Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் அடையாளம் தெரியாத காச்சலினால் உயிரிழந்த கனடாபிரஜை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலிருந்து சொந்த ஊரான ஏழாலையை பார்க்க வந்த இளம் குடும்பஸ்தரான தம்பிராசா செந்தில்குமரன் (33) அடையாளப்படுத்த முடியாத காய்ச்சலினால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கனடாவிலிருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் தனது சொந்த ஊரான ஏழாலை வடக்கு முனியப்பர் கோவிலடிப் பகுதியில் வந்து தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் மேற்படி குடும்பஸ்தர் திடீர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மேற்படி நபர் சிகிச்சை பலனின்றி நேற்று ) உயிரிழந்தார்.

'இவரது சடலத்தினை பிரேத பெட்டியில் வைத்து எங்களிடம் ஒப்படைத்த போது, பிரேத பெட்டியினை திறக்க வேண்டாம் என வைத்தியசாலையில் கடமை புரிபவர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் இவருடைய மரணத்திற்கான உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லையெனவும' உறவினர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த நபர் திருமணமாகி ஒரு வருட காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதாவது ஒரு காரணம் இருக்கத்‌தானே வேண்டும் ..
"அடையாளம் காண முடியா காச்சல்" என்றும் ஒரு வருத்தம் இருக்கிறது ..Fever of unknown origin என்று சொல்லுவார்கள். அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் . ஆனால் எனக்கு தெரிய இப்படி ஒருவர் இறந்தது இதுதான் (?)முதல் தடவை .. (அடிப்படையில் குறிக்கப்பட்த எல்லா சோதனைகளும் செய்தா பிறகும் காச்சல் எது / என்ன  என்று பிடிப்படவிட்டால் அப்படி சொல்லுவார்கள்)

இங்க இருந்து போனவர் ஏன் ஒரு தனியார்  வைத்திய சாலைக்கு போகாமல் அங்கே போனார்.?

ஏற்கனவே அந்த வைத்திய சாலை  அங்குள்ள மக்களையே பார்ப்பதற்கு  குறைந்த வசதியுடன்  திண்டாடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சாவடைந்தவர் ஏழாலை வடக்கு முனியப்பர் கோவிலடியைச் சேர்ந்தவர். யாழ் பாரிய இடம்பெயர்வின்போது வன்னியில் சிறிதுகாலம் வாழ்ந்தவராவார். அவேளையில் கிளிநொச்சியைச்சேர்ந்த ப்ரு பெண்ணை காதலித்திருந்திருக்கிறார். பின்பு அவரஹு அக்காளது முயற்சியில் கனடாவுக்குப்போய், அதன்பின்பு காதலித்த பெண்ணைத் திருமணம் செய்யமாட்டேன் என அட்ம்பிடித்து, ஆனால் அவரது பெற்ரோரது வற்புறுத்தல்காரணமாக, இறுதியில் கரப்பிடித்து, கனடா சென்று மீண்டும் தனது மனைவியைப்பார்ப்பதற்காக சென்ற வருடம் கார்த்திகை மாதம் தாயகம் திரும்பியிருக்கிறார்.

 

கடந்த ஒரு வாரமாக சாப்பிட விருப்பமில்லாமை சிறிது காச்சல் ஆகிய காரணத்துக்காக திருநெல்வேலி சென்றல் நேர்சிங்ஹோமில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துள்ளார், இறுதி நாளன்று சென்றல்நேர்சிங்ஹோம் நிற்வாகம் இதற்குமேல் தங்களால் சிகிச்சையளிக்கமுடியாது நீங்கள் யாழ் பொதுமருத்துவமனைக்குச் செல்லவும் எனப்பணித்துள்ளனர். அதற்கமைய, சாவடைந்தவரை யாழ்பொதுவைத்திய சாலைக்குக் ஒண்டுசெல்கையில் இடையிலேயே உயிரைவிட்டுள்ளார்.

 

திருநெல்வேலி சென்றல்நேர்சிஹோம் என்பது சும்மா கப்சா விளையாட்டு, அங்கு பணிபுரியும் வைத்தியர்கள் எவரும் மருத்துவத்தில் எந்த விடையத்திலும் சிறப்பு சிறப்பான தேர்வுபேற்றவர்கள் இல்லை. சாதாரண எம்பிபிஎஸ் தராதரமுள்ள வதிவிட மருத்துவர்கூட நிரந்தரமாக இல்லை. தவிர சிறப்பு மருத்துவர்கள் அனைவரும் யாழ் போதனாவைத்தியசாலையைச்சேர்ந்தவர்களே.

 

கண்ணைப்பறிக்கும் அலன்காரம் மற்ரும் வழுவழுப்பான தரைகள், அழகான கதவு மற்றும் ஜன்னல்ச்சேலைகள் போன்றவற்றால் அழகூட்டப்பட்ட ஒரு பிணவறைதான் திருநெல்வேலி சென்றல்நேர்சிங்ஹோம்.

 

கடந்த யூலைமாதம் எனது மனைவி பிள்ளைகள் தாயகம் சென்றிருந்தவேளை மனைவியின் கைமுறிந்து அதற்கு மாவுக்கட்டுப்போடுவதற்கு அனிஸ்தீசியா கொடுத்தவிடத்தில் இரண்டுவாரமாக வயித்தாலையடியும் சத்தியும் தொடர்ந்து இருந்து மிகவும் கவலைக்கிடமாக அவரது உடல்நிலை இருந்தது காரணம் அனிஸ்தீசியா கொடுப்பதில் உள்ள குறைபாடேயாகும் என கண்டுபிடிக்கப்பட்டது.

 

தவிர கைமுறிவுக்கு மாவுக்கட்டுப்போட அனிஸ்தீசியா கொடுத்தவிடையத்தை நான் இங்குதான் கேள்விப்பட்டேன்.

 

முறிவு நெரிவு வைத்தியத்தில் யாழில் பிரபல்யமாகவிருக்கும் இராஜேந்திரா அவர்களே எனது மனைவிக்கு வைத்தியம் செய்தவர். இவ்வளவுக்கும்லண்டனிலும் வேறு வெளிநாடுகளிலும் சிறப்புப் பயிற்சிகளைப் படித்தவர் யாழ் போதனா வைத்தியசாலையில் தலைமை விரிவுரையாளர்.

 

இவருக்கு, மனைவியின்  முழங்கைமூட்டு விடுபட்டு அதேவேளை அவ்விடத்தில் சிறிய எலும்பு துண்டாக வெடித்துள்ளதால் மாவுக்கட்டுப் போடக்கூடாது என்பது தெரியவில்லை. இவர்கள் செய்த தவறான வேலையால் எனது மனைவியின் ஒருகை சர்யானபடி தொழிற்படாது, ஒரு அளவுக்குமேல் நீட்டமுடியாது.

 

அதன்பிபு வைத்தியர் உமாபதி அவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மனைவியின் கைகளைச் சீரமைக்க முயற்சிசெய்து சென்றல்நேர்சிங்ஹோமினது தவறான வைத்திய முறையால் தோல்வியில் முடிவடைந்தது.

 

ஆகவே உறவுகளே யாராவது தாயகம்சென்று அங்கு உங்கள் உடல்நலத்துக்கு ஏதாவது இடையூறுகள் வந்தால் தயவுசெய்து திருநெல்வேலி சென்றல்நேர்சிங்ஹோம் போகவேண்டாம்.

 

தவிர முறையான பயணக்காப்புறுதி எடுத்துக்கொண்டுபோகவும். அனால் எல்லா காப்புறுதி நிறுவனங்களும் கொழும்பிழுள்ள தனியார் வைத்தியசாலகளுடனேயே ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். எனினும் தற்போது யாழ் கொழும்பு போக்குவரத்து சீரடைந்துள்ளதால் முதலுதவியுடன் யாழில் உங்களுக்கான சிகிச்சையை மட்டுப்படுத்திவிட்டு, உடனடியாகவே தங்களுக்கு அறிவுருத்தப்பட்ட வைத்தியசாலைக்குச் செல்லவும் தவிர இரவுநேரப் பயணத்தையோ அன்றேல் டொல்பின் வான் பயணத்தையோ தவிர்த்து, இரயில் பயணத்தை மேற்கொள்ளவும். பயணத்தில் அவசரம் கூடாது, நன்றாக திட்டமிட்டுப் பயணங்களை மேற்கொள்ளவும்.

 

மேலும் போத்தல்களில் விற்கும் அனேகமான குடிநீர் போலியானவை தவிர சரியானமுறையில் பராமரிக்கப்படாதவை. ஆகவே கொதித்தாறிய தண்ணீரைக்குடிக்கவும். அதைவிட முக்கியம் யாழ்ப்பாணம் நகர்ப்புறத்துக்கு அண்மித்த பகுதிகளில் தங்குவதைத் தவிர்க்கவும் காரணம் உயிர்கொல்லி நுளம்புப்பெருக்கம் அங்குதான் அதிகம்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு அந்தப்பக்கம் போகாமலே இருக்கலாம்.. :unsure:

இதுக்கு அந்தப்பக்கம் போகாமலே இருக்கலாம்.. :unsure:

 

வெளிநாடுகளுடன் யாழ் நிலவரத்தை ஒப்பிட ஏலாது! ஆனால் முன்னேற்றம் வேணும் என்றதில மாற்றுக்கருத்து இல்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏழுஞாறு

 

உங்கள் தகவல்களுக்கு நன்றி (இப்படி பதியாலாமோ தெரியாது :))

 

உங்கள் கருத்துககள் பலனுள்ளவை..யாழ்ப்பாணத்த்தில் அல்லது இலங்கலையில் தனியார் வைத்தியசாலை என்பது ; இங்குள்ள (USA) urgent care centers க்கு ஒப்பவனையே...அதற்க்கு மேல் அவர்களால் எதுவும் செய்ய முடியாது..வைத்திய செலவுகள் மிக அதிமானவை...

-உங்கள் மனைவிக்கு நிகழ்ந்த சம்பவம் துரதிஷ்ட வசமானது..

மயக்க மருந்து எடுத்த சிலருக்கு சில ஒவ்வாமை/ஒததுக்கொள்ளாமை ஏற்படலாம்...

ராஜேந்திர, நீங்கள் சொன்ன மாதிரி பல படிப்பு படித்தவர், வெளிநாட்டில் பயிட்சி எடுத்தவர் என்றால் அவர் முயன்ற முறையும் சரியாக இருக்கலாம் தானே...??
எல்லா வருந்தங்களுக்கும் எப்போதும் ஒருமுறையான சிகிச்சை முறை இருப்பதில்லைதானே..இங்கே அதை physician's preference என்று சொல்லுவார்கள்..
உமாபதிக்கு சில சந்தர்ப்பங்களில், சுத்தி கட்டினால் பிடிக்காது...எனக்கு விழுந்து முழங்கால் கீழ் எலும்பில் சிறிய உடைய்வு வந்த போது அவர் லீவில் இருந்தால் வேறு ஒருவர் பார்த்தார் ., அவர் அந்த POP போட்டு கிலாச்செஸ் உம் தந்தார் ...பிறகு இவர் வர கட்டினபோது .."நாய்க்கு கால் முறிந்தால் இப்படி POP  போட்டு ,கிலாச்செஸ்எ  பாவிக்கும்" என்று கேட்டுபோட்டு எல்லாத்தையும் களட்‌டிவிட்டார்..பிறகு கொன்சம் நோ இருந்தது ஆனால் OK..பிறகும் நான் இரண்டு ஒருதரம் விழுந்தேன்..பிறகு கனடாவில் MRI எடுக்க லிகமென்ட் டியர் என்று வந்தது ...இங்குள்ள வீரர்கள் சொன்னார்கள் இன்னும் கொன்சா காலம் கூட போட்டீருக்கலாம் என்று...(அவர்களுக்கு பிறகு விழுந்து எழும்பின கதைகளை வடிவாக சொல்லவில்லை.. :icon_mrgreen:

 

எல்லாம் நோயாளி விதியாளி என்றால் வைத்தியர் பேராளி என்றா கதைத்தான்  :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.