Jump to content

வியாழனுக்குப் பாதி தூரம் சென்று விட்டு பூமி நோக்கித் திரும்பிய விண்கலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் நாஸா விண்வெளி அமைப்பு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி  வியாழன் கிரகத்தை நோக்கி ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியது.  ஆனால் அந்த விண்கலம் வியாழனை நோக்கிப் பாதி தூரம் சென்று விட்டு மேற்கொண்டு செல்லாமல் பூமியை நோக்கித் திரும்பியது

இது குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சியடையவில்லை. ஏனெனில் அந்த விண்கலம் பூமியை நோக்கித் திரும்பிவரும் என்று அவர்களுக்குத்
தெரியும் அப்படி பூமி நோக்கித் திரும்பும்படி ஏற்பாடு செய்ததே அவர்கள் தான். 
அது ஏன்?

 ஜூனோ விண்கலம் அமெரிக்க விண்வெளிக் கேந்திரத்திலிருந்து உயரே செலுத்தப்பட்ட போது அது  மணிக்கு  சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு வியாழனை நோக்கிக் கிளம்பியது.


Juno+and+Jupiter.jpg ஜூனோ விண்கலம். அதன் பின்னால் வியாழன் கிரகம்.  இது ஓவியர் வரைந்த படம்

ஆனால் அந்த விண்கலத்துக்கு அளிக்கப்பட்ட வேகம் போதாது. தவிர அந்த விண்கலம் வியாழனை நோக்கிச் செல்கையில் அது சூரியன் உள்ள திசைக்கு நேர் எதிரே செல்வதாகியது.. ஆகவே போகப் போக அதன் வேகம் குறையும். ஆகவே அதனால் வியாழன் கிரகத்துக்குப் போய்ச் சேர முடியாது

எனினும் வியாழனுக்குப் போய்ச் சேரும் வகையில் அதன் வேகத்தை அதிகரிக்க முடியும். அந்த விண்கலம் பாதி வழியில் திரும்பி பூமியை ஒரு வட்டமடித்துச் சென்றால் அதன் வேகம் அதிகரிக்கும். ஆகவே தான் விஞ்ஞானிகள் அந்த விண்கலத்தை உயரே அனுப்பும் போதே அது பூமியை  வட்டமடித்துச் செல்வதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார்கள்

அதாவது ஜூனோ பூமியை வட்டமடிக்கும் போது பூமியின் ஈர்ப்பு சக்தியின் பலனாக அந்த விண்கலத்தின் வேகம் இயல்பாக அதிகரிக்கும்.

.இப்படி ஒரு கிரகத்தின் உதவி கொண்டு விண்கலத்தின் வேகத்தை அதிகரிப்பதற்கு கிராவிடி அசிஸ்ட்  ( Gravity Assist)  என்று பெயர். தமிழில் இதை கிரக உதவி என்று குறிப்பிடலாம்

நாஸா விஞ்ஞானிகள்  திட்டமிட்டபடி ஜூனோ  2012 செப்டம்பர் வாக்கில் பூமியை நோக்கித் திரும்பியது. வட்ட வடிவப் பாதையில் பூமியை  நோக்கி வந்த ஜூனோ விண்கலம் 2013 அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி பூமியை சுற்றி விட்டு மறுபடி வியாழனை நோக்கிக் கிளம்பியது.

பூமியின் ஈர்ப்பு சக்தியின் பலனாக ஜூனோ விண்கலம் கூடுதலாக மணிக்கு  26,280 கிலோ மீட்டர் வேகம் பெற்றது.   இதன் பின்னர் ஜூனோ கூடுதல் வேகத்துடன் வியாழன் கிரகத்தை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்தது.

இப்படியான ஏற்பாடு செய்யாமல் விட்டிருந்தால் ஜூனோ வியாழனுக்குச் செல்லாமல் சூரியனைச் சுற்ற ஆரம்பித்திருக்கும். சரி, ஜுனோ விண்கலத்தை செலுத்திய போதே அதை வியாழனை நோக்கிச் செல்வதற்கான வேகத்தை அளித்திருக்கலாமே என்று கேட்கலாம்.


Juno+Flyby+of+Earth+oct+2013.jpg ஜூனோ விண்கலம் பின்பற்றிய பாதையை விளக்கும் படம். மூன்றாவது
வட்டத்தில் நீல நிறத்தில் இருப்பது பூமி.

அப்படிச் செய்வதென்றால்  கூடுதலாக எரிபொருள் தேவைப்பட்டிருக்கும். அட்லஸ் -5 ராக்கெட்டுக்குப் பதில் மேலும் அதிக சக்தி கொண்ட ராக்கெட்டைப் பயன்படுத்த வேண்டி நேர்ந்திருக்கும். இதனால் செல்வு அதிகரித்திருக்கும். நாஸா செல்வை மிச்சப்படுத்தும் நோக்கில் தான் பூமியின் உதவியை நாடும் ஏற்பாட்டைப் பின்ப்ற்றிய்து. இதன் மூலம் நாஸாவுக்குப் பல கோடி டாலர் பணம் மிச்சமாகியது. இப்போதெல்லாம் நாஸா தனது திட்டங்களில் செலவைக் குறைக்கும் போக்கைக் காட்டி வருகிறது.

ஜூனோ வியாழனை நோக்கிப் பாதி வழி சென்று விட்டு பூமிக்குத் திரும்பியதால் அதிக செல்வு ஏற்பட்டிராதா என்று கேட்கலாம். சுமார் 40 ஆயிரக் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியில் பிடியிலிருந்து விடுபட்ட பிறகு ஜூனோ விண்கலத்துக்கு எரிபொருள் செலவு கிடையாது. அதன் பிறகு அந்த விண்கலம் ஆற்றில் தள்ளி விடப்பட்ட ஆளில்லாப் படகு போல விண்வெளியில் இயல்பாக மிதந்து சென்று கொண்டிருக்கும்.

பூமியை நோக்கித் திரும்பும்படி செய்த போது மட்டும் ஜூனோ விண்கலத்தில் இருந்த எஞ்சின் சிறிது நேரம் செயல்பட்டது. .இத்துடன் ஒப்பிட்டால் எரிபொருள் செலவு இல்லாமலேயே ஜூனோ பூமியின் உதவியால் கூடுதல் வேகம் பெற்றது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

இப்படிச் செய்வதால் ஜூனோ வியாழனுக்குப் போய்ச் சேருவதற்கு அதிக நாள்  ஆகமே என்றும் கேட்கலாம். வியாழனுக்கு ஜூனோ இந்தத் தேதிக்குள் போய்ச் சேர்ந்தாக வேண்டும் என்ற அவசரம் ஏதுமில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். உள்ளபடி ஜூனோ 2016 ஆம் ஆண்டு ஜூலை வாக்கில் வியாழனுக்குப் போய்ச் சேரும்.

இதற்கு முன்னரும் பல விண்கலங்கள் வியாழன் கிரகத்தை ஆராய்ந்துள்ளன. ஜூனோ முந்தைய விண்கலங்கள் போல் இல்லாமல் வியாழனை வடக்கிலிருந்து தெற்காகச் சுற்றும். வியாழனின் ஈர்ப்பு வரம்பு,  காந்த மண்டலம் ஆகியவற்றை ஆராயும்.

பூமியை விட 1300 மடங்கு பெரியதான வியாழன் கிரகம் பிரும்மாண்டமான பனிக்கட்டி உருண்டை. மாம்பழத்துக்கு நடுவே கொட்டை இருப்பது போல அந்த பனி உருண்டையின் நடுவே பாறை உள்ளதா  என்பது பற்றியும் வியாழன் எப்படி உருவானது என்பது பற்றியும் ஜூனோ ஆராயும்

(செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்ப இந்தியா Gravity Assist உத்தியைக் கையாண்டது என்பது குறிப்பிடத்தக்கது)

http://www.ariviyal.in/2013/12/blog-post.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் தேர்தல் நிலவரம்! யாழ்ப்பாணத்தில் இன்று  மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில்,நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் 35 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை 04 மணி வரையில் வாக்களிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400414
    • பின்னாலை... ரணில்,  காஸ் சிலிண்டருடன் சத்தமே  இல்லாமல்  போறார். . 😂 
    • வாக்கு சீட்டை கிழித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் கைது! யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞன் ஒருவர் வாக்கு சீட்டை கிழித்ததை அடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை வாக்களிக்க சென்ற இளைஞன் ,தனது வாக்காளர் அட்டையை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்தி , வாக்கு சீட்டினை கைகளில் பெற்ற பின்னர் , வாக்களிக்காது ,அதனை கிழித்துள்ளார். அதனை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து , பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையின் போது , இளைஞன் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிற்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் , ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1400407
    • அஸ்வத்துடன் ஒரு ஆறுதல் ......!   👍  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.