Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மாநில முறைமைக்கு நிகரான தீர்வே கூட்டமைப்பின் நிலைப்பாடு - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மாநில முறைமைக்கு நிகரான தீர்வே கூட்டமைப்பின் நிலைப்பாடு - யதீந்திரா

சமீபத்தில் தமிழ்நாட்டில் உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், தமிழரசு கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன், இந்திய மாநில ஆட்சிக்கு நிகரான ஆட்சிமுறையொன்றையே தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். விடுதலைப் புலிகளிற்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியலை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சம்பந்தன், முதல் முதலாக கூட்டமைப்பு எவ்வாறானதொரு அரசியல் தீர்வை எதிர்பார்க்கின்றது என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.

இது குறித்து கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் ஏனைய கட்சிகள் எத்தகைய அபிப்பிராயங்களை கொண்டிருக்கின்றன என்பதை அறிய முடியாவிட்டாலும் கூட, இந்திய மாநில ஆட்சிக்கு ஒப்பான ஒன்றை கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்து வரும் ஏனைய கட்சிகளின் சிரேஸ்ட தலைவர்களான சித்தார்த்தன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் எதிர்க்கப் போவதில்லை. சமீப காலமாக, வழமைக்கு மாறாக தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு அப்பால், தமிழ்நாட்டின் பி.ஜே.பி தலைவர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்த சம்பந்தன், இதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாட்டில் வைத்து அரசியல் தீர்வு குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருக்கின்றார். ஆனால் கூட்டமைப்பிற்குள் இருந்தவாறு தொடர்ந்தும் புலிகள்கால அரசியலை முன்னெடுக்க முற்படும் ஒரு சிலருக்கு சம்பந்தனின் மேற்படி அறிவிப்பு உவப்பான ஒன்றாக இருந்திருக்காது என்பதில் ஐயமில்லை.

சம்பந்தனின் மேற்படி அறிவிப்பின் மூலம், கூட்டமைப்பு தொடர்பில் நீண்டகாலமாக நிலவிவந்த கேள்வியொன்றுக்கு பதில் கிடைத்துவிட்டது. கூட்டமைப்பு தமிழ் மக்களின் சார்பில் எதிர்பார்க்கும் தீர்வுதான் என்ன? தற்போது அதற்கு பதில் கிடைத்திருக்கிறது. சம்பந்தன் ஏன் இவ்வாறானதொரு அறிவிப்பை இந்த சந்தர்ப்பத்தில் வெளியிட்டிருக்கின்றார். இந்தியாவில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்னும் எதிர்வு கூறல் பலமடைந்துவரும் சூழலில்தான் சம்பந்தன் இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்திருக்கின்றார். இலங்கையில் தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்படும் ஒரு தீர்வாலோசனை, இந்தியாவின் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். வெறுமனே அது தமிழ்நாட்டிற்குள் மட்டுமே வரவேற்கப்படுவதில் அர்த்தமில்லை. இதனைக் கருத்தில் கொண்டுதான் சம்பந்தன் மேற்படி அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார். சம்பந்தனின் இன்றைய அறிவிப்பு, ஏற்கனவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியால் முன்வைக்கப்பட்டு வந்த விடயம்தான். ஆனால் இன்று சம்பந்தன் அதனை முன்வைக்கும் போது அதன் பெறுமதி மிகவும் கனதியானது. வழமைபோலவே, சம்பந்தனின் மேற்படி கருத்து அவரை விமர்சிப்பதையே தங்களது பிரதான அரசியல் இலக்காகக் கொண்டு செயற்பற்பட்டுவரும் அணியினரால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில் இந்திய மாநிலங்களுக்கு ஒப்பானதொரு அரசியல் தீர்வை வடக்கு கிழக்கில் வாழ்ந்துவரும் தமிழர்கள் எப்போதோ பெற்றிருக்க முடியும். ஆனால் அரசியலில் தூரநோக்குடன் சிந்தித்து செயலாற்றும் தலைமைகள் தமிழர்கள் மத்தியில் தோன்றியிராமையினால் இன்று மீண்டும் பழைய விடயங்களையே பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இன்றைய சூழலில் தமிழர்கள் ஒரு தோல்வியடைந்த சமூகம். புலிகளை ஆதரித்தவர்கள், எதிர்த்து நின்றவர்கள் - ஆகிய அனைவருமே தோற்றுப் போனவர்கள்தான். ஆனால் இந்த தோல்வியின் சுமையை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் வடக்கு கிழக்கில் வாழ்ந்துவரும் ஏழை மக்களாவர். எனவே எந்தவொரு விடயத்தை முன்னிறுத்தும் போதும், முதலில் மேற்படி ஏழை மக்களின் நலன்களை கருத்தில் கொள்ள வேண்டிய அவசிப்பாடு அனைத்து தலைமைகளுக்கும் உண்டு. இன்றைய சூழலில், என்னதான் விவாதித்தாலும், ஆவேசப்பட்டாலும், கொள்கைகளை அழகாகச் சொன்னாலும், நிலைமைகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை. பழக்கதோசத்தில் சிலர் உரத்துப் பேசினாலும் அவர்களிடம் எதுவுமில்லை என்பது அவர்களுக்கே தெரியும். எனவே இத்தகையதொரு பின்னணியில், ஓரளவு சாத்தியமான விடயங்களை முன்னிறுத்துவதுதான் பொருத்தமான ஒன்றாக அமையும். ஒருவேளை அவை சாத்தியப்படாவிட்டாலும் கூட, அதனால் மீண்டும் ஏழை மக்கள் பாதிக்கப்படாதவொரு நிலைமையாவது மிஞ்சும். எனவே இன்று சம்பந்தன் குறிப்பிடும் விடயம் நடக்கின்றதா இல்லையா என்பதற்கு அப்பால், அதனால் இருக்கின்ற நிலைமை மேலும் மோசமடையாது என்பது உறுதி.

இன்றைய சூழலில், கூட்டமைப்பு ஒரு யதார்த்தபூர்வமான அணுகுமுறையே முன்வைக்க முயல்கிறது. அதனைத்தானே கூட்டமைப்பினால் செய்யவும் முடியும். அதாவது, இலங்கைக்குள் இருக்கின்ற குறிப்பிட்டளவான சிங்கள மக்கள், அதிகாரப்பகிர்விற்கு ஆதரவான சக்திகள், இந்திய மத்திய அரசு, சர்வதேச சமூகம் ஆகிய அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வுதான் பொருத்தமானதாக இருக்கும் என்பதே அந்த நிலைப்பாடு. அது பொருத்தமானது என்பதற்கு அப்பால், அதுதான் இன்றைய சூழலில் நம்மால் முன்வைக்கக் கூடியது. அந்த வகையில்தான் சம்பந்தனின் கூற்றை நோக்கவேண்டும். சில தினங்களுக்கு முன்னர் இலங்கை பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் பேசியிருந்த வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் நூறு விகிதமான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார். அனைவரும் வெற்றிபெறக் கூடியவாறான (win-win situation) ஒரு தீர்வின் மூலமே இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

தற்போது சம்பந்தன் தெரிவித்திருக்கும் இந்திய மாநில ஆட்சிக்கு ஒப்பான தீர்வு என்பதும், விக்னேஸ்வரன் குறிப்பிடும் - தமிழ் மக்கள் நூறுவிகித அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கவில்லை என்னும் கூற்றும் ஒரு புள்ளியில்தான் சந்திக்கின்றது. எனவே கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு என்பது ஒரு இந்திய மாதிரிதான் என்று இப்பத்தி குறிப்பிடுவது சரியான ஒன்றே! ஆனால் இது பற்றி அறிக்கையிட்டிருக்கும் 'த நேசன்' பத்திரிக்கை, தமிழரசு கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா மேற்படி விக்னேஸ்வரனின் கருத்துடன் முரண்படுவதாக குறிப்பிட்டிருக்கின்றது. இதுகுறித்து கூட்டமைப்பினரே விளக்க வேண்டும். எனினும் கூட்டமைப்பில் உள்ள அனைவரும், தீர்வு குறித்த விடயத்தில் ஒருமித்தமான நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டியது காலத் தேவையாகும்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=41bae04e-7678-4bb0-8091-ec97c4e9f336

கனக்க எழுத தேவை இல்லை. மகிந்தா இந்தியாவிடம் சென்று 13ம் திருத்ததை நீக்க ஆரமபிக்க பட்ட தெரிவு குழுவுக்குள் சம்பந்தரை எடுத்துவிட்டார் என்று எழுதியவர்தான் யத்தீந்திரா. இப்போ கூட்டமைப்பு என்ன கேட்க போகிறது என்பதை ஒற்றர் வேலை செய்து கண்டுபிடிக்க போய் தோல்வி கண்டவராம் தான். மகிந்த புலிகளுக்கு காசு கொடுக்கும் போது தனி நாடு சொல்லி, இந்தியாவிடம் ஆயுதம் வாங்க்கும் போது 13+ சொல்லி, போர் முடிய LLRC மூலம் சர்வதேச நாடுகளுக்கு அதிகாரம் பகிர்ந்து, இந்திய அழுத்ததால் 13A மாகாண சபைத் தேர்தல், நடத்தி இன்று வியலக்சுமியையும், சந்திர சிறியயும் வைத்து காட்டுத் தர்பார் ந்டத்துகிறார். யதீந்திரா இது மகிந்தாவுக்கும் தனக்கும் மட்டும்தாம் புரியும் சிக்கல் என்கிறார்.  அவரை தொடர்ந்த்து நாமும் எமக்கும் அது புரியும் என்று சொல்லி எம்மை நாம் கெடுத்துக்கொள்ளட்டும் என்பது யத்தீந்திராவின் எதிர்பார்ப்பு. 

 

இபோது சம்பந்தர் இந்திய அரசியல் அமைப்பை கேட்கிறார்கர் என்று நிறுவி முடித்திருக்கிறா. இடம் கிடைத்தவுடன்  அது தமிழரசுக்கட்சியின் முடிவு மட்டும்தானாம் என்றும் சொல்ல மறக்கவில்லை. எப்படியோ கூட்டமைப்பு இந்த தமிழரசுக்கட்சியின் முடிவை கள்ளத்தனமாக ஒழித்துவைத்திருந்துவிட்டது என்கிறார்.  ஆனால் தானக்கு சுரேசையும் சித்தாதனையும் சம்பந்தருடன் ஒத்துப்போக வைக்க முடியும் என்பதால் சம்பந்தர் அது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்கிறார்.  இதில் வடமாகண சபை தேர்தல் முடிந்தவுடன் மந்திரிப் பதவிகளை யத்தீந்திராவின் உதவி இல்லாமலே தமிழர்சுக்கட்சி பகிர்ந்தது என்பது அவருக்கு நினைவில் இல்லை. சமஸ்டி ஆட்சியையே கண்டுபிடித்தது ஆனந்த சங்கரி என்கிறார். ஆனந்த சங்கரிக்கு மகிந்தா அதில் மட்டும்தான் முதலமைச்சர் பதவி கொடுக்க முடிடுயும் என்பது யத்தீந்திராவுக்கு புரியாது. இதனால் ஆனந்த சங்கரி சமஸ்டி அரசிலை கள்வெடுத்து கொண்டு மகிந்தாவுடன் கம்பி நீட்டமுடியாமல் சம்பந்தர் விக்கியை முதல் அமைச்சராக்கியது கறையான் புத்தெடுக்க பாம்ப்பு குடி கொண்டது மாதிரி அநியாமாக இருக்கே எங்கிறார். 

 

எதற்கும் யத்தீந்திரா கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமையைக் கேட்ட வடமாகண தேர்தல் விஞ்ஞாபனத்தை தான் படிக்க தேவை இல்லை என்கிறார்.  ஏன் எனின் சம்பந்தர் இப்படி சொன்னதின் காரணம்". இலங்கையில் தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்படும் ஒரு தீர்வாலோசனை, இந்தியாவின் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்." என்கிறார்.  அப்பாடா கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான் தானே என்று நினைத்துக்கொண்டு அகில உலகத்தையும ஓடோடி சென்று இந்தியாவின் கையில் கொடுத்துவிட்டு வந்து நிம்மதி பெரு மூச்செறிகிறார். 

 

அவரின் தொடக்கமும் முடிவும் ஒன்றுதான். அதாவது மகிந்தா இந்தியா சென்று சம்பந்தரை தெரிவுக்குழுவுக்குள் கொண்டுவந்து இந்திய அரசியல் அமைப்பை அவரிடம் திணிதுவிட்டார் எங்கிறார். எப்படி பார்த்தாலும் யந்தீந்திரா மாதிரி ஒவ்வொரு கணமும் குத்து கரணம் அடிக்கத்தக்க அரசியல் ஆய்வாளர்களிடமிருந்த்து வெற்றியை யாரும் இலகுவில் தட்டிபறிக்க முடியாது. 

 

அப்பாவி மனிதன்! இந்த மனிதன் மாதிரி அரசில் புரியாதவர்கள் அரசியல் எழுதும் கேவலம் இலங்கையில் மட்டும்தான் நடக்க முடியும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.