Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் மீதான பழிசுமத்தலுக்கான எனது பதில்கள் மட்டுமே.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு முதல் எதுவரை இணையத்தில் மின்னஞ்சல் மூலம் ஒரு ஊடகவியலாளர் கேள்விகளை அனுப்பி அதற்கான பதில்களையும் பெற்றுக் கொண்டார். அந்தக் கேள்விகளில் முஸ்லீம் மலையக தமிழர்கள் அரசியல் பற்றியும் கேள்விகள் கேட்டிருந்தார். ஆனால் முஸ்லீம்கள் பற்றிய கேள்விகளுக்கான எனது பதில்கள் தவிர்க்கப்பட்டே பிரசுரிக்கப்பட்டது.

அப்போது குறித்த நண்பர் சொன்ன காரணம் :- முஸ்லீம்கள் பற்றிய எனது கருத்தானது என் மீதான எண்ணங்களில் சரிவுகளை ஏற்படுத்தலாம் எனச் சொல்லியிருந்தார்.ஆயினும் எனது கருத்தை நீங்கள் வெளியிடுங்கள் அவைபற்றி விவாதித்து தெளிவோம் என மடலிட்டிருந்தேன். எனினும் பின்னர் முஸ்லீம்கள் பற்றிய பதில்கள் வெளியிடப்படவில்லை.

 

ஆனால் முஸ்லீம்கள் பற்றிய விடயத்தில் விவாதங்கள் பழிசுமத்தல்கள் புலிகள் இயக்கம் மீது சுமத்தப்படுதலும் முஸ்லீம்களின் கடந்தகால தவறுகளை மறைத்தலுமே நடைபெறுகிறது. அண்மையில் கூட யாழ் முஸ்லீம்கள் வெளியேற்றம் தொடர்பாக புலிகள் மீதான மீள்விசாரணையை பலர் செய்திருந்தார்கள். இவ்விடத்தில் முஸ்லீம்கள் வெளியேற்றம் தொடர்பான எனது கருத்துக்களை முஸ்லீம்கள் வெளியேற்றத்தின் போதிருந்த நிலமைகளை தெரிவிக்கும் முகமாக வெளியிடப்படாத கேள்விகளுக்கான எனது பதில்களை இங்கு இணைக்கிறேன்.

முஸ்லீம்கள் மீதான குரோதமோ பழிசுமத்தலோ அல்ல.  இந்தக் கருத்துக்கள். புலிகளின் மீதான பழிசுமத்தலுக்கான எனது பதில்கள் மட்டுமே.

 

தைமாதம் 2013 இனியொருவில் வெளியான எனது மின்னஞ்சல் நேர்காணல் இணைப்பு கீழ் வருமாறு :-

http://eathuvarai.net/?cat=153

 

 கேள்வி -முஸ்லிம் மற்றும் மலையக மக்களைக் குறித்த உங்களுடைய அக்கறைகள் என்ன? அவை எப்படியாக அமைந்துள்ளன?

மலையக மற்றும் முஸ்லீம் மக்கள் எனது மொழியையே - தமிழையே பேசுகிறார்கள். அவர்களும் தமிழர் என்ற அடையாளத்தில்தான் வன்முறைகளில் அழிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால்; விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த வடகிழக்குத் தமிழர்களை யுத்தம் தின்று முடித்த போது முஸ்லீம் மலையகத் தலைமைகள் எங்கோவொரு இடத்தில் ஏதோவொரு இனம் அழிபடுவது போலவே பாராதிருந்தார்கள்.

புலம்பெயர் ஈழத்தமிழரும் தமிழகத் தமிழர்களுமே வன்னிக்குள் செத்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான தமிழுயிர்களுக்காக உலகில் நீதி கேட்டார்கள் தெருவில் இறங்கிப் போராட்டம் நடாத்தினார்கள். முஸ்லீம் மலையகத் தலைமைகள் பெரிதாய் எங்கள் அழிவில் அக்கறை செலுத்தவில்லை. எங்கள் சனம் அனாதைகள் போல தெருத்தெருவாய் செத்துக்கிடக்க மௌனியாயிருந்த தலைமைகளின் வாய்கள் எங்கள் சனத்துக்காக திறக்காதா என்று ஏங்கியிருக்கிறேன்.

இன்றும் இத்தனை அழிவுகளையும் சந்தித்து நலிந்து போயிருக்கிற எங்கள் சனத்தின் காணிகளை அபகரித்தல் முதல் பல்வேறு வகையான அழிவுகளைச் சத்தமில்லாமல் முஸ்லீம் சமூகத்தின் ஒரு பகுதி செய்து கொண்டிருக்கிறது.

அண்மைய நாட்களில் ஊடகங்களில் வெளியான தமிழ் இளம் பெண் பிள்ளைகள் இராணுவ சேவையில் இணைக்கப்படுகின்ற செய்தியை முஸ்லீம் தலைமைகள் யாராவது கேள்வி கேட்டுள்ளார்களா ? மனோகணேசன் மட்டுமே மெல்ல வாய்திறந்துள்ளார்.  முஸ்லீம் பெண்களை இராணுவத்தில் இணைக்க அதன் சமூகம் அனுமதிக்காது. காரணம் அவர்களுக்கான ஒரு சமூகக்கட்டமைப்பை நிருவகிக்கும் தலைமைகள் இருக்கிறது தலைவர்கள் இருக்கிறார்கள். எங்களினத்திற்கு ? கேட்க நாதியற்றுப் போயிருக்கிறது.

எங்கள் இனத்தையும் பெண்களையும் எவரும் எதுவும் செய்யலாம் என்ற நிலமைதான் உண்மையாக உள்ளது. இப்படி எனது இனம் அழிந்து கொண்டிருக்க என்னிடம் எப்படி இன்னொரு இனம் மீதான அக்கறை வரும் ?

முதலில் எனது குழந்தைக்கான கஞ்சிக்கான வழியையும் இ எனது சமூகத்துக்கான பாதுகாப்பையும் எனது தமிழ்க் குழந்தைகளின் கல்விக்கான வசதியையுமே இப்போது வரையிலும் சிந்திக்கிறேன்.  எனது சமூகத்தின் மாற்றமும் முன்னேற்றமும் நிச்சயம் முஸ்லீம் மலையக மக்களுக்கான மாற்றத்தையும் கொடுக்குமென்ற நம்பிக்கையில் எல்லாப்பலங்களையும் இணைத்து எனது தமிழ்ச்சமூகத்தையே முன்னேற்றவும் உயர்த்தவும் அக்கறையோடும் அதனையே இலக்காகவும் நம்பி இயங்குகிறேன்.

ஆனால் எனது மனிதநேயச் செயற்பாட்டில் எமது விடுதலைப்போராட்டத்தில் தங்கள் பங்களிப்பை வழங்கி சிறைகளில் வாடு(ழு)கிற மற்றும் மடிந்துபோன மலையக முஸ்லீம் சகோதரர்களின் குடும்பங்களுடனான நட்பையும் அவர்களது குழந்தைகளின் குடும்பங்களின் வாழ்வாதர மேம்பாட்டுக்கான இயன்ற ஆதரவினையும் வழங்கிக் கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு முஸ்லீம் மலையக மக்கள் குறித்த அக்கறையென்பது இந்தளவில் மட்டுமே என்னால் முடிகிறது.


கேள்வி -உங்களுடைய இந்தப் பதிலில் ஒரு தெளிவற்ற நிலை காணப்படுகிறது. முஸ்லிம் மற்றும் மலையக மக்களும் தலைமைகளும் இந்தப் போராட்டப்புலத்துக்கு வெளியே வைக்கப்பட்டனர் என்ற உண்மையையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே.  அதேவேளைஇ முஸ்லிம்களின் மீது நீங்கள் வைக்கும் குற்றச் சாட்டுக்கு நிகராக அவர்கள் தமிழ்ச் சமூகம் மீது குற்றச்சாட்டுகளை வைக்கக் கூடிய நிலைமைகளும் உள்ளனவே. குறிப்பாக யாழ்ப்பாண நகரத்தில் இன்னும் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் 10 வீதத்தில் கூட வெற்றியளிக்கவில்லை. வன்னியில் முஸ்லிம்களின் காணிகள் அத்துமீறப்பட்டுள்ளன... பறிக்கப்பட்ட சொத்துகள் எதுவும் மீளளிக்கப்படவில்லை. நட்ட டு வழங்கப்படவும் இல்லையென்ற நிலையில்... நலிவுற்ற நிலையில் ஒரு சமூகம் இருக்கும்போது அந்தச் சமூகம் தன்னை நிலைப்படுத்திக் கொள்வது கடினம். அத்தகைய ஒரு நிலையில் நலிவுற்ற மக்கள் தங்கள் நாளாந்த வாழ்வின் நெருக்கடிகளைச் சமாளித்துக் கொள்வதற்காக கடினமானஇ அபாயங்கள் நிறைந்தஇ பொருத்தமற்ற அல்லது விருப்பத்துக்கு மாறான தெரிவுகளைச் செய்வது வழமை.
யுத்தகாலத்தில் யுத்த களத்திற்கு பல ஏழைகள் கூலி அடிப்படையில் வன்னியில் சென்றனர். வசதி படைத்தவர்கள் போர்ப்பணிக்குத் தாங்கள் போவதற்குப் பதிலாக கூலிக்கு ஆள்பிடித்து அனுப்பினர். இந்த மாதிரியான இன்னொரு வாழ்க்கை நெருக்கடி இன்று வன்னியில் பலருக்கு உள்ளது. போரின் பாதிப்புகள் பல வகையில் இருக்கும்போது அதை நிவர்த்தி செய்யாமல் இருந்தால் இத்தகைய நிலை ஏற்படும். இந்த நிலையில் தனியே கண்டனங்களை மட்டும் அரசியற்தலைமைகள் செய்தாற் போதுமா? இந்தக் கண்டனங்களில் முஸ்லிம் மற்றும் மலையகத் தலைமைகளும் இணைந்து கொண்டால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று கருத முடியுமா?



எனது பதிலில் விளக்கமாகவே கூறியுள்ளேன். எனினும் எத்தகைய தெளிவின்மையை காண்கிறீர்கள் என்று புரியவில்லை. எனினும் எனது பதிலின் விளக்கத்தை மேலும் தருகிறேன்.

முதலில் முஸ்லீம் மலையகத் தலைமைகளைப் பார்த்தால் இவர்கள் ஒருபோதும் திறந்த மனதோடு இயங்கியதுமில்லை பேசியதுமில்லை. எப்போதும் எங்கே சாதகமான சூழல் பொருந்துகிறதோ அந்தப்பக்கம் சார்ந்துவிட இவர்கள் பழகிவிட்டார்கள். ஆழும் தரப்போடு ஒன்றி தங்களை முன்னேற்றவும் தங்களை தக்க வைத்துக் கொள்ளவும் தங்களை இசைவாக்கிவிட்டார்கள்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கிழக்கில் நடந்து முடிந்த மாகாணசபைத்தேர்தலையே சொல்லலாம். முஸ்லீம்கட்சி வெற்றியைப் பெற்றிருந்தது ஆனால் தமிழ்தேசியக்கூட்டமைப்பு கூட்டிணைந்த அரசியல் எல்லையில் செயற்படுவோமென நடாத்திய பேச்சுக்களோ முயற்சிகளோ எதுவும் பலனில்லாமல் முஸ்லீம் தரப்பு ஆழும் தரப்புடன் இணைந்து அல்லது சாய்ந்துவிட்டது.

இதே முஸ்லீம் தலைமைகள் உண்மையில் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை முன்னேற்றத்தை விரும்பியிருந்தால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து தமிழ் முஸ்லீம் மக்களுக்கான அபிவிருத்தியை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் ஏன் இந்த ஒருமைப்பாட்டை இவர்கள் இம்முறையேனும் வெளிப்படுத்தவில்லையென்ற கேள்வி தவிர்க்க முடியாது போகிறது. ஆக ஓர் அரிய வாய்ப்பை முஸ்லீம் தலைமைகள் பயன்படுத்தத் தவறிவிட்டது.

ஆனால் புலிகளின் தலைமை இந்தத் தலைமைகளோடு பேசியிருக்கிறது தங்களது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறது இதனை தற்போதும் அரசோடு சேர்ந்து அரசியல் செய்கிற ரவூப் கக்கீம் அவர்கள் கூட புலிகள் முஸ்லீம்களை எவ்வகையில் ஒத்துப்போய் தங்கள் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினார்கள் என்பதனை மறுக்க முடியாது.

அடுத்து முஸ்லீம் மலையக மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்தச் சமூகத்து இளையோரின் பங்களிப்போடும் விடுதலைப்போராட்டம் நடைபெற்ற காலமொன்றை நீங்களும் விடுதலைப்புலிகளின் நிர்வாக அலகில் பணியாற்றிய காலங்களில் நேரடியான தரவுகளோடு அறிந்திருக்கிறீர்கள்.

விடுதலைப்புலிகளால் போராட்டப்பங்களிப்பில் மலையக ,முஸ்லீம் சமூகம் பங்குபற்றிய விகிதம் அல்லது ஆட்களின் தொயைனெ;பது தமிழர்கள் போல இருக்கவில்லை. காரணம் நாங்கள் தமிழர்கள் போராடிய பொது எதிரி எமக்குத் தந்த அழிவுகளைப் பெரிதாக இவ்விரு சமூகமும் பெறவில்லை இதுவும் ஒரு காரணமாகவே இவர்கள் விடுதலைப் போராட்டத்தில் கணிசமான அளவு பங்களிப்போடிருக்கவில்லையென நினைக்கிறேன்.

ஆனால் 90இல் யாழ்ப்பாணத்தைவிட்டு முஸ்லீம்களின் வெளியேற்றம் நிகழ்ந்த போது விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த பல முஸ்லீம் போராளிகள் விலத்தப்பட்டார்கள் பலர் தாங்களாகவே விலகியும் இருக்கிறார்கள். அந்தப் போராளிகள் பலர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது கருத்து புலிகளுக்கு எதிரானதாக அல்லாமல் அன்றைய காலத்தின் தேவைக்காக தாம் விலகிய அல்லது விலக்கப்பட்டதாகவே கருதுகிறார்கள்.

முஸ்லீம்களாலும் தமிழ்ச்சமூகம் மீதான குற்றச்சாட்டுகள் வைப்பதற்கான காரணங்கள் நிறையவே இருக்கிறதென்று சொல்கிறீர்கள். இங்கே நான் தமிழ் தரப்பு சுத்மென்று வாதிடவில்லை. நாங்கள் செய்தது சரியென்று சொல்லவரவில்லை.

ஆனால் எம்மீதான முஸ்லீம்களின் அத்துமீறல்கள் அநீதிகளை முஸ்லீம் சமூகமும் சரி எங்கள் சமூகத்திலுள்ள பொதுநிலையாளர்கள் என்று சொல்லப்படுகிற குறித்த மெத்தப்படித்த நடுநிலையாளர்கள் என தங்களை அடயாளப்படுத்துகிறவர்ளும் சரி முஸ்லீம்களால் நிகழ்த்தப்பட்ட கொடுமையான அழிப்புக்களை பாலியல் வல்லுறவுகளை நிலப்பறிப்புகளைத் தங்கள் பொதுமனதோடு சொல்லவில்லையென்பதே உண்மை.

எங்கள் மீதான முஸ்லீம்களின் அநீதிகளை எங்கள் சமூகம் அதிகம் அக்கறை செலுத்தவில்லை. தொடர்ந்து யாழிலிருந்து முஸ்லீம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டதை மட்டுமே ஊதி ஊதிப்பெருப்பித்து உலகெங்கும் தமிழர்கள் முஸ்லீம்களை வஞ்சித்தார்கள் கொடுமைப்படுத்தினார்கள் என்று கூச்சலிட்டே எங்கள் மீதான கொடுமையான அழிப்பை அநீதிகளை வெளிவராமல் செய்தார்கள். இந்தப் பொதுநிலையாளர்கள் அப்போது மட்டுமல்ல இப்போதும் இதைத்தான் செய்கிறார்கள்.

முஸ்லீம் சமூகம் தமிழர்கள் மீது நிகழ்த்திய படுகொலைகள் நிலப்பறிப்புகளின் அளவுக்கு தமிழர்களால் நடத்தப்படவில்லையென்பதை நீங்களும் முஸ்லீம் சமூகமும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். முஸ்லீம்களால் பாதிக்கப்பட்ட கிழக்கில் உள்ள கிராமங்களில் சென்று பாருங்கள் உண்மையை அந்த மக்களிடமிருந்தே அறிவீர்கள்.

இன்றும் கிழக்கில் அதிகளவில் முஸ்லீம்களே நிலப்பறிப்பு முதல் அனைத்து அத்துமீறல்களிலும் முன்னிற்கிறார்கள் என்பது உண்மை. இதனை முஸ்லீம்கள் சத்தமில்லாமல் செய்கிறார்கள். தலைமைகள் கண்டும் காணாதது போல இருக்கின்றனர். இது வேதனையான உண்மை.

அடுத்தது முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் பற்றி:-

இன்றைக்கு முஸ்லீம்களின் அரசியலுக்கோ அல்லது ஆளும் தரப்புக்கோ இடைஞ்சலாயிருந்த புலிகள் இன்று இல்லை. பறிக்கப்பட்ட சொத்துக்களை மீளளிக்கவோ நட்ட ஈடு வழங்கவோ இன்று புலிகளும் இல்லை. இந்நிலையில் இன்றைய வன்னி , யாழ் முஸ்லீம்கள் மீள்குடியேற்றத்தில் அக்கறை செலுத்த வேண்டிய பொறுப்பு தற்போதைய ஆட்சியாளர்களின் கையிலேயே உள்ளது.

போர்க்கால நெருக்கடி :-

யுத்தகாலம் என்பது நீதி அநீதிகளைச் சீர்தூக்கிப்பார்த்து நியாயம் கோர முடியாத காலம். உலக விடுதலைப்போராட்ட வரலாறுகள் எதிலுமே நீங்கள் நீதியை கண்டிருக்கிறீர்களா ?
நீதியை நிலைநிறுத்திக் கொண்டு எந்த விடுதலைப்போராட்டமும் தனது இலக்கை அடையவில்லை. யுத்தகளத்தில் வெல்வது யாரென்ற வேகமே முன்னிலையானது. இதேபோன்றதொரு நிலமையே வன்னிக்களமுனையிலும் இருந்திருக்கிறது.

உலகநாடுகள் புலிகள் மீது வைத்த குற்றச்சாட்டுகளில் முதன்மையானது குழந்தைப்போராளிகளை படையில் இணைத்தார்கள் என்பது. இதே உலகநாடுகள் ஒவ்வொன்றும் தங்கள் தேசங்களின் விடுதலைக்காக ஆயிரக்கணக்கில் குழந்தைப் போராளிகளை வைத்து சண்டை செய்திருக்கிறது. இன்று உலகின் நீதியாளர்கள் எனச்சொல்லி எங்கள் மீதான மாபெரும் மனித அழிவைக்கூட இவர்கள் பார்வையாளர்களாக இருந்து பார்த்துவிட்டு என்ன செய்தார்கள் ? சாகும்வரை படம்பிடித்து ரசித்துவிட்டு இப்போது அநீதியிழைக்கப்பட்டுவிட்டதாக பம்மாத்துக் கண்ணீர் தானே விடுகிறார்கள்.

கூலிக்கு ஆட்பிடித்தது  பற்றி :-

புலிகள் நின்று சமாரடிய வன்னிக்குள் தவறுகள் நடக்கவில்லையென்று பொய்சொல்லமாட்டேன். ஆனால் யுத்த காலத்தில் வசதி படைத்த பலரும் புலிகளின் பலத்திலும் அவர்களது வளத்திலும் வாழ்ந்து கொண்டே கூலிக்கு ஆட்படை சேர்த்துக் கொடுத்தார்கள் என்ற உண்மையை மறுக்க முடியாது. இந்தச் சந்தர்ப்பவாதிகள் தங்கள் பிள்ளைகளை நாடுதாவென்ற போதுதான் உயிரின் பெறுமதியைப் புரிந்து கொண்டது போல வெகுண்டார்கள் புலிகளின் ஆட்பிடியில் குறை சொன்னார்கள்.

தலைவா பிரபாகரன் தனது பிள்ளைகள் இணண்டை தாயகமண்மீட்பிற்கு விலையாகத் தந்தார். ஆனால் பிரபாகரன் என்ற மனிதனின் நிர்வாக அலகின் கீழ் தாம் விரும்புகிற சம்பள உயர்வையும் பெற்று மக்களின் பணத்தில் வாழ்ந்த சந்தர்ப்பவாதிகள் ஏன் தங்கள் பிள்ளைகளைக் காக்க ஏழைகளை விலைகொடுத்து வாங்கினார்கள் ? இதில் தவறு செய்தவர்கள் புலிகள் மட்டுமல்லவே.

இப்படித் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் யுத்த இக்கட்டிலிருந்தும் காத்துக் கொள்ள புலிகளின் பெயரால் நிகழ்ந்த ஆயிரமாயிரம் கதைகளை யுத்தகாலம் தனக்குள் சேமித்து வைத்திருக்கிறது.

இன்றுகூட யுத்தகாலத்தைப் போன்றதொரு நிலமைக்கு தமிழ்ச் சமூகத்தின் நிலமை மாறியிருக்கிறதென்பது உண்மை. ஆனால் அன்று புலிகளின் பிரதிகளாக அரசியல் செயற்பாட்டாளர்களாக இயங்கியவர்கள் பலர் இன்றும் அதே வன்னியில் வாழ்ந்து கொண்டல்லவா இருக்கிறார்கள் ?  இந்தச் சுயநலங்கள் இருக்கிறவரை இத்தகைய நிலமையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை.

கண்டனங்கள் பற்றி :-

நொந்து போன இனத்தின் மீதான அநியாயங்களுக்கு எதிரான கண்டனங்கள் அல்லது ஆதரவுக்குரல்கள் என்பது ஒரு நல்லெண்ணத்தின் வெளிப்பாடே. நல்லெண்ண வெளிப்பாடுகள் மூலமே ஒற்றுமையை வளர்க்க முடியும் அதன் மூலமாக இனிவருகிற இளைய சமூகம் பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்ப ஏதுவாக அமையும். எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டும் அந்த ஆரம்பமாக கண்டனங்கள் ஆதரவுக் குரல்கள் தேவையானது என்கிறேன். இதனை அரசியல் தலைமைகளாலேயே செய்ய முடியும்.

கேள்வி - தமிழ்ச் சமூகத்தின் மாற்றமும் முன்னேற்றமும் நிச்சயம் முஸ்லீம்இ மலையக மக்களுக்கான மாற்றத்தையும் கொடுக்குமென்ற நம்பிக்கை உள்ளதென்று சொல்கிறீங்கள்? இந்த நம்பிக்கையின் அடிப்படை அல்லது வழிமுறை என்ன? அது எந்த அளவுக்குச் சாத்தியமானது?

நம்பிக்கையின் அடிப்படையிலேயே எல்லா வெற்றியும் வித்திடப்படுகிறது. நாங்களும் நம்புவோம்.
கடந்து வந்த கசப்புகள் அனுபவங்கள் மூலமாக நமக்குள் நல்லெண்ண அடிப்படையிலான மாற்றமொன்று எமக்குள் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றமானது இனங்களிடையேயான மாற்றத்தையும் புரிதலையும் கொடுக்க வல்ல சக்தியாகவே வளர்ந்து கொண்டிருக்கிறது.

நான்கூட யுத்த முடிவிற்கு முன்னர் எங்களால் தான் எல்லாம் முடியுமென்று நம்பியிருந்தேன். யுத்தமுடிவும் ஆயுதப்போர் முடிவும் தந்த அனுபவ வலி என்னில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாற்றம் ஆயுதப்போராட்டத்தை ஆதரித்த அனைவரிடமும் இருப்பதைக் காண முடிகிறது. இந்த மாற்றம் நிச்சயம் பெரும் சக்தியாகத் திரளும் அப்போது தமிழர்களாகிய நாங்கள் எம்மைப்போல் தமிழ் பேசும் முஸ்லீம் மலையகச் சகோதரர்களையும் ஒன்றிணைத்தே செயற்படுவோம். நாங்கள் பட்ட அவலத்தை நாங்கள் பட்ட துயரத்தை இன்னொரு சமூகத்துக்கு என் தமிழ்ச்சமூகம் நிச்சயம் கொடுக்காது.

எதுவும் சாத்தியமாகுமா என்பதனைத் தீர்மானிப்பது எதிர்காலம். அந்த எதிர்காலத்தை நம்புங்கள் இதுவெல்லாம் சாத்தியமாகும்.


கேள்வி - தமிழ்த் தலைமைகளின் தரப்பில் இருக்கின்ற குறைபாடுகள்தான் முஸ்லிம் மலையக மக்களையும் அந்தத் தலைமைகளையும் அந்நியப்படுத்தி வைத்திருக்கிறது என்ற இன்னொரு பக்க நியாயம் இருக்கிறது. ஏனைய சமூகங்களை அரவணைக்கத்தவறிய நிலையில் அவர்களால் எப்படி நெருக்கடிகளில் மட்டும் ஒன்றிணைந்து நின்று குரல் கொடுக்க முடியும்? எதிர்ப்புகளை வெளிப்படுத்த இயலும்?

இந்தக்கூற்றை நான் மறுதலிக்கிறேன். தமிழர் அரசியல் வரலாற்றில் வாய்ச்சொல் அரசியல்வாதிகளை ஞாபகங்களில் வைத்தே இப்படி நினைக்கிறீர்கள் என நம்புகிறேன். இந்த மலையக முஸ்லீம் தலைமைகள் கூட தங்களது சமூக முன்னேற்றத்தில் ஆற்றிய பங்கென்பது அதிகமில்லை. இங்கு இவர்கள் யாவரும் அரசியலாளர்களாகவே இருந்துள்ளார்கள். குறிப்பாக பாகப்பிரிவினை அதாவது தங்களது சுயநலத்தேவைகளை நிறைவேற்றவே தனித்த நிலையில் தம்மை வளர்த்தார்கள்.

இந்த வாய்வீரர்களை விட்டு தமிழர் விடுதலைப்போராட்டத்தை நடாத்திய தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்த சிறுபான்னையினத்தை ஒருபோதும் ஒதுக்கியதில்லை. தமிழர்களுக்கு அமைகிற தமிழீழம் என்ற தேசத்தின் கரையோரங்களை அண்டிய முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதிகளை முஸ்லீம்களுக்கே தருவதாக தமிழர்களின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார். இவ்விடயத்தை தனது போராளிகள் ஊடாக முஸ்லீம் சமூகத்தினருக்கு அதாவது சிறிய பள்ளிவாசல் தலைவர் முதல் பெரிய மதத்தலைவர்கள் அரசியலாளர்கள் வரையும் தெளிவுபடுத்தியிருந்தார். ஏனெனில் நாங்கள் சிறுபான்மையினமாக அனுபவித்த துயரங்களை முஸ்லீம்கள் அனுபவிக்கக்கூடாதென்பதில் தலைவர் பிரபாகரன் உறுதியாக இருந்தார்.

இதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தைவிட்டு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றிய
 விடயத்தை மனதில் வைத்தே எங்களது அரசியல் சிந்தனையானது முஸ்லீம் சமூகம் பற்றி இருக்கிறது.

90 களில் கிழக்கில் பெருமளவிலான கிராமங்கள் முஸ்லீம் ஊர்காவற்படைகளால் திட்டமிட்ட வகையில் தமிழர்கள் கொன்றழிக்கப்பட்டு கிராமங்கள் பறிக்கப்பட்டு தமிழர்கள் துரத்தப்பட்டுக் கொண்டிருந்த காலம். கிழக்கின் போராளிகள் அதிகம் வடக்கில் இருந்த காலமும் அதுதான்.

அந்தப் போராளிகளின் இரத்த உறவுகள் முஸ்லீம்களால் கொல்லப்பட்டும் கிராமங்கள் பறிக்கப்பட்டுக் கொண்டும் இருந்த நேரத்தில் தங்களது கோபத்தை யாழ் முஸ்லீம்களில் திருப்பினால் நிலமை விபரீதமாகிவிடும் என்றதை உணர்ந்தே புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றினார்கள். அன்று யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லீம்களை வெளியேற்றியது கூட அவர்களைக் காப்பாற்றவே செய்தார்கள்.

கிழக்கில் முஸ்லீம்களால் பறிக்கப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட ஊர்களில் குறிப்பாக சம்மாதுறை இ மீனோடைக்கட்டு எனச் சில கிராமங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். அதிலும் மீனோடைக்கட்டு கிராமம் (மட்டக்களப்பு) முழுமையாக முஸ்லீம்களால் அழிக்கப்பட்டு முஸ்லீம் கிராமமாக மாற்றியது மட்டுமன்றி இந்துக்களின் அடையாளமாயிருந்த மிஞ்சிய ஒரு பிள்ளையார் கோவிலையும் அழித்தார்கள்.

இன்னொரு உதாரணம் :- 1990இல் காரைதீவில் 7இளம் பெண்களுக்கு நிகழ்ந்த ஒரு வரலாற்றுத் துயரத்தை இங்கே ஞாபகப்படுத்துகிறேன். காரதீவில் அமைந்த ஒரு மாவீரரின் கல்லறையைச் சுற்றி முஸ்லீம்களால் பிடிக்கப்பட்ட அந்த ஏழு பெண்களும் அந்த மாவீரரின் கல்லறையைச் சுற்றிச் சுற்றி ஓடவைத்து மோசமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அந்த 7சகோதரிகளின் உடன்பிறந்த சகோதரர்கள் ஆனையிறவுக் களமுனையில் சண்டையில் நின்றார்கள். யாழ்ப்பாணக் களமுனைகளில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த போராளிகள் நின்றார்கள். இப்போராளிகளின் மனநிலமை அன்று எப்படியிருந்திருக்கும் என்பதனை நினைத்துப் பாருங்கள். தனது சகோதரி ஒரு சமூகத்தால் மிகவும் மோசமாக மனித குலமே வெட்கிக்கும் வகையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிச்சாக அந்தக் குடும்பத்திலிருந்து போராட வந்த போராளி நிச்சயம் தனது சகோதரிக்கு நிகழ்ந்த அநீதிக்கு பழிவாங்கத் துடிப்பானா இல்லையா ? ஆனால் எந்தத் தமிழ் போராளியும் அத்தகைய பாலியல் கொடுமையை செய்யவில்லை. இந்தப் பண்பை எவருமே புரிந்து கொள்ளவில்லை. புலியே எதிரியாய் கொள்கையோடிருந்தவர்களாலேயே இத்தகைய வன்முறைகள் கூட இருட்டடிக்கப்பட்டது.

அம்பாறையில் பள்ளக்காடென்ற கிராமம் பற்றி அறிந்திருப்பீர்கள். இக்கிராமத்தில் 1990வரை தமிழ் முஸ்லீம்களே இருந்தார்கள். முஸ்லீம்களுக்கு நிகராக தமிழர்களுக்கு வயல் நிலங்களும் சொத்துக்களும் இருந்தது. 1990இல் முஸ்லீம்கள் இக்கிராமத்திலிருந்து தமிழர்களை அடையாளமின்றத் துரத்தினார்கள். தற்போது இக்கிராமத்தை சிங்களவர்கள் முழுமையாக கைப்பற்றியது மட்டுமன்றி புனிதபிரதேசமாக பிரகடனப்படுத்தி முஸ்லீம்களிடமிருந்து முழுமையாக பறித்துள்ளார்கள். அத்தோடு புத்தவிகாரையிலிருந்து ஒலிக்கிற மணியோசை கேட்கும் தூரம் வரை சிங்களவர்களின் நிலமென்று ஆட்சி செய்கிறார்களே ? இந்தப் பறிப்புக்கு யார் உரிமை கோர முடியும் ?

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை புலிகள் ஒருமுறைதான் வெளியேற்றினார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் சகோதரர்களுக்கு நடந்த துயரத்துக்காக புலிகள் மன்னிப்புக் கோரினார்கள் வருந்தினார்கள். ஆனால் எத்தனையோ கொடுமைகளையும் படுகொலைகளையும் செய்து தமிழர்களின் கிராமங்களையும் பறித்த சமூகத்தின் ஒரு பொதுமகனோ அல்லது பள்ளிவாசல் தலைமையோ மூச்சும் காட்டவில்லை. இது மாபெரும் தவறென்று சொல்லவரவில்லை. இப்படித்தான் அந்த சமூக மனநிலைமை இருக்கிறது. மனங்களில் மாற்றங்கள் ஏற்படாதவரை ஒன்றிணைவும் சாத்தியமானதல்ல.


கேள்வி - நீங்கள் இவ்வாறு சொல்கிறீங்கள். ஆனால்இ புலிகள் இதற்கான காரணங்களைச் சொல்வதை விடுத்துஇ பகிரங்கமாக அது ஒரு வரலாற்றுத் தவறு என்று மன்னிப்புக் கேட்டிருக்கிறார்களே...  அது ஒரு அரசியற் தவறுஇ ஒரு இனத்தின் மீதான  அழுத்த நெருக்கடியாக அந்த நடவடிக்கை அமைந்தது என்று சொல்லியிருக்கிறார்களல்லவா?

நான் புலிகளின் பிரதிநிதியல்ல. ஆனால் புலிகளின் பாதையை நானும் நேசித்தேன் ஆதரித்தேன் என்ற அடிப்படையில் எனது இனம் சார்ந்த எனக்குள்ள நிலைப்பாட்டையே இங்கு தருகிறேன்;:-

ஒரு இனத்தை ஒரு பிரதேசத்திலிருந்து வெளியேற்றுவதற்கான உரிமையை ஒரு நாடே கொண்டிருக்கும். புலிகள் அமைப்பு ஒரு விடுதலையமைப்பு. அது தனது இனத்திற்கான போராட்டத்தை நடாத்திக் கொண்டிருந்த அமைப்பு. அதாவது புலிகள் ஒரு நாடோ அல்லது வல்லரச சக்தியோ அல்ல.

ஆனால் அவர்கள் அப்போது ஒரு நடைமுறை அரசாங்கத்தைக் கொண்டிருந்தார்கள். ஆக ஒரு நாட்டிற்கான அத்தனை அலகுகளையும் கொண்டிருந்த போதே 1990இல் முஸ்லீம்களை வெளியேற்றினார்கள். அதுவொரு வரலாற்றுத் தவறென்று சொன்னதன் காரணத்தை நான் பார்ப்பது இப்படித்தான்:-

அதாவது ஓர் நடைமுறை அரசாங்கத்தை வைத்திருந்த அமைப்பு நேரடியாக அவர்கள் அப்படிச் செய்தார்கள் அதற்கான பதில் நடவடிக்கையாகவே நாங்கள் இதனைச் செய்தோம் என்று சொல்வது நாகரீகமல்ல. அதற்காகவே புலிகள் வரலாற்றுத் தவறென்று மன்னிப்புக் கேட்டார்களென்றே எண்ணுகிறேன்.

எம்மீதான அ(இ)ழிவையும் மறக்க முடியாது ஆனால் மன்னிப்போம் என்பதனை புலிகள் பெருந்தன்மையோடு அரசியல் வரலாற்றுத் தவறாக மன்னிப்புக் கோரியிருப்பதாகவே கருதுகிறேன்.

ஒருகாலம் தவறுக்கு மரண தண்டனையே பதிலென்ற விடயத்தில் கால ஓட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்து எவ்வளவோ வரலாற்று மாற்றங்களை உருவாக்கிய புலிகள் 1990இல் இருந்தது போலவே 2009 வரை இருக்கவில்லையே. மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது அந்த மாற்றங்களை மாற்றிக்காட்டினார்கள். மாற்றங்களை நோக்கியே புலிகள் நடந்தார்கள். அதில் சரி தவறுகள் யாவுமே இருந்தன. தவறுகளுக்காக வருந்தினார்கள் மன்னிப்புக் கோரினார்கள். மொத்த இனத்துக்காக சிலுவை சுமந்தவர்கள் அவர்களது நல்லெண்ணங்களைப் புரிந்து கொள்வோம்.

கேள்வி -  தமிழ்த்தலைமைகளின் வரலாறறுத்தவறுகள்தானே முஸ்லிம்கள் தனித்தலைமை பற்றிச் சிந்திக்க வைத்தன. இன்னும் தமிழ் - முஸ்லிம் உறவுககு இடைஞ்சலாக இருப்பதும் இந்தத் தலைமகள்தானே ?


இங்கு தமிழ்த்தலைமைகள் இதயசுத்தியோடு இயங்கினார்கள் என்று பொய் சொல்லவில்லை. ஆனால் தனியே தமிழ்த்தலைமைகளை மட்டும் குற்றம் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. முஸ்லீம் கட்சி தலைமையின் தோற்றத்தின் மூலம் எவ்வாறமைந்ததென்பது ஆராட்சிக்குரியது.

கிழக்கில் பரந்த முஸ்லீம் சமூகத்தின் அரசியல் வரலாற்றை பார்த்தீர்களானால் கிழக்கு முஸ்லீம்களின் வாக்கு யுஎன்பியின் ஆதரவும் அதன் தளமுமாகவே இருந்திருக்கிறது. அத்தோடு அரசியலில் முஸ்லீம் தரப்பு பிரதிநிதிகளையும் பெரும்பாலும் ஆழும் தரப்பினோடு இணைந்ததாகவே இருந்திருக்கிறது. இதில் தமிழர்களின் வரலாற்றுத் தவறே அவர்களை தனித்தலைமையை சிந்திக்கத் தூண்டியது என்பது எந்த வகையில் நியாயமாகும் ?

முஸ்லீம்களின் அரசியல் கட்சியின் மலர்வு உண்மையில் தமிழர்களின் புறக்கணிப்பால் அல்ல. அவர்கள் தங்களுக்கான அரசியல் பொருளாதார நலன்கள் சார்ந்து தங்கள் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தங்களுக்கான தனித்தலைமையை உருவாக்கினார்கள். இதில் தமிழர்களை குறைசொல்வது தவறானது.


கேள்வி - வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஒரு காலம் முஸ்லிம்கள் பல விடயங்களிலும் செல்வாக்குச் செலுத்தினர். ஆனால் இன்று அவர்களுடைய இடம் மிக நலிந்து போயிருக்கிறது. அனுப்பப்பட்ட முஸ்லிம்களை ஒரு நல்லெண்ண முயற்சியாக திரும்ப அழைப்பதற்கு யாராவது புத்தளத்துக்கோ அல்லது அவர்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்ற இடங்களுக்கோ சென்றிருக்கிறார்களா?  அது மட்டுமல்ல 1990 களில் கைவிட்டுச் சென்ற காணிகளை மீளப் பெறுவதற்கே முஸ்லிம்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.


ஏற்கனவே யாழ் முஸ்லீம் வெளியேற்றத்தில் குழப்பமான ஒருவகை கோபத்தோடு இருந்த மக்களை அவர்கள் குடியேறிய பிரதேசங்களில் சென்று சந்தித்து அவர்களுக்கான ஆதரவை வழங்கியிருப்பினும் அந்தநேரக் கொந்தளிப்பில் அவர்கள் அதை ஏற்றிருக்க வாய்ப்புகள் அதிகமிருந்திருக்காது. அப்படியொரு ஆதரவுக் குழுவை அந்த சமூகம் அன்போடு வரவேற்றும் இருக்காது. சிலவேளை ஒரு கலவரத்தைக் கூட கொண்டு வந்திருக்கலாம்.

மற்றும் பொருளாதாரத்தடை முதல் தமிழர்களின் வாழ்வும் அவர்களது வாழ்விடங்களும் சிங்களவர்களால் ஒரு பக்கத்தால் பறிக்கப்பட்டும் கொலைகளும் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதே 90களில் கிழக்கில் தமிழர்களை முஸ்லீம்களும் சிங்களவர்களும் ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொண்டதோடு கிராமங்களை பறித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலமையில் தன்னினத்தை அழித்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு ஒருகன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டுகிறோம் என்று எவராலும் கருணையாளர்களாக மாறியிருக்க முடியாது. இந்த உண்மையை இன்று 23வருடம் கழித்து முஸ்லீம் மக்களாலும் இ இன்றைய புதிய சந்ததியாலும் புரிந்து கொள்ள முடியுமென்று நம்புகிறேன்.

முஸ்லீம்களின் காணிகளை மீளப்பெறுவதற்கான ஆதரவினை நிச்சயம் தமிழர்கள் வழங்க வேண்டும். இவ்வாதரவை வழங்க தமிழர்கள் தற்போது எவ்விதத்திலும் இடைஞ்சலாக இருக்கமாட்டார்கள்.


கேள்வி - இதே கேள்விளை நானும் கேட்கிறேன்.  தமிழ்ச்சமூகத்தின் புத்திஜீவிகள், தலைவர்கள், சமூகப்பிரதிநிதிகள் முன்மாதிரியாக ஒரு இதயசுத்தியுடன் நட்புறவை வளர்க்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி முதலடிகளை வைக்கலாமே ?

உங்களது இக்கருத்தில் நானும் ஆயிரம் மடங்கு ஒற்றுமைப்படுகிறேன். நட்புறவு இ புரிதல் விடயத்தை தமிழ் பிரநிதிகள் கட்டாயம் கவனத்தில் எடுத்து முஸ்லீம்களுடன் நல்லுறவை ஏற்படுத்த வேண்டும்.

கேள்வி -  அடிப்படையான விசயங்களில் மாற்றங்களைச் செய்யாமல் தீர்வை எட்டுதல் நியாயமாக நடந்து கொள்ளுதல் நீதியை நடைமுறைப்படுத்துதல்இ பாதிப்புக்கான நிவாரணம் வழங்குதல்இ ஐக்கியத்துக்கான அடிப்படைகளை உருவாக்குதல் என்றில்லாமல் பத்திரிகை அறிக்கைகளில் மாற்றங்களை எப்படி எதிர்பார்க்க முடியும்?  

ஊடகங்களே உலகைத் தீர்மானிக்கிற சக்தியாக இருக்கிற காலம் இது. இலகுவாக மக்களைச் சென்றடையும் வழியை பத்திரிகை இலத்திரனியல் ஊடகங்கள் கொண்டிருக்கிறது. இதே பத்திரிகைகள் சொல்கிறதையே ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு உலகம் வந்துள்ளது. ஆக இந்த வழிமுறையை நாங்களும் தேர்ந்தெடுப்பதில் தவறில்லைத்தானே ?

அறிக்கைகளோடு நின்றுவிடாமல் முஸ்லீம் தமிழ் சமூகங்களுக்கிடையிலான அடிப்படைப் பிரச்சனைகளை முதன்னிலைப்படுத்தி அவர்களுக்கான நிவாரணத்தை இ ஐக்கியத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பை நாங்கள் ஒவ்வொருவரும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். இவ்விடயங்கள் பற்றி பேசுகிற நீங்களும் நானுமே இதன் ஆரம்பமாக இயங்க முடியும்.

பிரச்சனைகளின் மூலத்தை ஆராய்ந்து இரு சமூகங்களிடையேயுமான இணைப்புப்பாலமாக இவ்விடயங்களில் அக்கறை செலுத்துகிற பேசுகிற யாவரும் ஒன்றிணைய வேண்டும். இரு இனங்களின் இலக்கியத்துறை சார்ந்தோர் முதல் சமூகத்தின் ஒவ்வொரு குடிமக்களும் புரிந்து செயற்பட முன்வர வேண்டும்.

நடந்து முடிந்த வரலாற்று அரசியல் தவறுகள் காயங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து தமிழ் முஸ்லீம் சமூகங்களை முன்னேற்றுவோம். இதுவே எமது சகோதர சமூகமான முஸ்லீம்களோடான நல்லுறவையும் உடன்பாடுகளையும் எட்டக் கூடிய வழியாக அமையும்.
 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதுவரை இணையத்தில் தைமாதம் வெளியான நேர்காணல் யாழில் இணைத்த இணைப்பு.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=115085

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.