Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயநல இருப்புக்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் தமிழ்முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த முனைகிறார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீள் குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பு, வவுனியா:-

indion%20house_CI.jpg

வவுனியா மாவட்டத்தில் 10,209 தமிழ் மக்களுக்கு வீடுகள் தேவையென கேரிய போதிலும் 1938 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - வவுனியா

வவுனியா மாவட்டத்தில் 10,209 தமிழ் மக்களுக்கு வீடுகள் தேவையென கேரிய போதிலும் 1938 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என வவுனியா மாவட்ட மீள்குடியேறியோருக்கான நலன்போணும் அமைப்பு இன்று (3.2) தெரிவித்துள்ளது.

இவ் அமைப்பின் சார்பில் அதனை; செயலாளர் மா. றேணிதாஸ் மற்றும் பொருளாளர் நா. நடராசா ஆகியோர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா மாவட்டத்தில் இந்தியன் வீட்டுத் திட்டங்கள் மூன்று கட்டங்களாக நடைமுறப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதன் பங்கீடுகள் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பாக வவுனியா மாவட்ட மீள்குயேறியோர் நலன் பேணும் அமைப்பினராகிய நாம் வெளிப்படுத்த விரும்புகின்றோம்.

இவ் வீட்டுத் திட்ட தெரிவு முறையில் இடம்பெற்ற முறைகேடுகள் காரணமாக யுத்த பாதிப்புக்குள்ளான பல தமிழ் குடும்பங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. அவர்களுக்கான ஒரு நீதியினையே நாம் கோருகின்றோம். 

ஆனால் அதைவிடுத்து சிலர் இதனை தமது சுயநல இருப்புக்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த முனைகிறார்கள். இந் நிலையிலேயே பங்கீடுகள் எவ்வாறு அமையப்பெற்றுள்ளது. இது சரியா என்பதன வெளிப்படுத்த விரும்புகின்றோம்.

வவுனியா மாவட்டத்தில் 4500 இந்தியன் வீட்டுத்த திட்டங்கள் யுத்தத்தின் காரணமாக பாதிப்படைந்த, வீடுகளை இழந்த மக்களுக்கு இந்திய மத்திய அரசினால் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களைப் போல் அல்லாது வவுனியா மாவட்ட இந்தியன் வீட்டுத் திட்ட தெரிவில் வன்னி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியூதீனின் அதிகார செல்வாக்கு உள்ளதாக கூட்டமைப்பும் அவ்வாறு இல்லை நியாயாமான முறையில் இவ் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தரப்பும் மாறி மாறி தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் தமிழ் மக்கள் 2218 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் தேவை என விண்ணப்பித்த போதும் 304 குடும்பங்களுக்கே வழங்கப்பட்டது. இது 13.70 வீதமாகும். இதேபோல் 914 முஸ்லிம் மக்கள் வீடு தேவை என விண்ணப்பித்த நிலையில் 1169 வீடுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இது 127.17 வீதமாகும். இங்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கயை விட மேலதிகமாக வீடுகள் எவ்வாறு வழங்கப்பட்டது?

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் தமிழ் மக்கள் சார்பாக 2051 குடும்பங்கள் வீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பித்த நிலையில் 504 பேருக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது 24.60 வீதமாகும். அதேபோன்று வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகப் பிரிவில், தமிழ் குடும்பங்கள் 38 விண்ணப்பித்த நிலையில் 34 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது 89.40 வீதமாகும். அதே பகுதியில் 773 சிங்கள குடும்பங்கள் வீட்டுத் திட்டத்திற்காக விண்ணப்பித்த நிலையில் 545 குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது 70.50 வீதமாகும்.

வவுனியா நகர பிரதேச செயலாளர் பிரிவில் 5902 தமிழ் குடும்பங்கள் வீட்டுத் திட்டத்திற்காக விண்ணப்பித்த நிலையில் 1096 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது 18.60 வீதமாகும். இதே பிரிவில் 569 முஸ்லிம் குடும்பங்கள் வீட்டுத் திட்டத்தினை கோரிய போதும் 465 குடும்பங்களுக்கே வழங்கப்பட்டது. இது 82.7 வீதமாகும்.

இவ்வாறு மூன்று கட்டங்களிலும் பகிரப்பட்டதன் அடிப்படையில் வவுனியா மாவட்ட ரீதியில் 10,209 தமிழ் மக்கள் முழுமையாக வீட்டினை இழந்து அதனை கோரியுள்ள போது 1938 பேருக்கு மட்டும் அவ் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது  18.9 வீதமாகும். 773 சிங்களக் குடும்பங்கள் வீட்டுத் திட்டத்தைக் கோரிய போதும் 545 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 70.5 வீதமாகும். இவ்வாறு இருக்கும் நிலையில் 1483 முஸ்லிம் குடும்பங்கள் வீட்டுத் திட்டத்தை கோரிய போது 1634 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 110 வீதமாகும்.

இன விகிதாசார அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் கூடிய சனத்தொகையை கொண்டவர்களாகவும் கூடிய வீட்டுத் திட்டங்களை கோரியவர்களாகவும் தமிழர்கள் இருக்கும் போதும் போது இரண்டாம் நிலையில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு அவர்கள் கோரியதை விட மேலதிகமாக வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு  திடீர் என மேலதிக குடும்பங்கள் எங்கிருந்து வந்தன? பதில் சொல்லப் போவது யார்? என்பதே பாதிப்படைந்த மக்களின் கேள்வியாகவுள்ளதாக உள்ளது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயநல இருப்புக்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் தமிழ்முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த முனைகிறார்கள்:-

வவுனியா மாவட்ட இந்தியன் வீட்டுத் திட்டங்கள் மூன்று கட்டங்களாக நடைமுறப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதன் பங்கீடுகள் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பாக வவுனியா மாவட்ட மீள்குயேறியோர் நலன் பேணும் அமைப்பினராகிய நாம் வெளிப்படுத்த விரும்புகின்றோம். இவ் வீட்டுத் திட்ட தெரிவு முறையில் இடம்பெற்ற முறகேடுகள் காரணமாக யுத்த பாதிப்புக்குள்ளான பல தமிழ் குடும்பங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. அவர்களுக்கான ஒரு நீதியினையே நாம் கோருகின்றோம். ஆனால் அதைவிடுத்து சிலர் இதனை தமது சுயநல இருப்புக்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த முனைகிறார்கள். இந் நிலையிலேயே பங்கீடுகள் எவ்வாறு அமயப்பெற்றுள்ளது. இது சரியா என்பதன வெளிப்படுத்த விரும்புகின்றோம்.

வவுனியா மாவட்டத்தில் 4500 இந்தியன் வீட்டுத்த திட்டங்கள் யுத்தத்தின் காரணமாக பாதிப்படைந்த, வீடுகளை இழந்த மக்களுக்கு இந்திய மத்திய அரசினால் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களைப் போல் அல்லாது வவுனியா மாவட்ட இந்தியன் விட்டுத் திட்ட தெரிவில் வன்னி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான வர்த்தக கைத் தொழில் அமச்சர் றிசாட் பதியூதீன் அவர்களின் அதிகார செல்வாக்கு உள்ளதாக கூட்டமைப்பும் அவ்வாறு இல்லை நியாயாமான முறையில் இவ் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தரப்பும் மாறி மாறி தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். 

வவுனியா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் தமிழ் மக்கள் 2218 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் தேவை என விண்ணப்பித்த போதும் 304 குடும்பங்களுக்கே வழங்கப்பட்டது. இது 13.70 வீதமாகும். இதேபோல் 914 முஸ்லிம் மக்கள் வீடு தேவை என விண்ணப்பித்த நிலையில் 1169 வீடுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இது 127.17 வீதமாகும். இங்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கயை விட மேலதிகமாக வீடுகள் எவ்வாறு வழங்கப்பட்டது?

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் தமிழ் மக்கள் சார்பாக 2051 குடும்பங்கள் வீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பித்த நிலையில் 504 பேருக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது 24.60 வீதமாகும். அதேபோன்று வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகப் பிரிவில், தமிழ் குடும்பங்கள் 38 விண்ணப்பித்த நிலையில் 34 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது 89.40 வீதமாகும். அதே பகுதியில் 773 சிங்கள குடும்பங்கள் வீட்டுத் திட்டத்திற்காக விண்ணப்பித்த நிலையில் 545 குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது 70.50 வீதமாகும்.

வவுனியா நகர பிரதேச செயலாளர் பிரிவில் 5902 தமிழ் குடும்பங்கள் வீட்டுத் திட்டத்திற்காக விண்ணப்பித்த நிலையில் 1096 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது 18.60 வீதமாகும். இதே பிரிவில் 569 முஸ்லிம் குடும்பங்கள் வீட்டுத் திட்டத்தினை கோரிய போதும் 465 குடும்பங்களுக்கே வழங்கப்பட்டது. இது 82.7 வீதமாகும்.

இவ்வாறு மூன்று கட்டங்களிலும் பகிரப்பட்டதன் அடிப்படையில் வவுனியா மாவட்ட ரீதியில் 10,209 தமிழ் மக்கள் முழுமையாக வீட்டினை இழந்து அதனை கோரியுள்ள போது 1938 பேருக்கு மட்டும் அவ் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இது  18.9 வீதமாகும். 773 சிங்களக் குடும்பங்கள் வீட்டுத் திட்டத்தைக் கோரிய போதும் 545 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 70.5 வீதமாகும். இவ்வாறு இருக்கும் நிலையில் 1483 முஸ்லிம் குடும்பங்கள் வீட்டுத் திட்டத்தை கோரிய போது 1634 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 110 வீதமாகும்.

இன விகிதாசார அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் கூடிய சனத்தொகையை கொண்டவர்களாகவும் கூடிய வீட்டுத் திட்டங்களை கோரியவர்களாகவும் தமிழர்கள் இருக்கும் போதும் போது இரண்டாம் நிலையில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு அவர்கள் கோரியதை விட மேலதிகமாக வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு  திடீர் என மேலதிக குடும்பங்கள் எங்கிருந்து வந்தன? பதில் சொல்லப் போவது யார்? என்பதே பாதிப்படைந்த மக்களின் கேள்வியாகவுள்ளதாக உள்ளது.

மா. றேணிதாஸ்                                          நா. நடராசா

செயலாளர்                                              பொருளாளர்

மீள் குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பு, வவுனியா

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/102583/language/ta-IN/article.aspx

இந்த செய்தி தமிழ் நாடு சென்றடையத்தக்க முறையில் பலரும் உங்கள் முக நூலில் பதிந்துவிடுங்கள். 

கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்  news

vavunia_arpadam_002.jpg

vavunia_arpadam_003.jpg

vavunia_arpadam_001.jpg

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய வீட்டுத் திட்டத்தை நிறுத்துவதற்கு முயற்சிப்பதாக கூறி இன்று வவுனியாவில் எதிர்ப்பு   ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்ததாக  தகவல்கள்  தெரிவிக்கின்றன.

காமினி சிங்கள மஹா வித்தியாலயத்திலிருந்து மன்னார் - வவுனியா வீதி ஊடாக வவுனியா கச்சேரி வரை ஏற்பாடு  செய்யப்பட்டிருந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான வாசகங்களை  தாங்கியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர் அதேவேளை அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு நன்றி தெரிவிப்பதைப் போன்ற பதாகைகளையும் சுமந்து சென்றனர். 

அத்துடன் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ச.மோகநாதனை நேரில் சந்தித்து  இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குரஷித் மற்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு  மகஜரொன்றையும்  ஆர்ப்பாட்டக்கார்ரகள் கையளித்தனர்.  இதேவேளை ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று நேற்றைய தினம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிராக இன்று இந்த ஆர்ப்பாட்டம்  நடாத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=801852619304848788#sthash.mp8TrJrk.dpuf

தமிழர் பகுதிகளை இஸ்லாமியமயப்படுத்தும் திட்டம் வேகமாக நடக்கிறது, நான் முன்னர் குறிப்பிட்டது போல் ல் தமிழர் என்ற இனம் இஸ்லாமிய மயப்டுத்தலால் அழிந்து போகும் நிலையே காணப்படுகிறது

தமிழர் பகுதிகளை இஸ்லாமியமயப்படுத்தும் திட்டம் வேகமாக நடக்கிறது, நான் முன்னர் குறிப்பிட்டது போல்ல் தமிழர் என்ற இனம் இஸ்லாமிய மயப்டுத்தலால் அழிந்து போகும் நிலையே காணப்படுகிறது

அட இதா பிரச்சினை? சின்னதா $5000 டொலருக்கு சமகிருததில் சங்கு சக்கர பூசை செய்தால் இஸ்லாமிய மத பிரச்சினை தீர்ந்திடும்.

இதுக்கெல்லாமா போராட்டம்? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.