Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பிரதிபலன் ஜெனிவாவில் இருந்து வருகிறது! – மஹிந்த ராஜபக்ஷ.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பிரதிபலன் ஜெனிவாவில் இருந்து வருகிறது! – மஹிந்த ராஜபக்ஷ. 

[Friday, 2014-02-14 08:03:42]
mahinda-140214-150.jpg

பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பயனை மக்கள் அனுபவிக்கின்ற சூழலில் அதற்கான எதிர் பிரதிபலன் தமக்கு ஜெனீவாவிலிருந்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இத்தகைய எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேரும் போதும் பயங்கரவாதத்திலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டமை பெரிதெனக் கருத முடிவதாகவும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருக்காவிட்டால் நாட்டில் இன்றைய நிலையைக் கட்டியெழுப்ப முடிந்திருக்காது எனவும் அவர் தெரிவித்தார். நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றி அவர்-

  

முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததன் பிரதிபலன்களை இப்போது மக்கள் அனுபவித்து வருகின்றனர். வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் இளைஞர்கள் கொழும்புக்கு வந்து நியமனம் பெற்றுச் செல்வதற்கும் அதுவே வழிவகுத்தது. பயம் சந்தேகமின்றி அனைத்துப் பிரதேச மக்களும் கொழும்புக்கும் ஏனைய பிரதேசத்துக்கும் செல்லக்கூடிய நிலை இன்றுள்ளது. 30 வருட பயத்தை நாம் இல்லாமல் செய்துள்ளோம். அதன் பிரதிபலனே இன்றைய இந்த சிறந்த சூழல். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்காவிட்டால் இத்தகைய சூழ்நிலையை எம்மால் கட்டியெழுப்பியிருக்க முடியாது.

மக்கள் அதன் பிரதிபலன்களை அனுபவிக்கும் நிலையில் எமக்கும் அதன் பிரதிபலன் ஜெனீவாவிலிருந்து வருகிறது. அத்தகைய பிரதிபலனுக்கு நாம் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. நாட்டுக்கு நல்லது நடந்துள்ளது என்பதால் நாம் அதைப் பொருட்படுத்தவில்லை. மக்களுக்கான சுதந்திரத்தையும் நாட்டிற்கான சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுக்க முடிந்ததை நாம் பெரிதாகக் கருதுகிறோம். நாடு துண்டாடப்படாமல் பயங்கரவாதத்தினால் மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களை இல்லாதொழிக்க முடிந்துள்ளமையை விட எமக்கெதிரான செயற்பாடுகள் பெரிதாக தெரியவில்லை.

நாட்டில் வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற பேதம் இப்போதில்லை. நாட்டின் அனைத்துப் பிரதேச மக்களும் சமத்துவமாக வாழ்கின்றனர். அத்தகைய பேதங்கள் நாட்டில் இல்லை. எங்கும் எவரும் வாழக்கூடிய உரிமையையும் தொழில் செய்யக்கூடிய உரிமையையும் நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம். சுதந்திரமாக வாழ, கல்வி, சுகாதாரம் உட்பட அனைத்து மக்களுக்கும் சகல உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன.இத்தகைய சூழலில் தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்பி ஒரே நாடு ஒரே குடும்பம் என்ற ரீதியில் தமது தாய் நாட்டுக்கு அன்பு செய்வது அனைவரதும் பொறுப்பாகும்.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103597&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாஅய்யே எமதுதாயக மக்களின் 30 வருட போராட்டத்தின் பிரதிபலன் ஜெனிவாவிலிருந்து வருகுது.. 60வருட இனப்பிரச்சனைக்கு ஒர் தீர்வை வைத்தால் 30வருட பயங்கரவாத பிரச்சனை அடியோடு இல்லாமல் போய்விடும்...ஜ.நா...சத்தம் போடாது....

மகிந்தாஅய்யே எமதுதாயக மக்களின் 30 வருட போராட்டத்தின் பிரதிபலன் ஜெனிவாவிலிருந்து வருகுது.. 60வருட இனப்பிரச்சனைக்கு ஒர் தீர்வை வைத்தால் 30வருட பயங்கரவாத பிரச்சனை அடியோடு இல்லாமல் போய்விடும்...ஜ.நா...சத்தம் போடாது....

புத்தர்,

நீங்கள் என்ன தான் ஞான உபதேசம் செய்தாலும் உங்கள் சீடருக்கு ஏற போறதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர்,

நீங்கள் என்ன தான் ஞான உபதேசம் செய்தாலும் உங்கள் சீடருக்கு ஏற போறதில்லை.

 

 

ஏறி  இனி  என்ன  செய்வது....

புத்தர் காலமே

எல்லாவற்றையும் மறந்து மன்னித்துட்டேன் என்று ஆலமரத்துக்கு  கீழே உட்கார....

 

செய்த கொலைகளும் பாவங்களும்  மனித  கொடூரங்களும் கொஞ்சநஞ்சமே........ :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

புறம்போக்கு புத்தர் மன்னிக்கலாம் ஆனால் ஐ.நா.சபை மன்னிக்கவேணுமே?தேசத்தின்குரல் அன்டன் பாலாவின் நோக்கமே எமது பிரச்சனையை ஐ.நா சபைக்கு எடுத்து செல்வதுதான்....தெற்காசிய பிராந்தியத்தில் உரிமை போராட்டம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பது என்பது இலகுவான காரியமன்று புலிகளும் தாயகமக்களும் அதை சாதித்தார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது பலன் எது பிரதிபலன் என்று ஒரே குழப்பமாக இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

எது பலன் எது பிரதிபலன் என்று ஒரே குழப்பமாக இருக்கிறது

 

குழப்பமாக  தெரிகிறதா????

இதுவே  வெற்றி

எப்படியும் இதை  வைத்து 50 வருடத்தை தள்ளி  போட்டுவிடுவார் மகிந்த......

Edited by விசுகு

ஏறி இனி என்ன செய்வது....

புத்தர் காலமே

எல்லாவற்றையும் மறந்து மன்னித்துட்டேன் என்று ஆலமரத்துக்கு கீழே உட்கார....

செய்த கொலைகளும் பாவங்களும் மனித கொடூரங்களும் கொஞ்சநஞ்சமே........ :(:(

அண்ணா,

தெய்வம் நின்று கொல்லும். நம்புங்கள்.

மூக்கனும் தங்க கட்டிலில் படுத்து உழன்று பட்டு தான் செத்தவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.