Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதி மகிந்தவிற்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டங்கள்!

Featured Replies

லண்டனில் பிரித்தானியவிற்கு வருகை தந்துள்ள மகிந்தவிற்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் நடத்த லண்டன் வாழ் தமிழ் மக்கள் முடிவு செய்துள்ளனர் என தமிழ் ஒளி இணையத்தின் இரவுச் செய்தில் கூறப்பட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளை காலை பதினொரு மணியளவில் பிரித்தானிய வெஸ்மினிஸ்டர் தரைக்கீழ் புகையிரத நிலையமருகில் ஒன்று கூடுமாறு அனைத்து தமிழர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கோதாரி விளுவான் இந்த நேரமே வருகிறான்...! தவிர்க்க முடியாத காரணத்தால் என்னால் போராட்டத்தில் பங்கு பற்ற முடியாது...!

தமிழ் மக்கள் என்னை மன்னிப்பார்களாக...!

நீங்கள் கத்திட்டே இருங்கோ..அவங்கள் விடுப்புப் பாத்திட்டு...வந்த வேலையை முடிச்சிட்டுப் போவாங்கள். மகிந்த மட்டுமில்ல..மங்களவும் நிற்கிறார்..! ஏன் சந்திரிக்கா உங்க தான் இருப்பே...அது இவ்வளவு நாளும் தெரியல்லப் போல.அது சரி..செம்மணி மறந்து போச்சு அம்மணியோட...ஆனா பிள்ளைகளைப் புதை குழியில பறிகொடுத்ததுகள்..இன்னும் தாயகத்தில புலம்பிட்டுத்தான் இருக்குதுகள்..நாங்கள் புகலிடத்தில..அடுத்த கட்டத்துக்கு தாவிட்டம்...உதுவும் எத்தினை நாளைக்கோ..பாப்பம்..பொறுத்திரு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச முதற்தடவையாக பிரித்தானியாவுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

தீடீரென நேற்று செவ்வாய்க்கிழமை காலை இவர் பிரி்தானியாவுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியா செல்லும் மகிந்த ராஜபச்ச பிரித்தானியப் பிரதமர் டொனி பிளேயரை சந்தித்து தற்போதைய இலங்கை நிலவரம் தொடர்பில் பேச்சுக்கள் நடத்துவார் என நம்பப்படுகின்றது.

இதேவேளை இன்று மகிந்த ராஜபக்சவின் பிரித்தானிய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானிய வாழ் தமிழ் மக்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவிருப்பதாக தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப லண்டனிலேயே இருக்கும் சந்திரிக்கா முன்னாள் இனவாதி..இன்னாள் நல்லாள் அப்படி என்று தீர்மானிச்சிட்டிங்களோ...??! இல்ல மகிந்தவும்..சந்திரிக்கா போலத்தான் நான் என்றார் என்றால்..உங்கட போராட்டம் பிசு பிசுத்திடாதோ...லண்டன் பெருந்தெருக்களில்..! :idea:

நீங்கள் கத்திட்டே இருங்கோ..அவங்கள் விடுப்புப் பாத்திட்டு...வந்த வேலையை முடிச்சிட்டுப் போவாங்கள். மகிந்த மட்டுமில்ல..மங்களவும் நிற்கிறார்

உம்மை போன்ற கூட்டம் இருக்கும் வரை இது தொடர் கதை தானே :!: உம்மை போன்ற பஞ்சோந்திகள் இருக்கும் வரை சனிபிடிச்ச சனநாயகம் பேசி பேசியே வயறு வளக்கும் இனபிறவிகள் தான் நீரும் உமது................. :twisted:

  • தொடங்கியவர்

சனத்திற்கு கிடைக்கிற மட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில் இப்போ ஆட்சியில் இருக்கும் இனவாதிக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கு தான் முதன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களிற்கு எதிரான போராட்டங்கள் கவனயீர்ப்புகள் தான் தற்போதைய களநிலமைகளில் மாற்றங்களை கொண்டு வர உதவும். சந்திரிக்காவை பற்றி தற்பொழுது உள்ள களநிலையில் நேரத்தை விரயமாக்கி எதுவம் நடக்க போறது இல்லை.

உங்களுக்கு என்ன போர் தொடங்கினாத்தானே அசூரும்..அசைலமும்..ஈசியா கிடைக்கும்...வீசாப் பிரச்சனையும் தீரும்...அப்பதானே...அப்புறம் தாயகத்துக்கு...கொலிடேயும்..கொட

அப்ப லண்டனிலேயே இருக்கும் சந்திரிக்கா முன்னாள் இனவாதி..இன்னாள் நல்லாள் அப்படி என்று தீர்மானிச்சிட்டிங்களோ...??! இல்ல மகிந்தவும்..சந்திரிக்கா போலத்தான் நான் என்றார் என்றால்..உங்கட போராட்டம் பிசு பிசுத்திடாதோ...லண்டன் பெருந்தெருக்களில்..! :idea:

இது இன்றைய போராட்டத்தை திசை திருப்பா ஒட்டுகுழுகளுகாக பிறப்பு எடுத்த கருத்து.......... :roll: :idea: :?:

உங்களுக்கு என்ன போர் தொடங்கினாத்தானே

ஆமா இவர் மட்டும் டய்னாவின் செத்த வீட்டுக்கு வந்த போது லண்டன் ரானி குருவி என்னை வீட்டு போகாதே இங்கையே இரு என்று சொன்ன மாதிரியாக்கும் :P :wink: :D

அப்போ ஆர்மி ஆட்லறி அடிச்சா வெள்ளை கொடி காட்டுவதா வெண்ணை :P

வசதி வரும்...இப்படி கோசம் போட்டாத்தானே தமிழ் தேசிய ஆதரவு என்று மக்களை ஏய்கலாம்..பிரச்சனையை வளர்க்கலாம்.

தமிழ்சேசியவாதிகளுக்கு யுத்த காலம் எல்லாம் பிரசவ வேதனையும் வலியும் தான் அது தமிமீழம் என்ற குழந்தை பிறக்கும் போது வலிகல் எல்லாம் மறந்து போகும் ஆனா உம்மை போன்ற பிறவிகள் இப்பொது செய்யும் வேலை என்ன தெரியுமா :P :?:

போராட்டத்தை திசை திருப்ப வேண்டி அவசியம் இல்ல..எவருக்கும். போராடுறதாச் சொல்லுறவை..செய்யுறத ஒழுங்காச் செய்யனும். இல்ல பேசாம இருக்கிறது...! தமிழ் மக்களை பாரிய இடம்பெயர்வுக்கு உள்ளாக்கி.இடம்பெயரப் பெயர கிபீரால அடிச்சவர் சந்திரிக்கா..ஸ்கூல் மேல..தேவாலயம் மேல குண்டு போட்டவர் அவர். சர்வதேசம் அறிய புதை குழியில் புதைத்தவர் அவர். பட்டினி போட்டு வன்னியைச் சோமாலியா ஆக்கினவர் அவர்..அப்படிப்பட்டவர் லண்டனில இருந்து அதிகாலம் செயற்படுகிறார். அவரின் வழியையே மகிந்த பின்பற்றுகிறார். ஏற்கனவே சந்திரிக்காதான்..பொக்ஸ் என்ற பிரித்தானிய ராஜதந்திரியை சிறீலங்காவுக்க இழுத்து சிங்களக் கட்சிகளை ஒருமித்து செயற்பட வைக்க முயன்று தோர்த்தது..அப்ப கூட விடுதலைப் புலிகளை ஓரங்கட்டி ஒரு தீர்வை உருவாக்கத்தான் திட்டம் தீட்டினவை. இப்ப அதே சந்திரிக்கா ஐநா பதவில குந்தவும் இராஜதந்திர நகர்வுகளை செயவும் லண்டனில முகாமிட்டு இருக்கிறார்.

ஆனால் அவர் ஒரு போர்க் குற்றவாளி என்று பக்கம் பக்கமா கட்டுரை எழுதினவை எல்லாம் இப்ப மெளனமா லண்டனில இருக்கினம்...! இப்ப ராஜபக்சவைப் பார்த்து கோசம் போடப் போகினமாம்...உண்மையில ராஜபக்ச சந்திரிக்கா விட்ட மிச்சம்மீதியைத்தான் தொடருரார்...! எய்தவன் இருக்க அம்பை நோகிறதும்..காலத்துக்கு ஏற்ப ஒவ்வொன்று சொல்லி மக்களை ஏய்க்கிறடையும் மட்டுமே நீங்கள் செய்யுறீங்கள். சிங்களத் தலைமைகளை சர்வதேசத்திடமிருந்து உங்களால் விலக்கி வைக்க முடியல்ல..! காரணம் என்ன..உங்கட போராட்டத்தின் அடித்தளத்தில் உள்ள அரசியல் தெளிவின்மையே...! இதுக்க இதால தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைச்சிடும் என்றால்..எவர் நம்புவினம்..???! :idea: :?:

குருவிகள் சொல்வது போல் சந்திரிக்கா தமிழர்களுக்கெதிரான பெரும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டவர் தான் என்றாலும் தற்பொது பதிவியில் இல்லாதராய் கிட்டத்திட்ட தஞ்சமடைந்தவர் என்ற நிலையில் இங்கிலாந்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

ஆனால் மகிந்த தற்பொது அராஜகத்தை ஒப்பேற்றிக்கொண்டு சிங்களத்தின் தலைவராக மேலும் தமிழரை அழிப்பதற்கான உதவிகளைக் கேட்டு வந்திருக்கிறார்.

இவர்களில் யாருக்கெதிராக நாங்கள் முதலில் போராட வேண்டும் என்பதில் குருவிகளுக்குச் சந்தேகம் இருக்காது என்று நினைக்கிறேன்.

ஏற்றுக் கொள்கின்றோம்..ஆனால் சந்திரிக்காவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப் போறம்..அவர் ஒரு போர்க் குற்றவாளி...இப்படி எல்லாம் மக்களுக்கு ஆவேச கட்டுரைகள் எழுதினவை..இப்ப சந்திரிக்கா இலங்கைக்கு அப்பால்..சர்வதேச அளவில் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருப்பது அறியவில்லையோ. கதிர்காமர் பதவிக்கு வந்த பின்னர்தான் அவரை இனங்கண்டிச்சினம். ஆனால் அவர் பதவிக்கு வர முதலே சிறீலங்கன் ஏஜன்டாத்தான் வெளிநாடுகளில் இருந்தவர். எப்பவோ செய்த குற்றதுக்காக பதவியில் இல்லாத சதாமுக்கும்..பதவி பறிக்கப்பட்ட மிலோசவிச்சுக்கும் எதிரா நடவடிக்கை எடுத்தவை...இப்பவும் மகிந்தவுக்கு வழிகாட்டியா இருந்து தமிழர்களை அழிக்கும் சந்திரிக்காவை பாதுகாப்பா செளகரியமா லண்டனில இருக்க விட்டிட்டு..நாங்கள் மகிந்தவுக்கு எதிரா மட்டும் கோசம் போடுறதைப் பார்த்து...குருவிகள் என்ன நினைக்கிறது என்பது முக்கியமில்ல..சர்வதேசம் என்ன கணக்குப் போடும் என்று சிந்தியுங்கள்..!

எற்கனவே இயன் பொக்ஸை அழைக்கேக்க சந்திரிக்காவும் ரணிலும்...தேசிய ஆட்சி பற்றிப் பேசினவை..இப்ப ராஜபக்சவும்..ரணிலும் பேசினம்..அப்ப புலிகள் தெளிவா இருந்தவை...இப்ப புலிகளை கட்டிப்போட்டிட்டு..தாங்கள் அடிச்சுக்கொண்டு...அதே காய்நகர்வைச் செய்யினம்..! இதில சந்திரிக்கா சும்மா இருக்கிறா என்பதை நாங்கள் நம்ப வேணும் என்றீங்கள்...???! :idea: :?: 8)

குருவிகள் மன்னிக்க வேண்டும்.

உங்கள் கருத்தின் நியாயத்தன்மையை நான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இன்று நடத்தப்பட இருக்கின்ற போராட்டத்தைப் பற்றிய தலைப்பின் கீழ்இ அதன் அவசியத்தை நாம் ஒன்றுபட்டுப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்யவேண்டியதன் அவசியத்தைப் பற்றிக் கதைக்காமல் இந்த விடயத்தைக் குறிப்பிட்டு இன்றைய போராட்டம் தவறானத அல்லது அர்த்தமற்றதுஎன்பது போன்ற அர்த்தப்பட எழுதுவது தான் சற்றுச் சந்தேகத்தை எழுப்புகிறது.

அன்பான லண்டனில் வாழ்கின்ற யாழ் உறவுகளே,

நாம் அனைவரும் இன்றைய எதிர்ப்புப் போராட்டத்தில் ஒன்றிணைவோம். எங்கள் குரல்களை ஓங்கி உரைப்போம்.

எமக்கு இந்த போராட்டத்தின் நோக்கம்.. குறிக்கோள் குறித்து தெளிவின்மையே இருக்கிறது. எனிவே உங்கள் போராட்டம்...வெறும் மகிந்தவுக்கு எதிரான கோசமாக மட்டும் அமையாமல்..சிங்களத் தலைமைகளின் கூட்டுச் சதிக்குள் பிரித்தானியாவை கொண்டு செல்லாமல் தடுக்கும் என்று நம்புறம்..! ஆனால்...போராட்ட வடிவத்தில்..அதற்கான உத்தரவாதம் தெரியவில்லை..! தவறாக எண்ண வேண்டாம்..வெற்று வேட்டுக்களை தமிழர்கள் தரப்பிடம் கேட்டுக் கேட்டே சலிச்சுப் போச்சு..! :idea:

தெருவில் நின்று அலம்பும் வீணர்களின் அலம்பல்களை கண்டுகொள்ளாமல் மன உறுதியுடன், ஒன்று பட்டு போராட்டம் நடக்கட்டும்.ஒன்றுமே செய்யாமல் வெத்து வெட்டுக்களாக கணனியில் தமது சொந்த விடயங்களைப் பார்த்துக் கொண்டு ஆகாய சூரர்களைப்போல் விசைப் பலகை தட்டுவோரின் முகமூடி கிழிந்து வெகு நாட்கள் ஆகிற்று.

சிங்கள அரசின் தற்போதைய முகம் மகிந்தரே , எமது போரட்டாம் சிங்கள பவுத்த பேரினவாதத்தோடு தான் அதன்முகங்கள் மாறும் ஆனால் அதன் அடக்குமுறை ஒன்று தான். இதில் அவர் கூடச் செய்தார் இவர் குறையச் செய்தார் என்று சிறுபிள்ளத்தனமான குழப்பும் வியாக்கியானக்களை ஓரங்கட்டி விட்டு, சிங்கள பொவுதத்தின் சதி வலையை அம்பலப்படுத்த, புலம் பெயர் தமிழரின் எதிர்ப்பை இந்தத்தருணத்தில் அரசியல் ரீதியாகக் காட்ட இந்தப் போராட்டம் அவசியமானது.எம்மைப் பயமுறுத்தி அரசியல் மலடுகளாக்கலாம் என்று கனவு காணும் மேற்குலக அரசுகளுக்கு நாங்கள் அரசியற் தெளிவுள்ள மக்கள் என்றும் எமது தேசிய விடுதலையின் பால் மிக்க அவாக் கொண்ட மக்கட் கூட்டத்தினர் என்பதையும் எமது தேசிய விடுதலையின் முன்னணனிச் சக்திகளுடன் எம்மைப் பிரிக்க முடியாது என்பதையும் காட்ட வேண்டிய முக்கிய தருணம் இது.இதனைக் குழப்ப முற்படும் எவரினதும் உண்மையான நோக்கம் பற்றி விழிப்புணர்வோடு செயற்படுவோம், கூட இருந்து குழி பறிப்பவர்களை இனங்கண்டு ஒதுக்குவோம்.

குறைகள் பற்றி சொல்லியே காலங்களிக்கும் வீணர்களின் மலட்டுதனமான கருத்துக்களையும் தாண்டி போராட்டம் வீறுநடை போட்ட ஆரம்பித்து பலகாலமாச்சு....

சும்மா எதுவும் செய்யாமல் இருந்து கொண்டு மற்றவன் போடுற சட்டையில போட்டிருக்கிற பூ சரியில்லை எண்டு சொல்பவர்களை மனநோயாளிகளாய்த்தான் பார்க்கதோண்றுகிறது.....!

இலவசமாய் ஆலோசனைகளையும் குறைக்களையும் கண்டு பிடித்தது போதும் ஆக்க பூர்வமாக சொல்பவர்கள் இறங்கட்டும்....!

போராட்டம் நடத்துறியள்..சராசரி பொதுமக்களின் உயிரிழப்புக்களைத் தன்னும் குறைக்க முடிஞ்சுதோ..???! இல்ல பாதையைத் திறக்க.. தூண்டி...பட்டினிக்குப் பலியாகாமல்..உணவுப் பொருட்களையாவது அனுப்ப முடிஞ்சுதோ...??! ஆனா...அங்க சனம் போராடி..கடத்தப்பட்ட குருபரனை விடுவிச்சு இருக்குதுகள்..! இப்ப தெரியுது சர்வதேசம் எதுக்கு முக்கியத்துவம் அளிக்குது என்று..! புகலிடத்தில இருந்து நீங்கள் உங்கட சுயநலத்துக்குச் செயற்படுறீங்கள் என்பது மட்டும் புரியுது உலக்குக்கு..! எனவே மாற்றிக் கொண்டு கொள்கைப் பற்றோட இறங்குங்கோ..உலகம் மதிக்கும். கொழும்பில...புறக்கோட்டைல நடந்தது உலகம்பூராவும் பரவினது..! நீங்கள் நகரம் நகரமா அரங்கிறியள்..பலந்தான் எதுவுமில்லை. இதில இருந்து என்ன தெரியுது..உங்கட போராட்ட வெளிப்பாட்டில வலுவான தன்மை இல்லை என்பதுதான்..! அரசியல் என்பது என்னென்று தெரியாதுகள் எல்லாம் பனர் பிடிச்சா....என்னாகிறது..! அவங்கள் பார்த்துச் சிரிச்சிட்டுப்போறாங்கள்..அவ்

இங்க பார்ரா...??? BBC ன் செய்திகள் இணைப்புகளில் ஏற்பட்ட மாற்றம் (BBC க்குமுன் போராட்டம் நடந்ததுக்கு பிறகு) தொடங்கி ஈழத்தில் தமிழர் பகுதிகளுக்கு பிரித்தானிய அதிகாரிகள் வரவு வரைக்கும் சாவிலும் வாழ்வோம் எண்று போராட்டங்கள் எண்று பலவாறு ஏற்பட்ட பின்னர் தான் என்பதை புரியாம உளர்வதைப்பார்த்தால் என்ன சொல்வது....!

இதே பிபிசிக்கு முன்னர் சிங்களவன் சின்ன கூட்டம் ஒண்று போராட்டம் நடத்தி BBCயின் பார்வையை திருப்ப முடியும் எண்டால் பெரும்பகுதியாய் வாழும் தமிழர் செய்ய முடியாது என்பது கேவலம்...!

  • கருத்துக்கள உறவுகள்

எரிச்சலடைய வைக்கும், விசர்த்தனமான கருத்துக்களுக்கு சொந்தக் காரர் இவரே தான், என்பதைத் திரும்பவும் நிருபிக்கின்றார்.

சிலபேர் இருப்பார்கள், ஊரில் ஏதும் சமூக சேவை நடக்கும்போது, இடையிடையே வந்து, பெரிதாகச் சத்தம் போட்டு விட்டு, அடுத்த நொடி ஆள் எங்காவது தண்ணியடிக்க போய்விடும். ஆனால் அமைதியாக வேலை செய்பவர்கள், செய்து கொண்டிருப்பார்கள்.

இதை ஏன்சொல்கின்றேன் என்றால், சந்திரிக்கா அம்மையார், லண்டனுக்கு வந்து, இப்போது, 10 மாதங்களுக்கு மேலாகி விட்டது. இது வரைக்கும், யாரும், அவரைப் இருப்பைப் பற்றி ஒன்றும் கதைக்கவே இல்லை. இவரும் இங்கிலாந்தில் தான் இருக்கின்றார். இதுவரைக்கும், ஒன்றுமே பேசவில்லை.

இப்போது மகிந்த வரவிற்கு காட்ட வேண்டிய எதிர்ப்பைப் பற்றிக் கதைக்கும்போது, சந்திரிக்கா அம்மையார் பற்றிக் கதைக்கின்றார். ஒருவகையில், இப்படியான கருத்துக்களைக் கணக்கில் எடுத்துப் பதிலளிப்பது தப்புத் தான்!

தம்பட்டம், அடிப்பதற்கென்றே, பிரச்சனைகளைக் கிளப்பும், இப்படியானவர்களுக்கு, பதிலளித்து, பிரியோசம் ஒன்றுமில்லை.

வேறுயாரும், இதற்குப் பதிலளிக்காமல், துரோகப்பட்டம் சூட்டுகின்றோம் என்று, கருதிக் கதைப்பார்கள்.

அவர்களிடம் வேண்டுகோள்!! இப்படியான விடயங்களுக்கு பதிலளிக்க முடியுமா என்ற கேள்விக்கு, பதிலிருந்தால், சொல்லுங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகள் நீங்கள் முன்நின்று சந்திரிக்காவிற்கு எதிராக போராட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தலாமே..?

இவரா போரடுவதா? தனது சொந்த நலனைப் பார்த்துக்கொண்டு நெடு நாளாக இங்கு வதிவிட மாணவ விஸாவை நீடித்துக்கொண்டு பிரித்தானியாவில் இருந்து கொண்டு புலத் தமிழர்களை இகழ்ந்துகொண்டும் இங்கு செயற்படுபவர்களை இகழ்ந்து கொண்டும் ஒரு சதத்ற்கும் பிரயோசனம் அற்ற தனி நபர்கள் மேலான காழுப்புணர்வை உமிழ்ந்துகொண்டும் இருப்பவர்.

குருவி பாதுகாப்பா பிரிதானியாவில இருப்பதற்காக ஒவ்வொரு பாடமா எடுத்துக் கொண்டு இழுதடித்துக் கொண்டிருகாம , நீர் படிக்க வந்த பாடங்களைக் கெதியா முடிச்சுக் கொண்டு ஊர் திரும்பி நேரடியாப் பங்களிப்பைச் செய்யலாமே?சும்மா யாழில கதையளந்து உமது சுய விம்பத்தைப் பெருப்பிப்பதற்காக புலத்தில் களமிறங்கி செயற்படுபவர்கள் மேல் இவ்வாறு விசமத்தனமான கருதுக்களை எழுதிக் கொண்டிருப்பது நியாயமாகுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.