Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரிமைப்போரின் பொழுது மக்களுக்காக தம்மை அற்பணித்தவர்கள் முடமாகியுள்ளனர்: அவர்களைப் பராமரிக்க வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உரிமைப்போரின் பொழுது மக்களுக்காக தம்மை அற்பணித்தவர்கள் முடமாகியுள்ளனர்: அவர்களைப் பராமரிக்க வேண்டும்- முதலமைச்சர் விக்கி

 எமது மக்கள் எழுந்து நடக்கமுடியாமல் முனகிக் கொண்டிருக்கும் போது தூரத்தேதெரியும் அரசியல் இலக்குகளை அவர்களுக்கு எடுத்துரைப்பதால் பயன் ஏதும் இல்லை. அதற்காக அரசியல்த் தீர்வுகள் வேண்டாம் என்று கூறவில்லை. யதார்த்தத்தை உணர்ந்து எவற்றுக்கெல்லாம் முந்துரிமை வழங்கவேண்டும் என்பதை யூகித்தறிந்து எமது அரசியல் இலக்குகளையும் அடைய வேண்டும் என வடக்கின் முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

போரின் போழுது  எமது மக்களுக்காக தமது வாழ்க்கையை அற்பணித்த பலஇளைஞர்கள் இன்று முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் அவஸ்தைப் படுகின்றனர். .வர்களைப் பராமரிப்பதும் எமது கடமையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முள்ளந்தண்டுவடம் பாதிப்படைந்தோர்க்கான சுகாதார பராமரிப்புநிலையம்

திறப்புவிழா நிகழ்வு நேற்றுக் காலை வவுனியாபம்பைமடு ஆயுர்வேத

மருத்துவ மனைவளாகத்தில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

 அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

 மூன்று தசாப்தகாலயுத்தத்தின் கொடிய விளைவுகளை வடுக்களாக சுமந்துநிற்கும் எமதுமக்களுக்குசெய்ய வேண்டிய கட்டாயக்கடமைகளில் ஒன்றை இன்றுநாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம். வடமாகாணசபைநிறுவப்பட்ட பின்னர்; முதலாவது முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்தவர்களுக்கான சுகாதார பராமரிப்பு நிலையம், 'வைகறை' என்ற பெயர் சூட்டி இன்று (17.01.2014) திறந்து வைக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்றவாறு வேறு மாவட்டங்களிலும் இது போன்ற பராமரிப்பு நிலையங்களைத் திறந்து வைக்கநடவடிக்கை எடுப்போம். அண்மைய கொடிய யுத்தத்தினால் உயிரை இழந்தவர்களை விட அதன் வடுக்களை 'ரணங்களாக' ச்சுமந்து தங்களைத் தாங்களே சுமைகளாக எண்ணுமளவிற்கு வேதனைப்படும் உறவுகளுக்காக இந்தநிலையம் திறக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

ஒருமனிதனின் இயக்கத்திற்கு முள்ளந்தண்டுவடம் என்பது முதன்மையானது. அவனின் முழு செயற்பாடுகளுக்கும் அதுவே உறுதுணையாக உள்ளது. எனவேதான் இது பாதிப்படையும் போதுநாம் சுயமாக இயங்க முடியாதவர்களாக மாறுகின்றோம். எமது நாட்டை பொறுத்தவரை முள்ளந்தண்டு வடம் செயலிழக்க பின்வரும் காரணங்களைப் பிரதானமாகக் கூறுவர் -

அவையாவன.

1.   யுத்தத்தின் போது நேரடி தாக்குதல்களுக்கு உள்ளாகி செயலிழக்கப்படுகின்றமை.

2.   விபத்துக்களால் குறிப்பாக வீதி விபத்துக்களின் போது ஏற்படும் பாதிப்புக்களால் செயலிழக்கின்றமை.

3.   நோய்களின் தாக்கத்தினால் செயலிழக்கின்றமை

கடந்த 30 வருடகால கொடிய யுத்தத்தினால் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் பலர். அதிலும் குறிப்பாக 2009ல் நடைபெற்ற இறுதியுத்தத்தில் நடைபெற்ற எறிகணைத் தாக்குதல்கள், குண்டு வெடிப்புக்கள், துப்பாக்கிப் பிரயோகங்களினால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இன்றுதாமாக இயங்க முடியாதவர்களாக உள்ளனர். இவர்களிலும் குறிப்பாக மக்களுக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்களும் பொதுமக்களுமாகச் சேர்ந்து பெரும்பாலாக இளம் வயதினரே இவ்வாறாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் குடும்பத் தலைவர்களும் இதனுள் அடங்குகின்றனர். இதனால் இவர்களின் உழைப்பில் தங்கியிருந்த குடும்ப அங்கத்தவர்களின் வருமானம் இல்லாது போனதுடன்,சுயமாக இயங்கமுடியாத இவர்களை குடும்பத்தின் ஏனையவர்கள் பராமரிக்க வேண்டியுள்ளதால் மொத்தத்தில் இவர்களின் குடும்பச்சுமையைச் சுமக்கமுடியாது அவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

முள்ளந்தண்டுவடம் பாதிப்படைந்து இயங்க முடியாதவர்களுக்குத் தொடர்ச்சியான மருத்துவ சேவை வழங்குதல் அவசியம். இவர்களால் அன்றாட கடமைகளைக்கூடச ;செய்யமுடியாது. பெரும்பாலும் மீள்குடியேற்றபிரதேசங்களில் வாழும் இவர்களுக்கு விசேட மலசலகூட வசதிகள் இல்லை. இவர்களுக்குச்சலம் கழிப்பதற்காகப் பொருத்தப்படும் சலப்பைகள் இரண்டு வாரத்திற்கொரு தடவைமாற்றப்படல் வேண்டும். அதைவிடபடுக்கையில் தொடர்ந்தும் கிடப்பதால் படுக்கைப்புண் ஏற்படுகின்றது. எனவேஅடிக்கடி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுவர வேண்டிய தேவையும் இவர்களுக்கு உள்ளது. எனினும் மீள்குடியேற்றப் பகுதியில் வசிக்கும் இவர்களுக்கு இதற்கான போக்குவரத்துவசதிகளும் இல்லை. பொருளாதார வசதிகளும் இல்லை. எனவேதான் இவ்வாறான ஒருநிலையம் அமைக்கப்பட்டிருப்பது இவர்களுக்குப் பேருதவியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

எமதுநாட்டில் தற்போதுகாணப்படும் சுகாதாரசேவையில் இவ்வாறான பராமரிப்பு நிலையங்கள் இல்லை. இவற்றை அமைப்பதற்கான நிதிஒதுக்கீடும் அமைச்சிடம் இல்லை. எனினும் எமது வடமாகாணசபையானது காலத்தின் அவசியத் தேவைகருதி இவ்வாறான நிலையமொன்றைத் திறப்பதற்குமுதல் முயற்சிஎடுத்துள்ளது.

சிலர் கேட்கலாம் 'ஏன் இந்தநிலையம் வவுனியாவில் திறக்கப்படுகின்றது' என்று. நான் ஏற்கனவே கூறியதுபோன்று இதற்கானநிதிவளம் இல்லாதநிலையில் ஏற்கனவே இருந்த வளங்களைப் பயன்படுத்தியே இந்நிலையத்தை முதற்கட்டமாக இயங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதேபோன்ற நிலையங்களை மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கஎமக்குநிதிவளம் தேவைப்படுகின்றது. இந்தநிலையமானது 2009ம் வருடக்காலப்பகுதியில் எம்.எஸ்.எவ் ஹொலன்ட் (MSF-Holand) எனப்படும் வரையரையற்ற வைத்தியர்கள் நிறுவனத்தினால் ஸ்தாபிக்கப்பட்டது.

பின்னர் யுத்தகாலம் முடிவடைந்து அந்தநிறுவனம் இலங்கையைவிட்டு வெளியேறிய பின்னர் மீண்டும் இந்த நிலையத்தை இயங்கவைப்பதற்காக புலம்பெயர்ந்த எமது உறவுகளின் நிதியுதவியைப் பெறுவதற்கு எமது மாகாண சுகாதாரஅமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம்  முயற்சி எடுத்து அதன் பிரதிபலிப்பாகவே இன்று இந்தநிலையம் திறக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையத்திற்கு 'வைகறை' என்றுபெயர் சூட்டப்பட்டுள்ளது. வைகறை என்பது அதிகாலை விடியலைக் குறிக்கும். வாழ்வில் நம்பிக்கை இழந்து இருட்டடைந்த வாழ்க்கையில் விடியலை எதிர்பார்த்துநிற்கும் இவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்திலேயே இந்த 'வைகறை' நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

உலகளாவியரீதியில் இயங்கும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான நிறுவனம் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கான மருந்து என்பது 'நம்பிக்கை' ஒன்றே ஆகும் எனக் கூறுகின்றது.எனவே இவர்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது. அந்தநம்பிக்கையை வளர்த்துக்கொள்ள மனஅமைதி அவசியம். முன அமைதியைப்பெற,நற்சிந்தனை அல்லது இறைசிந்தனை அவசியம்.மனதில் நற்சிந்தனைகளை வளர்த்து இறைநம்பிக்கையுடன் எதிர்காலத்தில் நம்பிக்கையுள்ளவர்களாக இவர்கள் மாறநாம் வழி வகுக்கவேண்டும்.

நாங்கள் பெரும்பாலும் அரசியல் பேசுவதிலேயே இன்றுகாலம் கழித்துவருகின்றோம். எமதுமக்கள் எழுந்து நடக்கமுடியாமல் முனகிக் கொண்டிருக்கும் போதுதூரத்தேதெரியும் அரசியல் இலக்குகளைஅவர்களுக்கு எடுத்துரைப்பதால் பயன் ஏதும் இல்லை. அதற்காக அரசியல்த் தீர்வுகள் வேண்டாம் என்று கூறவில்லை. யதார்த்தத்தை உணர்ந்து எவற்றுக்கெல்லாம் முந்துரிமை வழங்கவேண்டும் என்பதை யூகித்தறிந்து மக்கள் நலம் நாடி அதற்கு முன்னுரிமை கொடுத்துநடந்து, அதேநேரத்தில் அரசியல் இலக்குகளையும் அடைய ஆவனசெய்வோமாக!

உள்ள10ரில் எமக்குஅரசியல்த் தீர்வுகிடைக்கும் என்றஎண்ணம் அருகிவருகின்றது. இதனால்தான் பலரும் சர்வதேசஅரசியல் நெருக்குதல்களைஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அந்தக் காலகட்டத்தில் அதன் போதுநோயினால் அல்லற்படுபவன்,வறுமையால் வாடுபவன்,அச்சங்களினால் அச்சுறுத்தப்படுபவன் என்னசெய்வது? அவன் வாழ்க்கையில் மறுமலர்ச்சியைக் கொண்டுவருவது எமது தலையாய கடனல்லவா? எங்கள் உள்ளங்களில் பரிவு,அன்பு,பாசம் போன்றவை எழுந்தால்தான் மக்களின் நலம் நாடநாம் முன்நிற்போம். அப்பேர்ப்பட்ட அன்பின் பிரதிபலிப்பே இன்றுதிறக்கப்பட்ட இந்தவைகறை பராமரிப்புநிலையம். தூரத்துப் பச்சைக்காக நாங்கள் காத்துநிற்கும் அதேநேரம்,நேரத்துக்குகந்த நடவடிக்கைகளை எம்மக்கள் நலம் கருதிஎடுப்போமாக! என்னை இந்தப் புனிதகைங்கரியத்தில் ஈடுபடுத்திய எமது சுகாதார அமைச்சருக்கு நன்றி கூறிஎல்லாம் வல்ல இறைவன் உங்கள் எல்லோருக்கும் மனத்தைரியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டுமெனப் பிரார்த்தித்து விடைபெறுகின்றேன் என்றார்.

தொடர்புடைய செய்தி

முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந் தோருக்கான சுகாதார பராமரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்- வவுனியா
17 ஜனவரி 2014

 

 

முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்தோருக்கான சுகாதார பராமரிப்பு நிலையத் திறப்பு விழா நிகழ்வு இன்று (17.01)  வவுனியா பம்பைமடு ஆயர்வேத மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்றது. இதன் மூலம் முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்து உறவினர்களால் பராமரிக்க முடியாதவர்களை வட மாகாண சபையினால்  பராமரிப்பதற்கான ஓழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வைகறை என்று நாமம் சூட்டப்பட்ட இப் பராமரிப்ப நிலையத்தினை வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்கினேஸ்வரன் திறந்து  வைத்திருந்தார். 20 பேரை பராமரிக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இப் பராமரிப்பு விடுதியானது இன்று தொடக்கம்  செயற்படவள்ளதுடன் மேலதிக்லைத்தீவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.

 

இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ந. சிவசத்திஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் பா.  சத்தியலிங்கம், போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் பா. டெனீஸ்வரன், கல்வி பண்பாட்டு அமைச்சர் த.  குருகுலராஜா உட்பட வடமாகாணசபை வவுனியா மாவட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கனக்கானோர் கலந்துகொண்டனர்.

  

 

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101863/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

 'எமது மக்கள் எழுந்து நடக்கமுடியாமல் முனகிக் கொண்டிருக்கும் போது தூரத்தேதெரியும் அரசியல் இலக்குகளை அவர்களுக்கு எடுத்துரைப்பதால் பயன் ஏதும் இல்லை. அதற்காக அரசியல்த் தீர்வுகள் வேண்டாம் என்று கூறவில்லை. யதார்த்தத்தை உணர்ந்து எவற்றுக்கெல்லாம் முந்துரிமை வழங்கவேண்டும் என்பதை யூகித்தறிந்து எமது அரசியல் இலக்குகளையும் அடைய வேண்டும் என வடக்கின் முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்."

 

யதார்த்த அரசியலின் முதல் அடி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.