Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!''

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்க ஊடகங்களிலும் இன்று பரபரப்பாகப் பேசப்படும் செய்தி, அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி விவகாரம்தான். கடந்த பத்தாண்டுகளாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் எடுபிடிபோலச் செயல்பட்ட இந்திய அரசு, இந்தப் பிரச்னையில் சரமாரியாக எதிர் நடவடிக்கை எடுத்திருப்பது எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. உலக நாடுகள் பலவற்றையும் அமெரிக்கா உளவு பார்த்த கதை சில மாதங்களுக்கு முன் ஸ்னோடென் மூலம் வெளியானபோதுகூட, இந்திய அரசு அடக்கியே வாசித்தது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் எல்லாம் அமெரிக்காவைக் கண்டித்தபோதும் இந்தியா, 'உளவு எல்லாம் இல்லை. சும்மா கம்ப்யூட்டர் ஆய்வுதான்’ என்று சொன்னபோது உலகமே நகைத்தது. இத்தனைக்கும் உளவுத் தகவல்கள் அதிகம் சேகரிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 

ஆனால், இன்று இந்தியா எங்கும் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டுள்ளன. விமான நிலைய அனுமதிச் சீட்டுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மது வகைகள் உட்பட தேவையான சில பொருட்களை இறக்குமதி செய்துகொள்ளும் சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரியும் இந்திய ஊழியர்களின் ஊதிய விவரங்களும் கோரப்பட்டுள்ளன. டில்லியில் உள்ள தூதரகத்தின் முன் போடப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகளும்கூட அகற்றப்பட்டுள்ளன. ஏதோ போர் சூழல்போல இருக்கிறது காட்சிகள்.

p26.jpg

'உலகளாவிய பங்காளிகள்’(global partners) எனக் கூறிக்கொ ண்டு அமெரிக்காவுடன் கைகோத்துத் திரிந்த மன்மோகன் அரசுக்கு இப்போது திடீரென ஏனிந்த ஆவேசம்? அமெரிக்க போர்க் கப்பலான நிமிட்சின் வருகை, இந்திய அரசின் இறையாண்மையையும்கூட விட்டுக்கொடுத்து இயற்றப்பட்ட 123 ஒப்பந்தம், நேரு காலத்திய அணிசேராக் கொள்கையில் இருந்து விலகி அயலுறவுக் கொள்கையில் அமெரிக்கச் சார்பு எடுத்தது... ஆகியவற்றுக்கு எழுந்த எதிர்ப்புகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் அமெரிக்காவை ஆதரித்து வந்தது காங்கிரஸ் அரசு. அப்படிப்பட்ட அரசு, திடீரென அமெரிக்காவை மிரட்டுவதைப்போல எடுக்கும் நடவடிக்கைகள் எல்லோருக்கும் வியப்புத்தான். தேர்தல் நெருங்குவது ஒரு காரணமாக இருக்கலாம். பி.ஜே.பி-யும் இந்தப் பிரச்னையில் முழுமையாக அரசை ஆதரிக்கிறது.

துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேக்கு நேர்ந்த அவமானம் எல்லோரையும் எரிச்சல்பட வைத்துள்ளது உண்மை. இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட வேலைக்காரப் பெண்ணுக்கு உரிய ஊதியம் வழங்காமல் அதிகம் வேலை வாங்கியதாக அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலும், அந்தப் பெண்ணுக்கு விசா பெறுவதற்காகப் பொய் ஆவணங்கள் சமர்ப்பித்ததற்காகவும் தேவயானி பொது இடத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டது, விலங்கிட்டு அழைத்து வரப்பட்டது, ஆடைகளைக் களைந்து சோதனையிடப்பட்டது ஆகியன அனைவருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளன.

'தூதரக உறவுகளுக்கான வியன்னா உடன்பாடு (1961)’ தூதரக அதிகாரிகளுக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து சில காப்புரிமைகளை (diplomatic immunity)  வழங்கியுள்ளது. எனினும், இந்தக் காப்புரிமைக்கு எல்லைகள் உண்டு. காப்புரிமை உள்ளது என்பதற்காக ஒரு தூதரக அதிகாரி உள்நாட்டுச் சட்டங்களை மீற இயலாது. மேலும், தூதரகப் பணிகள் தொடர்பான சட்ட மீறல்களுக்கு மட்டுமே இந்தக் காப்புரிமை உண்டு. இவற்றைச் சொல்லித்தான் இன்று அமெரிக்கா தன் செயலை நியாயப்படுத்துகிறது.

ஆனால், மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை வலுவான நாடுகள் அப்படியே ஏற்றுக்கொள்வது இல்லை. தூதரக அதிகாரிகளுக்கு முழுமையான காப்புரிமைகள் உள்ளதாகவே அவை எடுத்துக்கொள்கின்றன. கடுங்குற்றச்சாட்டுகளில்கூட அவை தம் ஊழியர்களின் காப்புரிமையை விட்டுக்கொடுப்பது இல்லை.

2004 டிசம்பரில் ருமேனிய நாட்டின் புசாரெஸ்ட் நகரில் அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்த வான் கோதம் என்கிற கடற்படை ஊழியர் குடித்துவிட்டு காரோட்டிச் சென்றதோடு, சாலை விதிகளை மீறிச் சென்று மோதியதில் அந்த நாட்டு இசைக் கலைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். மூச்சுப் பரிசோதனையில் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் ரத்தப் பரிசோதனைக்கு உடன்படாததோடு, ஜெர்மனிக்கு ஓடவும் செய்தார் வான் கோதம். அமெரிக்கா, தூதரகக் காப்புரிமையை விட்டுக்கொடுக்க மறுத்தது. அவரை ருமேனியாவுக்கு அனுப்பாமல், தானே ராணுவ விசாரணை ஒன்றை நடத்தி தண்டனை அளித்தது.

ஆனால், சிறிய நாடுகள் இப்படியான நிகழ்வுகளில் தம் அதிகாரிகளின் காப்புரிமையை விட்டுக்கொடுத்தன.

1997 ஜனவரியில் ஒரு சம்பவம். அமெரிக்காவுக்கான ஜார்ஜிய நாட்டுத் துணைத் தூதர் குயோர்கொ மகாரட்சே குடித்துவிட்டு காரோட்டி மோதியதில் நால்வர் காயமடைந்து ஒரு பெண் கொல்லப்பட்டார். ஜார்ஜியா தன் துணைத் தூதரின் காப்புரிமையை விட்டுக்கொடுத்தது. அமெரிக்க அரசு தன் நாட்டுச் சட்டப்படி அவரை விசாரித்துத் தண்டனை வழங்கியது.

தான் உலக மேலாண்மை வகிப்பதாகவே அமெரிக்கா இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்கத் தூதர்கள் ஏதோ தங்கள் காலனிகளைக் கண்காணிக்க வந்த அதிகாரிகள் போலவே அந்தந்த நாடுகளில் நடந்துகொள்கின்றனர். பிப்ரவரி 2007-ல் அப்போதைய அயலுறவு அமைச்சரான பிரணாப் முகர்ஜி ஈரானுக்குச் சென்றார். அமெரிக்காவுடன் இந்தியா 123 ஒப்பந்தம் செய்திருந்த நேரம் அது. அப்போதைய அமெரிக்கத் தூதர் டேவிட் மல்ஃபோர்ட் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, 'ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, புதிய சட்டங்களின்பால் இந்திய அரசு கவனம் கொள்ள வேண்டும்’ என்றார். அந்தச் சந்திப்பின்போது அவர் 'ரொம்பத் திமிராக’ நடந்து கொண்டார் என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியது.

சில மாதங்களுக்குப் பின் இங்கு வந்த அமெரிக்க ஆற்றல் துறைச் செயலர் ஈரானுடனான உறவு குறித்து இந்தியாவை எச்சரித்தார். 'எல்லாவிதமான அயலுறவு மரபுகளையும் அவர் மீறியதோடு, ஏதோ இந்தியாவுடன் சண்டைக்கு வந்ததுபோல’ அவர் பேசியதாக நாளிதழ்கள் எழுதின.

இன்று காலம் வேகமாக மாறி வருகிறது. அமெரிக்காவின் உலக மேலாண்மை இன்று பலவீனமாகி உள்ளது. இந்தியா போன்ற நாடுகளின் பேர ஆற்றல் அதிகரித்து வருகிறது. ஐ.நா. அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகிற கனவுடன் அது செயல்பட்டு வருகிறது. தனது பாரம்பரியமான அணி சேராக் கொள்கையில் இருந்து விலகி மேட்டிமைக் குழுக்களில் (elite clubs) இடம்பெயர்வதில் வெற்றி அடைந்துள்ளது.

இந்த நிலையின் ஒரு வெளிப்பாடாகவே இன்றைய மோதலை நாம் காண வேண்டியுள்ளது. ஆனால், இந்த மோதல் எந்தப் பெரிய உறவு விரிசலுக்கும் இட்டுச் செல்லப்போவது இல்லை. ஏனென்றால் அது நல்லதல்ல என இருவருக்குமே தெரியும். இந்தியாவின் கண்டனத்தைக் கவனத்தில் கொண்டு கைது நிகழ்வை ஆராய்வதாக அமெரிக்கத் தரப்பில் இறங்கிவந்துள்ளனர்.

ஒன்றைச் சொல்லியாக வேண்டும். இந்தப் பிரச்னையில் இந்தியா, அமெரிக்கா என்ற இரு தரப்பையும் தாண்டி மூன்றாவது தரப்பும் உள்ளது. அது, அந்த வேலைக்காரப் பெண். தேவயானி மட்டுமல்ல; அவரும் ஒரு இந்தியக் குடிமகள்தான். தூதரக அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட சலுகைகள், ஊதியம் மற்றும் வசதிகள் அளிக்கப்படுகின்றன. ஒரு ஏழை வேலைக்காரப் பெண்ணை, குறைந்தபட்ச ஊதியமும் கொடுக்காமல் கொடுமையாக வேலை வாங்கியது உண்மையானால், அது அவ்வளவு எளிதாக விட்டுவிடக் கூடியதல்ல. அமெரிக்கா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது மட்டுமல்ல... தேவயானி உரிய முறையில் சட்டத்தின் முன் நிறுத்தப்படவும் வேண்டும்!

அ.மார்க்ஸ்

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=90458

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கோ,  அமெரிக்கா மன்னிப்புக் கேட்க வேணும்?  :o  

 

ஒரு காலத்தில 'பாஞ்சாலியின்' சேலையில தொங்கிக்கொண்டிருந்த இந்தியாவின் 'கெளரவம்' இப்ப தேவயானியின் ஜீன்ஸில் தொங்கிக்கொண்டிருக்கிற படியாலா? :D

 

அந்தக்காலம் மாதிரி, நாகாஸ்திரத்தை ஒரு தரத்துக்கு மேல விடவேண்டாமேன்று கெஞ்சக் கண்ணனும் இல்லை!

 

அமெரிக்கா  'கர்ணனும்' இல்லை! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் சில இந்திய வைத்தியர்கள், வேலைக்கு ஆட்களை கூப்பிட்டு விட்டு குறைந்த ஊதியம் கொடுக்கிறார்கள். ஒருவர் 5 நாட்கள் கணவன் மனைவி வேலைக்கு போக, பிள்ளைகளை பராமரிக்க வேண்டும், சனி ஞாயிறு தினங்களில் அவர்கள் வீட்டில் நிக்கும் போது இவர் தங்க முடியாது, இத்தனைக்கும் இவரை பிள்ளைகளை பார்க்க கூப்பிட்டது இந்த தம்பதிகள்.

தேவயானிக்கு மன்னிப்பு வழங்க முடியாது:அமெரிக்கா திட்டவட்டம்

 

நியூயார்க்:'இந்திய துணை தூதர், தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெற முடியாது' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தேவயானி கோப்ரகாடே, 39, என்ற பெண், ஐ.எப்.எஸ்., அதிகாரி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, இந்திய தூதரகத்தில், துணை தூதராக பணியாற்றுகிறார். இவரது வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு, "விசா' பெறுவதற்காக, மோசடியான, சில சான்றிதழ்களை வழங்கினார் என, தேவயானி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது.கடந்த வாரம், தன் குழந்தையை பள்ளியில் விடுவதற்காக, தேவயானி காரில் சென்ற போது, நடுரோட்டில், அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைவிலங்கிடப்பட்ட தேவயானி, சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, அவர் உடைகளை களைந்து, சோதனை செய்த போலீசார், அவரை, பயங்கர குற்றவாளிகள் அடைக்கப்படும் சிறையில் அடைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.அதன் பிறகு, 1.5 கோடி ரூபாய் செலுத்திய பின், ஜாமினில், தேவயானி விடுதலை செய்யப்பட்டார்."தேவயானியை அவமானப்படுத்தியதற்காக, அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும்; அமெரிக்காவுக்கு எதிராக, தீர்மானம் கொண்டு வர வேண்டும்' என, பார்லிமென்ட்டில், பல எம்.பி.,க்கள் கோரினர்.தேவயானியை நடத்திய விதம் குறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர், ஜான் கெர்ரி, வருத்தம் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, தேவயானியை கவுரவிக்கும் பொருட்டு, மத்திய அரசு, அவரை, ஐ.நா., பிரதிநிதியாக பதவி உயர்வு அளித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி, மேரி ஹார்ப் கூறியதாவது:விசா மோசடி மற்றும் வேலைக்கார பெண்ணை கொடுமைப்படுத்தியது போன்ற வழக்குகளில், தீவிரமாக நடவடிக்கை எடுப்போம். எனவே, தேவயானிக்கு மன்னிப்பு கொடுப்பதோ, அவர் மீதான வழக்குகளை வாபஸ் பெறவோ முடியாது. அவர், ஐ.நா., பிரதிநிதியாக சென்றாலும், அவர் மீதான வழக்கு தொடரும்.உண்மை நிலை தெரியாமல், இந்திய தரப்பில் கூறப்படும் புகார்களுக்கு, நாங்கள் செவிசாய்க்க முடியாது. தேவயானி, தன் வீட்டில் வேலை செய்த சங்கீதாவை கொடுமைப்படுத்திய வழக்கு தொடர்பாக, இந்தியாவிடம் சில விவரங்களை கேட்டு"ள்ளோம். சங்கீதாவை மீண்டும் அவர் குடும்பத்துடன் சேர்ப்பதற்காக தான், அவரை, அமெரிக்காவுக்கு அழைத்து வந்தோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

நியூயார்க்கில் உள்ள, சங்கீதாவின் உறவினர்கள் கூறியதாவது:சங்கீதாவின் கணவர் பிலிப், குழந்தையுடன் சைக்கிளில் சென்ற போது, அடையாளம் தெரியாத நபர், துப்பாக்கியை காட்டி மிரட்டி, சங்கீதாவை, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி மிரட்டியுள்ளார். தேவயானியின் தந்தையும், பிலிப்பை, தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.பிலிப், இந்தியா சென்ற போது டில்லி போலீசார், அவரிடம், சங்கீதாவின் இருப்பிடம் குறித்து விசாரித்துள்ளனர்.இவ்வாறு, சங்கீதாவின் உறவினர்கள் கூறினர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=877613

 


US விசா மோசடியில் சிக்கிய தேவயானி மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு பகுதி வீட்டு மோசடியிலும் சிக்கியுள்ளார்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/100660/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.