Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனந்தெரியாத நபர்கள் இலங்கை விஜயத்தின் போது பின் தொடர்ந்தனர்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"எந்தவிதமான அரசியல் நிகழ்வுகளிலும் நான் பங்கேற்கவில்லை"

Rathika1_CI.jpg

இனந்தெரியாத நபர்கள் இலங்கை விஜயத்தின் போது பின் தொடர்ந்தனர் என கனேடிய எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ராதீகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள்களில் இனந்தெரியாத நபர்கள் தாம் செல்லும் இடங்களை பின்தொடர்ந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சென்றிருந்த போது வாகனத்தில் அழைத்துச் சென்ற சாரதியே, மோட்டார் சைக்கிளில் சிலர் பின் தொடர்வதனை அடையாளம் கண்டு அறிவித்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒர் நிலைமையை எதிர்பார்க்கவில்லை எனவும் இதனால் முதலில் பின்தொடர்வது குறித்து தாம் கவனத்திற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தம்மை கைது செய்ய வேண்டிய எவ்வித அவசியமும் இருக்கவில்லை எனவும், கைது செய்வதற்கான பிடி விராந்து எதுவும் பிறப்பித்திருக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தம்மிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்ததாத் தெரிவித்துள்ளார்.

எந்த இடத்திற்கு சென்றீர்கள், யாரை சந்தித்தீர்கள், இவர்களை எதற்காக சந்திதீர்கள், இவர்களுடனான தொடர்பு என்ன, இந்த இந்த நபர்களை இந்த இந்த நேரத்தில் சந்தித்தீர்கள் என அதிகாரிகள் பட்டியலிட்டுக் கொண்டே சென்றனர் என அவர் தெரிவித்தள்ளார்.

கேள்விகள் கேட்டு தம்மை அடக்குமுறைக்கு உட்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

'உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவே முயற்சிக்கின்றோம்' என குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் தம்மிடம் தொலைபேசி ஊடாக தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது விஜயத்தின் போது எந்தவிதமான அரசியல் நிகழ்வுகளிலும் பங்கேற்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைப் பாதுகாப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என சிற்சபேசன் தெரிவித்துள்ளார்.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101784/language/ta-IN/article.aspx

பின் தொடர்வது, மிரட்டுவது, கடத்துவது, பிளேட்டால் கொலை செய்வது சிறி லங்கா அரசாங்க கலாச்சாரம்.

அதை தவறாக விளங்கி தனி நபர் தாக்குதல் செய்ய கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

பின் தொடர்வதை வைத்து கனடாவில் அரசியல் செய்யலாம் என சிலர் சொல்கின்றனர். இதைப்பற்றி ராதிகா என்ன நினைக்கிறீர்கள். போன முறை நீங்கள் இலங்கைக்கு செல்லாமல் தேர்த்தலில் வென்று ஒட்டாவா சென்றீர்கள்.இம்முறை இலங்கை சென்றது தேர்த்தலில் வெல்லாமல் விடத்தான் எனவும் இங்கு சிலர் முணுமுணுக்கிறார்கள். :icon_mrgreen:  :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.