Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐயோ...ஐயப்ப சாமி...

Featured Replies

மரம் சும்மா இருக்க விரும்பினாலும் காற்று அதனை விடுவதில்லை. நான் அய்யப்ப சாமியைப் பற்றிக் கவலைப் படாவிட்டாலும் அவரது பக்தர்கள், பூசாரிகள், சோதிடர்கள் என்னை விடுவதாக இல்லை.

முன்னர் நான் எழுதிய 'அய்யப்பனுக்குத் தீட்டு! பயங்கர கோபத்தில் இருக்கிறார்!" என்ற கட்டுரையைப் படித்து விட்டுப் பலர் போற்றி எழுதியிருந்தார்கள். மதத்தின் பெயரால் பக்தி வணிகம் செய்யும் பாதகர்களின் வண்டவாளங்களைத் தோலுரித்துக் காட்டுமாறு கேட்டுக் கொண்டார்கள். போற்றுதல் இருந்தால் தூற்றலும் இருக்கத்தானே செய்யும். சிலர் தூற்றி எழுதியிருந்தார்கள். நான் மத நம்பிக்கையையும் கடவுள் நம்பிக்கையையும் சிதைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

உண்மையில் எனது கட்டுரையில் வந்த சங்கதிகள் என்னுடைய சொந்தச் சரக்கல்ல. எல்லாம் புதின ஏடுகளில் வந்த செய்திகளே. ஏன் அதன் தலைப்புக்கூட செய்தி ஏடுகளில் வந்ததுதான்.

அய்யப்ப பக்தர்களுக்கு இப்போது பொல்லாத காலம். அவர்களுக்குச் சோதனைக்கு மேல் சோதனை வந்த வண்ணம் உள்ளது.

'அய்யப்பனுக்குத் தீட்டு பயங்கர கோபத்தில் இருக்கிறார்!" என்பதைப் படித்துவிட்டு பதை பதைத்த பக்தர்கள் இப்போது வந்துள்ள செய்தியைப் படித்து விட்டு என்ன செய்யப் போகிறார்களோ நானொன்றும் அறியேன் பராபரமே!

இன்றைய தமிழக முதல்வர் சரியாக 54 ஆண்டுகளுக்கு முன்னர் திரைக்கதை உரையாடல் எழுதி வெளிவந்த பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வாயிலாக கோயில் பூசாரிகளை ஒருபிடி பிடித்தார். அந்த அனல் தெறிக்கும் உரையாடல் அப்போது மிகவும் புகழ் அடைந்தது.

'கோயிலில் குழப்பம் விளைவித்தேன் கோயில் கூடாதது என்பதற்காக அல்ல. கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன் அவன் கடவுள் பக்தன் என்பதற்காக அல்ல. கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு காமுகனாக இருந்தான் என்பதற்காக...." என்பதுதான் அந்த வசனம்.

பராசக்தி திரைப்படத்துக்கு முன்னர் அண்ணா கதை வசனம் எழுதி வெளிவந்த வேலைக்காரி திரையுலகில் ஒரு திருப்புமுனை ஆக அமைந்தது. நூறு நாளுக்கு மேல் ஓடி சக்கை போட்டது. அண்ணாவின் உரையாடல் 'உறையில் இருந்து எடுத்த வாள் பளிச் பளிச் என்று மின்னுவதாக" மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதியிருந்தார்.

'பகலிலே இளித்தவாயர்களுக்கு உபதேசம் இரவிலே இன்பவல்லிகளுடன் சல்லாபம்" என்ற உரையாடல் அதில் வரும். அந்த உரையாடலை நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி பேசுவார்.

அரை நூற்றாண்டு சென்ற பின்னரும் நிலைமை மாறவில்லை.

சபரிமலை தந்திரி அதாவது சபரிமலை தலைமைப் பூசாரி கண்டாரு மோகனரு கைதாகிறார்! அய்யப்பன் சாமிக்கும் அய்யப்பன் பக்தர்களுக்கும் இடையில் தரகராக நின்று கொண்டு அய்யப்பனோடு பேசும் பூசாரிதான் கைதாகிறார். இதை நீங்கள் படிக்கும்போது கைதாகி இருப்பார்!

சோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் தந்பூதிரிகள் ஆகம விதிப்படி நாளும் குளித்துவிட்டுத்தான் பூசை செய்ய வேண்டும். ஆனால் இப்போது சபரிமலை கோயிலில் உள்ள தந்திரியும் மேல் சாந்தியும் குளி;ப்பதில்லை. குளிக்காமல்தான் பூசை செய்கிறார்கள். ஆசார நியமனம் பார்ப்பதில்லை. மகாருத்ர யாகம், சகஸ்ரகலசம் ஆகியவையும் முறையாக நடப்பதில்லை. இதனால் சபரிமலையின் புனிதம் கெட்டுவிட்டது. அய்யப்பன் பயங்கர கோபத்தில் இருக்கிறார் என்ற வீசிய குற்றச்சாட்டுக்களை வைத்து அவர் கைது செய்யப்படுகிறார் என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால் அதுவல்ல காரணம். குளிக்காதது கிரிமினல் குற்றமல்ல!

ஓகோ! எல்லாப் புரோகிதர்களும் செய்வது போல அய்யப்பன் போட்டிருக்கம் பல கோடி பெறுமதியான நகைகளில் சிலவற்றை தனது மகள் அல்லது மகன் திருமணத்துக்குத் திருடி இருப்பார். அதுதான் காவல்துறை அவரைக் கைது செய்கிறது என்கிறீர்களா?

அதுவும் இல்லை. அப்படி அய்யப்பன் கிலோக் கணக்கில் போட்டிருக்கும் தங்கம், வைரம் வைடூரியம் ஆகியவற்றால் செய்த நகைகளைத் திருடுவது பெரிய குற்றமல்ல! எல்லாப் பூசகர்களும் பூசாரிகளும் அதை அவ்வப்போது செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். சில சமயம் சாமி சிலைகளையே திருடி விடுகிறார்கள்!

கொலை, களவு, பொய், கள், காமம் என்ற பஞ்சமா பாதகங்களில் அய்யப்பன் கோயில் பூசாரியார் கடைசிப் பாதகமான காமத்திற்காகக் கைது செய்யப்படுகிறார்! அய்யப்பனுக்குக் களங்கம் ஏற்படுத்திய தந்திரியை சிறையில் தள்ளுங்கள் என தேவசம் சபை அமைச்சர் ஆவேசமாகப் பேசியுள்ளார். தந்திரியின் வேலையையும் தேவசம் சபை பறித்து விட்டது.

வரைவின் மகளிர் வீட்டை காமகோட்டமாக்கி தாகசாந்தி செய்யப்போன சபரிமலை அய்யப்பன் கோயில் தந்திரிதான் வளமாக சில இளைஞர்களிடம் மாட்டிக் கொண்டார்.

தந்திரி மாறு வேடத்தில் போகவில்லை. நெற்றியில் பட்டை, நடுவில் பெரிய குங்குமப் பொட்டு, கழுத்தில் இரத்தினமாலை, கையில் தங்கக் காப்புக்கள், விரலில் இரத்தின மோதிரங்கள் இடுப்பில் பட்டு வேட்டி இத்தியாதி இலட்சணங்களோடு அம்பாள் தரிசனத்துக்குப் போயிருக்கிறார். இவை போதாதா அவரை யார் என்று அடையாளம் காண? அவரது படம்தானே நாளும் பொழுதும் செய்தித்தாள்கிளில் வெளிவந்து கொண்டிருக்கிறது. படத்தை வைத்துக் கொண்டுதான் இளைஞர்கள் அவரை எளிதாக அடையாளம் கண்டு சுற்றி வளைத்திருக்க்pறார்கள்.

ஆடையில்லாத அழகிகளோடு பூசாரி கலவிக் கடலில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த போது இளைஞர்கள் அந்தக் காட்சியை படப்பெட்டிக்குள் பிடித்துக் கொண்டார்கள்!

ஒரு கோடி உரூபா தருவதாக தந்திரி தந்திரமாக பேரம் பேசிப் பார்த்தார். முடியவில்லை. கழுத்தில் போட்டிருந்த இரத்தினமாலை, கைகளில் கட்டியிருந்த தங்கக் காப்புக்கள், விரலில் போட்டிருந்த இரத்தின மோதிரங்கள் என எல்லாவற்றையும் கழட்டிக் கொடுத்து விட்டு தந்திரி அங்கிருந்து தப்பியிருக்கிறார். தப்பின தந்திரி சும்மா இருந்திருக்கக் கூடாதா? கேரளாவின் எர்ணாகுளம் காவல்துறையிடம் அவர் ஒரு முறைப்பாடு கொடுத்தார்.

'கொச்சியில் பாலாரிவட்டம் பகுதியில் வீடு கட்டும் வேலை நடந்துவருகிறது. அதைப் பார்ப்பதற்காக செங்கன்னூரில் மாலை 3 மணிக்குப் புறப்பட்டேன். கல்லூர் அருகே டாடா சுமோ மற்றும் குவாலிஸ் கார்கள் என் காரை ஓவர்டேக் செய்து மறித்து நின்றன. அதில் இருந்து 9 பேர் இறங்கினர். அவர்களது பிளாட்டில் விளக்கேற்றி வைக்க வேண்டும், 5 நிமிடத்தில் திரும்பி விடலாம் என்றார்கள். ஒரு பிளாட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

4 ஆவது மாடிக்குச் சென்றதும் ஒரு அறையில் என்னைத் தள்ளிக் கதவை மூடினர். என் ஆடைகளை அவிழ்த்துவிட்டு கட்டிலில் தள்ளினர். பின்னர், கறுத்த நிறத்தில் இருந்த பெண்ணை எனக்கு அருகே தள்ளிவிட்டனர். இரண்டு பேரின் தலைகளைச் சேர்த்து வைத்தும் நாங்கள் கட்டிப்பிடித்துக் கொண்டு கிடப்பது போலவும் போட்டோ எடுத்தனர். அந்த பெண் ஒட்டுத்துணிகூட இல்லாமல் நிர்வாணமாக இருந்தார். இரண்டு நிமிடத்திற்குப் பிறகு திரும்ப வந்தார்கள.; போட்டோவைக் காட்டி ரூ.30 லட்சம் கேட்டனர். கேட்டதைத் தராவிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினர்.

நான் இங்கிருந்து போனால்தான் பணம் தரமுடியும் என்றேன். பணமோ, செக்கோ உடனே தர வேண்டும் இல்லாவிட்டால், போட்டோவை வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். என்னிடம் இருந்த செல்போன், பிரேஸ்லெட், மாலை, ரத்தின மோதிரங்களைப் பறித்துக்கொண்டு வெளியே விட்டனர்."

தந்திரி கொடுத்த முறைப்பாட்டை விசாரித்த காவல்துறை அவர் சொன்னது பஞ்சமா பாதகங்களில் இன்னொரு பாதகமான பொய் என்ற முடிவுக்கு வந்தனர்.

கண்டரரு மோகனரு கொடுத்த முறைப்பாட்டில் கூறியள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் சுமார் 22 வீடுகள் உள்ளன. தந்திரி அடைக்கப்பட்டதாகக் கூறிய அந்த வீட்டில் 2 பெண்கள் மட்டுமே உள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே பரத்தமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

குறிப்பிட்ட இந்த வீட்டிற்குக் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 20 முறைக்கு மேல் தந்திரி சென்று இருக்கிறார். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் அந்த வீட்டுக்குள் அவர் இருப்பார். அதன் பிறகே வெளியே வருவாராம். நீண்ட நாள்களுக்குப் பிறகே இந்த வீட்டுக்கு வந்து செல்வது சபரிமலை தந்திரி என்பதை அந்தப் பகுதி இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்பின் அவரைப் பிடிக்க திட்டம் போட்ட இளைஞர்கள் கடந்த 23 ஆம் நாள் வழக்கம் போல் அழகிகளின் வீட்டுக்குள் புகுந்த தந்திரியை சுற்றி வளைத்துப் பிடித்திருக்கின்றனர். அந்த பெண்களுடன் தந்திரி நெருக்கமாக இருப்பதைப் புகைப்படம் எடுத்துள்ளனர்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளிக்கு தந்திரியை நன்றாகத் தெரிந்திருக்கிறது. அடுக்குமாடி வாசலில் வைக்கப்பட்டு இருக்கும் வருகைப் பதிவேட்டில் குறிப்பிட்ட அந்த வீட்டிற்குச் செல்வதாக தந்திரி எழுதி இருக்கிறார்.

பரத்தையர்களுக்கு அந்த இடத்தில் பிளாட் வாங்கிக் கொடுத்துவரே தந்திரிதான். பிளாட்டின் உரிமையாளரான பெண்ணுக்கும் தந்திரிக்கும் ஏற்கனவே நெருக்கிய தொடர்பு உண்டு.

தந்திரி வரும் நாள்களில் வேறு எந்த ஆட்களையும் அந்த அழகி;கள் அனுமதிக்க மாட்டார்களாம். மேலும் அவர்களிடம் போகும் போது சபரிமலை அய்யப்பன் பிரசாதத்தையும் தவறாது கொண்டு போய் கொடுத்துள்ளார்.

இவ்வாறு தந்திரியின் முறைப்பாட்டை விசாரித்த எர்ணாக்குளம் காவல்துறை தெரிவிக்கிறது. இதற்கான ஆதராங்கள் அனைத்தும் தற்போது தங்களிடம் உள்ளதாக காவல்துறை மேலும் சொல்கிறது.

விசாரணை பற்றி எர்ணாகுளம் துணை காவல்துறை அதிபர் பத்மகுமார் கூறியதாவது:

நேற்று முன்தினம் (யூலை 23) அந்தச் சம்பவம் மாலை 6.30 மணிக்கு நடந்ததாக தந்திரி கூறினார். காவல்துறைக்கு இரவு 12.30 மணிக்கு முறைப்பாடு கொடுத்துள்ளார். அதுவும் தனது வழக்கறிஞர் மூலமாகத்தான் முறைப்பாடு கொடுத்தார். அப்போதே அவர் மீது காவல்துறைக்கு அய்யம் எழுந்தது.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தந்திரியுடன் காணப்பட்ட பெண் சேர்த்தலையைச் சேர்ந்தவர். விபச்சார வழக்கில் தேவரை என்ற இடத்தில் கைது செய்யப்பட்டவர். இப்படிப்பட்ட பெண் தனியாக வசிக்கும் குடியிருப்பில் தந்திரிக்கு என்ன வேலை?

தந்திரியுடன் இருந்த இளவயது பெண்ணிடமும் வீட்டின் சொந்தக்காரர் எனக் கருதப்படுகின்ற இன்னொரு பெண்ணிடமும் சிறப்புப் பிரிவு துணை ஆணையர் ஏ.பி.யோர்ஜ் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினார். முதலில் இளைஞர்களுக்கு உருபா 20 ஆயிரம் கொடுக்க தந்திரி முயற்சி செய்துள்ளார். பின்னர் கோடிக்கணக்கில் பேரம் பேசியுள்ளார்.

இதுபற்றிக் கேரள தேவசம் சபை அமைச்சர் சுதாகரன் கூறும்போது 'சபரிமலை விவகாரத்தில் புதிது புதிதாக பல பிரச்னைகள் முளைக்கின்றன. தந்திரி மீதான பயங்கர குற்றச்சாட்டு கேரள மக்களுக்கே பெருத்த அதிர்ச்சியாக உள்ளது. கேரள கலாசாரத்தையே அவர் அவமானப்படுத்தி விட்டார். இது குறித்து தேவசம் சபை முறையான விசாரணை நடத்த வேண்டும். அவரைக் கைது செய்து சிறையில் தள்ள வேண்டும்" குறிப்பிட்டார்.

பின்னே இருக்காதா என்ன? ஆண்டொன்றுக்கு 75 கோடி ரூபா வருமானமுள்ள மிகவும் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் ஆலய தலைமைப் பூசாரி பட்டப் பகலில் கோயில் பிரசாதத்தோடு பரத்தையர் வீட்டுக்குப் போகிறார் என்றால் அது கேரள கலாசாரத்துக்கு மட்டுமல்ல இந்து மதத்துக்கே பெரிய அவமானமாகும்.

சொர்க்கத்துக்கு வழிகாட்டும் பூசுரர்கள், பூசாரிகள், சாமியார்கள் விலைமகளிர் இருப்பிடங்களுக்குப் போய் பாலியல் தாக சாந்தி செய்து மாட்டிக் கொண்ட முதல் ஆசாமி இந்த தந்திரி மட்டும் என்றில்லை.

குஜராத் மாநிலம் தபோய் என்ற பகுதியிலுள்ள வட்தால் சுவாமி நாராயன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தைகளிடம் சாமியார்களான சந்த், தேவ் வல்லப் ஆகியோர் வரம்பு மீறி நடப்பதாகக் கோயில் நிருவாகத்துக்குத் தொடர்ந்து முறைப்பாடுகள் வந்திருக்கின்றன. அதுவும் கோயிலுக்குள் உள்ள குடிலிலேயே இந்தக் கூத்துகள் நடைபெற்றிருக்கின்றன என முறைப்பாடுகள் வந்தன. ஆனால், சாமியார்களைப் பிடிக்காத சிலர்தான் இப்படி பொய்ச் செய்திகளைப் பரப்புகிறார்கள் என்று கோயில் நிருவாகம் மறுத்து வந்தது.

இதையடுத்து சாமியார்கள் பெண்களுடன் இருப்பதை இரகசியமாக வீடியோ படமெடுத்து ஆதாரத்துடன் வெளியிடுவது என்ற முடிவுக்கு எதிர்த்தரப்பினர் வந்திருக்கின்றனர். அடுத்த கட்டமாக மினியேச்சர் வீடியோ காமிரா ஒன்று சாமியார்களின் குடிலுக்குள் பொருத்தப் பட்டது. இதையறியாத சாமியார்கள் வழக்கம்போல அறைக்குள்ளே பாலியல் கூத்தடிக்க.. அது அப்படியே வீடியோவில் பதிவாகி விட்டது.

வீடியோவில் பதிவான காட்சிகளை வி.சி.டி ஆக மாற்றம் செய்த எதிர்த்தரப்பினர் அதை குஜராத்தின் பிரபல பத்திரிகையான சந்தேஷ்க்கு அனுப்பி விட்டனர்.

அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட அனைவரின் முகங்களும் தௌ;ளத் தெளிவாகவே பதிவாகியிருக்கின்றன.

ஒரு பெண் அமர்ந்திருக்கும் காட்சி வீடியோவில் முதலாவதாக இடம் பெற்றிருக்கிறது. கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்தப் பெண்ணின் பெயர் ரூபல்.

அடுத்து வெள்ளை பைஜாமா அணிந்த கோயிலின் பணியாளர் ஒருவர், பாய் மற்றும் தலையணையை அந்த அறையினுள் விரித்து விட்டுச் செல்கிறார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து தலையில் குடுமி, நெற்றியில் நாமம், கழுத்தில் உருத்திராட்சம், மார்பில் ப+ணூல், இடுப்பில் காவி சகிதமாகத் தோற்றமளிக்கும் சாமியார் தேவ் வல்லப் அந்த அறையினுள் நுழைகிறார். அறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கினை தேவ் மெல்ல அணைக்க, அந்தப் பெண்ணோ, 'விளக்கை அணைக்கவேண்டாம் ப்ளீஸ்... அது எரியட்டும்" என்று தடுக்க, மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்யப்படுகிறது.

பின்னர் ரூபலை நெருங்கும் சாமியார், அவரது ஆடைகளைக் களைகிறார். 'வேண்டாமே" என்று மறுக்கும் ரூபலை, தனது வாயில் விரலை வைத்தபடி 'மூச்" என எச்சரித்து, காரியமே கண்ணாக சாமியார் இயங்க ஆரம்பிக்கிறார். முரண்டு பிடிக்கும் அந்தப் பெண்ணிடம் முரட்டுத்தனமாக தேவ் வல்லப் படர்ந்து கொள்ள, வேறு வழியின்றி அந்தப் பெண்ணே தனது உடைகளைக் களைகிறார். தேவ் வல்லப் தன்னுடைய இச்சையைத் தணித்துவிட்டு வெளியேற, அடுத்த விளையாட்டைத் தொடர சாமியார் சந்த் உள்ளே நுழைகிறார். தேவ் வல்லப்பிற்கு தான் சளைத்தவனில்லை என்பதைப் போல சந்த்தும் ரூபலிடம் உடலுறவு கொள்கிறார். இந்தக் காட்சியுடன் வீடியோ முடிந்து விடுகிறது. இந்தச் சம்பவம் நடந்தது எப்போது என்ற தெளிவான விவரம் ஏதும் தங்களுக்குச் சரிவரக் கிடைக்கவில்லை என்கிறது சந்தேஷ் பத்திரிகை.

இந்தச் செய்தியும், படங்களும் பத்திரிகையில் மட்டுமன்றி, சந்தேஷின் இணையதளத்திலும் வெளியாகி மிகப்பெரிய அளவிலான பரபரப்பு குஜராத்தைப் பற்றிக்கொண்டது.

கோயிலினுள் காமோற்சவம் நடத்திய சாமியார்கள் இருவரும் தங்களது அந்தரங்கம் அம்பலமானதையடுத்து அங்கேயிருந்து தப்பியோடிவிட்டனர். ரூபல் என்ற அந்தப் பெண்ணும் தலைமறைவாகி விட்டார். சாமியார்கள் இருவரும் கோயிலுக்கு அருகே உள்ள திருமண மண்டபத்தில் வேலை செய்யும் பெண்களையும், தங்களது குடிலுக்கு வரவழைத்து அனுபவித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சுவாமி நாராயன் கோயிலுக்குப் பெண்களின் வரத்துக் கணிசமாகக் குறைந்து விட்டிருக்கிறது.

இவை நடந்தது 2004 நொவெம்பரில். இப்போது கோயில் அர்ச்சகர்கள், சாமியார்கள் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

காந்தியார் கோயில்கள் விபச்சார விடுதியென்று சொன்னார்! அவர் வாய்க்குச் சர்க்கரையைத் தான் கொட்ட வேண்டும்.

மதம் ஒரு போதை. கடவுள், பக்தி, கோயில், குளம், ஜீவாத்மா - பரமாத்மா, நரகம் -சொர்க்கம் போன்றவை பக்திப் போதையை விற்பனை செய்யப் பயன்படுத்தும் வசீகரமான வார்த்தை சாலங்கள்! மனித சிந்தனைக்கு விலங்கிட்டு மனிதனை விலங்காகவே ஆக்கும் ஒரு வகை மூளைச் சலவை!

நடிகை ஜெயமாலா அய்யப்பனைத் தொட்டுக் கும்பிட்டதால் அய்யப்பனுக்கு தீட்டு என்று சொல்லி பெரிய பொருள்செலவில் பரிகாரம் செய்யப்பட்டது. இப்போது தந்திரியால் அய்யப்பனுக்கு தீட்டுப்பட்டுவிட்டதாம். அதற்கும் பரிகாரம் செய்யப்போகிறார்களாம்!

பாவம் அய்யப்ப பக்தர்கள். இவற்றை எல்லாம் படித்து விட்டு அவர்கள் அவமானத்தால் குளம், குட்டை ஒரு முழக் கயிறு, ஒரு துளி விஷம் ஆகியவற்றைத் தேடுவார்கள் என்று யாரும் நினைத்தால் அவர்கள் ஏமாறுவார்கள். பக்தி போதை அவ்வளவு சுலபத்தில் போய்விடாது!

நகல் எடுத்தது தமிழ்நாதத்தில்..ஒட்டினது யாழ் களத்தில்.. எழுதினது கனடாவில் இருந்து திருமகள் என்பவர்...உதவினது சுரதா அண்ணாவின் பொங்குதமிழ் எழுத்துரு வகை மாற்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்ச்சிகளை அடக்க முடியாது தானே! அது சாமியாரா இருந்தாலும் சரி சாத்தானா இருந்தாலும் சரி :D

உணர்ச்சிகளை அடக்க முடியாது தானே! அது சாமியாரா இருந்தாலும் சரி சாத்தானா இருந்தாலும் சரி :lol:

:lol::lol: :P வடிவேல்லாயிருந்தாலும் சரி :D:D :P

  • கருத்துக்கள உறவுகள்

:D:D :P வடிவேல்லாயிருந்தாலும் சரி :D:D :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி கிளுகிளுப்பான செய்திகளை அடிக்கடி போடவும்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதை குருவி பார்த்தா உணர்ச்சி வசபட்டு ஏதாவது டயலக் எழுதுவார் கவனம்...........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.