Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பிரிவினைவாத சக்திகளுடன் அதிகாரப்பகிர்வுக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை! – என்கிறார் விமல் வீரவன்ச.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பிரிவினைவாத சக்திகளுடன் அதிகாரப்பகிர்வுக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை! – என்கிறார் விமல் வீரவன்ச. 

[Thursday, 2014-02-27 08:38:57]
wimal-270214-150.jpg

13வது திருத்தச் சட்டத்தைக் காரணம் காட்டி அதிகாரங்களைக் கோரிய அமைச்சர்கள் சிலர், தற்பொழுது ஜெனீவாவின் ஊடாக அதிகாரப் பகிர்வைக் கோர முயற்சிக்கின்றனர். பிரிவினைவாத சக்திகளுடன் அதிகாரப் பகிர்வொன்றுக்குச் செல்ல வேண்டிய தேவை இல்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். எல்.ரி.ரி.ஈ. யினர் பலமாக இருந்த காலத்தில் 13வது திருத்தச் சட்டத்தைக் காரணம் காட்டி அதிகாரங்களைக் கோரிய அமைச்சர்கள் சிலர், தற்பொழுது ஜெனீவாவின் ஊடாக அதிகாரப் பகிர்வைக் கோர முயற்சிக்கின்றனர்.

  

]அரசாங்கத்தைப் பயமுறுத்தி, பிரிவினைவாதிகளுடன் இணைந்து புலிகள் தேவையில்லையெனக் காண்பித்து அதிகாரப்பகிர்வைக் கோருவதற்கு இவர்கள் முயற்சிக்கின்றனர்.. ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவிருக்கும் பிரேரணையால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என பயமுறுத்தி அதிகாரப் பகிர்வுக்குச் செல்லவே முயற்சிக்கின்றனர்.

வட மாகாண சபைத் தேர்தல் நடத்துவதை அரசாங்கம் பின்னடித்தபோது அதற்கு எதிராக அழுதவர்களும் இந்த அமைச்சர்களே. வட மாகாணசபை அமைக்கப்பட்ட பின்னர் அது தற்போது அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது. நாட்டின் சட்டத்துக்கு எதிராக வட மாகாணசபை தீர்மானங்களை நிறைவேற்றும் போது இந்த அமைச்சர்கள் மெளனம் காத்து வருகின்றனர்.

சட்டத்துக்கு முரணான பிரேரணைகளே வட மாகாணசபையில் நிறைவேற்றப்படுகின்றன. இந்தியாவுக்கு அடிபணிந்து செல்ல வேண்டிய தேவை இல்லை. தமிழ் பிரிவினைவாத சக்திகளுடன் அதிகாரப் பகிர்வொன்றுக்குச் செல்ல வேண்டிய தேவை இல்லை. பயங்கரவாதிகள் விரும்பியதை தற்பொழுது அடைவதற்கு முயற்சிக்கும் சர்வதேச சக்திகளுக்கு எதிராக மக்கள் திரண்டெழ வேண்டியதே தற்பொழுது நாட்டில் தேவையான விடயமாகும் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=104525&category=TamilNews&language=tamil

8000 சதுர அடி மாளிகை...மன்னிக்கவும்..குடிசை கட்டி முடிந்துவிட்டதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விரும்பியோ விரும்பாமலோ பேச்சுக்கு போய்த்தானே ஆகவேண்டி இருக்கு உங்களின் நிலை இல்லை என்றால் சர்வதேச அரங்கில் தனிமைப் படுத்தப்பட்டுவிடுவீர்கள் மிஸ்ரர் விமல் வீரவன்ச. 

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் விமல் வீரவன்ச! நீதான்டா மனிதன்!!. உனது இந்தப் பிடிவாதத்தை எந்தக் காரணம் கொண்டும் இப்போது விட்டுக் கொடுக்காதே!!. :blink:

இன்று தமிழினம் உள்ள நிலையில், அதிகாரப் பகிர்வோ! சுயாட்சியோ! அன்றித் தமிழீழம்தான் கிடைத்தாலும்!... அதனைக் குரங்குகைப் பூமாலைபோல் ஆக்கிவிடுவார்கள்!!. உங்கள் அரசோடு சேர்ந்தியங்கும் தமிழ்ப் பினாமிகளும்! ஒட்டுக்குழுக்களும்! இன்னோரன்ன தமிழ் குழுக்களும்!!, உங்கள் அரசாட்சியின் அகோரம் தாங்காது, நொந்து நூலாகி நைந்துபோனபின்பு, நீங்கள் கொடுத்தாலென்ன! அல்லது நாங்கள் எடுத்தாலென்ன! அப்போது கிடைப்பதுதான் குரங்குப் பிடிபோல உறுதியாக இருக்கும்!!. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.