Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரினால் ஏற்பட்ட அழிவுகளை மதிப்பிடும் பணி சிறிலங்காவில் இன்று ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sri-Lankan-troops-crush-T-007.jpg

அனைத்துலக அழுத்தங்களை அடுத்து, மூன்று பத்தாண்டுகளாக நீடித்த போரினால் ஏற்பட்ட உயிர், உடல், சொத்து அழிவுகள், பாதிப்புகள் தொடர்பான முழுமையான விபரங்களைத் திரட்டும் நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. 

இன்று தொடக்கம் சிறிலங்காவில் இதுதொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 

1983ம் ஆண்டு தொடக்கம், 2009ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் நாடுமுழுவதிலும் இடம்பெற்ற போர் மற்றும் வன்முறைகளினால், மரணமானவர்கள், காயமடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், வீடுகள் மற்றும், சொத்துகளை இழந்தவர்கள், காணிகளை பறிகொடுத்தவர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் சேகரிக்கப்படவுள்ளன. 

இந்தக் கணக்கெடுப்புப் பணிகள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்தப் பணிகளை மேற்கொள்ளும் சிறிலங்காவின் சனத்தொகை, புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

இந்தக் கணக்கெடுப்பு பணிகளை, பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சுகளின் துணையுடன் சனத்தொகை, புள்ளிவிபரத் திணைக்களம் மேற்கொள்ளவுள்ளது. 

நாடு முழுவதிலும் உள்ள 14,022 கிராம அதிகாரி பிரிவுகளிலும், இந்தப் பணிகளை மேற்கொள்ள 16 ஆயிரம் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

வீடு வீடாகச் சென்று அதிகாரிகள் விபரங்களை சேகரிப்பர் என்றும், பொதுமக்கள் இதற்கு ஒத்துழைக்கும் படியும், கோரப்பட்டுள்ளனர். 

போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாக முரண்பட்ட பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இதுதொடர்பான சரியான தொகையை மதிப்பீடு செய்வதற்கு ஒரு கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. 

அதேவேளை, இந்தக் கணக்கெடுப்பு சிறிலங்காவில் மட்டும் மேற்கொள்ளப்படவுள்ளதால், இது முழுமையானதாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. 

போரின் போது பல குடும்பங்கள் முற்றாகவே அழிந்து விட்டதால் அவர்கள் பற்றிய தகவல்கள் இந்த மதிப்பீட்டில் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை. 

அத்துடன் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான குடும்பங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டன. 

இந்தநிலையில், போரில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் பதிவு செய்யப்படுவது சாத்தியமில்லை என்றும் கருதப்படுகிறது.

 

http://www.puthinappalakai.com/view.php?20131128109527

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஜெனிவா அமர்வு வரை தொடரும் என எதிர்பார்க்கலாம். பின்னர் அப்படியே கிடப்பில் போடப்படும்.

அப்பிடி எல்லாம் கிடப்பிலை போடப்பட மாட்டாது  போராலை ஏற்பட்ட பாதிப்புக்கள்  ஏற்கனவே மதிப்பிட்டதை விட அதிகம் என்பது சொல்லப்படும் ...  

 

அப்படி அதிகமான சேதம் ஏற்பட்டு இருப்பதாக காட்டி  வெளிநாடுகளிடம் பிச்சை வாங்க திட்டம் தீட்ட படுகிறது...   அப்படி உதவ சீனாவும் இரசியாவும் இரானும் கூட  வரலாம்....  இந்தியா புறங்கையை நக்க வேண்டி வரலாம்...   இல்லை போட்டி போட்டுக்கொண்டு இந்தியாவும் பாரிய உதவிகளை செய்யலாம்... 

 

வட கொரிய காறணின்  அதளபழைய தந்திரம்  இது.... 

 

தமிழனை முழுமையாக சக விடாமல் சிங்களம் வைத்து இருக்கும் காரணம் கூட இதுதான்...  தமிழனை காட்டி தனக்கு தேவையான பிச்சைகளை வாங்கி கொள்ள... 

Edited by தயா

வரவு செலவு திட்டம் இப்படி புதுசு புதுசா அறிக்கை எல்லாம் விடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.