Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் நாள்காட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்


  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நாள்காட்டி சிறப்பாக பெருந்தச்சர்களால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதன்படி

தமிழ் புத்தாண்டு - தை மாதம் தொடங்குகிறது.

ஆண்டுகு 360 நாட்கள் கொண்டது.

வாரம் ஆறு நாட்கள் கொண்டது. (சனி தவிர)

தமிழ் பழம் செய்யுட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.

இதன்படி, அமாவாசை என்பது செவ்வாய் கிழமைகளில் தான் அமையும்

முழுனிலவு வெள்ளிக்கிழமைகளில்தான் அமையும்.

வானவியல் கோட்பாடுகள் அனைத்தும் கச்சிதமாக பொருந்தும்

பெண்ணின் பூப்படைதல் மற்றும் வழிபாடுகள் குறிப்பிட்ட தினங்களில்தான் இயற்கை நியதியின்படி நடைபெறுகிறது. அதனை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியும்.

 

ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் கேள்விகளைத் தாருங்கள். விளக்கமளிக்க தயாராக உள்ளோம்.

 

 


  • கருத்துக்கள உறவுகள்

எங்கே நாட்காட்டி ஜிட்லிவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்


ஐயா அதை பதிவேற்ற முயற்சிக்கிறேன் முடியவில்லை.முதலில் 844 KB இருந்தது. இப்போது அதனை சுருக்கி 257 KB மாற்றிவிட்டேன். யாழில் பதிவேற்ற முடியவில்லை. செய்முறை சொன்னால் நலம்.

 


  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூகிளில் இருந்தா பதிவேற்ற முயல்கிறீர்கள் ??

  • கருத்துக்கள உறவுகள்

எனில் mouse il right click செய்ய copy page location என்பதை  kilic செய்து யாழில் போடவேண்டிய பக்கத்தில் ஒரு பெட்டிக்குள் பச்சை மரம் ஒன்று இருக்குமே அதை அழுத்த ஒரு கோலம் வரும் அங்கே paste செய்ய படம் வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது googleஇல் இல்லை. என்னுடைய desktop இல் இருக்கிறது.

 


  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்


25.jpg

desktop இல் இருக்கும் file களை ஒரு free file hosting sites க்கு (i.e for photos - photobucket.com, for files - megafileupload.com or even googledrive) upload பண்ணிவிட்டு இங்கே link பண்ணவும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

thumb64.jpg


thumb100.jpg


thumb125.jpg


90.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரு முயற்சிகளுக்குப் பிறகு இன்று பதிவேற்றப்பட்டது (28.01.2014). இது 23.01.2014 அன்று திருச்சியில் வெளியிடப்பட்டது.

 

தமிழறிஞர்கள் பலர் இந்த நாட்காட்டியைப் பாராட்டினார்கள். தமிழின் சங்கபாடல்கள் அனைத்துக்கும் இது கச்சிதமாக பொருந்தும்.

 

சூரியனின், சந்திரனின், நட்சத்திரங்களின் சரியான இருப்பிடங்களை துல்லியமாக அளவிட்டுக் கூறக்கூடியது இது. வானவியல் அடிப்படை உள்ள எவரும் இதனை சரிபார்த்துக் கொள்ளலாம்.

 

இதன்படி எல்லா மாதங்களும் 30 நாட்கள் கொண்டவையே.

12x30=360 நாட்கள் வருடத்திற்கு.

 

தை நீராடல் - சரியாக பொருந்தும்.

சித்திரை பவுர்ணமி - சரியாக பொருந்தும்.

 

எல்லா பௌர்ணமியும் - செவ்வாய்

எல்லா அமாவசையும் - வெள்ளி

 

சோதித்துப்பாருங்கள். குறை இருந்தால் சொல்லுங்கள்.

 

தமிழனின் வானவியல் பஞ்சாங்கங்களைப் பார்க்கும் ஒருசிலரோடு நின்று விடுவதில்லை. எவரும் சோதித்துப் பார்க்கலாம்.

 

பூமியின் தலையாட்டத்தையும் கணிக்கலாம்.

 

சூரியன் கடந்த 05 ஜனவரி 2014 ல் தன் தென்செலவை முடித்து வடசெலவை ஆரம்பித்திருக்கிறது. தொலைநோக்கியால் உற்றுப் பார்த்துவர்களுக்கு தெரியும்.

 

தென்செலவு பூமியின் தட்பவெப்பங்களுக்கு மிகவும் முக்கியமானது (pivotal point).

 

தமிழ் அரசர்கள் இந்த தென்செலவை கட்டுப்படுத்த முயன்று வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த தொழில் நுட்பம் தமிழர்களைத்தவிர இன்று எவரிடமும் இல்லை. .... இந்த நாட்காட்டியின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.....உங்கள் கருத்துக்கள் வரவேற்கப் படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தைப்பொங்கலை நியாயப்படுத்த எத்தனை பூச்சுத்தல்கள். ஏன் தைப்பொங்கல் மகரராசியில் வருகின்றது. வடசெலவு என்பது மார்கழி 21ம் தகதி தானே வருகின்றது. அப்படியிருக்க ஏன் சூரியன் மகர ராசிக்குள் போகின்ற நாளைப் போய்த் தெரிவு செய்ய வேண்டும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article5539692.ece

 

தயவு செய்து மேற்கண்ட சுட்டியை படித்தால் விவரம் தெரியும். தை பொங்கல் தமிழர்களின் விழாதான். அதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. இது நம் முன்னோர்கள் அதாவது மக்களும், மன்னனும் சேர்ந்து கொண்டாடினர். அதுதான் ஆட்டைப்பெரிய திருவிழா.  அதுபற்றி மேலும் அறிய  http://www.yarl.com/forum3/index.php?showtopic=133596 சுட்டியைப் பார்க்கவும். இன்னும் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தைப்பொங்கலை நியாயப்படுத்த எத்தனை பூச்சுத்தல்கள். ஏன் தைப்பொங்கல் மகரராசியில் வருகின்றது. வடசெலவு என்பது மார்கழி 21ம் தகதி தானே வருகின்றது. அப்படியிருக்க ஏன் சூரியன் மகர ராசிக்குள் போகின்ற நாளைப் போய்த் தெரிவு செய்ய வேண்டும்.

 

மகரம் என்றால் என்ன? அதாவது மகரம் என்றால் சூரியன் தென்செலவை முடித்து திரும்பும் நன்னாளில் சூரியன் உதித்த இடத்தில் அன்று காணப்படும் விண்மீன் களின் தொகுப்பு. அது சுமார் 30 நாட்கள் இருக்கும். பின் கும்பம் வரும்....... இப்படி தொடரும். இப்படி விண்மீன் களின் நிலையைத்தான் மகரம், கடகம், கும்பம் என தமிழர்கள் குறித்தார்கள். இதற்கும் காலநிலைக்கும் தொடர்பு உண்டு. அதை விடுத்து ராசி என மாற்றம் பெற்று வேதியர்களின் பிழைப்பு இன்று வரை தொடர்கிறது. அதுதான் தமிழனின் இழப்பு.

 

அதாவது ராசிக்கும் தமிழனின் காலக்குறிப்புகளுக்கும் தொடர்பில்லை. குழப்பிக்கொள்ளாதீர். ஆக தமிழனை ஏமாற்றியதே இந்த வேதியர்கள். இதனால் தமிழன் தன் அறிவுச்சொத்துக்களை இழந்து நிற்கிறான் இன்று. இதனை சரிசெய்ய வேண்டுமானால் ஒரு திருப்பமாகிய 'ஆட்டைப் பெரிய திருவிழா' வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டைத் திருவிழா பற்றிய விளக்கம் என்பது சில தமிழ் அறிஞர்களின் எடுகோளே தவிர என்னமும் அதற்கு பொருத்தமான விளனக்கம் கிடைத்ததா என்றால் இல்லை. வடசெலவு, தென்செலவினை வடிவாக உணரக்கூடியர்கள் மத்தியதரைக் கோட்டோடு இருப்பவர்கள் அல்ல. கனடா அவுஸ்ரேலியா போன்ற நாட்டினர் உணர்வது போல எங்களால் அதை உணர்ந்திருக்கமுடியாது. அதை விட இலகுவாக உணரக்கூடியது என்னவெனில் சூரியன் மத்தியகோட்டுக்கு வரும்நாளாகத் தான் இருக்கும்.

வடஇந்தியர்கள் தை மாதத்தில் சூரியனைக் காண்பது அரிது என்பதால் அவர்களை மகர சங்கராந்தியைச் சூரியவழிபாட்டு நாளாகத் தெரிவு செய்யும் சாத்தியமிருக்கின்றது. அதனால் தான் அதைக் கங்கையில் மூழ்கிச் சூரியனை வணங்கும் நாளாகத் தெரிவு செய்தனர் என நினைக்கின்றேன். அது அப்படியே தென்நாட்டுக்கு நகர்ந்து எமக்குத் தைப்பொங்கலாக மாறி இருக்க வேண்டும். எல்லா சம்பிர்தாயங்கள் எல்லாமே கிரந்தமொழியாலும், பண்பாலும் அடிபட்டுப் போனபிற்பாடு, தைப்பொங்கல் மட்டும் புராணக்கதை இல்லாமல் தமிழர் பண்பாடாகத் தனித்து இருக்கின்றது என்பது ஏற்றுக்கொள்ளும் வண்ணம் இல்லை.

இதில் சோழரை இழுத்துக் கதைப்பதில் சின்ன கூழ்ச்சி உள்ளதாகவே நினைக்கின்றேன். சிலப்பதிகராத்தில் இந்திரத் திருவிழா பற்றியோ சொல்லப்பட்டிருப்பதாலும், அது பாண்டியரை மையமாக கொண்டிருப்பதாலும் சோழர்களின் பண்டிகை எனத் தைப்பொங்கலை நிறுவச் சூழ்ச்சி நடப்பது போன்றே உணர்கின்றேன்

60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான்!

"கிருஷ்ணனுக்கும் நாரதருக்கும் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள் தான் 60 ஆண்டுகளின் பெயர்கள்" என்று அவர்கள் கூறும் கூற்றை எந்த மானமுள்ள தமிழனும் ஏற்றுகொள்ள முடியாது.


தமிழ் மரபில் & இலக்கியங்களில்..... மிகச் சிறப்பாக/ அதிகமாகப் பேசப்படும் மாதம் 
= தை! = "தைஇத் திங்கள்"

ஒரு ஆண்டு, ஜோதிட அடிப்படையில் தான் துவங்கணும்.... மேஷம் புகும் போது தான் துவங்கணும்
= இதுக்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை!
எனவே சித்திரையே = தமிழ் ஆண்டின் முதல் நாள் என்பதற்கும் கிஞ்சித்தும் தரவுகள் இல்லை!

 செஞ்ஞாயிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப்

பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்
வளிதிரி தரு திசையும்
வறிது நிலைஇய காயமு மென்றிவை
சென்றளந் தறிந்தோர் போல வென்றும
இனைத் தென்போரு முளரே

என்ற பாடலில் புறநானூற்றுப் (30) புலவர் உறையூர் முதுக்கண்ணனார் கூறுகிறார்.

சூரியன் எப்படிச் செல்கின்றது, சூரியனின் இயக்கம் எத்தகையது? அச்சூரியனை சுற்றியிழுக்கும் மண்டிலம் எத்தகையது? எதையும் தாங்காமல் தானாக நிற்கும் வானம் எவ்வாறானது? காற்றின் திசை என்ன? பூமிப்பந்தில் இயக்கம் எவ்வாறு அமைந்துள்ளது? இது போன்ற ஆய்வுகளில் ஈடுபட்டு விடை கண்ட அறிஞர்கள் உள்ளதை தமிழ்ச் சமூகத்தில் அடையாளம் காட்டுகிறார்

சித்திரைப் புத்தாண்டு புராண வரலாறு

தமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என நம்பவைக்கப்பட்டது. மதச்சார்பு செய்யப்பட்டுப் புராணங்களில் இணைக்கப்பட்டது. மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கடவுளர்களின் பெயர்களோடு தொடர்புபடுத்தி மதநூல்களில் ஏற்றப்பட்டது.
அவ்வகையில், புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார்.

அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.

ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் (நாயாய்) அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார்.

'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா? காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்"' என வேண்டி நின்றார்.

பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார்.

அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும்.

பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான ""சுக்கில"" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றக் கொண்டுவந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை. வரலாற்றில் மாபெரும் சருக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது.

செந்நீர் சுடரிய ஊழியம் பனியொடு
தண்பெயர்த் தலைஇய ஊழியம் (பரி – 2)

கதிரவனிடமிருந்து தெறித்து விழுந்த உலகம் நெருப்பாக இருந்து பின் குளிர்ந்து பனிப்படலமாக ஆகிப் பின்னர் பனி உருகி நிலப்பகுதியாகியது என்ற பூமியின் வரலாற்றை- அறிவியல் செய்தியை சுமார் 1500 ஆண்டு;களுக்கு முன் தமிழ்புலவன் பதிய வைத்துள்ளான்.

பண்டைத் தமிழர் உலகம் உருண்டை என்று அறிந்திருந்தனர். உல – உல – உலகு உலகம் என்ற சொல்லை உருவாக்கினர். ஞாலம் என்ற சொல் ஞாலுதல் - தொங்குதல் என்ற பொருளில் உலகம் ஞாலம் என்று குறிப்பிடப்பட்டது. எந்தப்பிடிப்பும் இன்றி வான்வெளியில் தொங்கி கொண்டிருப்பதால் ஞாலம் என்றனர். தமிழ் வானவியல் அறிவை விளக்கும் சொற்கள் தமிழில் குவிந்து கிடக்கின்றன.

நுண்ணியம் என்பார் அளக்கும் கோல்
கண் அல்லது இல்லை பிற (குறள் - 710 )

கண்களையே அளக்கும் கோலாகக் கையாண்டவர்களாக நுட்பமான அறிவுடையவர்கள் இருந்தார்கள் என்பதை குறள் நமக்கு தெரிவிக்கின்றது.
இவர்களை அறிவர், கணியர், வள்ளுவர் என்னும் பெயரில் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
பண்டை மக்களினத்தில் பலர் வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் சிலரே அதனைக் கூர்ந்து நோக்கினர். ஞாயிறையும் திங்களையும் விண்மீன்களையும் பற்றி நாம் பார்த்து பெற்ற பட்டறிவினால் மக்களுக்கு விளக்கினர். அவர்களின் கணிப்பு சரியாக இருந்ததினால் தமிழர்கள் அவர்களைக் கணியர்கள் என்றனர். 
செஞ்ஞாயிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்
வளிதிரி தரு திசையும்
வறிது நிலைஇய காயமு மென்றிவை
சென்றளந் தறிந்தோர் போல வென்றும
இனைத் தென்போரு முளரே

என்ற பாடலில் புறநானூற்றுப் (30) புலவர் உறையூர் முதுக்கண்ணனார் கூறுகிறார்.

சூரியன் எப்படிச் செல்கின்றது, சூரியனின் இயக்கம் எத்தகையது? அச்சூரியனை சுற்றியிழுக்கும் மண்டிலம் எத்தகையது? எதையும் தாங்காமல் தானாக நிற்கும் வானம் எவ்வாறானது? காற்றின் திசை என்ன? பூமிப்பந்தில் இயக்கம் எவ்வாறு அமைந்துள்ளது? இது போன்ற ஆய்வுகளில் ஈடுபட்டு விடை கண்ட அறிஞர்கள் உள்ளதை தமிழ்ச் சமூகத்தில் அடையாளம் காட்டுகிறார். அறிவியல் அற்புதங்களை ஆய்வு செய்த மனித குலத்தின் முன்னோடியாகத் தமிழர்கள் இருந்ததை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைத் தமிழப்;பாடல் செய்திகள் மூலம் அறியும் போது வானியலில் தமிழர்களின் பங்கு மகத்தானது என்பதை நிருபிக்கின்றது.


திங்களுக்குப்பதில் ஞாயிறு முன்வைத்த இம்மாற்றத்தை 
‘திங்களும் நாளும் முந்து கிளத்தன்ன’
என இகர வீற்று ஐகார வீற்றுப் புணர்ச்சிப் பற்றி விளக்குகையி;ல் தொல்காப்பியம் திங்கள் உடுக் கணக்கு முன்னாள் விளங்கிய நாட்காட்டி எனும் பொருள்பட குறிப்பதால் உணர முடிகின்றது.
சமய ஆதிக்கத்தில் கடைப்பிடித்த உடுஆண்டு குழப்பங்கள் பற்றி சதபதபிராமணம் தரும் குறிப்பில்
‘தெய்வங்கள் நடத்தி வந்த வேள்வியில் தங்களுக்கு பங்குதர வேண்டுமெனப் பருவங்கள் தேவர்களை அணுகி வேண்டின. தேவர்கள் அதற்கு இணங்க மறுத்து விட்டனர். இதனால் அப்பருவங்கள் அசுரர்களை அணுகி உதவிபெற்றன. அசுரர்கள் நல்ல வளம் பெற்றனர். விதைக்கும் பருவமென தேவர்கள் கருதி வந்த காலத்தில் ‘அசுரர்கள்’ பயிரை அறுத்துக் கொண்டிருந்தனர்’ என ஓவென அக்குறிப்பில் புலம்பல் தெரிவிக்கின்றது. 
ஆரியர்களால் “அசுரர்” என இழிந்துரைக்கப்பட்ட தமிழர்களின் “அறிவர்களைப்” பற்றிய குறிப்பு இருக்கு வேதத்தில் அசுரனின் மாயையாலே ஞாயிறு வெளிப்படுவதை அறிவுரையோர் தங்களின் நெஞ்சில் பொதிந்திருக்கும் அடி மனதில் அறிந்துள்ளனர். அம் முனிவர்களோ ஞாயிறு மண்டிலத்தை நோக்குகின்றனர் (ஞாயிற்றை வழிபடுமாறு) விதித்தவர்கள். அஞ்ஞாயிற்றின் கதிர் மண்டலத்தை நாடுகின்றனர் என்ற கூற்று தொல்வானியியல் அறிவு தமிழர்களுக்கு இருந்ததை சான்றாக உரைப்பதை உணர முடிகின்றது.


ஆழல் மருங்கில் வெள்ளி யோடாது 
மழைவேண்டு புலந்து மாரி நிற்ப 
- பதிற்றுப்பத்து 13.25
செவ்வாயும்இ வெள்ளியும் அருகருகே வரும் போது அந்த ஆண்டில் மழை பெய்யாது வானம் பொய்க்கும் என்பது வானியியல் மாற்றங்களால் ஏற்படும் அறிவியல் நிகழ்வு. இவ்விரு கோள்களும் இணைவதால் வான்வெளியில் வெப்பத்தாக்கமும்இ ஈர்ப்பும் அதிகம் ஏற்பட்டு மழை பொய்க்கும் என்ற உண்மையை தமிழ்க்;கணியர்களின் அறிவை பதிற்றுப்பத்து பதிவு செய்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//ஆட்டைத் திருவிழா பற்றிய விளக்கம் என்பது சில தமிழ் அறிஞர்களின் எடுகோளே தவிர என்னமும் அதற்கு பொருத்தமான விளனக்கம் கிடைத்ததா என்றால் இல்லை. //

 

இன்றைய தமிழன் தான் தன் அறிவுச்செல்வம் அத்தனையையும் தொலைத்து அடிமையாய் வாழ்கின்றானே. இருக்கின்ற ஒரு சில தமிழ் அறிஞர்களும் தங்களுக்குப் புரிகின்றதை சொன்னால் 'அறிஞர்களின் எடுகோள்' என வக்கனம் பேசுவது சரியா? அறிவுத்துறையில் எந்த சான்றும் இல்லை எனக் கூறும் தங்களின் மேன்மையான கருத்து தவறு, திரு தூயவன் அவ்ர்களே.

 

//வடசெலவு, தென்செலவினை வடிவாக உணரக்கூடியர்கள் மத்தியதரைக் கோட்டோடு இருப்பவர்கள் அல்ல. கனடா அவுஸ்ரேலியா போன்ற நாட்டினர் உணர்வது போல எங்களால் அதை உணர்ந்திருக்கமுடியாது. அதை விட இலகுவாக உணரக்கூடியது என்னவெனில் சூரியன் மத்தியகோட்டுக்கு வரும்நாளாகத் தான் இருக்கும்.//

 

சேர, சோழ, பாண்டியர்கள் என்னும் அத்தனை அரசர்களும் இதனை மிகத் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். கனடா, ஆஸ்திரேலியா நாட்டவரும் ஒருவேளை உணர்ந்திருக்கலாம். மத்திய கோடு என்பதே கற்பனையான கோடு. அதற்கும் கால மாற்றங்களுக்கும் உள்ள தொடர்பை விளக்குவீர்களா? ஆனால் வட, தென் செலவுகள் நம் பருவத்தில் மாற்றம் விளைவிப்பன. எவரும் சோதித்துக் கொள்ளலாம். அதுதான் தமிழனின் பரந்து பட்ட அறிவு. இது தமிழனுக்கு மட்டுமல்ல, வடவருக்கு மட்டுமல்ல முழு உலகிற்கானது. இன்றிலிருந்து 2500 முதம் 3000 ஆண்டுகளுக்கு முன் வட இமயமலை வரை பேசப்பட்டது தமிழ்தானே. உலகின் தொழில் மொழியாக இருந்தது தமிழ்தானே. வரலாறு உண்டு. திரிபுகள் உண்மையாகா. வாய்மையே வெல்லும்.

//வடஇந்தியர்கள் தை மாதத்தில் சூரியனைக் காண்பது அரிது என்பதால் அவர்களை மகர சங்கராந்தியைச் சூரியவழிபாட்டு நாளாகத் தெரிவு செய்யும் சாத்தியமிருக்கின்றது. அதனால் தான் அதைக் கங்கையில் மூழ்கிச் சூரியனை வணங்கும் நாளாகத் தெரிவு செய்தனர் என நினைக்கின்றேன். அது அப்படியே தென்நாட்டுக்கு நகர்ந்து எமக்குத் தைப்பொங்கலாக மாறி இருக்க வேண்டும்.//

 

தை பொங்கல்தான் மாறி வடக்கே போயிருக்கிறது என்பதை எங்கு வந்தாலும் நிருபிக்க முடியும்.

 

//எல்லா சம்பிர்தாயங்கள் எல்லாமே கிரந்தமொழியாலும், பண்பாலும் அடிபட்டுப் போனபிற்பாடு, தைப்பொங்கல் மட்டும் புராணக்கதை இல்லாமல் தமிழர் பண்பாடாகத் தனித்து இருக்கின்றது என்பது ஏற்றுக்கொள்ளும் வண்ணம் இல்லை.//

 

பொங்கல் கொண்டாடுவது இன்றும் தமிழ் பண்பாடுதானே. அதற்கு உண்டான புராணக்கதை இருந்தால் சொல்லுங்களேன். அப்படி ஒன்று இருந்தால் அது முட்டாள்தனமான இடைச்செருகல். ஆனால் அதனையும் தாண்டி, பொங்கல் காலத்தில் இருக்கும் சூரிய, சந்திர, விண்மீன் கள் அந்த ஆண்டின் பருவ மாற்றத்திற்கு அச்சாரமானது என்பதுதான் மிக முக்கிய தமிழனின் அறிவு.

//இதில் சோழரை இழுத்துக் கதைப்பதில் சின்ன கூழ்ச்சி உள்ளதாகவே நினைக்கின்றேன். சிலப்பதிகராத்தில் இந்திரத் திருவிழா பற்றியோ சொல்லப்பட்டிருப்பதாலும், அது பாண்டியரை மையமாக கொண்டிருப்பதாலும் சோழர்களின் பண்டிகை எனத் தைப்பொங்கலை நிறுவச் சூழ்ச்சி நடப்பது போன்றே உணர்கின்றேன்//

 

சோழர் மட்டுமல்ல, பாண்டியனும், சேரனும் இதனைத் தெள்ளத் தெளிவாக அறிந்து வைத்து இருந்தனர். சூழ்ச்சி உள்ளதாக கதைவிட்டு மன்னர்களிடையே, மக்களிடையே நம்பிக்கையை குலைத்துத்தான் தங்கள் வாழ்வை நடத்தும்  ஈனர்களின் ஈனத்தனத்தினாலேதான் இன்று தமிழர்கள் அடிமைகளாக வாழ்கிறார்கள். சூழ்ச்சி இருந்தால் அது என்ன என்பதை தெளிவாக வையுங்கள். உண்மையே வெல்லும். எது உண்மை எது தவறு என்பதை மக்கள் உணர்வார்கள். காலம் பதில் சொல்லும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.