lol:

 

எனக்கும் முதலில் குழப்பமாக தான் இருந்தது. :rolleyes: ஆனால் இது போட்டி அல்ல. ஒன்று இன்னும் திகதி குறிக்கப்படவில்லை. (திகதி குறிக்கப்படின் என் கண்ணில் பட்டால் இங்கு இணைப்பேன்.) இன்னொன்று திகதி குறிக்கப்பட்டு விட்டது. :rolleyes:

 

ஆனால் இரண்டுமே கனேடிய தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தும் போராட்டம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. :rolleyes:

அல்லது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது தான் இவ்வாறு மாற்றப்பட்டதா என தெரியாது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

NCCTன் ஊடக பேச்சாளர் இவர் தான்.

 

 

https://www.facebook.com/photo.php?v=568412459843282

  • தொடங்கியவர்

NCCT அறிவித்த போராட்டம் நாளை வெள்ளிக்கிழமை நடப்பதாக இருந்து பின்னர் நிறுத்தியிருந்தார்கள். இன்னொரு திரியில் இதுபற்றிய தகவல் இருந்தாலும் இத்திரியிலும் அறிவிக்கிறேன்.

நாளை 15ம் திகதி ரொறன்ரோவில் நடத்தப்படவிருந்த கவனயீர்ப்புப் பேரணி இரத்துச் செய்யப்பட்டுள்ளது: - புலத்தில் பிளவுகள் வேண்டாம! 

[Thursday, 2013-11-14 21:22:49]
Canada-thesiya-avai.150.jpg

கனடியத் தமிழர் சமூகத்தினால் 2013 நவம்பர் 15ம் திகதி ரொறன்ரோவில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் முன்னால் நடத்தப்படவிருந்த கவனயீர்ப்புப் பேரணியின் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இந்த நிகழ்வை இப்போதுள்ள சூழ்நிலையில் இரத்துச் செய்துள்ளோம் என்பதை கனடியத் தமிழர் சமூகம் அனைவருக்கும் அறியத்தருகிறது.

  

சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பு மற்றும் தமிழர் நில அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன��; அதனை தடுத்து நிறுத்துமாறு சர்வதேசத்தை வேண்டியும��; ஊடகவியலாளர்; இசைப்பிரியா உட்பட ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன்�� தமிழினப் படுகொலை புரியும் சிறிலங்கா அரசிற்கு எதிராக சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணையை வலுயுறுத்த��pயும் களமும் புலமும் இணைந்த கவனயீர்ப்புப் பேரணி நிகழ்வை 15ம் திகதிக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

ஆனால் என்ன காரணத்தினாலோ தெரியாது�� ரொறன்ரோவிலுள்ள சில தமிழர் அமைப்புகள் இதே கோரிக்கைகளை முன்வைத்து நவம்பர் 14ம் திகதி ரொறன்ரோவிலுள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தின் முன்னால் கவனயீர்ப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததை ஊடகங்கள் வாயிலாக நாம் அறிய முடிந்தது. இவ்வாறான செயற்பாடானது போட்டியடிப்படையில் ஏற்பாடாகியுள்ளதான எண்ணத்தை எமது மக்கள் மத்தியில் உருவாகியதை அவர்கள் கருத்துகள் வாயிலாக நாம் அறிந்து கொண்டோம்.

களத்தில் எமது மக்கள் அன்றாடம் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு ஆதரவளிக்கவேண்டிய நேரத்தில்�� புலத்தில் வாழும் எம்மக்கள் மத்தியில் தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் வகையில் 14ம் திகதி நிகழ்வை ஒழுங்கு செய்தது வருந்தத்தக்கது.

இப்படியான ஒரு சூழ்நிலையில் நாம் பிளவுபட்டிருப்பதாகக் காட்டிக்கொள்ளும் செயற்பாடுகள் சிறிலங்கா அரசுக்கும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் தீய சக்திகளுக்கும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாகும்.

இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் இவ்வாறான ஒரு நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே அமெரிக்க துணைத் தூதரகத்தின் முன்னால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்புப் பேரணியை இரத்துச் செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

ஆனால் எமது கவனயீர்ப்புப் பேரணிகளும்�� கண்டனப் பேரணிகளும் முன்னர் போல அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என்பதை எமது மக்கள் அனைவருக்கும் தெரிவிக்கின்றோம்.

கனடியத் தமிழர் சமூகம்.

தொடர்புகளுக்கு: 416.830.7703

 

 

http://www.seithy.com/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.