Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனின் உண்மைத் தோற்றத்தை வெளிக்காட்டிய அமெரிக்க மாநாடு - ஊர்சுற்றி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

நவம்பர் மாதம் 01ம்,02ம்,03ம் திகதிகளில் அமெரிக்க மாநாடு இடம் பெற்றது. அமெரிக்க தமிழ்ச்சங்கமும் அமெரிக்க தமிழர் நடவடிக்கை குழுவும் இணைந்து இம் மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தனர்.

அமெரிக்க தமிழர் சங்கம் ஒரு பழமையான தமிழர் அமைப்பாகும் இது தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு விடயங்களில் அக்கறை கொண்டிருக்கின்றது. அமெரிக்க தமிழர் நடவடிக்கை குழு அரசியல் விடயங்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு இது. அமெரிக்க சட்டமன்றம் வெளிநாட்டு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என்பவற்றுடன் தமிழர் விவகாரங்களுக்காக தொடர்ச்சியாக பேசிவருகின்றது.

இம் மாநாட்டில் தாயகத்திலிருந்து கஜேந்திரகுமார், அனந்தி, சுமந்திரன், மாவைசேனாதிராசா, என்போரும் சிவில் சமூகத்திலிருந்து யாழ் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் குருபரனும் சட்டத்தரணி இரட்ணவேலும் கலந்து கொண்டனர். பல்வேறு நாடுகளில் செயற்படும் புலம்பெயர் அமைப்புகளும் வந்திருந்தன.

01ஆம் திகதி அமெரிக்க தமிழர் நடவடிக்கை குழுவின் உட்சந்திப்பு இடம் பெற்றது. தாயகத்திலிருந்து சென்றவர்களும் அழைக்கப்பட்டனர். நடவடிக்கை குழுவின் கடந்த கால பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டதோடு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய பணிகள் பற்றியும் ஆராயப்பட்டன.

02ஆம் திகதி காலை குழுக்கலந்துரையாடல் இடம் பெற்றது. ஐக்கிய நாடுகள் சபை மட்டத்தில் தமிழர் விவகாரங்கள் எவ்வாறு முன் கொண்டு செல்வது பற்றி ஆராயப்பட்டது. பிற்பகல் அமெரிக்க தமிழர் நடிவடிக்கை குழுவின் வருடாந்த மாநாடு இடம் பெற்றது. சுமார் 300 பேர் வரை கலந்து கொண்டனர். பிரதம பேச்சாளராக கஜேந்திரகுமாரும், சிறப்பு பேச்சாளராக குருபரனும் உரையாற்றினர்.

கஜேந்திரகுமார் பிரதம பேச்சாளராக உரையாற்றும் போது இனப் பிரச்சனை என்பது தேசம் அழிக்கப்படுவதனால் ஏற்படும் பிரச்சனை. தேசத்தை பாதுகாத்து அதற்கு அங்கிகாரம் பெறுவதே தீர்வாக அமையவேண்டும். ஒரு சிலர் தமிழ் மக்களுக்கு அதிகாரம் இல்லாததுதான் பிரச்சனை என கூற பார்க்கின்றனர். இதனால் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளவேண்டும் என கூறுகின்றனர். இது தவறானது நாம் தெளிவாக பிரச்சனைகளை அடையாளம் காணவேண்டும். பிழையாக அடையாளம் கண்டால, பிழையான தீர்வையே நாம் சிபார்சு செய்வோம்.

எமது கட்சி இரு தேசங்கள் ஒரு நாடு என்பதையே தீர்வாக முன்வைத்துள்ளது. இத் தீர்வை விமர்சிப்பவர்கள் எங்களுடைய தீர்வை எப்படி அடைவீர்கள் என கேட்கின்றனர். அதற்கு என்னுடைய பதில் பூகோள அரசியலை பயன்படுத்துவோம் என்பதே. எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் பிராந்திய சக்தியான இந்தியாவும் தமது இலக்கினை அடையமுடியாது என்ற நிலையினை நாம் உருவாக்கவேண்டும். இந்த பூகோள அரசியலை சரியாக பயன்படுத்துவதில் தான் எமது வெற்றி தங்கியுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரையில் எமக்குள்ள மிகப்பெரிய சொத்து தமிழ் நாடு. அதே போல மேற்குலகத்தை பொறுத்தவரை மிகப்பெரிய புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர். புலம்பெயர் மக்கள் தமிழ்த்தேசத்தின் நீட்சி. அதன் ஒரு அங்கம் அவர்கள் தமிழர் தேசத்தின் ஆதரவாளர்கள் அல்ல மாறாக பங்காளிகள். தமிழர் விவகாரம் தொடர்பான சர்வதேச அரசியலாக வளர்வதில் மிகப்பெரும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு. இப் பணியின் முக்கியத்துவத்தை உணர்து அதனை ஆற்றுவதற்கு அவர்கள் முன் வரவேண்டும். இன்று ஒரு ஆபத்து உள்ளது. தமிழர் அரசியலை கையாள்வதில் முக்கியத்துவத்தை உணராமல் சர்வதேச சமூகத்தின் தேவைக்கே ஏற்ப செயற்படும் போக்கே அவ் ஆபத்தாகும். சர்வதேச சமூகம் விரும்புவதை தான் செய்ய வேண்டுமென்றால் நாம் நமது தேசநலன்களை அடைய முடியாது. எங்களுடைய அரசியலின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்டு சர்வதேச அரசியலில் தமிழர் அரசியலின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்டு அதனுடன் - லொபி பண்ணதயாராகவேண்டும் என்றார்.

சிறப்புப்பேச்சாளரான யாழ் பல்கலைக்கழக சட்டவிரிவுரையாளர் குருபரன் உரையாற்றும் போது தமிழ் மக்கள் மத்தியில் ஐனநாயகம் வளர்வதற்கு இன்று மாற்று தலைமை தேவை இது தோன்றும் போது தான் தேசம் ஐனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப வளரும். அரசியலில் ஈடுபடும் தரப்புக்களும் பொறுப்புடன் செயற்படும். தலைமைகள் மக்களுக்கு பொறுப்பு சொல்லும் கலாச்சாரம் உருவாகும். ஆனால் துரதிஸ்டவசமாக தாயகத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும், தமிழ் ஊடகங்களும் திட்டமிட்டு இவ் வெற்றிடத்தை நீட்டி செல்வதற்கு முயற்சிக்கின்றன.

புலம் பெயர் மக்கள் இவ் மாற்றத்தினை கொண்டு வரக்கூடிய வகையில் முன் உதாரணமாக செய்பட முன்வரவேண்டும். கேள்வி பதில் நேரம் மாவைக்கும் சுமந்திரனுக்கும் ஒதுக்கப்பட்டது. அதற்கு அவர்கள் இணங்காதததினால் பின்னர் அந்த அமர்வு இரத்து செய்யப்பட்டது. கஜேந்திரகுமாரினதும், குருபரினதும் பேச்சை கேட்பதற்காக எம்மை இங்கு வைத்திருக்கிறீர்கள் என மாவையும், சுமந்திரனும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுடன் முரண்பட்டனர்.

02ம் திகதி இரவு அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் ஒன்று கூடல் இடம் பெற்றது. சுமந்திரன் மாவை கஜேந்திரகுமார், அனந்தி, இரட்ணவேல் ஆகியோர் உரையாற்றினர். காலையில் உரையாற்றிய கஜேந்திரகுமாரை இரவும் உரையாற்ற சந்தர்ப்பம் கொடுத்தமைக்காக சுமந்திரன் மீண்டும் நிகழ்வு ஏற்பாட்டாளருடன் முரண்பட்டார். தான் உரையாற்றாமல் வெளியேறப்போவதாகவும் தெரிவித்தார். நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் நீங்கள் விரும்பினால் போகலாம் ஆனால் யோசித்து முடிவெடுங்கள் உங்களைப் பற்றி தப்பான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் வளர பார்க்கும் என குறிப்பிட்டானர். சுமந்திரன் ஒருவாறு சமாதானம் அடைந்து நிகழ்வில் பங்குபற்றினார்.

சுமந்திரன் உரையாற்றும் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் ஆணை கொடுத்துள்ளனர். இந்த ஆணையை எவரும் திரிபுபடுத்தக்கூடாது. புலம் பெயர் மக்கள் வடமாகாணசபை தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகளை அரசுக்கெதிரான வாக்குகள் என கூறப்பார்க்கின்றார்கள். இது தவறானதாகும். கூட்டமைப்பின் கொள்கைகளுக்காகவே மக்கள் வாக்களித்துள்ளனர். கொள்கையை விளங்கித்தான் மக்கள் வாக்களித்திருக்கின்றனர்.

நாம் தனி நாட்டு கோரிக்கைக்கு எதிரானவர்கள். பிரிக்கப்பட முடியாத ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் அரசியல் தீர்வினை முன்வைத்தோம். மக்கள் அதனை விளங்கித்தான் எமக்கு வாக்களித்திருக்கின்றனர். எங்களுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு நீங்கள் எவரும் கைதட்டமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். (சபையினர் கைதட்டல்) ஆனால் ஒரு போதும் எமது அரசியல் நிலைப்பாட்டினை நாம் கைவிடப் போவதில்லை என்றார்.

சுமந்திரன் தனது உரையை முடித்தவுடன் வெளியேறிவிட்டார். அதனைத் தொடர்ந்து மாவை உரையாற்றினார். மாவையின் உரை சுமந்திரனின் உரைக்கு மாறாக இருந்தது. மக்கள் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படையிலேயே வாக்களித்ததாக குறிப்பிட்டார். இவ் வாக்குகள் அரசுக்கு எதிரான வாக்குகள் என்றும் குறிப்பிட்டார். ”தமிழீழம்” என்ற சொல் பயன்படுத்தபடவில்லை என்பதை தவிர ஏனைய வகைகளில் தீவிரமான உரையாக இருந்தது.

உரை முடிந்த பின் பார்வையாளர்களில் சிலர் சுமந்திரனின் உரைக்கும் உங்களின் உரைக்கும் முரண்பாடு உள்ளதே என மாவையை கேட்டனர். சுமந்திரன் எனது உரைக்கு மாறாக பேசினாரா? என அவர்களையே மாவை திருப்பிக்கேட்டார். இறுதியாக அனந்தி பேசினார் அவரை யார் என அறிமுகப்படுத்திய போது மக்கள் எழுந்து நின்று கைதட்டினர். மக்கள் இலட்சியத்திற்காகவே வாக்களித்தனர் என அவர் குறிப்பிட்டார்.

கஜேந்திரகுமார் காலையிலே பேசியதையே மீண்டும் பேசியிருந்தார். மொத்தத்தில் கஜேந்திரகுமார், குருபரன், அனந்தி ஆகியோரின் உரைகளுக்கு பார்வையாளர் மத்தியில் இருந்து பலத்த வரவேற்பு கிடைத்தது. இனி வரும் காலங்களில் புலம்பெயர் மக்கள் ஒழுங்கு செய்யும் நிகழ்வுகளில் கூட்டமைப்பினர் கலந்து கொள்வதாயின் கஜேந்திரகுமார் கலந்து கொள்ளக் கூடாது என நிபந்தனை விதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

- நம் தேசம்

 

 

http://www.sankathi24.com/news/36367/64//d,fullart.aspx

 
  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஆட்களுக்கு முன்னாலை இந்தக்கதை கதைக்குதுஎன்றால்....அங்கு போற அமெரிக்ககுழு.....ஏனைய நாட்டுகுழு எல்லாத்திலையும்  இந்தாள்தான் போய்கதைக்குது.....நாமலின் கிரிக்கட்டு குழுவிலும் இருக்குது...போதாக்குறைக்கு கனடாவில்வந்து ..கூத்தமைப்பு கூட்டத்திலையும் உதைத்தான் சொல்லுது...வருசத்திலை இரண்டுதரம் வந்துகலெக்சன் போடுது....இது எங்கைபோய் முடியுமோ....மாவை அண்ணை உவர்கதைத்தது தெரியாது என்று கேட்கிறர் என்றால்...இது அவைக்கு மாகாணசபை கூட்டத்திலை  எடுத்த பயிற்சி.....அமெரிக்க கூட்டத்திலை செயல் படுத்தி பார்த்தவர்போலை....நல்ல காலம் இவர் சுமந்துவை மாவீரர் நாளுக்கு கூப்பிடேல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் என்ற பெருச்சாளியின் உண்மைமுகத்தை தோலுரித்துகாட்டிய நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு கோடி நன்றிகள் . 

  • 3 weeks later...

சுமந்திரன் செய்ததுதான் சரி.சம்பவம் நடந்து பல நாட்களுக்குப் பின் தானா செய்தி இணையத்தளத்திக்கு தெரிய வந்தது ,எங்களுக்கு அடுத்தடுத்த நாள் சுமந்திரன் கனடாவுக்கு வந்த போது இதை விட பலதை சொல்லிவிட்டார் .

குதிரைகளின் தலைவரை அமெரிக்காவும் ஐரோப்பாவிலுள்ள பு .பு கள்தான் கூப்பிடுகினம் ,கனடாவில் இவரை ஆதரித்தவர்கள் சொல்லுகினம் இவர் ஆளுமையற்றவர் ,வெளிநாடு வந்தால் ஒருநாளைக்கு ஒரு கூட்டத்திலை தான் கலந்து கொள்வாராம் ,சாப்பாடும் அவர் விரும்பின சாப்படுதானாம் வேண்டுமாம் இதே நேரத்தில் சம்பந்தன் ஐயா இந்த வயதிலையும் சலிக்காமல் பலகூட்டங்களில் கலந்து கொள்வாராம் .

கஜேந்திரகுமார் தன்ர யோசனையை ஒருவரும் கேட்கிறாங்களில்லை என்று பு .பு களிடம் அழுதிருப்பார் ,அதுதான் சில பு பு கள் இந்த ஏற்பாட்டை செய்திருக்கும் .

நான் நினைக்கின்றேன் ஜி .ஜி குடும்பமே தமிழருக்கு எதிரான அரசியலைத்தான் நடத்துகினம் யாழ் களத்திலை இந்தியாவில் இந்திரா காந்தி கருணாநிதியின் ,சிறிலங்காவில் மகிந்தவின் குடும்ப அரசியலை எதிர்ப்பவர்கள் ஏன் குமார் குடும்ப அரசியலை ஆதரிக்கியினம் .

தமிழரசு கட்சியினர் தமிழ் பல்கலைக்கழகம் கேட்டபோது, ஜி .ஜி இந்து பல்கலைக்கழகம் கேட்டு குழிபறித்தார்.
77இல் எல்லோரும் TULF இல் தமிழ் ஈழம் கேட்கும்போது குமார் பொன்னம்பலம் தமிழ் ஈழத்திற்கு எதிராக தனிக்களம் கண்டார் .

தற்போது ஜி .ஜி.யின் பேரனும் குமாரின் மகனுமாகிய கஜேந்திரகுமார் TNA கு எதிராக அரசியல் செய்கின்றார் .கூட்டிக்களித்து பார்த்தால் DNA ஆல் வியாதி கடத்தப்படுவது நிரூபணம் .

பி .கு :பு .பு -புலம்பெயர் புண்ணியவான்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.