Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விடமாட்டோம், கடும் எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் தலைவர்கள்.

Featured Replies



Published on December 11, 2013-10:01 am ·
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தனியாக அமைப்பது தொடர்பில் பாராளுமன்ற கட்டிடத்தில் பொது நிருவாக அமைச்சர் தலைமையில் நேற்று (10) இடம் பெற்ற கூட்டத்தில் கல்முனை பிரதேசத்தை சுக்கு நூறாக்கும் எந்த செயலுக்கும் நாம் உடன்படமாட்டோம் என றவூப் ஹக்கீம் மற்றும் ஹரீஸ் எம்.பீ ஆகியோர் தெரிவித்தனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கல்முனை முஸ்லிம் மக்களுக்கு திட்டமிட்ட அநீதி நடைபெறுகின்றது என்று உரத்த குரலில் சத்தமிட்டார். நேற்று நடை பெற்ற கூட்டத்தில் தமிழ் மக்களின் சிவில் சமுக பிரதிநிதிகள், கல்முனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என 25 பேர் கலந்து கொண்டனர், முஸ்லிம் பிரதிநிதிகள் சார்பில் றவூப் ஹக்கீம், ஹரீஸ் MP, பைசால் காசீம் MP, தவ்பீக் MP, நிசாம் காரியப்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் ஆரம்பித்த போது பொது நிருவாக அமைச்சரின் மேலதிக செயலாளரினால் கல்முனை வரைபடம் சமர்பிக்கப் பட்டுள்ளது. அந்த வரை படத்தில் கல்முனை பிரதேசம் 50 சதுர கிலோ மீட்டர் எனக் காட்டப்பட்டுள்ளது, அதனை ஹரீஸ் வன்மையாக எதிர்த்து , அவ்வாறு கூட்டிக் காட்ட முடியாது நான் கல்முனை மாநகர முதல்வராக இருந்தபோது ஜெய்க்கா திட்டத்தில் 9 சதுர கிலோ மீட்டரே காட்டப் பட்டுள்ளது, அமைச்சின் மேலதிக செயலாளர் இந்த கூட்டத்தை பிழையாக நடத்துகின்றார் என ஹரீஸ் சபையில் தனது அதிருப்தியை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அருண் தம்பி முத்து அங்கு உரையாற்றும் போது, கல்முனையில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப் படுவதாகவும், இஸ்லாமாபாத் வீட்டு திட்டத்தில் தமிழர்களுக்கு வீடு வழங்கப் படவில்லை என்றும், நிதி விடயங்கள் தாமதப்படுத்தப்படுவதாகவும், 29 கிராம சேவகர் பிரிவு உள்ள தமிழ் பிரிவுக்கு தனி பிரதேச செயலகம் வழங்கப் பட வேண்டும் என தெரிவித்தார் .

இதற்குப் பதிலளித்த றவூப் ஹக்கீம் மற்றும் ஹரீஸ், “அவ்வாறென்றால் காரைதீவு, நாவிதன்வெளி பிரதேங்களின் விடயம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். அங்கு எம்மால் ஒத்துப் போக முடியும் என்றால் ஏன் கல்முனையில் அதனை செய்ய முடியாது. அங்கு நாம் உபசெயலகம் கேட்காமல் உங்களுடன் இணைந்து செயற்படுகின்றோம். அதிலும் முஸ்லிம் மக்களுக்குத்தான் அநீதி இழைக்கப் பட்டுள்ளது 20,000 வாக்காளர்களை கொண்ட தமிழர் பிரதேசத்துக்கு 29 கிராம சேவகர் பிரிவும் 35,000 வாக்காளர்களை கொண்ட முஸ்லிம் பிரதேசத்துக்கு 29 கிராமசேவகர் பிரிவே உள்ளது. இந்த விடயத்தை நாம் இலகுவாக பேசிவிட முடியாது. உங்களால் சமர்பிக்கப்பட்டிருக்கும் வரைபடத்தின் படி கல்முனை தரவை கோவில் வீதியில் இருந்து முஸ்லிம்களின் பொருளாதார மையமான கல்முனை நகரத்தை தமிழ் பிரதேச செயலகத்துக்குள் எடுத்து முஸ்லிம்களுக்கு அநீதி இளைக்கவே திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விடயத்தை எல்லை நிர்ணயக் குழு தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

பிரதி அமைச்சர் சரத் வீர சேகர 29 கிராம சேவகர் பிரிவு உள்ள பிரதேசத்துக்கு தனி பிரதேச செயலகம் வழங்கப் பட வேண்டும் என தெரிவித்த போது, பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் போலி வரை படத்தை வைத்துக்கொண்டு முஸ்லிம் பிரதேசத்தை அபகரிப்பு செய்யும் நோக்கில் செயற்படுவதை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தார்.

அமைச்சர் தயாரத்னா பேச முற்பட்ட போது, கல்முனையில் உள்ள மக்களை பிரிப்தற்கு முயற்சிக்க வேண்டாம். கல்முனை முஸ்லிம்களை சிறுமைப்படுத்த எடுக்கும் முயற்சியே இதுவாகும் என கூறி அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் இருந்தும் சிங்கள இனத்தை சேர்ந்த ஒரு அரசாங்க அதிபரை நாம் ஏற்றுக்கொண்டு இனவாதம் பேசாமல் வாழ்கின்றோம். கரையோர மாவட்டம் எமக்கு தரப்பட வேண்டும் எங்களுக்கு அநீதிக்கு மேல் அநீதி நடை பெறுகின்றது என்று பலத்த சத்தமிட்ட ஹரீஸ், இங்கு நடை பெறுகின்ற அநீதிகளை ஏற்கமாட்டோம் என்று மேசை கதிரையை தள்ளிவிட்டு பீறிட்டு எழுந்தார். அப்போது பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரத்னவும், தயாரத்னவும் ஹரீசை பிடித்து அமர செய்தார்கள்.

இந்த விடயமாக நான் தெளிவில்லாமல் இருந்தேன், ஹரீஸ் எம்.பீ யும், அமைச்சர் றவூப் ஹக்கீமும் தெளிவுபடுத்திய பின்னர்தான் உண்மை நிலையை அறிந்தேன். ஹரீஸ் எம்.பீ இந்த விடயங்களை தெளிவுபடுத்தாமல் இருந்திருந்தால் நான் தமிழ் பிரதேச செயலகம் தனியாக அனுமதியை இன்று வழங்க இருந்தேன் என பொது நிருவாக அமைச்சர் தெரிவித்தார்.

உண்மை நிலையை அறிந்த அங்கிருந்த சிங்கள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் குசு குசுக்கத் தொடங்கியதும் இந்த விடயம் விஸ்வரூபம் எடுக்கப் போவதை அறிந்து இந்த விடயத்தை ஜனாதிபதி அவர்களின் கவனத்துக்கு கொண்டுவருகிறேன் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாங்கள் கல்முனை மாநகர சபையில் ஒற்றுமையுடன் இருக்கின்றோம் 29 கிராம சேவகர் பிரிவுடன் இருக்கும் தமிழ் மக்களுக்கான தனி பிரதேச செயலகம் அமைப்பது பற்றி நாம் முதலில் பேசவேண்டும். தங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைபடத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விடயத்தில் பெரும்பான்மையாக உள்ள கல்முனை முஸ்லிம்களின் முடிவுகளையும் பெறவேண்டும் என் கல்முனை மேயர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அம்பாறை அரசாங்க அதிபரை பொது நிருவாக அமைச்சர் விசாரித்தபோது கல்முனையில் இயங்கும் உப-பிரதேச செயலகத்துக்கு எந்த அநீதியும் இடம் பெறவில்லை. தமிழ் மக்களுடைய அன்றாட செயற்பாடுகளும் முஸ்லிம் மக்களுடைய அன்றாட செயற்பாடுகளும் தடை இன்றி இடம் பெறுவதாக அரசாங்க அதிபர் அங்கு தெரிவித்தார்.

அங்கு சென்றிருந்த தமிழ் சிவில் சமூகத்தினர் ஹரீஸ் எம்.பீ எங்களுக்கு அநீதி இழைப்பதாக தெரிவித்தனர். எங்களுக்கு ஒரு தீர்க்கமான முடிவை அமைச்சர் அறிவிக்க வேண்டும் என தெரிவித்தபோது, இந்த விடயத்தை ஆழமாக ஆராய வேண்டியுள்ளது இதனை நான் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் என அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்

- See more at: http://www.thinakkathir.com/

  • கருத்துக்கள உறவுகள்

இது குறித்து ஹக்கீமுக்கு ஜெயபாலன் ஐயா ஒரு பகிரங்கக் கடிதம் எழுதினால் என்ன. கல்முனையில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றனர். வாழ்ந்தும் வந்தனர். அங்கு முஸ்லீம்கள் 1990 இல் மேற்கொண்ட தமிழின அழிப்பின் பின் பல பிரதேசங்கள் திட்டமிட்டு முஸ்லீம் ஆக்கிரமிப்புக்கு இலக்காகி.. தமிழ் மக்கள் நீண்ட காலமாக அடித்து விரட்டப்பட்டு உள்ள நிலையில்.. அங்கு பலத்த பீதிகள் மத்தியிலும் எஞ்சி உள்ள தமிழ் மக்களின் அரசியல் நிர்வாக உரிமைகளையும் முஸ்லீம்கள் பறித்தெடுப்பது.. அவர்களை சகோதரத்துவத்தோடு நோக்கும் தமிழ் மக்களுக்கு எவ்வளவு மனக்கஸ்டமான விடயம் என்பதை.. ஹக்கீம் போன்றவர்களோடு நெருக்கம் பாராட்டும் தமிழர்கள் எடுத்துச் சொல்லலாம் தானே.

 

வடக்கில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது குறித்து மூச்சுக்கு முந்நூறு தடவை பேசி யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட வங்குரோத்து அரசியல் கதைக்கிற முஸ்லீம்.. தமிழ்.. சிங்கள அரசியல்வாதிகள் கிழக்கில் தமிழின அழிப்பை சிங்களவர்களும்.. முஸ்லீம்களும் கூட்டாக முன்னெடுப்பதை இட்டு எந்த கருத்தும் சொல்வதில்லை. மாறாக அதனை சிங்கள - முஸ்லீம் சமூகங்களுக்கு பங்குபிரித்துக் கொடுத்துவிட்ட கணக்கா மெளனமாகி.. வடக்கு மாகாண சபையோடு மட்டும் குந்தி இருந்து குதர்க்கம் பேசிறது எந்தளவு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இருப்பை.. உணர்வை.. உரிமையை பாதுகாக்கும் என்பது புரியவில்லை.

 

தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்தப்போ.. தமிழீழத்தின் தலைநகராக திருமலையை பிரகடனம் செய்திருந்தனர். கிழக்கிற்கே வடக்கை காட்டிலும் அதிகம் அரசியல் உரிமைக்கான முன்னுரிமையும் வழங்கி இருந்ததோடு.. கிழக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வை தரமுயர்த்தவும்.. விசேட நடைமுறைகளைக் கொண்டு வந்திருந்தனர். விடுதலைப் புலிகள் சர்வதேசச் சூழ்ச்சிகள் தம்மை சூழ்ந்திருக்கிறது என்ற நிலையிலும்.. சம்பூர்.. மாவிலாறு பிரதேசங்கள் களவாடப்படுவது தொடர்பில்.. முன்னுரிமை அளித்து.. அந்த மக்களின் இடர்நீக்க மேற்கொண்ட நடவடிக்கைகளே.. இறுதிப்போருக்கும் வழிகோலியது. ஆயுதப் போராட்ட மெளனிப்புக்கும்.. பெரும்  இன அழிப்பு நடந்து முடியவும் காரணமானது. அத்தகைய முக்கியத்துவம் வாழ்ந்த தென் தமிழீழம்.. கிழக்கு இலங்கை.. இன்று அந்த முக்கியதுவம் இழந்து அந்த மக்கள் அரசியல் பகடக்காய்களாக்கப்பட்டுள்ளனமை.. உண்மையில் வேதனையான விடயம்.

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்.. பெருமளவிலான மாவீரர்களை தந்த மாவட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கு அப்புறம்.. மட்டக்களப்பு உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்னது?? இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டமா? :huh: அதை பாகிஸ்தானில் அல்லோ கட்டவேணும்? :o

  • தொடங்கியவர்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை முஸ்லீம் பிரதேச செயலகத்துடன் இணைக்க திட்டம்

Published on June 30, 2013-8:57 am   ·   No Comments

jeyakumar.-kalmunai-mmc-150x150.jpgகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை முஸ்லிம் பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கு எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு நேற்று விஜயம் செய்த உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தையும் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்தையும் ஒன்றாக இணைத்து ஒரு சிங்கள பிரதேச செயலாளரை நியமிப்பது என கூறியிருப்பது கல்முனை பிரதேச தமிழ் மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கல்முனை வாழ் தமிழ் மக்கள் இந்த கபட நாடகத்தை ஒரு பொது ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி அதற்கு தமிழர் ஒருவரே பிரதேச செயலாளராக நியமிக்க வேண்டும். இதற்கு தமிழ் அரசியல்வாதிகளும் புத்தி ஜீவிகளும், சமூக அமைப்புகளும் துரிதமாக செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

34ஆயிரம் தமிழ் மக்களையும் 29 கிராமசேவையாளர் பிரிவுகளையும் கொண்ட கல்முனை தமிழ் பிரதேச செயலகம் இன்னும் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தி தரம் உயர்த்தப்படவில்லை. 1993ஆம் ஆண்டு தொடக்கம் உப அலுவலகமாகவே இயங்கி வருகிறது. கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தாமல் தடுப்பதில் முஸ்லீம் அரசியல்வாதிகளே உள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை தமிழர்களுக்கென்று தனியான பிரதேச செயலகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போது கல்முனை தமிழ் பிரிவு, காரைதீவு, ஒட்டுசுட்டான், ஈச்சிலம்பற்று ஆகிய உப பிரதேச செயலகங்கள் தரமுயர்துவதற்கான 28.07.1993ம் திகதிய அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டது. அனால் கல்முனை தமிழ் பிரதேச செயகலம் மட்டும் வர்த்தக மானி மூலம் அறிவிக்கப்படாமலும், தரமுயர்த்தபடாமலும் உள்ளமை மிகவும் மன வேதனைக்குரிய விடயமாகும்.

கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவுற்குள் 34,000 தமிழ் மக்களும், 29 கிராம சேவையாளர் பிரிவுகளும் உள்ளது. அத்துடன் தனிய கட்டிடமும், சகல பௌதீக வளமும் ஆளணியுடன் உள்ள இப்பிரதேச செயலகத்தை தரமுயர்துவதில் உள்ள தடைகளை உலகிற்க்கு வெளிக்காட்ட வேண்டும். இதற்க்கு முழு காரணமும் முஸ்லிம் அரசியல் வாதிகளே. இவர்களது திட்டமிட்ட அரசியல் அராஜகம் இன்று நேற்றல்ல பலகாலமாக நடந்தேறி வருகின்றது.

கல்முனை பிரதேசத்தில் வாழும் 34,000 தமிழ் மக்களும் 46,500 முஸ்லிம் மக்களுக்கும் ஒரு பிரதேச செயலகமெனில், லகுகலவில் 9808 பேருக்கு ஒரு பிரதேச செயலகம். பதியத்தலாவில் 17,502 பேருக்கு ஒரு பிரதேச செயலகம். இது எந்த வகையில் நியாயம்.?

இந்த அமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ள இவ் அநியாயத்துக்கு அனைத்து தமிழ் அரசியல் வாதிகளும், தமிழ் முஸ்லிம் புத்தி ஜீவிகளும், போது அமைப்புகளும் சாத்வீக வழியில் தங்களது எதிர்ப்பினை காட்ட முன்வர வேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- See more at: http://www.thinakkathir.com/

  • தொடங்கியவர்

என்னது?? இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டமா? :huh: அதை பாகிஸ்தானில் அல்லோ கட்டவேணும்? :o

கிழக்கு மாகாணத்தில் அரபு நாடு ,அரபுநாட்டு தலைநகரங்கள் ,அரபுநாட்டு தலைவர்கள் பெயர்களில் பல கிராமங்கள் ,வீடமைப்புத்திட்டங்கள் இருக்கின்றன .இதற்கு காரணம் அவர்களின் நிதியில் கட்டப்படுகின்றன .

அப்ப பொது பலசேனா நல்லதை தான் செய்யயுது என்றியள்.

 

அதென்ன  சிங்கள் ஊர்களில் நிறைய வாழும் முஸ்லீம்  ஊர்களில் இப்படி  முஸ்லீம் பெயர்களை கொன்ட வீட்டுத்திட்டமோ, குடியிருப்போ இல்லை. எல்லாம் இங்க தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.