Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் பொறிக்குள் அகப்பட்டுவிட்ட அனுசரணையாளர்கள்

Featured Replies

திருகோணமலை சம்பூர் தொடர்பிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திர யுத்தப் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டு ஒரு இறுதி நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு நோர்வே அனுசரணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மக்களின் மனநிலையும் ஊடகங்களும்

சம்பூர் நிலவரம் குறித்து தமிழ் மக்கள் அதிக கவலையடைவார்கள். எப்போதும் வெற்றிச் செய்திகளை எதிர்பார்ப்போர் உண்மை நிலவரத்தின் தாற்பரியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகள் தமது அரசியல், இராணுவத் தந்திரோபாயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது, போராட்டத்துக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மண்டைதீவில் அழிப்புச் சமரினைத் தொடுக்கும் போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பதும்-

மூதூரில் வலிந்த தாக்குதலைத் தொடுத்து இறங்குதுறை வரை நகர்ந்ததையிட்டு ஆனந்தப்படுவதும்

தமிழ் மக்களின் விடுதலை ஏக்கத்தின் பிரதிபலிப்பாகக் கொள்ளலாம்.

இருப்பினும் எமது ஊடகங்களும் ஏதோ இறுதிப் போர் ஆரம்பிக்கப்பட்டு விட்டதை உணர்ந்து கொண்டதாக எண்ணி, ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டார்கள் என்று அதீதமான ஆசைச் செய்திகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன.

எழிலன், இளந்திரையன் கூறும் அதிகாரத் தரப்புச் செய்திகளுடன் ஏனைய ஊடக நிறுவனங்களால் வெளியிடப்படும் ஊகச் செய்திகளையும் இணைத்துத் தொகுப்பதனால் மக்கள் மனங்களில் ஒருவித அதீதமான எதிர்பார்ப்புக்களை எமது ஊடகவியலாளர்கள் உருவாக்கி வருகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ செய்திகளும் அதற்கான அவர்களின் விளக்கங்களுமே மக்களுக்குப் போதுமானதாக இருக்கும்.

சம்பூர் தந்திர யுத்தம்

சம்பூரில் நடைபெறும் சமர் தற்காப்புச் சமாராக விடுதலைப் புலிகள் கூறினாலும் அடிப்படையில் ஒரு தந்திர யுத்தம் தான்.

இச்சமரில் புலிகளின் இராணுவ நகர்வுகள் எவ்வகையில் அமைந்தாலும் அடிப்படையில் மேற்குலக அனுசரணையாளர்களுக்கு உருவாக்கப்படும் ஒரு பாரிய பொறியாகவே கருத இடமுண்டு.

சண்டே லீடரின் இவ்வார ஏட்டில், விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறியதாக வெளிவந்த செய்தியில், சம்பூரை இராணுவம் கைப்பற்றினால் போர் நிறுத்த ஒப்பந்தம் செயலற்றுப் போகும் என்று கூறியிருக்கும் விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

சிறிலங்கா அரச விமானப் படையினரின் குண்டு வீச்சுக்களும் மாவிலாற்றில் மேற்கொள்ளப்பட்ட பாரிய படையெடுப்புகளும் அப்பட்டமான போர் நிறுத்த மீறல்களாக இருந்தும் கண்காணிப்புக் குழுவோ அனுசரணையாளர்களோ வாய்மூடி மௌனியாக இதுவரை காலம் கடத்திய வரலாற்றுக்கு முடிவுரை எழுதும் நேரம் நெருங்கிவிட்டது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 55 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மகிந்த வெளியிட்ட சம்பூர் செய்தியானது, தமிழ் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பூர் ஆக்கிரமிப்பால் திருமலைத் தளங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அரசியல் செய்தியையும் மகிந்த கூறியுள்ளார்.

இந்நிலையில் திருகோணமலை கடற்படைத் தளத்தின் மீது புலிகளின் ஒரு எறிகணைக் குண்டு வீழ்ந்தாலும் அவரின் வெற்றிச் செய்தி அர்த்தமற்றுப் போகலாம்.

ஆயினும் புலிகளின் தந்திரோபாய நகர்வுகள், அதற்கிசைவாக அமையும் வாய்ப்பினை உருவாக்காது.

அடுத்த நகர்வுகள்

புலிகளின் அழுத்தங்கள் இனி அதிகமாகவே அனுசரணையாளர்கள் மீது திரும்பலாம். போர் நிறுத்த ஒப்பந்த சரத்துக்களை பலமுறை அரசு மீறினாலும் இம்முறை சம்பூர் பிரதேச மீறலானது சாட்சியங்கள் தேவையற்ற ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது.

சம்பூரை விட்டு சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும் என்று புலிகள் கோரிக்கையை முன்வைத்தால் அவர்கள் பதில் நடவடிக்கை எதுவாக இருக்க முடியும்?

இதனை சிறிலங்கா அரசாங்கம் ஏற்காது என்று நோர்வேக்குத் தெரியும்.

இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் புலிகள் நிராகரித்தால் சர்வதேச உலகம் கூறும் பதிலென்ன என்பதில் அடுத்த கட்ட நகர்வு அமையும்.

இப்பொறிக்குள் அகப்பட்டுள்ள நோர்வே, சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்குமா அல்லது தானாகவே வெளியேறுமா என்பதைத் தீர்மானிக்கும் சக்தி இந்தியாவிடமும் இல்லை. மேற்குலகிடமும் இல்லை.

பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று இப்போதே மகிந்த கூறத் தொடங்கிவிட்டார்.

ஆம்

இலங்கைத் தீவின் கள நிலைமையைத் தீர்மானிக்கும் பந்து நோர்வேயின் காலடியின் உள்ளது.

http://www.eelampage.com/?cn=28650

ஆனால் அரசு சொல்கிறது..தான் இணைத்தலைமை நாடுகள் உட்பட இதர நாடுகளுக்கு எல்லாம் திருமலையின் பாதுகாப்பின் முக்கியத்தை எடுத்துச் சொல்லி அதனைப் பாதுகாப்பதற்கான சண்டையையே..யுத்தமல்ல...நடத்திய

மக்களின் கேள்விகளும் குழப்பங்களும்!

சிறிலங்கா இராணுவம் சாம்பூரைக் கைப்பற்றி விட்டது. சாம்பூரின் சில பகுதிகளில் விடுதலைப்புலிகளின் படையணிகள் நிலைகொண்டிருந்தாலும், தற்பொழுது சாம்பூரின் மையப் பகுதி சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கிறது. இது விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டுள்ள ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் இராணுவ வல்லமை குறித்து பெரும் நம்பிக்கை வைத்திருந்த பலர் தற்பொழுது குழப்பத்தோடும் பல கேள்விகளோடும் இருப்பதைக் காண முடிகிறது.

யுத்தங்களில் பின்னடைவுகள் தவிர்க்க முடியாதவை. விடுதலைப்புலிகளும் பல பின்னடைவுகளை சந்தித்தே வந்திருக்கிறார்கள்.

முதலாம் ஈழப் போரில் வடமராட்சியில் நடந்த "ஒபரேசன் லிபறேசன்" விடுதலைப்புலிகளுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இந்திய ஈழப் போரில் யாழ் குடாவை இழந்து வன்னிக் காடுகளுக்குள் மறைந்து இருந்து யுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஈழப் போர் 2இல் கிழக்கு மாகாணம், யாழ் குடாவின் வலிகாமப் பகுதி, தீவகப் பகுதிகள், மன்னார் போன்ற இடங்களை எல்லாம் விடுதலைப்புலிகள் இழந்தார்கள். ஆனையிறவில் நடந்த "ஆகாயம்-கடல்-வெளி நடவடிக்கையும் தொல்வியில் முடிந்ததோடு சிறிலங்கா இராணுவம் வெற்றிலைக்கேணி போன்ற பகுதிகளையும் மேலதிகமாக கைப்பற்றிக் கொண்டது. ஈழப் போர் 3 இல் யாழ் குடா, வன்னியின் பெரும் பகுதி ஆகியன சிறிலங்கா இராணுவத்திடம் வீழ்ந்தன.

தனது பலத்தை ஒரு முகப்படுத்தி பாரிய நீண்ட கால இராணுவ நடவடிக்கை மூலம் ஒரு நிலப்பரப்பை கைப்பற்றுகின்ற வல்லமை சிறிலங்கா இராணுவத்திற்கு உண்டு. இதை பல முறை சிறிலங்கா இராணுவம் நிரூபித்திருக்கிறது. அதே வேளை சரியான திட்டமிடலுடன் கூடிய ஒரு குறுகிய கால இராணுவ நடவடிக்கை மூலம் அப்பகுதிகளை மீட்டெடுக்கின்ற வல்லமையும் புலிகளுக்கு உண்டு. இதையும் விடுதலைப்புலிகள் நிரூபித்திருக்கிறார்கள். ஆகவே இம்முறை நிகழ்ந்திருக்கும் பின்னடைவு குறித்தும் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

ஆனால் இங்கே எழுகின்ற முக்கியமான கேள்வி ஒன்று உண்டு. யுத்தத்தில் இழப்புக்களும் பின்னடைவுகளும் நேருவதை மக்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் ஒரு யுத்த நிறுத்த காலத்தில் போராளிகள், மக்கள் என்று நூற்றுக் கணக்கானோர் பலியாவதையும் மாவிலாறு, சாம்பூர் போன்ற நிலங்களை இழப்பதையும் மக்கள் புரிந்து கொள்வது மிகக் கடினமே.

இந்த இழப்புக்களை விடுதலைப்புலிகள் வைக்கின்ற பொறி என்று வியாக்கியானம் செய்வது சரியாகப் படவில்லை. அப்பாவித்தமிழ் மக்கள் 97 பேரை கொன்றொழித்து, 215 பேரை காயப்படுத்தி, மக்களின் சொத்துக்களை அழித்து, 46 ஆயிரம் மக்களை இடம்பெயரச் செய்து, சம்பூரை தரைமட்டமாக்கிய சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை விடுதலைப்புலிகள் அனுசரணையாளர்களுக்கு வைத்த பொறி என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமாகவே படுகிறது.

சிறிலங்கா இராணுவம் யுத்தத்தை ஆரம்பித்த பின்பும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்கிறோம் என்று விடுதலைப்புலிகள் சொல்கிறார்கள்

இதை விடுதலைப்புலிகளின் பலவீனமாகக் கொள்ள முடியாது. உண்மையைச் சொல்வது என்றால் சிறிலங்கா இராணுவம் ஆளணி, படைக்கலன்ரீதியில் எப்பொழுதும் விடுதலைப்புலிகளை விடப் பலமாகவே இருந்தது, இருக்கிறது. ஆனால் ஒரு கைத்துப்பாக்கியை வைத்துக் கொண்டுதான் பீரங்கிகளோடு நின்ற சிறிலங்கா இராணுவத்தோடு விடுதலைப்புலிகள் யுத்தத்தை ஆரம்பித்தார்கள். தமிழர்களின் வீட்டு வாசல்களில் டாங்கிகளோடு நின்ற ஒரு இலட்சம் இந்திய இராணுவத்தை கனரக ஆயுதங்கள் ஏதும் அற்ற நிலையில் சில ஆயிரம் விடுதலைப்புலிகள் எதிர்த்து சண்டை இட்டார்கள். ஈழப் போர் 2, ஈழப்போர் 3 ஆகியன ஆரம்பிக்கப்பட்ட நேரங்களிலும் சிறிலங்கா இராணுவம் பலமானதாகவே இருந்தது.

ஆயுத பலத்தை விட, ஆன்ம பலத்தை நம்புகின்ற புலிகள் சண்டை இடுவது என்று தீர்மானித்து விட்டால், எந்த நிலையிலும் சண்டையைத் தொடங்குவார்கள். ஆனால் இம் முறை விடுதலைப்புலிகள் கடைப்படிக்கின்ற மர்மமான பொறுமை மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இன்னும் 83 நாட்களில் நிகழவிருக்கும் தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை இக் குழப்பங்களை தீர்த்து வைக்கும் என்று நம்புவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் யுத்தத்தை துடங்க எத்தனையோ காரியங்களை பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.

யுத்தம் நடைப்பெற்றால் யார் அதை துவங்கினது என்ற காரனம் மெலோங்கி நிற்பதோடு தொடர்ந்து யுத்தத்தை செய்வதற்க்கும் நியாயத்தையும் கொடுக்கும்.

இன்று சிங்கள அரசாங்கம் அதை செய்தால் அதை தட்டி கேட்பதற்க்கு யாரும் இல்லை. அனால் அதை புலிகள் செய்யும்போது உலகமே அவர்கள் மீது விரலை நீட்டும்.

அத்துடன், இன்னொன்றையும் ஞாபகத்தில் வைக்கவேண்டும்: அதாவது புலிகள் சிங்களவனோடு மாத்திரம் இல்லை தமிழர்களின் சுய நிர்னயத்திக்கு விரோதமாக செயற்படும் அண்டைய/உலக வல்லரசுகளோடும் செயற்பட வேண்டியுள்ளது.

எனவே போரட்டத்தை நியாயப்படுத்த சூழ்நிலைகளை உருவாக்க வேண்டிய அவசியம் புலிகளுக்கு எற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வெளிப்படையான சாம்பூரை கைப்பற்ற செய்ததை உலகம் ஓர் யுத்தமீறலாக நோக்குமேயனால், அதுவே நடக்கப் போகும் ஈழ்ப்போரின் நியாயமான துவக்கமாகாவும் அமையப் போகின்றது.

எனவே, தற்போது நடந்து முடிந்த தந்திர உபயமான பின்னடைவை தோல்வியாக சித்தரிக்கும் சிலருடைய நரித்தந்திரத்திக்கு உற்படாமல் புலம் பெயந்தோராகிய நாம் செய்ய வேண்டிய கடமையை குறித்து சிந்திப்போம் - செயற்படுவோம்.

தற்போது நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய காரியம், முதலாவது, சிங்கள அரசாங்கம் செய்தது அபட்டமான யுத்தமீரல், அது யுத்தத்தையே நோக்கமாக கொன்டுள்ளது என்ற கறுத்தை உலகுக்கு எடுத்து கூறுவதாகும்.

இன்னும் எத்தனையோ அர்ப்பணிகளையும் செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம்....அதைக்குற

  • தொடங்கியவர்

ஆதுசரி இப்ப சாம்பூரை பிடித்து வத்திருப்பதன் மூலம் யுத்தநிறுத்தம் முறிகப்பட்டு விட்டத்துதனே அப்ப இதி புலிகள் அறிவிக்கலாம் தானே ஏன் தயக்கம் ????

இதோ..பிபிசி செய்தியாய்வு..இப்படிச் சொல்லுது...

Ceasefire 'collapse'

In the latest fighting on Tuesday, the military said that one soldier was killed and four wounded in a rebel mortar attack in a village near Sampur.

Despite the violence, both the government and the rebels continue to stand by the terms of a 2002 truce, which still technically holds.

"Let's hope the military how now ended their offensive, because it could completely collapse the ceasefire agreement," Sri Lanka Monitoring Mission (SLMM) spokesman Thorfinnur Omarsson told Reuters.

"The Tigers are asking us if the truce is over. We certainly hope it is not."

The BBC's Dumeetha Luthra in Colombo says the fall of Sampur is a strategic victory for the government, but adds that analysts believe the Tigers may retaliate elsewhere.

President Mahinda Rajapakse formally announced the capture of the strategically-important town at a rally of the ruling Sri Lanka Freedom Party.

"Our troops have captured Sampur," he said to loud applause. "This is not war, we are only responding to an attack on us."

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/5315192.stm

----------------

இங்கு யாரோ சொல்லிச்சினம்..புலிகள் ஆட்லறிகளோட வெளியேறி...பருத்துறைக்க போகேக்க...ஏதேதோ..நடந்தது என்று...ஆனா...புலிகள் இன்றும் ஆட்லறியால தாக்கி இருக்கினம்...???! மக்களற்ற சம்பூர்....மரணப்பொறி...ஆகலாம்..ஆ

இங்கை பார்ரா மோட்டார் என்பதுக்கும் ஆட்லறிக்கும் வித்தியாசம் தெரியாததை....!

அது சரி புலிகள் சம்பூரில ஆட்லறி வச்சிருக்கிறதா எப்பவாவது அறிவிச்சவையே...??? இங்கை ஒருத்தர் ஆட்லறியால அடிச்சது எண்டு சொல்லுறார்...! மற்றவை பிழையா எதையாவது சொல்லீட்டா குத்துக்கரணம் போடுறவர் இப்ப என்ன செய்யுறார் எண்டு வேடிக்கை பாப்பம்....!

SLA soldier killed, 4 wounded in Muthur - SLBC report

[TamilNet, September 05, 2006 10:43 GMT]

A Sri Lanka Army (SLA) trooper was killed and four wounded when Liberation Tigers of Tamil Eelam (LTTE) fired artillery shell hit the Selvanagar SLA camp in Muthur division Tuesday around 7:15 a.m., according to Sri Lanka government controlled Sri Lanka Broadcasting Corporation (SLBC) report that quoted military officials as saying.

The SLBC report further said the injured soldiers were transferred to Pollonaruwa hospital.

காக்கக் காக்க...செய்திகள்..காக்க...நோக்க நோக்க...குறைப் பார்வைகள்... பொடிபட..! :idea: :P :idea:

- SLA soldier killed, 4 wounded in Muthur - SLBC report

[TamilNet, September 05, 2006 10:43 GMT]

A Sri Lanka Army (SLA) trooper was killed and four wounded when Liberation Tigers of Tamil Eelam (LTTE) fired artillery shell hit the Selvanagar SLA camp in Muthur division Tuesday around 7:15 a.m. , according to Sri Lanka government controlled Sri Lanka Broadcasting Corporation (SLBC) report that quoted military officials as saying.

The SLBC report further said the injured soldiers were transferred to Pollonaruwa hospital.

காக்கக் காக்க...செய்திகள்..காக்க...நோக்க நோக்க...குறைப் பார்வைகள்... பொடிபட..! :idea: :P :idea:

றிப்பீட்டு...! :lol::lol::lol:

Sri Lanka : Army and Tamil Tiger rebels exchange mortars and artillery, 1 soldier killed

Associated Press, Tue September 5, 2006 01:36 EDT . BHARATHA

Tiger rebels attacked an army camp in the eastern village of Selvanagar, using mortars and artillery, said a Defense Ministry official, speaking on condition of anonymity because he was not authorized to speak to the media.

He said troops retaliated by firing artillery in a battle that lasted nearly an hour. One soldier was killed and 13 wounded in the attack, he said.

Details of rebel casualties were not immediately known.

நோக்க நோக்க செய்திகள் நோக்க..சந்தேகம் பொடிபட..! :idea: :P :idea:

Sri Lanka : Army and Tamil Tiger rebels exchange mortars and artillery, 1 soldier killed

Associated Press, Tue September 5, 2006 01:36 EDT . BHARATHA

Tiger rebels attacked an army camp in the eastern village of Selvanagar, using mortars and artillery, said a Defense Ministry official, speaking on condition of anonymity because he was not authorized to speak to the media.

He said troops retaliated by firing artillery in a battle that lasted nearly an hour. One soldier was killed and 13 wounded in the attack, he said.

Details of rebel casualties were not immediately known.

----------------------------

LTTE shells SL army camp near Sampur

Colombo, September 5, 2006

The Sri Lankan Army said that the LTTE maintained an artillery barrage from 7 am to 8 am. The army returned the fire, forcing the LTTE to stop.

நோக்க நோக்க செய்திகள் நோக்க..சந்தேகம் பொடிபட..! :idea: :P :idea:

ஆகா... பிபிசி செய்திகள் எண்டு பினாத்தியது போய் லங்காபுவத் சொல்லுறது எல்லாத்தயும் நம்பிற அளவுக்கு இங்கை உள்ளவை வரவேணும் எண்டு ஒருத்தர் அடம்பிடிக்கிறார் போலகிடக்கு....!

புலிகள் தாங்கள் ஆட்லறியால் அடிச்சவை எண்று சொல்லவில்லை ஆனால் இவர் அரசாங்கம் சொன்னால் புலிகள் சொன்னமதிரி எண்டுறாரா...???

லங்காதீபவும் ஒரு செய்தி வெளியிட்டு இருக்கு அதையும் நம்பி மகிழலாம்...!

http://www.thinakkural.com/news/2006/9/6/s...s_page10126.htm

தினக்குரலில் இருந்து...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.