Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய தமிழர் பேரவையின் கூட்டத்தில் சிறிலங்கா தூதுவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Chris-Nonis.jpg

வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவது தொடர்பாக, லண்டனில் இன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மாநாட்டில், சிறிலங்கா தூதுவரும் பங்கேற்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவது தொடர்பாக, அனைத்துலக சமூகத்துக்கு விளக்கமளிக்கும் நோக்கில், தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவும், பிரித்தானியத் தமிழர் பேரவையும் இணைந்து பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், இன்று இந்த மாநாட்டை நடத்த ஒழுங்கு செய்துள்ளன. 

இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் லண்டன் சென்றுள்ளனர். 

இந்த மாநாட்டில், லண்டனில் உள்ள சிறிலங்கா தூதுவர் கிறிஸ் நொனிசும் பங்கேற்பார் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளார். 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மானத்தில், தமிழ் மக்களின் காணி அபகரிப்பு விவகாரமும் முக்கிய அம்சமாக இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140131109873

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சிவசப்படாமல் நல்ல ஆங்கிலத்தில் பேசக்கூடியவர்கள் முன்னிலை எடுக்கவேண்டும். புலிகளை இழுத்து விவாதத்தை திசைதிருப்ப முயல்வார்கள். அழிந்து ஐந்து வருடமானவர்களைப் பற்றி பேசிப் பிரியோசனம் இல்லை என்று வாதிட வேண்டும்.

சுமந்திரன் இதற்க்கு தோதானவர் அல்ல. சிறிதரன், சுரேஸ்தான் வரவேண்டும்.


ஆனாலும் கிறிஸ் நொறிசின் எந்த பிரட்டும் அமெரிக்காவின் மனத்தை இலகுவில் மாற்றாது. பிரேரணைக்கு இருக்கும் ஒரேஒரு பெரிய ஆபத்து இந்திய காங்கிரஸ்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்  வருவதனூடாக

கூட்டமைப்பினர் அடக்கி  வாசிக்கவேண்டிவரும்

அதுவே குறியாக  இருக்கலாம்...... :(  :(  :(

அவர் விட்ட பெரிய ஜில்மால் CNNல்த்தான். அவரின் வாத்தாட்டம் சமாதான அரசியல் நியாய அரசியலை விட முக்கியமானது என்றது போல் சொன்னார். இது அந்த நேரத்தில் CHOGM ல் நாடுகளை ஏமாற்ற SA TRC பற்றிய புதிய புரளி அரசால் கிளப்பப்பட்டிருந்த நேரம். CHOGM முடிய அரசு அதை மெல்ல மெல்ல சாகவிட்டுவிட்டது. வாழ் நாள் முழுக்க தமிழருக்கு எதிராக பிரசாரம் செய்த CNN க்கு சொல்ல எதுவும் இருக்காத்தால் வாய்க்குள் புட்டுக்கட்டி அத்க்கிய குழந்தை போல திரு திரு என விழித்தார்கள். 

 

அரசு தென்னாபிரிக்காவை வளைப்பது  சிறுபான்மை வெள்ளையர் தென்னாபிரிக்க வழங்களை மடக்கி தாம் வைத்திருந்த்தால் கறுப்பர் புரட்சி செய்து பெற்றுக்கொண்டது போல் தமிழ வளங்களை மடக்கி வைத்திருந்த போது சிங்களவர்கள் போராடி விடுவித்த சண்டைதான் 2009 ஆகவே இனி SA TRC கொண்டு வந்து கறுப்பர்கள் வெள்ளையர்களை மன்னித்தது போல போராடிய தமிழர்களை மன்னித்து விடும் படி தென்னாபிரிக்காவை கேடக வைக்கவே. இல்லையேல் தான் அமெரிக்கா, சீனா, பிருத்தானியா, இந்தியா எல்லோருக்கும் டிமிக்கி கொடுப்பாத்தாக மார்தட்டும் சிங்களவன் அரசியல் ஆலோசனைக்கு ஆபிரிக்க நாடு ஒன்றிடம் போகும் தவறை விடுவத்தாக உளநாட்டில் காட்டிகொள்ளமாட்டான்.

 

எந்த தமிழனும் CNN மாதிரி சோடை போகமாட்டார்கள். ஆனால் சுமந்திரன், "இது இன அழிப்பல்ல,  முஸ்லீங்களை தமிழ் நாட்டை விட்டு ஓட்டி இன சுத்திகாரம் செய்தார்கள்" என்றெல்லாம் பேக்கதை பேசும் போது இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அது யானை தன் தலையில் மண் அள்ளிப்போடுவதாகும். மற்றும் கிறிஸ் நொறிஸ் இந்த முறை நன்றாக படித்து, அதன் பின்னர் அதனால் மகிந்தாவிடமும் வாங்கும் சந்தர்ப்பம் இருக்கு.இது அண்மைய அமெரிக்க பயணத்துக்கு பிறகு லலித் வீரதுங்காவுக்கும் ந்டந்தது.

இம்மாநாட்டை தொடர்ந்து இடம்பெறும் கூட்டத்தில் மலேசியாவின் பினாங் மாநில துணை முதல்வர் ராமசாமி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா அரியநேந்திரன் சுரேஷ் பிரமேச்சந்திரன் சிறிதரன் செல்வம் அடைக்கலநாதன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட இலங்கை இந்தியாவிலிருந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர். - See more at:

 

இப்போதைக்கு சுமந்திரனின் பெயர் இல்லை.  நன்றி

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=135553

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.