Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடன்பாட்டை மீறிய சிறிலங்காவுக்கு அமெரிக்கா கொடுத்த பதிலடி – விமல் வீரவன்சவால் வந்த வினை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

VIMAL_WEERAWASA.jpg

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ராப்பின் பயணத்தின் போது, சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கடும் நிலைப்பாட்டை எடுப்பதற்கு சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்சவே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விமல் வீரவன்சவின் நடவடிக்கைகளே சிறிலங்கா அரசாங்கத்தை பூமராங் போன்று திருப்பித் தாக்கியுள்ளது. 

ஸ்டீபன் ராப் சிறிலங்கா வந்த போது, அவரது சந்திப்புகள் தொடர்பாக குறைந்த முக்கியத்துவம் கொடுப்பதற்கும், அது தொடர்பான தகவல்களை சிறியளவில் வெளியிடுவது அல்லது முற்றாகவே தவிர்ப்பதற்கும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன் வந்திருந்தது. 

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக, விமல் வீரவன்ச நடத்திய எதர்ப்பு போராட்டம், இந்த வாக்குறுதியை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டது. 

அமெரிக்க அதிகாரிகளை அவமதிக்கும் வகையிலான இந்தப் போராட்டத்தின் பின்னணியில் சிறிலங்கா அமைச்சர் ஒருவரே இருந்ததால், எல்லாமே தலைகீழாகியது. 

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்கா சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், 

“சாத்தியமானளவுக்கு ஸ்டீபன் ராப்பின் பயணம் தொடர்பான தகவல்களுக்கு குறைந்த முக்கியத்துவம் அளிப்பது என்று அமெரிக்கத் தூதரகத்துக்கும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. இந்தப் போராட்டம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார். 

விமல் வீரவன்சவின் போராட்டத்துக்கு, அமெரிக்கத் தூதரகம் எதிர்ப்புத் தெரிவித்த போது, அதை ஒரு அமைச்சர் மட்டுமே நடத்தியதாகவும், அதை சிறிலங்கா அரசாங்கத்தின் அணுகுமுறையாக கருத வேண்டாம் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு, பதிலளித்திருந்தது. 

ஆனால், அந்தப் போராட்டத்தின் விளைவு, டுவிட்டரில் பிரதிபலித்தது. 

2009 ஜனவரியில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படையினரின் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று குறிப்புடன் படத்தை வெளியிட்டு அமெரிக்கத் தூதுரகம் பதிலடி கொடுத்தது என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140220110004

  • கருத்துக்கள உறவுகள்

விமல் தானாக போராட்டம் நடத்தினார் என்று காதில் பூ சுத்துகிறார்கள். விட்டால் பொதுபல சேனாவும் தானா இயங்குது என்பார்கள். மோட்டுவேலை பார்த்துப்போட்டு இப்ப வீரமங்கியை பலிக்கடா ஆக்க முயற்சி..

அரசு அல்லவே அந்த செய்தியை சொல்லவருகிறது. :D

 

இது அரசுக்கு எதிரான செய்தியாக இருப்பதால் UNP அல்லது JVP அதிகாரி ஒருவர்தான் இரகசியத்தை கசியவிட்டார் போல் படுகிறது.

 

இந்த விடையத்திலும் விமலை  அர சுகைவிட்டிருந்தால் அதைப் பற்றி அந்த அந்த அதிகாரி தெளிவாக சொல்ல இல்லை. அவர் சொல்வது "மந்திரி ஒருவர் மட்டும் தனது தீர்மானத்தில் போராடினார்" என்று வெளிவிவகார அமைச்சு அமெரிக்காவுக்கு விளக்கம் அளித்ததாக.  இதில் விமல் அமெரிக்காவால் தாக்கப்படவில்லை (அமெரிக்கா வீசா மறுப்பது போன்ற்வற்றில்), இலங்கையிலும் அவருக்கு ஏதாவது பாடுவந்தாக அசுமாத்தங்கள் இல்லை. 

 

எனவே விமல் இன்னொரு தடவை வரும் பிரேரணை நேரம் ஐ.நா.மனித உரிமைகள் சபையிற்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பதற்கான உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக இத்தால் மருத்துவச் சான்றிதள் வழங்க்கப்படுகிறது. 

விமல் தானாக போராட்டம் நடத்தினார் என்று காதில் பூ சுத்துகிறார்கள். விட்டால் பொதுபல சேனாவும் தானா இயங்குது என்பார்கள். மோட்டுவேலை பார்த்துப்போட்டு இப்ப வீரமங்கியை பலிக்கடா ஆக்க முயற்சி..

வீரமங்கி சரியான பெயர். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.