Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச போர்க்குற்ற நிபுணர் நாளை இலங்கை வருகிறார்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்துப் பேசுவார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Raaf-100x100.jpg

சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ஜே.ராப், உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை இலங்கை வருகிறார். 

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, கடுமையான பிரேரணையை நிறைவேற்றவுள்ளது என எதிர்பார்க்கப்படும் நிலையில், இவர் இலங்கை வருவது இலங்கை அரச தரப்பினரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

இரண்டாவது தடவையாக இலங்கை வரும் இவர், எதிர்வரும் 11ஆம் திகதி வரை இங்கு தங்கியிருப்பார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவரின் வருகையை இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகமவும் நேற்று "உதய'னிடம் உறுதிப்படுத்தினார். 

ஸ்ரீபன் ஜே ராப், இந்தப் பயணத்தின் போது அரச உயர் அதிகாரிகள், எதிர்க்கட்சியினர், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், நீதித் துறையினர் உள்ளிட்ட பலரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் எனவும்,  இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளை நேரடியாக ஆராய்வார் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

போர்க்குற்றங்களுக்குத் தண்டனை விதித்தல் மற்றும் மோதல்களுக்குப் பின்னரான இலங்கையின் நிலை, இன நல்லிணக்கம் மற்றும் அதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பில் இந்தப் பயணத்தின் போது ஸ்ரீபன் அதிக கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை வரும் ஸ்டீபன் ஜே ரெப், கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்றும், அவர் வடக்கு சென்று இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும் மக்களுடனும், இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடனும் கலந்துரையாடுவார் என்றும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
 
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் தடவையாக இலங்கை வந்த ஸ்டீபன் ஜே ரெப், இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைக் கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=329362556105713169

  • கருத்துக்கள உறவுகள்

இவரது போக்குவரத்தை மறித்து ஆர்ப்பாட்டம் செய்து தங்களை உண்மைச் சிங்களவர்கள் நிரூபிக்கவேண்டும்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் கெட்டித்தனமாக சிலரை உள்ளவிட்டு.. பலரை வெளில விட்டு.. போர்க்குற்றத்தில் இருந்து தப்பிக்க முனைகிறது. நம்மவர்கள் அது விளங்கியோ விளங்காமலோ.. இருப்பதும்.. சிங்களத்துக்கு அனுகூலமாக உள்ளது. போகிற போக்கில் சிங்களம்.. 1972 மற்றும் 89 ஜே வி பி அழிப்புப் போல.. இந்தப் போர்க்குற்றங்களிலும்.. இன அழிப்பில் இருந்தும்.. தப்பிக்கவே அதிக வாய்ப்புக்கள் தென்படுகின்றன. சர்வதேச நாடுகளும்.. சிறீலங்கா மீதான அழுத்தத்தை நிஜமான நோக்கங்களுக்கு அப்பால் உள்நோக்கங்களுக்காக பாவித்து வருவதை சிறீலங்கா இலாவகமாகக் கையாள்கிறது.  :rolleyes:  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.