Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் கவிச்சி சாமி முனியாண்டி சாமி: வாசித்ததில் பிடித்தது: நிழலி

Featured Replies

 

 
 
 
IMG_2297ss.jpg  
என் நண்பறும் நெருங்கிய தோழருமான மல்லிப்பூ சந்தி திலகர் அப்பா பற்றி பற்றி நான் எழுதிய குறிப்பொன்றில் நான் அப்பாவின் இறுதிச்சடங்கில் “முற்போக்களராக இருந்தும் அப்பாவின் மரண சடங்குகள் அணைத்தையும் மரபு ரீதியாக செய்து அவருக்கு மரியாதை செய்தீர்கள்..” என தவறுதலாக வெளியிட்ட ஒரு குறிப்பொன்ற மறுத்து எழுத வேண்டியதாயிற்று.
 
அதனைத்தொடர்ந்த கருத்து பரிமாறலில் சில சுவாரஸ்யமான அனுபவங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.
 
"....இலக்கிய கூட்டங்களுக்குப் போகும் போது வாசலில் கும்பம் வைத்து வரவேற்பதாக விபூதிபூசி, பொட்டு வைத்து நம்மை வரவெற்கும் வழமை உண்டு. சில நேரங்களில் இந்த முறைமை நம்மை சங்கடப்படுத்துவதாகவும் இருக்கும். ஆனாலும் எவ்வித கோட்பாட்டுச் சித்தாந்தங்களும் அறியாமல்வருவபர்களை ‘கெளரவிப்பதாக’ வரவேற்பவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது என்பதனால் அதனை ஏற்றுக்கொள்வதுண்டு. அண்மையில் ஒரு பாடசாலை அதிபரை பாராட்டும் நிகழ்வுக்கு சென்றிருந்தென். அங்கு அதிபரின் ஆசிரியர்-அதிபர் உரையாற்ற அழைக்கப்பட்டார். பெயர் ‘காதர்’. நேற்றி நிறைய விபூதியும் பொட்டுடன் சுவாரஷ்யமாக அவர் உரையாற்றிக்கொண்டிருந்தார். அதனை அவர் வீட்டில் இருந்து வரும்போது வந்திருக்க வாய்பபேயில்லை. நிச்சயமாக வரவேற்பில் வைக்கப்பட்ட விபூதிப் பொட்டுத்தான் அது.... (இந்த விபூதிகள் பொல்தான் உங்கள் மீது பூசப்பட்ட விபூதியையும் பார்த்தேன் தோழர். வேறு எந்த நோக்கமும் இருக்கவில்லை.)..." என்றார் திலகர்.
IMG_2297s.jpg
IMG_2297.jpg
IMG_593s.jpg
 
நீங்கள் கூறியபடி நிகழ்சிச்கள் நடக்கும் மண்டபகங்களின் வாயில்களில் ஏற்படக்கூடிய தர்மசங்கடகளை நானும் அனுபவித்திருக்கிறேன். விருப்பு வெருப்புகளுக்கப்பால் அதனை மறுக்க முடியாத நிலைக்கு உள்ளாகிவிடுகிறோம். சென்ற வருடம் மலையகப் பகுதிகளில் அப்படி நேர்ந்தது. அந்த தேயிலை தோட்டத்தில் அழகான ஒரு மலை உச்சியில் ஒரே ஒரு பெரிய மரத்தின் நிழலில் ஒரு முனியாண்டி சாமி ஒரு கருங்கல்லாக நிலத்தில் ஊன்றியிருந்தார். அங்கிருந்த தொழிலாளத் தாயார் இன்னும் சில பெண்களையும் அழைத்து அருகில் என்னையும் அழைத்து எனக்கு திருநீர் பூசி, சூடம் சுற்றி, மாலை அணிவித்து ஆசி செய்தார். விருப்பு வெறுப்புகளுக்கப்பால் அந்த அன்பை ஏற்றுகொள்ள வேண்டியேற்பட்டது. ஒரு சந்திப்பொன்றையும் அந்த தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்களிடம் நான் கண்ணீர் மல்க உரையாற்றினேன்.
 
நான் ஏற்பாடு செய்யும் எவற்றிலும் இந்த மத சம்பிரதாயங்களை சேர்த்துக்கொள்வதில்லை. 
 
எங்கள் குடும்பங்களின் சாமியும் முடியாண்டி சாமி தான். கொழும்பில் என் வீட்டு சுவற்றோடு உள்ள கிணற்றோடு சேர்த்தாற்போல் அருகாமையிலேயே ஒரு முனியாண்டி சாமி கல்லொன்றை வைத்து அதனை சிறு கோவிலாக கட்டி என் குடுமபத்தவர்கள் இன்னமும் வழிபட்டு வருகிறார்கள். முன்னரெல்லாம் வருடாந்தம் கோழி, கடா வெட்டி திருவிழாவும் செய்து வந்தார்கள். பிரபல “கொழும்பு கணேஸ்” எனும் கரகாட்டக்காரரின் ஆடல் தவறாது இடம்பெறும். எங்கள் தலித் குடும்பங்கள் ஐந்து அப்போது அந்த தோட்டத்தில் இருந்தன. ஆனாலும் அப்போது அந்த திருவிழாவை நடத்த அங்குள்ள ஏனைய கிறிஸ்தவ, முஸ்லிம் சமூகத்தவரும் சேர்ந்தே ஒத்துழைப்பர்கள். இன்றும் எங்கள் முனியாண்டி சாமி கோவிலை வழிபடுவதும் அதனை பராமரிப்பதும் அங்குள்ள சிங்கள குடும்பங்களே. ஆனால் என்ன, இப்போதெல்லால் அதனருகில் ஏனைய உயர் சாதி சாமிகள் ஆக்கிரமித்து எங்கள் அசைவ சாமியை சைவ சாமியாக்கிவிட்டார்கள்.
jeeva-akka.jpg முனியாண்டி சாமி கோவிலை

பராமரித்து வந்த ஜீவா அக்கா.  முதலில் காளி வந்தார். பின்னர் முருகன், பிள்ளையார், சரஸ்வதி என வந்து இறுதியில் முனியாண்டி சாமி கல்லை சிவலிங்கமாக்கி விட்டார்கள். இப்போது எங்கள் கவிச்சி சாமி போய் முற்றிலும் சைவ சாமி தான் எஞ்சியிருக்கிறது. பழைய முனியாண்டி சாமியாகவே இன்னமும் நம்பி அந்த சிறு கோவிலை சுத்தம் செய்து, பராமரித்து வணங்கி வந்த எங்கள் பெரியம்மா மகள் ஜீவா அக்கா நான்கு நாட்களுக்கு முன்னர் புற்றுநோயால் இறந்து போனார் நேற்று தான் அவரது இறுதிச்சடங்கு செய்தியும் வந்து சேர்ந்தது. இறுதியில் அவரை சைவ சாமியும், எங்கள் கவிச்சி சாமியும் சேர்ந்து கைவிட்டுவிட்டார்கள்.

 
என் பாட்டி தலைக்கியும், என் மாமி வள்ளியும் சாமியாடி குறி சொல்வார்கள். நாங்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் குறி கேட்கவென, தேங்காய், சூடம், வெற்றிலை என எடுத்துக்கொண்டுவந்து சாமியாடவைப்பது வழக்கம். “...வெக்கமா இருக்குது, நம்மல நாமலே யாருன்னு கட்டிகொடுக்குது இனி இதெல்லாம் பண்ண வேணாம்..” என்று கூறி அவர்கள் இருவரையும் என் உறவினர்கள் தடுத்து விட்டார்கள்.
 
கொழும்பில் தலித்துகள் வாழும் எங்கள் பகுதிகளுக்கு உறவினர்களை பல வருடங்களுக்கு பின்னர் சென்ற ஆண்டு சந்திக்க சென்ற போது அங்கெல்லாம் முன்னர் இருந்த முனியாண்டி சாமி, மதுரைவீரன் சாமி, சுடலைமாடன் சாமி சிறு கோவில்களெல்லாம் இப்படித்தான் மாற்றம் கண்டிருந்தது. அவற்றை பற்றி பதிவு செய்ய வேண்டுமென்பதற்காக பல புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டு வந்தேன். இந்த பதிவை பின்னர் ஒரு முறையான கட்டுரையாக எழுதும்போது அதனை பகிர்கிறேன்.
 
இந்த நிலையை மலையகப் பகுதிகள் எங்கும் காணலாம். இது வெறுமனே சிறுதெய்வ வழிபாடு முறையில் ஏற்பட்டுவரும் மாற்றம் மட்டுமல்ல அவர்களின் பண்பாட்டு பழக்க வழக்கங்களிலும் மாறுதலைக் கொண்டுவந்துள்ளது. மேனியாக்கத்துக்கான நடையுடைத், உடைத்தோற்றத்தில் மாற்றம் கண்டிருக்கிறது. வழமையான பேச்சு வழக்கில் மாற்றங்களைக் கொண்டுவந்த்துள்ளது. யாழ் பேச்சு மொழி கலந்து பேசுதல் என்பது பேஷனாக ஆகியிருக்கிறது. இந்துக்கள் மத்தியில் பிரபலமான, அதேவேளை மலையகத்தில் பெரிதாக அறியப்படாத விரதங்கள், மதச் சடங்குகள் வெகுவாக உள்நுளைந்துள்ளன. இதுவரை இருந்த பாரம்பரிய முறைகலானவை, அதன் தகுதியை, அந்தஸ்தை குறைநிர்ணயம் செய்யும் ஒன்றாக கருதப்படத் தொடங்கியிருக்கிறது. இதன் நீட்சியாக இதுவரை இல்லாத தீட்டு, துடக்கு உள்ளிட்ட ஐதீககங்களையும் வீட்டுக்குள் கொண்டுவந்து சேர்த்துவிட்டிருக்கிறது.
 
10 வருடங்களுக்குப் பின் ஊர் போனால், என் வீட்டில் செவ்வாயும், வெள்ளியும் கவிச்சி இல்லையென்கிறார் அம்மா. சரி, முதல் நாளே இரண்டு கருவாடு துண்டை எனக்காக பொறித்து வைத்து விடுங்கள் செவ்வாய், வெள்ளிகளில் நான் சமாளித்துக்கொள்கிறேன் என்று கெஞ்சவேண்டியிருக்கிறது.
 
சாதிய அடையாளங்களை மறைத்து சமூக மேனிலையாக்கத்திற்கான முயற்சியில் தலித் மக்கள் தங்களை மட்டுமல்ல தங்கள் சாமிகளின் அடையாளங்களையும் மாற்ற முயன்று இறுதியில் உயர்சாதி சாமிகளின் ஆக்கிரமிப்புகளுக்கு வழிவிட்டு தலித் சாமிகளை அவர்களின் சொந்த கோவில்களிலிருந்தே விரட்டியும் விட்டனர்.
 
சாதிய தற்கொலை எனும் உப தலைப்பில் சரிநிகரில் நான் அருந்ததியன் எனும் பெயரில் எழுதி வந்த “தலித்தியகுறிப்பு” தொடரில் இது பற்றி நிறைய எழுதியிருக்கிறேன்.
 
 
நகராக்கம், உலகமயாதலின் நீட்சியாக விளிம்புநிலையினரின் மேனிலையாக்க முனைப்பு, தவிப்பு அதன் போக்கு என்பவற்றிலுள்ள சாதக பாதக அம்சங்களை விரிவாக மதிப்பீடு செய்யும் புதிய தலைமுறை இன்று தேவைப்படுகிறது.
 
IMG_59sa.jpg கொழும்பு தெமட்டகொடையில் சிறிதாக கட்டப்பட்டிருந்த தலித் கோவில் இன்று புனரமைக்கப்பட்ட இந்து ஆலயம்

IMG_2297sa.jpg களுத்துறை தலித் தோட்டமொன்றில் வருடாந்தம் திருவிழா நடத்தப்பட்டுவரும்

ஒரு சிறு கோவில். மதுரைவீரன் சாமி rajangana-dam.jpg குருநாகலை - ராஜாங்கன நீர்தேக்க பாலத்தின் வாசலில் உள்ள முனியாண்டி சாமி இப்போது சிவலிங்கமாக IMG_594d.jpg கொழும்பு ஊறுகொடவத்த - வடுகொடாவத்த பகுதியில் இருந்த மதுரைவீரன் சாமி கோவில் அம்மனை உள்ளே விட்டார்கள் கோவில் புனரமைக்கப்பட்டதும் மதுரைவீரனை வழமைபோல காவல்காரனாக ஆக்கி வெளியே வைத்துவிட்டு மூலஸ்தானத்தில் அம்மன் அமர்ந்துவிட்டார். இப்போது அம்மன் கோவில் அது. 90 களில் இந்த கோவில் திருவிழாவுக்கு சென்று உறவினர்களுடன் கும்மாலமடித்தபடி சடங்குகளை கேலிசெய்திருக்கிறேன். ஒரு முறை தீமிதிப்பின் அது என்னாலும் செய்ய முடியுமென்று இறங்க ஏற்பாடுகள் செய்திருக்க என் குடும்பத்தினர் வந்து குழப்பிவிட்டார்கள்...

 

http://www.namathumalayagam.com/2014/03/blog-post_14.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.