Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் பிரபாகரனின் பெயரை தணிக்கை செய்த நீயா நானா கோபிநாத்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Thirumurugan Gandhi

3 மணி நேரம் முன்பு

நேற்றைய நீயா-நானா நிகழ்வில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டிருந்தன. தோழர்.கி.வே.பொன்னைய்யனின் வாதங்கள் ஏனோ பதியப்படாமல் போனது வருத்தமளிக்கிறது. மிக நீண்ட நேரம் பதியப்பட்ட இந்த நிகழ்வு ஒளிபரப்பின் போது சுருக்கப்பட்ட காரணம் என்றாலும், குமரேசன்.அசோக் மற்றும் இன்னும் பிற நண்பர்களின் விரிவான வாதங்கள் பதிந்திருந்தால் விவாதத்தினை இன்னும் சிறப்பாக கண்டிருக்க முடியும். கி.வே பொன்னையனும்-குமரேசன் அசோக்கும் பல தகவல்களை விவாதித்திருந்தார்கள்.. எப்பொழுதும் இருப்பதைப் போல ஒன்றுக்கொன்று எதிர் நிலையில் இருக்கும் கருத்துக்களைப் போன்றதல்ல நேற்றய தலைப்பு. இதனாலேயே பலவிடயங்களை விரிவாக பலரால் பேச முடியாமல் போயிற்று

அதே போல தமிழீழ தேசியத் தலைவர் தோழர். பிரபாகரனைப்பற்றி பதிந்த கருத்துக்களும் நீக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு பிடித்த பேச்சாளர்களாக மூவரை குறிப்பிட்டிருந்தேன் 1. மால்கம் எக்ஸ், 2. தந்தைப் பெரியார், 3. தலைவர்.தோழர்.பிரபாகரன். இதில் மூன்றாவது நீக்கபப்ட்டிருந்தது. கி.வே பொன்னைய்யனும் இதே பதிவினை செய்திருந்தார். தொலைக்காட்சிகளில் செய்யப்படும் தணிக்கை வருத்தத்திற்குரியது. எத்தனையோ ஆபாசக் காட்சிகளை, குடும்ப வன்முறைக் காட்சிகளை, தணிக்கை செய்யாத தொலைக்காட்சிகள் ”பிரபாகரனின்” பெயரை உடனடியாக தணிக்கை செய்வதை காணமுடிகிறது.. இது முதல்முறைகிடையாது... நேரடி ஒளிபரப்பினைத் தவிர்த்து வேறு எங்கும் முழுமையாக பேசிவிடமுடிவதில்லை...

தோழர். பிரபாகரனை அவரது அரசியல் நுணுக்கத்திற்காகவும், சர்வதேச அரசியலில் ஏற்படுத்திய தாக்கத்தினைப் பற்றியும், ‘டி ஃபேக்டோ’ நாடாக “சுயாட்சி பிரதேசமாக இருந்த தமிழீழத்தின்” ஆட்சியைப் பற்றியும் விரிவாக பேசும் காலம் வரும். அதனை உருவாக்குவது நம் அனைவரின் கடமை.

வணிகப் பொருளாக ‘அடையாளமாக பயன்படுத்தி’ வணிகத்தினை பெருக்கமட்டுமே பயன்பட்ட நிகழ்வுகள் மாறி நேர்மையான விவாத களம் அமைக்கப்படவேண்டிய நெருக்கடியை உருவாக்கவேண்டும்,. .. தொடர்ச்சியான போராட்டங்களின் ஊடாகவே இதனை சாத்தியப்படுத்த முடியும்...

Fb

  • கருத்துக்கள உறவுகள்

நீயா நானா கோபிநாத் அவர்கள் ஒரு அப்பட்டமான ஊடகவியாபாரி, இவர் பல சந்தர்ப்பங்களில் இலங்கை தொடர்பான கருத்துக்களை விவாதமேடைகளில் தவிர்த்திருக்கிறார் என நான் அறிந்துள்ளேன். இவரிடமிருந்து மேலதிகமாக எதாவது விடையத்தை எதிர்பார்த்தால் அது எமது மடமை. திருமுருகன் அவர்கள் இவர்களிடம் சிக்கிக்கொள்ளாது விலகி இருப்பதே மிகவும் நல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோபிநாத்தை வெளி நாடுகளுக்கு அழைப்பதை ஈழ தமிழர்கள் நிறுத்த வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

சுயநலவாதிகளுக்கு எப்போதும் பொதுநலம் கொண்ட  தேசியத்தலைவரை பிடிப்பதில்லை,

 

கோபிநாத் ஒரு பெரிய தற்பெருமை கொண்ட தலைக்கனம் பிடித்த சுயநலவாதி 

இப்படியான ஊடக பிரபலங்களுக்கு ஈழத்தமிழனின்  பிரபலம் ,அவர்களின் மொழி மேலான பற்று .வித்தியாசமான சிந்தனைகள் பிடிப்பதில்லை.

 

தமிழக ஊடகங்கள்   அனைத்திலும் இதே நிலை தான்.

 

இந்த  நிகழ்ச்சியை நானும்  பார்த்தேன்   கருத்துக்களை சொன்னவர்கள்  உலக உதாரணங்கள் எல்லாம் சொன்னார்கள்   ஏக்கமாய் இருந்தது இவ்வளவு எல்லாம் பேசுகிறார்களே   30 வருட போராட்ட வாழ்வில் வந்த ஈழத்தமிழர்  அல்லது அதன் தலைவன் பற்றி ஒருவர் கூட  கருத்துக்களை பரிமாறவில்லையே என்று.

தன் இனத்தையே கொச்சைப்படுத்தும் அநாகரிகமான தணிக்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.