Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹெராயின் கடத்தலில் சிக்கித் தவிக்கும் இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2013-ம் ஆண்டிலேயே கூடுதலான ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது.

போதைப் பொருள் பாவனை மற்றும் கடத்தல்- வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி தங்களுக்கு அறிவிக்குமாறும் காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதற்காக சிறப்பு தொலைபேசி இலக்கமாக 011-23 43 333- என்ற எண்ணை காவல்துறை அறிவித்துள்ளது.

அண்மைய நாட்களில் கைப்பற்றப்பட்ட இரண்டு ஹெராயின் கொள்கலன்கள் உட்பட இந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக சுமார் 350 கிலோகிராம் ஹெராயின் போதைப் பொருள் இலங்கை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோஹண பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கு எந்த வழிகள் ஊடாக போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன என்று விசாரணை நடத்திவருவதாக அவர் கூறினார்.

'மன்னார் ஊடாக கடல் மார்க்கமாக வருகிறதா, விமானநிலையம் ஊடாக வருகிறதா அல்லது கப்பல் கண்டயினர்கள் மூலமாக வருகிறதா போன்ற பல்வேறு கோணங்களில் நாங்கள் விசாரணை நடத்திவருகின்றோம். அவைபற்றி ஊடகங்களுக்கு வெளியிடமுடியாது. ஒரு வழியை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். அந்த கடத்தல் வலையமைப்பை முறியடிக்கும் வேலையில் நாங்கள் இறங்கியிருக்கிறோம்' என்றார் காவல்துறை பேச்சாளர்.

பின்புலத்தில் அரசியல்வாதிகள்?
131212172117_dm_jayaratne_304x171_afp_no

பிரதமர் டி.எம். ஜயரத்னவின் தனிப்பட்ட செயலாளர் ஹெராயின் கொள்கலன்கள் தொடர்பான சர்ச்சையை அடுத்து பதவி விலகியுள்ளார்

இந்த போதைப்பொருள் கடத்தல்களில் இலங்கை அரசியல்வாதிகளின் பின்புலம் இருக்கிறது என்று சில குற்றச்சாட்டுக்கள் உள்ளமை பற்றி தமிழோசை காவல்துறை பேச்சாளரிடம் கேள்வி எழுப்பியது.

'அரசியல்வாதிகளின் தொடர்பு இருப்பதாக இன்னும் எங்களுத் தெரியவில்லை. ஹிக்கடுவையில் நேற்றுமுன்தினம் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட நபர் 8 மாடிக் கட்டடம் ஒன்றைக் கட்டிவரும் வர்த்தகர் என்று தெரியவந்திருக்கிறது. ஆனால் அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை' என்றார் அஜித் ரோஹண.

ஆனால், இலங்கை சுங்கப்பிரிவினர் கைப்பற்றியதாக கூறியுள்ள சுமார் 260 கிலோ எடையுடைய ஹெராயின் போதைப்பொருளில் 130 கிலோ தான் இப்போது இருப்பதாகவும், மிகுதி 130 கிலோ காணாமல்போய்விட்டது என்று காவல்துறையை மேற்கோள்காட்டி ஜேவிபி குற்றஞ்சாட்டியிருக்கிறது.

அது பற்றி கேட்டபோது, 'பேப்பவேர் சோம்னிஃபேரம் (Papaver somniferum) என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட தாவரத்திலிருந்து வருகின்ற சுத்த ஹெராயினின் அளவைத் தான் இரசாயன ஆய்வுப் பிரிவினர் கூறியிருக்கின்றனர், இலங்கைக்கு வரும் ஹெராயின் போதைப்பொருளில் வேறு பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருக்கும். இந்த சட்டவிரோத கடத்தல் வியாபாரத்தில் நடக்கும் இன்னொரு கறுப்பு வியாபாரம் தான் அது' என்றும் இலங்கை காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண கூறினார்.

அண்மையில், இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இரண்டு ஹெராயின்-கொள்கலன்கள் தொடர்பில் எழுந்த சர்ச்சைகளை அடுத்து பிரதமரின் தனிப்பட்ட செயலாளர் பதவி விலகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/12/131215_heroinsrilanka.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் ஆதரவு இல்லாமல் உப்புடியான சாமான்கள் கடத்துறது வலு கஸ்டம். ஐரோப்பாவிலையும் உதே பிரச்சனை..............

வெளிநாட்டு சிறி லங்கா மாசுக்கருத்தாளரின் இரகசிய ஆதரவும் உண்டு.

போதை பொருள் கட்டுரைகளில் தலை வைப்பதில்லை.

அவை லண்டனில், மார்க்கத்தில் இருந்து அங்குள்ள ஈழ தமிழர் போதை பொருள் கடத்தும் பிரதமரின் கீழ் வாழ நிர்பந்திப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.