Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணலும் மண்ணும் வரும் தலைமுறைக்கும் வேணும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மணலும் மண்ணும் வரும் தலைமுறைக்கும் வேணும்

 

அள்ளிய மணலால்
ஆறெல்லாம் மலடாக
தீர்த்தவாரிக்கென வந்த கடவுள்
திகைத்து நின்றார்
தீர்த்தமற்ற ஆற்றைக் கண்டு.
கொண்டுவந்த தண்ணீரால்
குளித்துக் கரையேறி
கருவறை புகுந்தார்
அழிக்கும் மனித சக்தியின்
அளவில்லா மகத்துவம் அறிந்து!
●     கேஸ்டாலின்
 
சித்திரை மாத வெயில் உக்கிரமாக இருக்கும் வேளையில்வேப்பமரத்து நிழல்போர்த்துள்ள ஓடையில் கையை தலைக்கு வைத்து மேலாடை இல்லாவெற்றுடம்பில் உறங்கிய அனுபவம் இருக்கிறதா?  மணலின் சிறு துகள்உடம்பை மெதுவாக அக்குபிரசர் செய்யும்.  அந்தச் சுகத்தில் உறக்கம் கிறக்கம்கொள்ளும்.   குளு குளு அறைகள் கொடுக்காத சுகத்தை கிராமத்து ஓடைகள்கொடுத்தனஇன்றைய நவீன யுகம் அந்த ஓடைகளையெல்லாம் கெடுத்தன.எங்கள் கிராமத்தில் இருபது இருபத்த்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஆளும் அரசுவீடு கட்டுவதற்கு கடன் கொடுத்த்து.  ஒரே சமயத்தில் இருபது பேர் வீடு கட்டத்துவங்கினர்
 
மலையிலும்நிலங்களிலும் பேய்கின்ற மிகுதியான மழை நீரைகண்மாய்களுக்கு கொண்டுவந்து சேர்த்த இரண்டு ஓடைகளின் பெருவாரியானமணலை இருபது வீடுகள் தின்றன.  அடுத்தடுத்த வருடங்களில் புதிதாக கட்டத்தொடங்கிய வீடுகளால் இரண்டு ஓடையிலும் மணல் இல்லை.  ஓடைபள்ளமானது.  ஓடையில் மணல் இல்லைஓடைக்கான அடையாளங்கள்இழந்து பள்ளங்களாய் பார்க்க பரிதாபமாக காட்சிதருகின்றன.  இந்தமணல்களே நீரை உறிஞ்சுபவை.  தண்ணீரை தன்வயப்படுத்திஓடுகின்ற நீரைதூய்மையாக்குகின்ற பணியையும் இந்த மணல்களே செய்து வந்தன.  ஒருமுறை ஓடையில் நீரோட்டம் இருந்தால் கிணற்று நீர் மேல்நோக்கி எட்டும்தூரத்திற்கு வரும்.
 
மலை முகடுகளில் பெய்யும் மழை நீர் கீழ்நோக்கி ஓடிவரும்போதுகற்களின்மீதுபட்டு வரும்.  அப்படி ஓடிவரும் தண்ணீரின் வேகத்தில் கற்கள் சிறு சிறுதுகள்களாகி மணல்களாக உருமாறும்.  இப்படி மணல்களாக உருமாறுவதுஒரிரு வருடத்தில் நடப்பவை அல்ல.  ஓராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகநடக்க்க் கூடிய இயற்கையின் சிறந்த செயல்களில் ஒன்று.  மணலை எப்படிஅவ்வளவு சீக்கிரத்தில் இழந்து விட்டோம் என்பதுதான் வியப்பாக இருக்கிறதுநாங்கள் சிறுவயதில் மழை காலங்களில்மழை முடிந்த வெள்ளம் வடிந்தநேரங்களில் ஊர் தெருக்களில் கூட மணல் இருக்கும்.  அதில் நாங்கள் வீடு கட்டிவிளையாடியிருக்கோம்.   நாங்கள் கட்டிய வீடுகள் மணல் வீடுகள்.  அதுதெருவிலேயே இருக்கும்.  அம்மா வந்து இரவு உணவுக்கு அதட்டி அழைக்கும்வரை கட்டி உடைத்துக்கொண்டிருப்போம்.  அடுத்த நாள் மாலை வேளைவந்தவுடன் மணலில் ஈரம் இருந்தால் திரும்பவும் வீடு கட்டுவோம்.  எங்களுக்குவேண்டாதவர்கள் இடிப்பார்கள்.  வேண்டியவர்கள் எல்லாம் கூடி திரும்பவும்வீடு கட்டுவோம்.   மனிதர்களிடம் ஈரம் குறைந்து போனாதால் தற்போது எங்கள்ஊர் தெருக்களில் ஈரமான மணல் இல்லைஅடுத்த தலைமுறை கூடிவிளையாடாமல் தனி அறைகளில் முட்டாள் பெட்டி என்று சொல்லக்கூடியதொலைக்காட்சி பெட்டி முன் தன்னை மறந்து அமர்ந்து நோயைஇழுத்துக்கொள்கிறான்.
 
கபடியும் கிளித்தட்டும் விளையாடிய மணல் சார்ந்த தெருக்கள் இன்றுசிமென்ட்டின் உதவியோடு சிறு கற்கலை வெளித்தள்ளி நிற்கின்றன.  நாங்கள்மணலை உப்பாய் பாவித்து ஓடி எடுத்து விளையாடிய தெருக்களில் சாக்கடைமழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் ஓடிய தெருக்களில் இன்று எல்லாநாளும் சாக்கடை தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது.  சாக்கடை வாய்க்கால்மணலில் இருந்தால் வடிகட்டுதல்தன்சுத்தம் நடந்திருக்கும்.... சிமென்ட்டால்இருப்பதால் கொசுக்களின் பிறப்பிடமாக மாறியிருக்கிறது.
 
இலக்கியம் நயத்தில் பேசக்கூடிய அரசியல் வாதி வைகையைபார்வையிட்டுஇங்கு வைகை ஆறு ஓடுவாதாகச் சொன்னார்கள்ஆனால்மணல் ஆறுதான் ஓடுகிறது என்றாராம்.  ஆனால் வைகையில் பலஇடங்களில் மணல் ஆறு கூட இல்லை என்பதுதான் உண்மை.  வைகைமதுரையை அடைந்து மதுரையைக் கடக்கும் வரை எந்த இடத்திலும்மருந்துக்குக் கூட மணல் இல்லை.  பின் வைகை எப்படி தூய்மையாகஇருக்கும்.  இயற்கையாக தூய்மைப் பணியை செய்கின்ற மணலைஎல்லாம் ஒட்ட வழித்து அழித்து மாளிகை கட்டிக்கொண்டோம்.  வசமாகதண்ணீர் பற்றாக்குறையிலும்கொசுக்கடியிலும் மாட்டிக்கொண்டோம்
 
தமிழகத்தில் பல்வேறு நதிகளில் மணல் இல்லை.  ஊர்ப்புறங்களில் ஓடியஓடைகளில் எல்லாம் மணலை இல்லாமல் செய்துவிட்டோம்.  சின்னச்சின்ன நதிகளில் இருந்த மணலையும் இழந்துவிட்டோம்.  தற்போதுஆங்காங்கே பெரிய நதிகளில் அரசாங்கத்தின் மூலம் மணல் குவாரிகள்அமைக்கப்பட்டு மணல் வழங்கப்படுகிறது.  மணல் விலை அரிசிவிலையைவிட அதிகம்.  இருந்தும்  எவ்வளவு விலை கொடுத்தும் மணலை வாங்கதயாராகிவிட்டோம்.  மணல் வெளியே எடுப்பதால் உள்ள விளைவைமட்டும் மறந்துவிட்டோம்
 
தமிழகம் புவியியல் ரீதியில் மிகுதியாக கடினப்பாறைகளையம்வண்டல்மண் பகுதியுமாக காணப்படுகிறது.  இதில் கடினப்பாறைகள் எட்டு சதவீதநீரைமட்டுமே நீரைச் சேமிக்கும்.  வண்டல் மண் 30 சதவீத நீரைச்சேமிக்கும்.  செம்மண்ணும்மணலும்தான் அதிகப்படியான நிலத்தடி நீரைச்சேமிக்கும்.  இந்த இரண்டுவகையான மண்ணும் இன்று பொன்னை விடபாதுகாப்பாய் காக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  செங்கல்சூலைக்காக செம்மண் விலைபோகிறது.  அதிகப்படியான வளமுள்ளநிலத்தின் மேல்மண்ணான செம்மண் செங்கள் தயாரிப்பிற்காக தமிழகத்தின்பல்வேறு பகுதிகளுக்கு விற்கப்பட்டு வேளாண்மையும் மறுக்கப்பட்டுள்ளது.
 
சச்சின் டெண்டுல்கர்அம்பானி போன்றோர் தனிநபர்கள் வாழ்வாதற்காகதங்களது வாழ்விடங்களை இயற்கை வளங்களை அபகரித்து மிகப்பெரியபங்களாக்களை அமைத்துள்ளனர்.  இது எதிர்கால சந்த்தியினருக்குஇழைத்த மிகப்பெரிய இயற்கைவள துரோகமாகும்.   பெரும்பாலானவசதிபடைத்தோர்தங்களின் தேவைக்கு மிகுதியாக கட்டிடங்களை எழுப்பிமண்மணல் ஆகிய வளங்களை அரிதாக்கிவிட்டனர்நமது தேசத்தில்அரசின் பல்வேறு கட்டிடங்கள் பாழடைந்து பயனற்று கிடக்கின்றனஇவைகள் எல்லாம் பயன்படுத்தாமல் இயற்கை வளங்கள்இன்னலுறுகின்றன.  
 
மண்மணல் இரண்டும் இத்தேசத்து மக்களின் வாழ்க்கையோடுபிணைந்துள்ள இயற்கை வளம்.  இவற்றைப் பாதுகாக்கத் தவறுவது மனிதஇனத்தை பாதுகாக்கத் தவறிவிடுவோம் என்கிற அச்சத்தை ஏற்படுத்ததவறவில்லை.  ஆண்டுதோறும் பெய்யும் மழை அளவு குறையவில்லைஆனால் நிலத்தடி நீர் குறைந்து விட்டது.  நிலத்தடி நீரிலும் பல்வேறுபிரச்சனைகள்.... இவைகளின் பின்னால் இருப்பது மணல்... வேளாண்மைபாதிப்பின் பின்னால் இருப்பது மண்.  மண்ணையும் மணலையையும்பாதுகாக்க அரசிடம் எந்த்த் திட்டமும் கொள்கையும் இல்லை என்பதேவரைமுறையின்றி வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதிலிருந்து நாம்அறிகிறோம்.  மழை நீரைச் சேகரிக்கின்ற மணலை கட்டிடங்களில்கொட்டுகிறபோதுகொட்டும் மழை நீர் வெள்ளமாகி வீணாகிப் போகிறகாட்சியை கண்டுகொண்டே இருப்போம்.  இருக்கின்ற இயற்கை வளத்தைபாதுகாக்க ஓரிரு அரசு அதிகாரிகள் துணிச்சலோடு செயலாற்றும் போது,உயிரை துண்டாடுகிற கோரச் சம்பவங்கள் மணல் கொள்ளையர்களால்அரங்கேறுகிறது.  ஆனால் ஆள்வோர்?
 
சில பகுதிகளில் மக்கள் மணல் கொள்ளையின் பாதிப்பை உணர்ந்து,துணிந்து எதிர்க்கின்ற போதுஅவர்களுக்கு ஆள்வோரின் ஆதரவு?வசதிபடைத்தோருக்கு வளங்கள் இன்று வரைமுறையின்றி வழங்கப்படும்போதுஎதிர்காலத்தில் பாதிப்பு எல்லோருக்கும் தான்.   நீரையும்மணலையும் சேமிக்கின்ற ஏரி கண்மாய்கள் ஏகத்திற்கு ஆக்கிரமிப்பிற்குஉள்ளாகின்றன.  குவாரிகள் எனும் பெயரில் நீரைச் சேமிக்கின்றபாறைகளை உடைத்துசுரண்டல் நடக்கிறது.  நீரைச் சேமிக்கின்ற எல்லாஇடத்திலும் மனிதன் கைவைக்கும் போது எண்ணில் அடங்கா துயரம்இப்போதே வரத் தொடங்கிவிட்டது.  அச்சம் என்பது மடமையாடா என்பதைமனதில் கொண்டு இயற்கை வளங்களை அபகரிப்பதிலும் அச்சல்கொள்ளாமல் இருப்பது அறிவீணம் என்பதை எப்படி அறிவுறுத்துவது.
 
மண்ணும் மணலும் பாதுகாக்க வேண்டிய ஒன்று என்பதை அறிந்த பின்பு,ஏதாவது செய்ய வேண்டுமல்லவாஎன்ன செய்யலாம்.  ஆயிரம் ஆயிரம்ஆண்டுகளாக காலத்தோடு மண் கரையால் நிற்கின்ற கண்மாய்கள் ஏரிகள்நம் முன்னோர்களின் தொழில்நுட்பத்திற்கு சான்று பகர்கின்றன.  ஆனால்இன்று நமது புதிய தொழில்நுட்பத்தால் உருவான பல கட்டிடங்கள்விரிசலடைந்து வாய்பிளப்பது வேதனையளிக்கிறதுகிராமப் புறங்களில்உருவானஅரசு கட்டிடங்கள் தனிநபர் கட்டிடங்கள் போல் நீடித்த காலத்திற்குஉறுதியாக இருப்பதில்லைஅரசு கட்டிடங்களை நன்கு பாரமரித்து நீடித்தஆயுளை கட்டிடங்கள் பெறும்போது புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்குஅவசியமில்லாமல் போகிறது.  இதனால் இதற்குத் தேவையான மணல்,கல்செங்கல்சிமென்ட் போன்ற வளங்கள் மிச்சப்படுத்தப்படுகின்றன
 
தனிநபர்கள் வாழ்விடங்கள் கட்டும்போது வசதிக்கு கட்டாமல் வாழ்வதற்குபோதியளவிற்கு மட்டும் வீடுகள் கட்டும் போது நிலம் தொடங்கிபல்வேறுவகையில் இயற்கை வளங்கள் காக்கப்படுகின்றன.  நமது முன்னோர்கள்வசித்த வாழ்விடங்களை சீரமைப்பு செய்து வசிப்பிடங்களாகமாற்றியமைப்பது புத்திசாலித்தனமாகும்.  சிலர் வாஸ்து பார்த்து வீடுகளைதொடர்ச்சியாக மாற்றியமைக்கின்ற வீண் செலவை தவிர்க்கலாம்.
 
வீடுகளுக்கான சுற்றுச் சுவர் கட்டுவதை கூடுமானவரை தவிர்க்கலாம்சுற்றுச் சுவர் அவசியம் எனும் போது தாவரங்களினால் வேலிஅமைக்கலாம்.  உயிர் தாவரங்கள் மூலம் சுற்று வேலி அமையும் போதுகாண்பதற்கு குளிர்ச்சியையும்சூழல் பாதுகாப்பையும் தரும்.  பொதுவாகசுற்றுச் சுவர் அமைக்கப்படுவது தொழிற்சாலைகள்பெரிய வீடுகள்கல்விநிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இவைகளில் உயிர் தாவர வேலிஅமைத்து பாரமரிப்பது பெரிய செலவாக இராது.  எனவேஇனிமேல்புதிதாக சுற்றுச் சுவர் கட்டமால் உயிர் தாவர வேலிக்கு முன்வரலாம்.
 
கிராமங்கள் தொடங்கி பெரும் நகரங்கள் வரை தோரண வாயில் அமைப்பதுஒரு படோபடமாகவே படுகிறது.  கல்மணல்சிமென்ட் கொண்டுஅமைக்கப்படுகிற தோரண வாயில்கள்அலங்கார வளைவுகள்அவசியமற்றவை.  எந்தவொரு பயன்பாடுமின்றிசுய விளம்பரத்திற்கும்,அழகுக்கும் இயற்கை வளங்களை அழிப்பது நியாயமாக.   பல்வேறுபுங்காக்களில் மரங்களைக் கொண்டே அழகுடன் தோரண வாயில்அமைத்திருப்பர்.  காண்பதற்கு இதமாகவும்இயற்கைக்குவலுசேர்ப்பதாகவும் இருக்கும்.  அதை விடுத்து இயற்கைக்கு எதிராகதோரணவாயில்கள் அமைப்பதை தவிர்த்திடலாம்.   அரசாங்கம் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதை கொள்கை முடிவாக எடுத்துநிறுத்திக்கொள்ளலாம்.
 
ஆள்வோர்கள் தொடர்ச்சியாக எல்லாத் தெருக்களையும் சிமென்ட்தெருக்களாக மாற்றிவிட திட்டம் வகுத்து செயல்படுகின்றனர்ஆட்சியாளர்கள் மாட்சிமையோடு கவனிக்க வேண்டிய விசயம் இந்தசிமென்ட் சாலைகள்.  ஊரில் விழுகிற ஒரு சொட்டு தண்ணீர் கூடநிலத்திற்குள் செல்லாமல் ஊரை விட்டு ஓடச் செய்கிறது சிமென்ட்சாலைகள்.  நிலத்தடி நீர் மாசகிவருகிற இந்தச் சூழலில் அந்தந்தஇடங்களில் மழை நீரை சேமிக்க வேண்டிய நாம்மண் மாத மீது கல்,மணல் கலந்த சிமென்ட் வைத்து அடைப்பது தகாது
 
மண்ணையும்மணலையும் பாதுகாக்கின்ற இன்னொரு இயற்கை தந்தகொடை மரங்கள்.  மரம் மண்ணின் அரண்.  அரண்மனைக்காக அரண்கள்எல்லாம் காவுவாங்கப்படுகின்றன.  மரங்களைக் காப்பதும்வளர்ப்பதும்மண்ணை வளப்படுத்த ஏதுவாக அமையும்.  நாம் புதிதாக உருவாக்கின்றகட்டிடங்கள் எத்தனை இயற்கை வளங்களை ஏப்பம்விடுகின்றன என்பதைஒவ்வொருவரும் உணர்ந்தாக வேண்டும்.  அதற்காக நீங்கள் யாரும் வீடுகட்ட வேண்டாம்பரதேசிகளாக மண் மாத மீது படுத்துறங்குங்கள் என்றுசொல்லவில்லை.  புதிதாக கட்டிடம் எழுப்பும் போதுஎத்தனை அவசியம்என்பதை உணர்ந்து செய்யுங்கள்.  அவற்றின் பயன்பாட்டைகணக்கிடுங்கள்.  அளவான வீடுவளமான வாழ்வுவளங்கள் பாதுகாப்புஎன்பதை உணர்ந்திடுங்கள் என்றே சொல்கிறோம்
 

சிலரைப்பார்த்து ஏலேய்... மண்ணு.... என்று சொல்வதுண்டு.  மண் என்பதுசாதரணமில்லைஅது உயிர்களின் தொகுப்பு.  உணர்ந்திடுவோம்.மண்ணையும் மணலையும் காத்திடுவோம்போட்டிகளில் சொல்வதுண்டு,மண்ணைக் கவ்வ வைப்பேன் என்றுஆனால் இன்று பலர் மணல்திருடுவதில் கெட்டிக்கார்ர்களாய் கொடிகட்டிப் பறக்கின்றனர்.  அவர்களதுகொடி கட்டாயம் இறக்கப்பட வேண்டும்.  எதிரியாய் இருந்தாலும்குருதிஉறவாய் இருந்தாலும் இவ்விசயத்தில் ஆள்வோரும் வாழ்வோரும்இரக்கம்கொள்ள வேண்டாம் என்ற வேண்டுகோளோடு நிறைவு செய்கிறேன்.
 
பசுமைத்தாயகம் சுற்றுச்சூழல் இதழில் வெளிவந்த கட்டுரை

 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நுணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.