Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியை மின்சார கதிரையில் அமர்த்த மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முடியாது: அஜித் பெரேரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜனாதிபதியை மின்சார கதிரையில் அமர்த்த மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முடியாது: அஜித் பெரேரா

 

 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யா­னது தனது கட்சி சின்­னத்தை தேர்­த­லுக்கு தேர்தல் மாற்றி வரு­கி­

ajith%20p.%20perera_0.jpgறது. இந்­நி­லையில் இம்­முறை மாகாண சபை தேர்­தலில் ஆளும் கட்சி தமது சின்­னத்தை வெற்­றி­லைக்கு பதி­லாக மின்­சார கதி­ரை­யாக மாற்­றி­யுள்­ளது. ஜனா­தி­ப­தியை மின்­சார கதி­ரையில் அமர்த்­தவோ இலங்­கைக்கு எதி­ரான சட்ட ரீதி­யான நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ளவோ ஐ.நா. மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வினால் முடி­யாது என்று ஐ.தே.க.வின் களுத்­துறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அஜித் பீ பெரேரா தெரி­வித்தார்.
 
இதே வேளை தேசத்­திற்கு மகுடம் கண்­காட்­சியின் போது மக்­களின் வரிப்­ப­ணத்தை உப­யோ­கித்து மகளிர் விவ­கார அமைச்­சினால் வெளி­யி­டப்­பட்ட இலங்­கையின் பல­மிக்க பெண்கள் என்ற நூலில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்­கா­வி­னதும் ஷிராணி பண்­டா­ர­நா­யக்­க­வி­னதும் பெயர் குறிப்­பி­டப்­ப­டா­மை­யா­னது பிழை­யான செயற்­பாடு எனவும் அவர் குற்றம் சுமத்­தினார்.
 
கொழும்பில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
 
ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சி­யா­னது தேர்­த­லுக்கு தேர்தல் தனது கட்சி சின்­னத்தை மாற்றி வரு­வதை போன்று இம்­முறை மாகாண சபை தேர்­தலின் போது தனது சின்­னத்தை வெற்­றி­லைக்கு பதி­லாக மின்­சார கதி­ரை­யாக மாற்றிக் கொண்­டுள்­ளது. உலகில் ஏனைய நாடு­களில் மாநில தேர்­தலை நாட்டின் அபி­வி­ருத்தி செயற்­பாட்­டினை மேற்­கொள்­ளவே மத்­திய அரசு ஆத­ரவு கோரும்.
 
ஆனால் நமது நாட்டில் அதற்கு மாறாக ஜெனிவா மனித உரிமை பேர­வைக்கு இவ்­வ­ரசின் பலத்தை காண்­பிப்­ப­தற்­கான செய்­தியை இத்­தேர்­த­லி­னூ­டாக வழங்க வேண்டும். அத­னூ­டா­கவே இலங்­கைக்கு எதி­ரான சர்­வ­தே­சத்தின் சதித்­திட்­டங்­களை தோற்­க­டிக்க முடியும் என்ற கோஷத்­து­ட­னேயே இவ்­வ­ரசு ஆத­ரவு தேடு­கி­றது.
 
தேர்தல் என்­பது ஜன­நா­யக முறை­மையின் ஒரு படி­மு­றை­யாகும். இவ்­வ­ரசு பொய் மற்றும் இன­வா­தத்தை தூண்டி மக்­களின் ஜன­நா­யக உரி­மையை மூடி மறைக்­கி­றது.
 
ஜெனிவா மனித உரி­மைகள் பேர­வை­யி­னூ­டாக ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை மின்­சார கதி­ரையில் அமர்த்­தவோ இலங்­கைக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கவோ முடி­யாது. அவ்­வா­றான செயற்­பாட்­டிற்கு நாங்கள் இட­ம­ளிக்­கவும் மாட்டோம்.
 
இதே வேளை சர்­வா­தி­கார ஆட்­சி­யா­ளர்­களை தோற்­று­விக்கும் செயற்­பாட்டை நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையின் 18 ஆவது திருத்தம் மேற்­கொண்டு வரு­வதும் தற்­போது இலங்கை ஹெரோயின் எத்­தனோல் கடத்­தலில் மத்­திய நிலை­ய­மாக காணப்­ப­டு­கின்­றது.
 
அத்­துடன் தேசத்­திற்கு மகுடம் கண்­காட்சி இம்­முறை குளி­யாப்­பிட்­டி­யில் நடை­பெற்­றது. இதன் போது சிறுவர் மற்றும் மகளிர் விவ­கார அமைச்­சினால் மக்­க­ளு­டைய வரிப்­ப­ணத்தை கொண்டு இலங்­கையின் பல­மிக்க பெண்கள் என்ற நூல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இந்­நூலில் இந்­நாட்டை சுமார் 11 வரு­டங்­க­ளாக ஆட்சி செய்த முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டார நாயக்க குமா­ர­துங்­கவின் பெயர் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. தனது கணவர் உயி­ரி­ழந்த பிற்­பாடு மனம் தள­ராமல் மேல் மாகாண சபையின் முதல்­வ­ரா­கவும் பிர­த­ம­ரா­கவும் ஜனா­தி­ப­தி­யாக பல அவ­தா­ரங்­களை எடுத்த சந்­தி­ரிக்கா அம்­மையார் இந்­நாட்டின் வீர­மிக்க பல­மான ஒரு பெண் என்­பது வர­லாற்று உண்­மை­யாகும். ஆனால் இப்­பெண்ணின் பெயர் குறிப்­பி­டப்­ப­டாத அதே வேளை அதற்கு பதி­லாக நடி­கையும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான உபேக் ஷா சுவர்ணமாலி த சில்வா பெயர் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று இந்நூலில் அநுராதபுரத்தில் பிறந்த பிரதம நீதியரசராக பணியாற்றிய ஷிராணி பண்டாரநாயக்காவினது பெயரும் குறிப்பிடப்படவில்லை. எனவே ஒரு இளம் நடிகையினையும் பார்க்க தரம் குறைந்தவரா சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என அவர் கேள்வியெழுப்பினார்.

 

விட்டால் விடமாட்டேன் விடமாட்டேன் என்று சொல்லி இவரே இருத்தி கரண்ட் கொடுப்பார் போல.

இவர்களின் குழ்ப்பம் என்ன பேசுகிறார்கள் என்று நமக்கே புரிய மாட்டேன் கிறது. எப்படி சாதாரண சனம் வாக்களிக்கும்?

 


UNP தேர்தலில் இருந்த்து விலத்தி UNHRC க்கு இலங்கையின் ஒற்றுமையை வெளிப்படுத்தியிருக்கலாமே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.