Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கௌரவத் தூதரகத் திறப்புவிழாவை கேரள முதல்வர், அரசியல்வாதிகள் புறக்கணிப்பு -சிறிலங்காவுக்குப் பெரும் அவமானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sasi-tharoor-jeomon-josep.jpg

திருவனந்தபுரத்தில், சிறிலங்காவின் கௌரவத் தூதரகத்தை திறந்து வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட கேரள முதலமைச்சர், உம்மன் சாண்டி நேற்று அந்த நிகழ்வைப் புறக்கணித்ததால், சிறிலங்காவுக்குப் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. 

சிறிலங்காவினால், கௌரவத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜோமன் ஜோசப், மீது கிரிமினல் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாலும், அவர் பிணையில் வெளிவந்த ஒருவர் என்ற விபரம் வெளியானதாலும், இந்த நிலை ஏற்பட்டது. 

கேரளாவைத் தளமாக கொண்ட சிறிலங்கா வர்த்தகரான ஜோமன் ஜோசப், திருவனந்தபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிறிலங்காவின் கௌரவத் தூதுவராக நியமிக்கபட்ட விவகாரத்தினால், கடும் சர்ச்சை எழுந்துள்ளது. 

இந்த கௌரவத் தூதுரகத்தை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்ட, கேரள முதல்வர் உம்மன் சாண்டி நிகழ்வைப் புறக்கணித்ததால், நேற்றுமாலை, மத்திய அமைச்சர் சசி தாரூர், அதனைத் திறந்து வைத்துள்ளார். 

அவர் ஒருவரே இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒரே அரசியல்வாதியாவார். 

tharoor-jeomon.jpg

முன்னதாக, இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஸ் சென்னிதலா, சிறிலங்கா கௌரவத் தூதுவர் ஜோமன் ஜோசப் மீது 63 வயது முதியவரைத் தாக்கியதாக கிரிமினல் வழக்கு உள்ள நிலையில், தாம் இந்த நிகழ்வை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தார். 

மாநில பாஜக தலைவர் முரளீதரனும் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த போதும் அவரும் இதில் கலந்து கொள்ளவில்லை. 

இதையடுத்து முதலமைச்சர் உம்மன் சாண்டியும், இந்த நிகழ்வில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொண்டார். 

மேலும், இந்திய கம்யனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட போதிலும் அவர்களும் கலந்து கொள்ளவில்லை. 

இது இந்திய சிறிலங்கா உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. 

கிரிமினல் வழக்கில் இருந்து ஜோமன் ஜோசப் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்று புலனாய்வு அறிக்கைகள் கிடைத்ததை அடுத்தே, கேரள முதல்வரும், உள்துறை அமைச்சரும் இந்த நிகழ்வைப் புறக்கணித்தனர். 

ஏனைய அரசியல் பிரமுகர்கள் அனைவரும் புறக்கணித்த நிலையில், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் சசி தாரூர், மங்கள விளக்கை ஏற்றி வைத்து, 3 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றி விட்டு அவசரமாக அங்கிருந்து வெளியேறினார். 

அவர், ஜோமன் ஜோசப் மீதான வழக்கு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். 

எர்ணாகுளத்தில், சுரங்க அகழ்வுத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜோமன் ஜோசப் உள்ளூர் வாசி ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளவராவார். 

இந்த சுரங்கத்துக்கு, காடுகளை வெட்டி சட்டவிரோதமாக வீதி அமைத்துள்ளதாக, கேரள வனத்துறையும் முறைப்பாடு செய்துள்ளது. 

இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள ஜோமன் ஜோசப், மத்திய புலனாய்வுத்துறை மற்றும், றோ என்பன விசாரித்து அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே தனது நியமனத்துக்கு இந்திய அரசாங்கம், ஒப்புதல் அளித்ததாக தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே கேரளாவில் சிறிலங்கா திறந்துள்ள கௌரவத் தூதுரகம் முழு அளவிலான தூதரகமாக செயற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் ஈதுபோன்று பல்வேறு நாடுகளினதும் 76 கௌரவத் தூதரகங்கள் உள்ளன. 

கௌரவத் தூதுவர்கள், அவர்களை நியமித்த குறிப்பிட்ட நாட்டின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக கருதப்படமாட்டார்கள். 

இவர்களுக்கு எந்தவிதமான இராஜதந்திர விலக்குரிமையோ சிறப்புரிமைகளோ கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140227110040

தாதா ஜோமன் கொச்சின் வரும் ஹெரோயினை கொழும்பிற்கு அனுப்பும் பணியை சிறப்பாக செய்வார்.

டுவிட்டர் கொலைகாரன் தரூரும் வந்து "சிறப்பித்து"விட்டார்.

எல்லா கள்ளரும் ஊடக பேதிலிகளின் உதவியுடன் ஒரு பட்டம் வைத்துகொண்டு திரிகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவிலிருந்து

நல்லவரை  தூதுவராக  போடுவது என்றால்........? :(  :(  :(

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

டுவிட்டர் கொலைகாரன் தரூரும் வந்து "சிறப்பித்து"விட்டார்.

 
தரூர்?
 
இரண்டு கிழமைக்கு முன்னம் தான், இந்தாள், பண்ணின, அட்டகாசம் தாங்காம, மனைவி, தற்கொலை செய்தார்.
 
அதுக்குள்ள, இங்க திறப்பு விழாவா?

சிறீலங்காவிலிருந்து

நல்லவரை தூதுவராக போடுவது என்றால்........? :(:(:(

யாரந்த நல்லவர்? கருகியவாசமா?

எமது பேரவைகளும் சேர்ந்து முக்கியமான தென்னிந்திய நகர்களில் அலுவலகம் திறக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் ஒன்றும் கிடையாது எல்லாம் நடிப்பு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.