Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டு டோராக்கள் மூழ்கடிப்பு

Featured Replies

2 SLN Dvora vessels sunk, one damaged in Jaffna

[TamilNet, September 02, 2006 04:04 GMT]

Two Dvora Fast Attack Crafts were sunk and another damaged in the clashes that took place in the seas off Vadamaradchi Point Pedro Munai, Sri Lanka Navy sources in Jaffna said. The SLN sources claimed that they had destroyed several Sea Tiger vessels. Heavy fighting was reported from 9:00 p.m. Friday till 4:00 Saturday morning between the Sea Tigers and the Sri Lanka Navy.

The damaged Dvora FAC was towed back to Kankesanthurai (KKS) harbour, the sources added.

Around 30 SLN sailors were missing, the sources further said.

SLAF aircrafts and helicopters were observed conducting a search and rescue operation over the sea Saturday morning as addtional troops were rushed to the coastal areas.

The SLA troopers who temporarily vacated their posts along the coastal areas returned to their posts around 5:00 a.m. and the civilians who fled their houses were also seen returning to their houses around 7:00 a.m.

tamilnet.com

அகா நல்ல செய்தி நண்பரே

தாழையடி கடற்பரப்பில் பாரிய கடற்சமர்.

வடமராட்சி கிழக்குப் பகுதி கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும் சிறீலங்கா கடற்படையினருக்கும் இடையில் பாரிய கடற்சமர் ஒன்று வெடித்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறையின் கிழக்கு தாழையடிப் கடற்பரப்பில் இருதரப்பினருக்குமான மோதல் இன்றிரவு வெடித்துள்ளது. கடற்புலிகளின் படகுகள் தாழையடிப் பகுதியில் ஆயுதங்களுடன் நடமாடியதாகவும் இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் மோதல்கள் வெடித்துள்ளதாக சிறீலங்காப் படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கடற்புலிகளின் 6 படகுகள் கடும் சேதத்திற்கு உள்ளானதாகவும் இதில் பயணித்த 30 வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இம்மோதல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் எதுவித தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

  • தொடங்கியவர்

பருத்தித்துறை சமரில் 2 டோரா படகுகள் மூழ்கடிப்பு: 30 கடற்படையினர் கதி என்ன?

[சனிக்கிழமை, 2 செப்ரெம்பர் 2006, 11:30 ஈழம்] [ம.சேரமான்]

யாழ். வடமராட்சி பருத்தித்துறை முனை கடற்சமரில் சிறிலங்கா கடற்படையின் 2 டோரா படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. காணாமல் போன 30 கடற்படையினர் தேடப்படுகின்றனர் என்று தமிழ்நெற் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நெற்றின் செய்தி விவரம்:

பருத்தித்துறை முனை கடற்பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையே நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் இன்று சனிக்கிழமை அதிகாலை 4 மணிவரை மோதல் நடைபெற்றது.

இம்மோதலில் சிறிலங்கா கடற்படையின் 2 டோரா அதிவேக தாக்குதல் படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. ஒரு டோரா படகு சேதமடைந்த நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த 30 பேர் காணாமல் போயுள்ளனர். சிறிலங்கா விமானப் படை விமானங்களும் உலங்குவானூர்திகளும் கடற்பிரதேசத்தில் பறந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். கடலோரப் பகுதிகளில் இன்று காலை மேலதிக இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடலோரப் பகுதிகளில் உள்ள தங்களது நிலைகளிலிருந்து தாற்காலிகமாக விலகியிருந்த இராணுவத்தினர் இன்று அதிகாலை 5 மணி முதல் நிலைகளுக்குத் திரும்பியுள்ளனர். இம்மோதலையடுத்து வீடுகளை வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றிருந்த பொதுமக்களும் காலை 7 மணியளவில் வீடுகளுக்குத் திரும்பினர் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 டோரா படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளமையை சிறிலங்கா இராணுவத் தரப்பும் உறுதி செய்துள்ளது.

http://www.eelampage.com/?cn=28606

JAFFNA: SRI LANKA NAVY ON FRIDAY (01) night killed at least 80 Tamil Tigers (LTTE) on board 20 LTTE boats including 5 sea tiger craft moving to launch an attack on the Point Pedro harbour in JAFFNA.

Having realized the ulterior motive behind the night movement of LTTE sea craft, sailors immediately opened a heavy volume of fire from the sea and land causing destruction to LTTE.

The confrontation that started at about 8.00 p.m. Friday (01) lasted until 3.15 a.m. Saturday (02).

Two Naval craft were slightly damaged and two sailors sustained minor injuries in the incide

army.lk

இவங்அட கணக்குப்படி பார்த்தால் புலிகள் இப்போது அழிந்திருப்பார்கள் இவங்கலும் இவங்அட கணக்கும் :D:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

===============================

குழுவினருக்கு ஓர் வேண்டுகோள்! :arrow:

==============================

சிரிலங்காவின் புலியுருப்பினர்களின் அழிப்பு என்னிக்கை பட்டியல் ஒன்றை கருத்தில் கொண்டு ஒரு நிரந்தரமான களப்பிரிவு ஒன்றை துவங்கினால் என்ன?

அக்களப் பிரிவானது எப்பொழுதும் இழகுவாக அடையக்கூடியதாக இருக்க வேண்டும்.

அங்கு, ஒவ்வொரு முறையும் சிஙகள இரானுவம் அறிக்கை யிடும்போது/ மேற்கோள் காட்டும் போது/ டம்பம் அடிக்கும் போது எண்ணிக்கைகளை சேர்த்துக் கொண்டே போகலாம்.

இது தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இருந்தால் நலமாயிருக்கும்.

நல்லது தமிழீழம் பகுதியில் ஆரம்பியுங்கள்

கடற்சமரின் போது புலிகளின் 12 படகுகள் அழிக்கட்டுள்ளதாகவும் தங்களின் இரண்டு படகுகளுக்கு இலேசான கீறல் சேதம் என்றும் படையினர் தரப்பில் இருவருக்கு சிறு கீறல் காயம் என்றும் படைவட்டாரங்கள் ரெயிட்டருக்கு கூறியுள்ளன. புலிகள் தரப்பில் டசின் கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளதுடன்..காங்கேசந்துறைத் துறைமுகம் மீதான அவர்களின் தாக்குதல் முயற்சி இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளதாம்..! புலிகள் தரப்பு இது குறித்து இதுவரைக்கும் எதுவும் கூறவில்லை..!

------------------

COLOMBO (Reuters) - Sri Lanka's navy sank 12 Tamil Tiger craft overnight in a naval battle off the island's northern tip and dozens of rebels, including suicide fighters, are believed to have been killed, the military said on Saturday.

The clash at sea near the besieged army-held Jaffna peninsula comes amid five weeks of intense fighting after four years of ceasefire, and as the army seeks to wrest control of rebel territory near a strategic port in the island's northeast.

"It was a major attack. There were 20 rebel boats. We were able to destroy 12 LTTE craft, including five LTTE suicide boats," a military spokesman told Reuters. "They were humiliated in their so-called seas and withdrew."

He said he believed at least 75 Tigers had been killed, but there was no independent confirmation. The Liberation Tigers of Tamil Eelam (LTTE) were not immediately available for comment.

The military spokesman said two sailors were injured and two navy fast-attack boats were slightly damaged by gunfire in the battle, which raged through the night and into the early hours of Saturday.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://news.google.com/news?hl=en&scoring=...-8&sa=N&start=0

இங்கே ஒரே Sri Lankan Navy Sinks 12 Rebel Boats இந்த செய்தியையே எல்லாப் பத்திரிகைகளும் வெளியிடுக்றாங்களே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

20 LTTE boats sink in Lanka sea battle

PK Balachandran

Colombo, September 2, 2006

http://www.hindustantimes.com/news/181_178...01302310000.htm

நல்ல வேடிக்கையாக இருக்கிறது. பத்திரிகை நடத்துறாங்களா அல்லது ஏமாத்துவித்தைகாட்டுறங்களா?

:smile2:

  • கருத்துக்கள உறவுகள்

சனி 02-09-2006 15:53 மணி தமிழீழம் [சிறீதரன்]

வடமராட்சி கடற்சமரில் 3 டோரக்கள் மூழ்கடிப்பு 30 கடற்படையினர் பலி.

வடமராட்சி கிழக்குப் பகுதி கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும் சிறீலங்கா கடற்படையினருக்கும் நேற்று இரவு நடைபெற்ற கடற்சமரில் சிறீலங்கா கடற்படையினரின் அதி வேகடோரப் படகுகள் 3 மூழ்கடிக்கப்பட்டதுடன் 30 க்கு மேற்பட்ட கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இச் கடற்சமர் இடம்பெற்ற வேளையில் கடற்கரைநிலைகளில் இருந்த படையினர் பின்வாங்கி பாதுகாப்பான இடங்களிற்கு சென்று மீண்டும் பழைய நிலைகளிற்கு திரும்பியுள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

யாழ். பருத்தித்துறை முனைக்கடற்பரப்பில் நேற்றிரவு முதல் நடைபெற்ற கடற்சமரின்போது சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான இரு டோறா பீரங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும் மேலும் ஒரு டோறா படகு கடுமையாக சேதப்படுத்தப்பட்டதாகவும் யாழில் உள்ள கடற்படை வட்டாரங்களை மேற்கோள் காட்டி தமிழ்நெட் செய்தித்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்றிரவு 9.00 மணிமுதல் இன்று அதிகாலை 4.00 மணிவரை நடைபெற்ற கடற்சமரில் 30 கடற்படையினர் வரை காணாமல் போயுள்ளதாகவும் சேதமடைந்த டோறாப் படகு காங்கேசன்துறைத் துறைமுகத்திற்கு கட்டி இழுத்துச் செல்லப்பட்டதாகவும் குறித்த கடற்படை வட்டாரங்கள் தெரிவித்ததாக தமிழ்நெட் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த மோதலையடுத்து வடமராட்சி கடற்கரையோர காவல்நிலைகளிலிருந்து பின்வாங்கிய படையினர் இன்று அதிகாலை 5.00 மணிமுதல் தமது நிலைகளிற்குத் திரும்பியிருப்பதாகவும், அதேபோன்று இடம்பெயர்ந்த மக்களும் காலை 7.00 முதல் தமது வீடுகளிற்குத் திரும்புவதைக் காணமுடிவதாகவும் தமிழ்n;நட் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிந்திக்கிடைத்த தகவல்களின்படி கடற்சமரின்போது சேதமடைந்த டோறாப் படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டபோது துறைமுகத்திலிருந்து 300 மீற்றர் தூரத்தில் மூழ்கியுள்ளது. இதனுடன் சேர்த்து மூன்று டோறாப்படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://sankathi.org/news/index.php?option=...id=307&Itemid=1

பதிவு பலாலிக்கு துல்லியமா எறிகணை தாக்குதல் நடத்தி காரைநக்ருக்கு யாழ்மாவட்ட கட்டளைப்பீடத்தை மாத்தின மாதிரி தான் இப்ப 3 டோராக்ளை தாட்டிருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போதுவரை படைத்தரப்பு இரு டோறாக்களை இழந்ததாக ஒத்துக்கொள்ளவேயில்லை. ஆனால் படைத்தரப்பு ஒத்துக் கொண்டதாக செய்தி சொல்லப்படுகிறது.

இன்றிரவு இளந்திரையன் அவர்கள் பிபிசிக்கு கொடுக்கும் செவ்வியில் புலிகள் தரப்பிலிருந்து உண்மை நிலைவரம் தெரியவரும். ஆறுமணிநேரம் நடந்ததெண்டால் பெரிய சண்டைதான்.

தாம் பருத்தித்துறைக்கு வலிந்து சென்று தாக்கயதாக செய்தி வெளியிட புலிகள் தயங்குவார்கள் என்று தெரிகிறது. தாளையடியில் தமது படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக பருத்துறை வரை சென்று தாக்கினோம் என்று சொல்லப்படலாம். (அரசதரப்பும் தாளையடி என்ற சொல்லைப் பாவித்துள்ளது.)

இப்போது கடல்வழி வினியோகத்தை மறுத்து தரைவழி வினியோகத்தை மட்டும் யாழப்பாணத்துக்கு அனுமதிக்க வேண்டிய நிலை புலிகளுக்குண்டு. அதன் ஓர் அங்கமாக இத்தாக்குதல் அமைகிறதென்று நினைக்கிறேன்.

இங்கு ஒருவர் சொன்னது போல படைத்தரப்பு வெளியிடும் புலிகள் தரப்பு இழப்புக்களை சீராக அவணப்படுத்துவது நன்று. ஆனால் எல்லோரும் பதியாமல் குறிப்பிட்ட சிலரை அதற்கென்று விடுவது நன்று. இல்லாவிட்டால் ஒரே தகவல் மீளப்பதியப்படுவதும் எண்ணிக்கைக் குளப்பங்கள் உருவாவதும் தவிர்க்க முடியாமற் போய்விடும்.

யாழ்.பருத்தித்துறைக் கடலில் 2 டோறா படகுகள் மூழ்கடிப்பு மேலும் ஒரு டோறா படகு கடுமையாக சேதம்

யாழ். பருத்தித்துறை முனைக்கடற்பரப்பில் நேற்றிரவு முதல் நடைபெற்ற கடற்சமரின்போது ஸ்ரீலங்கா கடற்படைக்குச் சொந்தமான இரு டோறா பீரங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும் மேலும் ஒரு டோறா படகு கடுமையாக சேதப்படுத்தப்பட்டதாகவும் யாழில் உள்ள கடற்படை வட்டாரங்களை மேற்கோள் காட்டி தமிழ்நெட் செய்தித்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்றிரவு 9.00 மணிமுதல் இன்று அதிகாலை 4.00 மணிவரை நடைபெற்ற கடற்சமரில் 30 கடற்படையினர் வரை காணாமல் போயுள்ளதாகவும் சேதமடைந்த டோறாப் படகு காங்கேசன்துறைத் துறைமுகத்திற்கு கட்டி இழுத்துச் செல்லப்பட்டதாகவும் குறித்த கடற்படை வட்டாரங்கள் தெரிவித்ததாக தமிழ்நெட் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த மோதலையடுத்து வடமராட்சி கடற்கரையோர காவல்நிலைகளிலிருந்து பின்வாங்கிய படையினர் இன்று அதிகாலை 5.00 மணிமுதல் தமது நிலைகளிற்குத் திரும்பியிருப்பதாகவும் அதேபோன்று இடம்பெயர்ந்த மக்களும் காலை 7.00 முதல் தமது வீடுகளிற்குத் திரும்புவதைக் காணமுடிவதாகவும் தமிழ்n;நட் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிந்திக்கிடைத்த தகவல்களின்படி கடற்சமரின்போது சேதமடைந்த டோறாப் படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டபோது துறைமுகத்திலிருந்து 300 மீற்றர் து}ரத்தில் மூழ்கியுள்ளது. இதனுடன் சேர்த்து மூன்று டோறாப்படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.