Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் புனர்வாழ்வுக் கழக (TRO) நிதி முடக்கம்

Featured Replies

சிறீலங்காவின் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்த தமிழ் மனித நேய அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நிதி சிறீலங்கா அரசின் உடனடி முடக்க அறிவிப்பின் கீழ் ரகசியமாக முடக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள அரச வங்கியில் இருந்து பணத்தை மீளப்பெற முயன்ற போது இது தெரியவந்துள்ளது.

விடுதலைப்புலிகளின் மீதான அனைத்துலகத் தடைகளின் பின்னர் சிறீலங்கா அரசு தமிழர் தரப்பின் மீது சகட்டுமேனிக்கு இராணுவ மற்றும் இதர இன அழிப்பு நடவடிக்கைகளை முடிக்கி விட்டிருக்கும் நிலையில்..வெறும் வெற்றுக் கோசங்களும் அறிக்கைகளும் சிறீலங்கா அரசை அதன் செயற்பாடுகளின் இருந்து கட்டுப்படுத்தப் போவதில்லை. சிறீலங்கா அரசின் பொருளாத்தாரத்தை சிதைத்து அதன் இராணுவ வலிமையைத் தகர்த்து அதனை உறைய வைக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே இப்போது அவசியம் என்பதை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது. சிறீலங்கா அரசு..தமிழர்களுக்கு தானும் உதவாது சர்வதேச பணியாளர்களைக் கொன்று அச்சுறுத்தி சர்வதேச மனித நேய அமைப்புக்களை வெளியேற்றவும் முயற்சித்துக் கொண்டு தமிழர்களின் ஒரே ஆறுதலான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியையும் முடக்கி தமிழர்களை முற்றாக இராணுவ ரீதியில் அழித்தொழிக்க திட்டம் தீட்டியுள்ளதாகவே அதன் தற்போதைய நடைமுறைகள் எடுத்துச் சொல்கின்றன. இந்த நிலையில் உலகத்தமிழர்கள் சிறீலங்காவின் இச்செயற்பாடுகளை காட்டாம எதிர்த்து..சிறீலங்காவை இராணுவம் மற்றும் நிதியியல் ரீதியில் முடக்க அனைத்து முயற்சிகளையும் செய்வது உடனடித் தேவையாகியுள்ளது.

Sri Lanka seizes TRO funds

[TamilNet, September 03, 2006 07:00 GMT]

The Sri Lankan government has frozen the funds of the Tamil Rehabilitation Organisation (TRO) with immediate effect, the Sunday Times reported. The directive has been given by the Central Bank on the basis of combating the financing of terrorism, the paper said

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19461

சிறீலங்காவின் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்த தமிழ் மனிட நேய அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நிதி சிறீலங்கா அரசின் உடனடி முடக்க அறிவிப்பின் கீழ் ரகசியமாக முடக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள அரச வங்கியில் இருந்து பணத்தை மீளப்பெற முயன்ற போது இது தெரியவந்துள்ளது.

விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தடைகளின் பின்னர் சிறீலங்கா அரசு தமிழர் தரப்பின் மீது சகட்டுமேனிக்கு இராணுவ மற்றும் இதர இன அழிப்பு நடவடிக்கைகளை முடிக்கி விட்டிருக்கும் நிலையில்..வெறும் வெற்றுக் கோசங்களும் அறிக்கைகளும் சிறீலங்கா அரசை அதன் செயற்பாடுகளின் இருந்து கட்டுப்படுத்தப் போவதில்லை. சிறீலங்கா அரசின் பொருளாத்தாரத்தை சிதைத்து அதன் இராணுவ வழிமையைத் தகர்த்து அதனை உறைய வைக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே இப்போது அவசியம் என்பதை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது. சிறீலங்கா அரசு..தமிழர்களுக்கு தானும் உதவாது சர்வதேச பணியாளர்களைக் கொன்று அச்சுறுத்தி சர்வதேச மனித நேய அமைப்புக்களை வெளியேற்றவும் முயற்சித்துக் கொண்டு தமிழர்களின் ஒரே ஆறுதலான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியையும் முடக்கி தமிழர்களை முற்றாக இராணுவ ரீதியில் அழித்தொழிக்க திட்டம் தீட்டியுள்ளதாகவே அதன் தற்போதைய நடைமுறைகள் எடுத்துச் சொல்கின்றன. இந்த நிலையில் உலகத்தமிழர்கள் சிறீலங்காவின் இச்செயற்பாடுகள் காட்டாம எதிர்த்து..சிறீலங்காவை இராணுவம் மற்றும் நிதியியல் ரீதியில் முடக்க அனைத்து முயற்சிகளையும் செய்வது உடனடித் தேவையாகியுள்ளது.

Sri Lanka seizes TRO funds

[TamilNet, September 03, 2006 07:00 GMT]

The Sri Lankan government has frozen the funds of the Tamil Rehabilitation Organisation (TRO) with immediate effect, the Sunday Times reported. The directive has been given by the Central Bank on the basis of combating the financing of terrorism, the paper said

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19461

:shock: :shock: :shock:
  • தொடங்கியவர்

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கியது சிறிலங்கா அரசாங்கம்

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்க சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி மற்றும் கொழும்பில் உள்ள வங்கிகளுக்கு புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் சென்ற போதுதான் வங்கிக் கணக்கு முடக்கப்பட்ட விடயம் தெரியவந்தது.

சிறிலங்காவின் மத்திய வங்கியின் உத்தரவின் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழக நிர்வாக இயக்குநர லோறன்ஸ் திலகர் இதனை உறுதி செய்துள்ளார் என்று கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதி முடக்கப்பட்டுள்ளதாகவும் வங்கிகளிலிருந்து மறு அறிவித்தல் வரும் வரை பணத்தை பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் லோறன்ஸ் திலகர் கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு 1985 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு வங்கிக் கணக்குகள் முடக்கம் குறித்த எதுவித முன் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் லோறன்ஸ் திலகர் கூறினார்.

இத்தகைய நடவடிக்கையால் தற்போது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான பணிகளும் ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளும் பாதிக்கப்படும் என்றும் லோறன்ஸ் திலகர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்கில் மொத்தம் ரூ. 20 மில்லியன் தொகை இருருந்துள்ளது. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதையடுத்து கொழும்பில் உள்ள தனியார் வங்கிகளுக்குச் சென்று அரசாங்கத்தின் உத்தரவு குறித்தும் தங்களது காசோலைகளை நிறுத்தி வைக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடுகளுக்கு அமெரிக்கா தடை விதிக்க வேண்டும் என்று கடந்த சனவரி மாதம் சிறிலங்கா அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்கா சென்ற போது இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

அமெரிக்கா உள்ளிட்ட 28 நாடுகளில் புனர்வாழ்வுக் கழகம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சிறிலங்கா மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் காப்ரலிடம் விளக்கம் கேட்க தமிழர் புனர்வாழ்வுக் கழக சட்ட ஆலோசகர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர்.

புதினம்.கொம்

''புனர்வாழ்வு கழகத்தை விரட்டும் சிறிலங்கா அரசு.....???''

தனியார் தொண்டு நிறுவனமான புன்வாழ்வு கழகம்

மக்களுக்கு பாரிய பங்கழிப்பை செய்து வருகிறது..

இன்னல்கள் எங்கெல்லாம் மக்களிற்க்கு வருகிறதோ அங்கெல்லாம்

ஓடிச் சென்று விரைவு பணியை இது மேற்க் கொண்டு வந்தது.

குறிப்பாக தமிழ் மக்களிற்க்கு இது பாரிய சேவையை இன்று வரை செய்து

வருகிறது. .

புலம் பெயர்ந்த மக்களின் அத்தியாவசிய தேவைகளை உடனுக்குடன் கேட்டு

அதை சரியான வழியில் நெறிமுறைப் படுத்தி தன் பணியை தடையின்றி

சரியான முறையிலே செய்து வந்தது. .

சிறிலங்கா அரசோ அந்த அமைப்பு பலிகளினது என்றும் அதன் ஊடாகவே

சர்வதேசத்தில் இருந்து பண மாற்று நடைபெறுகிறதென்று

காலம் காலமாய் கூறி வருகிறது..

அதை அந்த நிறுவனமோ வன்மையாக மறுத்து வருகிறது

தங்கள் மீது திட்ட மிட்டு தங்கள் பெயரை சர்வதேச hPதியாக தனிமைப்

படுத்தி அந்த பணிகளை முடக்க அவை செய்கின்ற பிரச்சார தந்திரங்கள் என்று

அவை கூறுகின்றன இக்கூற்றை தமிழ் மக்களும் ஏற்று கொள்கின்றனர் .

அது எவ்வாறெனின் சுனமி வந்த பொழுது திட்ட மிட்டு புறக்கனிப்பு செய்து

தமிழ் மக்களை வஞ்சித்தது சிங்கள அரசு .. அந்த ஆபயகரமான வேளை முன் நின்று தன் பணியை

தன் பலத்தை மீறி சரியான ஒழுங்கு படுத்தலுடன் களமிறங்கி அந்த மக்கிளிற்க்கு அளப் பெரிய

பணிகளை செய்ததை எந்த ஒரு உணர்வுள்ள தமிழனும் மறக்க மாட்டான் .

மக்களது தற்ககால எதிர்கால வாழ்வாதார பிரச்சினகளை ஆராய்ந்து மீள் குடியேற்றம்

வேலை வாய்ப்பு சமுக பணி என பல்வேறு திட்டங்களை முதன்மை படுத்தி

அந்த மக்களின் ஏழ்மை நிலையை போக்கி வருவது

தமிழரின் நம்பிக்கை நட்சத்திரமாய் விளங்கும் அந்த நிறுவனமே.

அதனது நிதிகளை முடக்கியிருப்பதென்பது தமிழர் மீது வீசப் பட்ட ஒரு

பொருளதார இறுக்கமே என சொன்னால் மிகையாகது. .

மட்டகளப்பில் அவர்களது பணியாளர்கள் கடத்தல் தொட்டு பல

அசோகரியங்களை சிறிலங்க அரசு திட்டமிட்டு அதன் பணிகளை

முடக்க செய்து வருகின்ற நிகழ்வின் அதி உச்ச கட்டமே இது. .

முன்னாள் அமெரிக்கா அதிபர் இவரை உத்தியோக புர்வமாக சந்தித்து

அதனுடய செயற்பாடுகளை அறிந்து பாராட்டி அதற்க்கான உதவிகளைiயும்

செய்தார்கள் என்பது கடந்தகால நிகழ்வுகள் பதிவாக்கி போயின..

அன்மையில் கனடா லண்டன் அமெரிக்காவில் கைதானவர்களுக்கும்

இவர்களுக்கும் தொடப்பு உள்ளதென சிங்கள அரசு புடமிட்டு காட்டியது

நினைவில் கொள்ளதக்கது..

ஆக மொத்தத்தில் தமிழர்கள் மீது பாரிய யுத்த நகர்வை மேற்க்கொள்ள முன் அதற்க்கு உதவும்

நிறுவனங்களின் நிதிகளை முடக்கி அதன் செயற்பாடுகளை ஸ்தம்பிதம் செய்து

அந்த மக்களின் மீது பொரளாதார சுமைகளை ஏத்தி ஒட்டு மொத்த மக்களையும்

அழத்தொழிக்கும் ஒரு கோர உச்ச நிலையை இது என்பதாகும்...

எனினும் சர்வதேச hPதியாக இதற்க்கு வழமை போல

புச்சான்டி வேளை காட்ட முயலும் சிறலங்க அரசு

இதன் போது முக்குடை படும் நிலை தோன்றும் .

இனி வரும் காலங்கள் இதை கட்டியமிடும் .

ஆனால் அந்த நிறுவனம் மீது ஏதோ ஒரு முறையில் பொய்களை

போலி ஆதரங்களோடு வீசப் போகிறதென்பது இதனுடாகவும்

அவர்களின் பேச்சாளர்கள் ஊடாகவும்

தெரிந்து கொள்ள முடிகிறது .

இது சிங்கள புலனாய்வு படைகளாலும் அதன் அரசாலும்

திட்ட மிட்டு அரங்கேற்றும் நாடகம் .

:(:(:(:(:(:(:(:(:(:(:(

splash_logo_english_new.gif

இவர்களுக்கே என்ன செய்தார்கள்..... :idea: ஏன்...

இதென்ன எப்பவோ... எதிர்பார்க்காத ஒன்றா.... நாம்....

தடைசெய்தால்... வழிகள்தான் இல்லையா.... அல்லது

அந்நிறுவனமும் இயங்காமல் (tro) நாம் இயங்கிடுவோமா....

:( :wink: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எந்த வகையிலும், தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தை, பாதிக்காது என்று நினைக்கின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.