Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது: - இயக்குநர் வ.கௌதமன் அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது: - இயக்குநர் வ.கௌதமன் அறிக்கை 

[Thursday, 2014-02-27 12:21:55]
director--kouthaman-200.jpg

2009ல் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை இன்னும் உலகம் முழுக்க வாழும் தமிழர் மனதில் இருந்து நீங்க வில்லை.அந்த ரணமும் இன்னும் ஆறவில்லை.ஒட்டு மொத்த அந்த இனப்படுகொலையில் 1,75,000 தமிழ் உறவுகளும்,இறுதி நாளில் 40,000கும் மேற்ப்பட்ட தமிழ் உறவுகளும் படுகொலை செய்யப்பட்டது,உலகம் முழுதும் அறிந்த உண்மை.2009-2014 வரை 5 ஆண்டுகளாக உலகும் முழுக்க உள்ள தமிழர்கள் நீதி கேட்டு போராடிக் கொண்டு இருக்கும் நிலை இன்றைய நிலை.

  

அது மட்டுமிலாமல் வரும் மார்ச் மாதம் ஐநா வில் மனித உரிமை தீர்மானம் நிறைவேறும் நேரத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்தப் போவதை அறிந்து மிகவும் சொல்லண்ணா துயரத்திற்க்கு ஆளானோம்.அதே நேரத்தில்(மார்ச்10) ஜெனிவாவில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நீதி கேட்டு நடக்கும் நேரத்தில் இந்த நிகழ்ச்சி ந்டப்பது தான் வேதனையானது.மார்ச்1,2 ல் CORAL PROPERTY DEVELOPMENT & CEYLON ARTS CREATION ஆகிய நிறுவனங்களோடு இணைந்து விஜய் டிவி பம்லப்பட்டி புதிய கதிரேசன் மண்டபத்திலும் மருதானை st.Joseph கல்லூரியிலும் நிகழ்ச்சி நடப்பதாக அறிந்தோம்.

இலங்கையில் தமிழர்கள் ஆடிப்பாடி மகிழ்வாக உள்ளதாக உலகத்திற்க்கு காட்டும் இலங்கை சிங்கள இனவாத அரசின் ராஜதந்திர நிகழ்வாக தான் இது நடக்கிறது. இதற்கு விஜய் டிவியும் துணை போவது கொடுமையானது.தமிழக முதல்வர் சட்டமன்ற தீர்மானத்தோடு மட்டுமில்லாமல் தேர்தல் அறிக்கையிலும் இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்கு தனித் தமிழ் ஈழமே தீர்வு,சர்வதேச பன்னாட்டு விசாரனை தேவை என தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக உள்ளார்.

இந்த சூழலில் கொழும்பில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பதும்,அதற்கு விஜய் டிவி துணை போவதும் தமிழக அரசுக்கும் எதிரானது.எங்கள் பினங்களின் மேல் ஏறி நின்று யாரும் பணம் பார்க்க முயல வேண்டாம். எங்கள் உணர்வுகளை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறொம்.இதையும் மீறி நிகழ்ச்சி நடந்தால் மானமுள்ள தமிழர்களுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டி வரும்.

 

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

-

இயக்குநர் வ.கௌதமன்(9841325400).

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=104527&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடக்கும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பில்லை என்று விஜய் டிவி அறிவித்துள்ளது.விஜய் டிவியின் புகழ்பெற்ற ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை, கொழும்பில் நடத்தப்போவதாகவும், இதில் அந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற சோனியா, திவாகர் உள்ளிட்டோர் பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த மார்ச் மாதம் ஐநாவின் மனித உரிமை அமைப்பு இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ள சூழலில், இப்படியொரு நிகழ்ச்சியில் பங்கேற்று, தமிழருக்கு எதிரான சிங்கள பரப்புரைக்கு துணை போவதா என விஜய் டிவிக்கும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்களுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

01_super_singer343_600_jpg.jpg

இந்த நிலையில் விஜய் டிவி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதிலும், தமிழ் மண்ணின் மாண்பை நிலை நிறுத்துவதிலும் என்றென்றைக்கும் உறுதியான நிலைப்பாடுகளுடனே இருந்திருக்கிறது விஜய் டிவி. இனிமேலும் இருக்கும்.உலக அளவில் தமிழர்களின் பெருமையையும், திறமையையும் முன்னிறுத்துவதை தன் முதல் கடமையாக வைத்திருக்கிறது. இதனாலேயே விஜய் டிவியின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் உலகத் தமிழர்களின் அன்பும், ஆதரவும் பெருகிக் கொண்டே இருக்கிறது.இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி குழுமம் பற்றி வருகிற சில உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறோம்.மார்ச் 1-2 தேதிகளில் இலங்கையில் நடக்கிற இசை நிகழ்ச்சிக்கும், விஜய் தொலைக்காட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது மட்டுமல்ல, இதற்கு முன் விஜய் தொலைக்காட்சி இலங்கையில் எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்தியதும் இல்லை. விஜய் டிவி குறித்து இது போன்று வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.விஜய் டிவி எப்போதும் தமிழர்களின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு பொறுப்புடன் செயல்பட்டு வந்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்."-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Thatstamil

Edited by Ahasthiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களது நிகழ்ச்சி மார்ச் மாதம் இலண்டனில் இடம்பெறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் நடைபெறந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரத்து .
முக்கிய அறிவித்தல்//

இலங்கையில் நடைபெறந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரத்து .

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இலங்கை சென்று இருந்த சூப்பர் சிங்கர் பாடகர்களுக்கு எதிராகவும் தமிழகத்தில் மாணவர்கள் , உணர்வாளர்கள் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால்
நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டு நாடு திரும்பி உள்ளனர்.

எம்முடன் சேர்ந்து குரல் குடுத்த அனைவருக்கும் நன்றி .
 
fb

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.