Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் அரசியல் மீதான இந்தியாவின் செல்வாக்கு படிப்படியாக குறைவடைந்து செல்கிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அரசியல் மீதான இந்தியாவின் செல்வாக்கு படிப்படியாக குறைவடைந்து செல்கிறதா?

யதீந்திரா

சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் 65வது குடியரசுதின வைபவம் வழமைபோல் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதேபோன்று, இந்திய துணைத் தூதரகங்கள் அமைந்துள்ள யாழ்ப்பாணம், கண்டி மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலும் மேற்படி நிகழ்வு வழமைபோல் இடம்பெற்றிருந்தன. கொழும்பு நிகழ்வில் பேசிய இந்தியத் தூதுவர், இலங்கையிலுள்ள அனைத்து தரப்புக்களின் கூட்டு அணுகுமுறையே நேர்மையான நல்லிணக்கத்திற்கும், அரசியல் தீர்வுக்கும் வழிவகுக்கும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். மேலும், உறுதிப்பாட்டோடும், பங்குதாரர்கள் என்ற உணர்வோடும், பரபஸ்பர நல்லிணக்கப்பாட்டோடும் இருதரப்புக்களும் செயற்பட வேண்டும் என்றும், இதனையே இந்தியா விரும்புகிறது என்றும் தெரிவித்திருக்கின்றார். இங்கு குறித்துக்கொள்ள வேண்டியதொரு முக்கியமான விடயம், மேற்படி குடியரசு தின வைபவத்தின் போது வழமைக்கு மாறானதொரு விடயமும் அவதானிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தவிர்ந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் மேற்படி நிகழ்வில் பங்குகொண்டிருக்கவில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி இந்கிழ்வில் பங்குகொண்டிருந்தாலும், அவர் தற்போது கூட்டமைப்பின் ஓர் அங்கம் என்று கணிப்பிடக்கூடிய நிலையில் இல்லை. கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பிறிதொரு கட்சியான புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், யாழ்பாணத்தில் நடைபெற்ற குடியரசுதின வைபவத்தில் பங்குகொண்டிருக்கின்றார். எனவே இந்த அடிப்படையில் நோக்கினால், கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் இரண்டு கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே இந்நிகழ்வில் பங்குகொண்டிருக்கின்றனர். ஆனால், கூட்டமைப்பின் பிரதான அரசியல் கட்சியும், கூட்டமைப்பின் சட்டபூர்வ தகுதிப்பாட்டை நிர்ணயம் செய்துவரும் கட்சியுமான இலங்கைத் தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவம் செய்துவரும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் மேற்படி நிகழ்வில் பங்குகொண்டிருக்கவில்லை. இது தவிர்க்க முடியாமல் நிகழ்ந்ததா அல்லது ஏதாவது செய்தியொன்றின் வெளிப்பாடா?

குறித்த குடியரசு தினம் இடம்பெற்ற கடந்த 6ஆம் திகதி, தமிழரசு கட்சியின் மத்திய குழுவிற்கான கூட்டமொன்று திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது. இது பிற்போட முடியாதளவிற்கான ஒரு முக்கிய கூட்டமென்று சொல்லிவிட முடியாது. இந்தியாவின் குடியரசு தினத்தை முக்கியமான ஒன்றாக கருதியிருப்பின், இது பிற்போட முடியாதளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த நிழ்வும் அல்ல. மேலும் குறித்த தினத்தில் இந்தியாவின் குடியரசு தினம் இடம்பெறும் என்பதை ஏலவே அனைவரும் அறிந்தே இருந்தினர். எனவே இதன் மூலம் ஏதேனும் செய்தியொன்றை மறைமுகமாக கூட்டமைப்பு வெளிப்படுத்த முற்படுகின்றதா?

சுதந்திரத்திற்குப் பிற்பட்ட இலங்கையின் உள்விவகாரங்களில் நேரடியாக தலையிட்ட ஒரேயொரு நாடு இந்தியாவாகும். இதன் மூலம், இலங்கை நிலைமைகளைப் பொறுத்தவரையில், இந்தியா என்பது எந்தவொரு தரப்பினராலும் தவிர்த்துச் செல்ல முடியாதவொரு சக்தியென்பது நிரூபணமான ஒன்று. பிரபாகரன் - பிரேமதாச உடன்பாட்டின் மூலமான இந்திய படைகள் வெளியேற்றம், பின்னர் ராஜீவ் காந்தியின் படுகொலை ஆகியவற்றால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால், இந்தியா யுத்தகால இலங்கையின் விவகாரங்களில் அதிகம் தலையிடாதிருந்த போதிலும் கூட, இந்தியாவுடனான பரிசீலனையின்றி எந்தவொரு விடயமும் நடந்துவிடவில்லை. பிரபா - ரணில் உடன்பாட்டின் போது, வெளித்தோற்றத்தில் இந்தியா மௌனமாக இருந்தது போன்று தெரிந்தாலும் கூட, உண்மையில் போர்நிறுத்த காலத்தின் ஒவ்வொரு நகர்வுகளும் இந்தியாவின் மேற்பார்வையிலேயே நிகழ்ந்தேறியது எனலாம். ஆரம்பத்தில் இரகசியம் போல் பேணப்பட்ட மேற்படி இந்தியாவின் பங்களிப்பு, சமாதான முன்னெடுப்புக்கள் மீதான நோர்வேயின் மீள்பார்வை அறிக்கை வெளியான பின்னர் பரகசியமானது.

சமாதான காலத்தின் ஒவ்வொரு நகர்வுகளும் இந்தியாவிற்கு தெரிவிக்கப்பட்டே மேற்கொள்ளப்பட்டன. இந்தியா தெற்காசியாவின் பிராந்திய சக்தி என்னும் வகையில், இலங்கையில் ஆர்வம் காட்டும் சீனா தவிர்ந்த எந்தவொரு தரப்பும், முதலில் இந்தியாவின் ஆலோசனையையே செவிமடுக்கும். இதுவே இலங்கை தொடர்பான தெற்காசிய யதார்த்தம். இது புவிசார் அரசியல் குறித்து அவதானமுள்ள அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயமும் கூட. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதனை மற்றவர்களைக் காட்டிலும் நன்கறியும். விடுதலைப் புலிகள் தமிழர் அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின்புலத்தில், தமிழர் அரசியலை தீர்வு நோக்கி முன்கொண்டுசெல்ல வேண்டிய பொறுப்பு கூட்டமைப்பின் வசமானது. புலிகளுக்கு பின்னர் உருப்பெற்ற ஒரேயோரு அரசியல் ஸ்தாபனமாக நோக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப் புலிகளால் தொடர்பறுந்துபோன இந்திய - தமிழர் அரசியல் உறவை உடனடியாகவே புதுப்பித்துக் கொண்டது. அதுவரை விடுதலைப் புலிகளின் எதிர்ப்பால், மாகாணசபை குறித்து வாய்திறக்காத கூட்டமைப்பின் தலைவர்கள், மாகாணசபை முறைமையை ஓர் அரசியல் தளமாக பயன்படுத்திக் கொள்ளும் முடிவை வந்தடைந்தனர்.

கூட்டமைப்பின் மாகாணசபையை ஏற்றுக்கொண்டு பயணிப்பது என்னும் முடிவானது, யதார்த்த பூர்வமானதும், புத்திசாதுர்யமானதுமான முடிவென்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. மாகாணசபை முறைமையை நோக்கி தமிழர் தரப்பு திரும்புவதானது, தங்கள் மீதான இந்தியாவின் அழுத்தத்தை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கிவிடக் கூடுமென்னும் அச்சத்தின் காரணமாகவே, வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை முடிந்தவரை கொழும்பு பிற்போட்டு வந்தது. தெற்கின் அடிப்படைவாத சக்திகள் வடக்கு மாகாணசபைக்கு எதிராக மேற்கொண்டு வந்த பிரச்சாரங்களும், மேற்படி அரசாங்கத்தின் முடிவிற்கு காரணமாகும். ஆனாலும் இந்தியாவின் தொடர்ச்சியான அழுத்தங்களால், இறுதியில் வடக்கு மாகாணசபை தேர்தலை நடத்துவதை தொடர்ந்தும் பிற்போட முடியாத நிலைமை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. இந்தியாவின் வெளிப்பாடானது, ஆரம்பத்திலிருந்தே பரஸ்பர விட்டுக்கொடுப்புடன் கூடிய ஓர் அணுகுமுறையின் மூலமே பிரச்சனைகள் அணுகப்பட வேண்டும் என்பதாகவே இருந்தது. கூட்டமைப்பின் முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி ராஜபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்தமையானது, அவ்வாறானதொரு எதிர்பார்ப்புடன் ஒத்துப்போவதாகவே அமைந்திருந்தது. ஆனால் மாகாண சபையை பொறுப்பேற்ற பின்புலத்தில், வடக்கு நிர்வாகத்தின்போது இடம்பெற்ற விடயங்களானவை, கூட்டமைப்பு இந்திய அணுகுமுறைக்கு அமைவாக பயணிக்கும் என்னும் எதிர்பார்ப்பை பெரியளவில் வெளிப்படுத்தி நிற்கவில்லை.

குறிப்பாக வடக்கு மாகாணசபையை ஓர் அரச எதிர்ப்புக்கான பிரச்சாரக் களமாக பயன்படுத்திக்கொள்ளும் உபாயமானது, இந்தியாவைப் பொறுத்தவரையில், விருப்புக்குரிய ஒன்றாக இருந்திருக்காது. சில தினங்களுக்கு முன்னர், போர்க் குற்றங்கள் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி போன்றவை தொடர்பான வட மாகாணசபைத் தீர்மானங்கள், நிட்சயமாக இந்தியாவினால் மகிழ்சியுடன் நோக்கப்பட்டிருக்காது. முள்ளிவாய்க்கால் தொடர்பில் தமிழ் நாட்டில் நிறுவப்பட்டிருந்த, 'முள்ளிவாய்க்கால் முற்றம்' கூட இடிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த இடத்தில் நினைவுகொள்ளலாம்.

இந்த பின்புலத்தில் நோக்கினால், கூட்டமைப்பின் சமீபகால அணுகுமுறைக்கும் இந்தியாவின் எதிர்பார்ப்புக்கும் இடையில் ஒரு விரிசல் தோன்றியிருப்பதான ஒரு தோற்றப்பாடே தெரிகிறது. இது குறித்து இந்திய தூதரக அதிகாரிகள், தங்கள் அதிருப்திகளை நாசுக்காக வெளிப்படுத்தியதாகவும் தகவலுண்டு. இந்த பின்புலத்தில் நோக்கினால், ஆரம்பத்தில் புலிகளால் தொடர்பறுந்து போன இந்திய-தமிழர் அரசியலுக்கு மீண்டும் புத்துயிரளித்த கூட்டமைப்பு, தொடர்ந்தும் இந்தியாவின் செல்வாக்கெல்லைக்குள் மட்டுமே இருப்பது பொருத்தமல்ல என்று கருதுகிறதா? குறிப்பாக, இலங்கையின் மீதான அழுத்தங்களை அமெரிக்கா தொடர்ந்துவரும் நிலையில், இந்தியாவை மட்டுமே நம்பி நிற்பது பயனற்ற ஒன்றென்று கூட்டமைப்பு கருதுகின்றதா? ஒன்றின் முக்கியத்தும் குறைந்து செல்லும் போதுதான் அதன் மீதான ஈடுபாடும் குறைவடைந்து செல்லும். கூட்டமைப்பின் பிரதான கட்சியும், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டதுமான தமிழரசு கட்சி, குடியரசு தினமன்று அதன் மத்திய குழுக் கூட்டத்தை நடத்தியிருப்பதை நான் மேலே குறிப்பிட்டவாறான, சாதாரணமான ஒன்றின் மீதான ஈடுபாடு குறைவடைந்து செல்லும் என்னும் எடுகோளுடன் ஒப்பிட முடியுமா? அல்லது இது தற்செயலாக நடந்துவிட்ட ஒன்றுதானா?

குறிப்பாக மாகாணசபையை முறைமையை அரசாங்கத்துடன் ஊடாடுவதற்கான ஒரு களமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்னும் எதிர்பார்பை இந்தியா கொண்டிருப்பதற்கு மாற்றான ஒரு நிலைப்பாட்டையே அமெரிக்கா வெளிப்படுத்தி வருகின்றது. அமெரிக்காவினால் எதிர்வரும் மார்ச்சிலும் இலங்கை மீதான ஒரு பிரேரணை கொண்டுவரப்படும் என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலேயே, வடக்கு மாகாணசபையில் போர்க் குற்றங்கள் தொடர்பான தீர்மானமொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தெற்கின் அடிப்படைவாத சக்திகள், வடக்கின் மாகாணசபை ஆட்சியை, சிங்கள மக்களுக்கு எதிரான ஒன்றாக சித்தரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இது மேலும் வடக்கு மாகாண நிர்வாகத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தலாம். யுத்ததிற்கு பின்னரான சூழலில் பரஸ்பர புரிதலை நோக்கிப் பயணிப்பதற்கு மாற்றாக, இனத்துவ விரிசலை ஏற்படுத்துவதற்கான ஒரு களமாக மாகாணசபையை மாற்றும் உபாயமானது, இந்தியாவினால் எவ்வாறு நோக்கப்படும்? வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் நிட்சயமாக புதுடில்லியால் மகிழ்சியுடன் நோக்கப்படமாட்டாது.

எனவே இந்த பின்புலத்தில் நோக்கினால், கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகளானவை இந்தியாவின் விருப்பங்களுடன் ஒத்துப்போவதிலும் பார்க்க, அமெரிக்க நகர்வுகளுடன்தான் அதிகம் ஒத்துப் போவதாக தெரிகிறது. இத்தகையதொரு பின்னணியில், இந்தியா மட்டும் நமக்குப் போதாது என்னும் மனோநிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இந்தக் கணிப்பு சரியாக இருக்குமிடத்து, கூட்டமைப்பினர் மத்தியில் இந்தியா குறித்த கரிசனை குறைவடைந்து செல்லுகிறது என்று குறிப்பிடுவதும் சரியானதாகவே அமையும். ஆனால் இது குறித்து இந்தியா பெரியளவில் அலட்டிக்கொள்ள மாட்டாது. ஒரு சிறிய புன்னகையுடன் கூட்டமைப்பினரை நோக்கலாம். ஏனெனில் எங்கு சென்றாலும் இறுதியில் புதுடில்லியின் கதவைத்தானே தட்டியாக வேண்டும்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=7c5b0b09-5e7c-4c84-814e-f94b29b62da2

தமிழர் அரசியல் மீதான இந்தியாவின் செல்வாக்கு படிப்படியாக குறைவடைந்து செல்கிறதா?

யதீந்திரா

குறித்த குடியரசு தினம் இடம்பெற்ற கடந்த 6ஆம் திகதி, தமிழரசு கட்சியின் மத்திய குழுவிற்கான கூட்டமொன்று திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது. இது பிற்போட முடியாதளவிற்கான ஒரு முக்கிய கூட்டமென்று சொல்லிவிட முடியாது. இந்தியாவின் குடியரசு தினத்தை முக்கியமான ஒன்றாக கருதியிருப்பின், இது பிற்போட முடியாதளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த நிழ்வும் அல்ல. மேலும் குறித்த தினத்தில் இந்தியாவின் குடியரசு தினம் இடம்பெறும் என்பதை ஏலவே அனைவரும் அறிந்தே இருந்தினர். எனவே இதன் மூலம் ஏதேனும் செய்தியொன்றை மறைமுகமாக கூட்டமைப்பு வெளிப்படுத்த முற்படுகின்றதா?

குறிப்பாக வடக்கு மாகாணசபையை ஓர் அரச எதிர்ப்புக்கான பிரச்சாரக் களமாக பயன்படுத்திக்கொள்ளும் உபாயமானது, இந்தியாவைப் பொறுத்தவரையில், விருப்புக்குரிய ஒன்றாக இருந்திருக்காது. சில தினங்களுக்கு முன்னர், போர்க் குற்றங்கள் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி போன்றவை தொடர்பான வட மாகாணசபைத் தீர்மானங்கள், நிட்சயமாக இந்தியாவினால் மகிழ்சியுடன் நோக்கப்பட்டிருக்காது. முள்ளிவாய்க்கால் தொடர்பில் தமிழ் நாட்டில் நிறுவப்பட்டிருந்த, 'முள்ளிவாய்க்கால் முற்றம்' கூட இடிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த இடத்தில் நினைவுகொள்ளலாம்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=7c5b0b09-5e7c-4c84-814e-f94b29b62da2

 

இந்தியாவை மட்டும் நம்பிக்கை கொள்ளாது கூட்டமைப்பு மேற்கு நாடுகளிடமும் நட்புறவை வளரத்து கொள்வதே ராஜதந்திரம். கூட்டமைப்பு இந்தியாவை மட்டும் நம்ப வேண்டும் என்ற தொனிப்பட கருத்து தெரிவிக்கும் ஜதீந்திரா இறந்த தனது சொந்த மக்களுக்கு ஒரு நினைவு சின்னம் வைப்பதையே இந்தியா மகிழ்ச்சியுடன் நோக்காது என்று குறிப்பிடுகின்றார். போரில் இறந்த மக்களுக்கு நினைவு சின்னம் வைப்பது உலகம் முழுவதும் உள்ள சாதாரண நிகழ்வு. இதை இந்தியா விரும்பாது என்று ஜதீந்திரா குறிபிடுவதன் மூலம் என்ன செய்தியை தமிழ் மக்களுக்கு கூற விளைகிறார். அந்த உரிமைகூட தமிழ் மக்களுக்கு இல்லை என்று கூறுகிறாரா? தன்னை அதிகம் தெரிந்தவராகவும் உலகம் புரிந்தவராகவும் அடிக்கடி காட்டிக்கொள்ளும் ஜதீந்திரா மேற்கு,கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தலை நகரங்களுக்கு வந்து அங்கு யுத்த்த்தில் இறந்த மக்களுக்கு உருவாக்கியுள்ள நினைவு சின்னங்களை பார்க்கவேண்டும்.

 

தமிழர்கள் தமது மக்களுக்காக நினைவு சின்னம் வைப்பதை விரும்பாத இந்தியா(ஜதீந்திராவின் கூற்றுப்படி) தமிழ் பிரதேசமெங்கும் இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவுவதை பற்றி என்ன நினைக்கிறது என்று ஜதீந்திரா எதுவும் கூறவில்லை.

 

2011 இலையுதிர் காலத்தில் இந்தியா போன கூட்டமைப்பின் பயணத்தை யத்தீந்திரா " கூட்டமைப்பு இந்தியாவின் காலடியில் விழ போய்விட்டது, இனி சம்பந்தர் கைவிலங்கு, கால் விலங்கு, வாய்விலங்குடன் வந்து , அதன் முன்னர் இந்தியாவை மகிந்தர் கேட்டதற்கமைய, பேசாமல் தெரிவுக்கு குழு என்ற சிறைக்குள் போய்விடுவார்" என்று ஆரூடம் எழுதியிருந்தார்.  சம்பந்தர் திரும்பி வந்து வாயை இறுக்கி மூடிக்கொண்டு இருந்துவிட்டார். கேட்டவர்களை "நான் யாருக்கும் எந்த வாக்குறூதியும் கொடுக்கவில்லை" என்று பாய்ந்து கடித்துவிட்டார். அவர் அப்போது தான் எடுக்கும் றிஸ்க பற்றி சற்று பட படபாக இருந்தார். ஆனால் பிளேக் கூட்டமைப்புடம் பேச ஆரம்பித்திருந்த்தார். பேச்சுவார்த்தை தொடர சொல்லி கேட்டார்.  பிளேக் பேச்சுவார்த்தையில் வருவதை தெரிவு குழுவில் விவாதித்தால் போதுமானது என்று கூட்டமைப்புக்கு கூறினார். அவருக்கு பாடம் கற்பிக்க அரசு பேச்சுவார்த்தையை மூடியது. பற்றிசியாவின் உதவியுடன் கூட்டமைப்பு அமெரிக்காவுடன் நிரந்தர தொடர்பை ஏற்படுத்திவிட்டது. 2012 ஜனவரி பொங்கலுக்கு வந்த கிருஸ்ணாவுக்கு, கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. யத்தீந்திரா அன்றிலிருந்து இனறுவரையும் இந்த விடையத்தில் எழுதி எழுதியே பார்க்கிறார், முன்னால் போகுதில்லை. 

 

CHOGM தில் தமிழ் நாட்டில் மட்டிய கங்கிரஸ் சிங்களத்துக்கு இளகவில்லை. இதனால் இந்தியவை மசியவைக்க மகிந்தா தேர்தலை நடத்தினார். யத்தீந்திர தனது பிரதிட்டையை திரும்ப ஆரம்பித்து நல்லூர்கந்தனின் மணல் வீதி எங்க்கும் தன் பொன்னான முதுகை போட்டு உருட்டினார். கூட்டமைப்பு தேர்தலுக்கு போவது அதன் வழமையான துரோகம் என்றார். நோர்வே, அமெரிக்கா போன்ற்வை  கிழக்குகாகாண  தேர்தலிலேயே கூட்டமைப்பு போட்டி போடவேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் கூட  கூட்டமைப்பு களத்தில் இறங்கி பொன்சேக்காவை ஆதரிக்கும் படி கூறியிருந்தார்கள். கூட்டமைப்பு வடக்கு தேர்தலை உதற எந்த ஒரு மயிர்கன அரசியல் இடைவெளியும் இருக்கவில்லை. பீறியட!. கூட்டமைப்பின் வெற்றி எதிர்பாராதது. அரசு மாகாணசபையை உடனே கலைக்கும் என்ற எதிர்பார்ப்பு நடக்கவில்லை. முதல் பார்வையில் சந்திர சிறியும், பதியுதினும், விஜயலக்சுமியும் இருக்கும் போது அதற்கு தேவை இருக்கவில்லை. 

 

போர்முடிந்தவுடன், பிளேக்கிடம் சென்று  நமக்கு விசாரணை வேண்டாம் மாகாணசபை தேர்தலும், ஆட்சியியும் வேண்டும் என்று கேட்ட கூட்டமைப்பு, சென்றகிழமை அந்த சபையின் உயிரையே பணயம்  வைத்து எமக்கு எதுவும் வேண்டாம் விசாரணை வேண்டும் என்று கேட்டு முடித்திருக்கிறார்கள். மாகாணசபை தனது அரசியல் அதிர்காரத்தின் மட்டதிலிருந்து பல படிகளுக்கு மேல் சென்று மீறிவிட்டது. இத்தனைக்கும் அதன் முதல்வர் உயர்நீதிமன்ற நீதியரசர். இப்படி ஒரு செய்லை கூட்டமைப்பின் நாடாளுமனற குழு செய்த்திருந்தால் கொழும்பில் வைத்து துவம் செய்திருப்பார்கள். கேவலம் சந்திரசிறி, விஜயலக்சுமியின் ஊண்று கோலாக இருக்கும் இந்த புலுனி மாகாணசபை இதை செய்துவிட்டது. மூடி வைத்த்து தொடர்ந்து சூடுகாட்டிய விஜயலக்சுமியின் சமையல் பாத்திரமான பிரஷ்ர் குக்கர் அமுக்கம் பீறி வெடித்துவிட்டது.

 

வழக்கம் போல இதிலும் மனோகனேசன் நியாயத்தை எடுத்து சொல்ல பார்க்கிறார். "அரசியல் அமைப்பின் படி வடமாகாண சபையின் அதிகாரங்களான காணி பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபை பாவிக்காதபடி ஆமியை போட்டு தடுக்கும் ஜனாதிபதியின் அரசியல் அமைப்பு மீறலைவிட்ட இந்த மீறல் பெரிதா" எனக்கேட்ட்கிறார் அவர். அவரது கேள்வி தர்மத்தின் பாற்பட்ட நல்ல அரசியல் கேள்வி. அதுவும் உண்மை, அத்துடான் அத்ற்கும் மேலேபோகத்தக்க ஜனாதிபதியின் மீறல்கள் பலவும் இருக்கு. ஆனால் UNP யின் வழக்கறிஞர் கூட்டம் வழக்கு தொடுக்கிறார்கள். வழக்கில் சிங்கள் நீதிபதி சொல்ல போகிற பதில் "ஜனாதிபதி அரசியல் அமைபை மீறீனார் என்பதால் நீங்கள் ஒருதடவை மீறிப்பார்த்தீர்களா?" என்பதுதான். வழக்கின் பின்னர் வடமாகாண சபை எங்கே இருக்கும் என்பதை கூற பல மாறிகளை கணக்கு பார்க்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு பிரதியீடாக வெளிக்கிட்ட தெரிவுக்குழு பலபாதைகளூடாக சென்றூ, 13 திருத்தத்தை நீக்க வந்த சபையாக மாறி, வடமாகாணசபை தேர்தலையை நிகழ்த்திவைத்துவிட்டு இன்று புதருக்குள் மறைந்திருக்கும் புடையன் பாம்பாக மாறி இருக்கிறது. அந்த நிலையில் இந்த மாகாணபையின் எதிர் காலத்தை பற்றி என்ன சொல்ல முடியும்? 

 

இபோதுதான் யத்தீந்திரா "கூட்டமைப்பு இந்தியாவிலிருந்து விலகிறதா?" என்று கேட்கிறார். யத்தீந்திரா மட்டும்தான் புளிச்ச மாவை செய்ய தொழில் இல்லாததால் மணக்க மணக்க அதை வைத்து திரும்ப திருமப அரைக்கிறார். இன்று விக்கினேஸ்வரன் தான் "மாகாண சபை உறுப்பினர்களுக்கு அரிவரி வகுப்பு வாத்தியல்ல. அவர்களுக்கென்று ஒரு விருப்பு இருக்கு" என்றிருக்கிறார். இதை சபந்தர் பாராளுமனற உறுபினர்க்காக சொல்லும் காலம் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் பிழைப்பு வாதி யத்தீந்திரா தலைப்பை மாற்றி போட்டு பிழைப்பை முன்னால் எடுப்பார். அதில் சந்தேகம் இல்லை.


புலிகளுக்கு பின்னர் உருப்பெற்ற ஒரேயோரு அரசியல் ஸ்தாபனமாக நோக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப் புலிகளால் தொடர்பறுந்துபோன இந்திய - தமிழர் அரசியல் உறவை உடனடியாகவே புதுப்பித்துக் கொண்டது. அதுவரை விடுதலைப் புலிகளின் எதிர்ப்பால், மாகாணசபை குறித்து வாய்திறக்காத கூட்டமைப்பின் தலைவர்கள், மாகாணசபை முறைமையை ஓர் அரசியல் தளமாக பயன்படுத்திக் கொள்ளும் முடிவை வந்தடைந்தனர்.

 

அவிப்பதில் யத்தீந்திராவுக்கு நிகர் அவர்தான்.

இந்திய கொன்கிரசுக்கு டெல்லியிலேயே செல்வாக்கு இல்லை.

இதுக்குள்ள தமிழர் மீது செல்வாக்கா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.