Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வார்த்தை ஜாலங்களால் ஒரு அரசியல் விளையாட்டு! இன்னும் எத்தினை காலத்துக்கு இந்த சித்து விளையாட்டை அனுமதிப்பார் தமிழர்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை ஜாலங்களால் ஒரு அரசியல் விளையாட்டு! இன்னும் எத்தினை காலத்துக்கு இந்த சித்து விளையாட்டை அனுமதிப்பார் தமிழர்? 

[Tuesday, 2014-03-18 20:04:34]
Parkathe2010.jpg

மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தைப்புதைகுழி தொடர்பாக சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நீதி கோரி அடுத்த மாதம் 12ம் திகதி (12.03.2014 அன்று) மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக கடந்த 12.02.2014 அன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அறிவித்திருந்தார்.

  

ஏன்? எதற்கு?

மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தைப்புதைகுழி விவகாரம், உள்நாட்டு யுத்தத்தினால் உயிரிழந்த, காயமடைந்த நபர்கள் மற்றும் சொத்துகள் பற்றிய கணக்கெடுப்பு முறைகேடுகள், ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழுவின் கிளிநொச்சி அமர்வில் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்ய சென்றோர் அச்சுறுத்தப்பட்டமை, கட்டாய மரணச்சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டமை என்று பல்வேறு ஜனநாயக மறுப்பு சம்பவங்கள், மனித உரிமை மீறல்களை கண்டித்து மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரஜைகள் குழுக்கள் கடந்த 18.03.2014 அன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவதாக முடிவு செய்திருந்தன.

 

செய்திக்கு முந்து செயலுக்கு பிந்து!

பிரஜைகள் குழுக்களின் இந்த முடிவு வவுனியாவில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு இடத்தில் ஒன்றுகூடி பேசப்பட்ட பின்னர் எடுக்கப்பட முடிவாகும். இந்த விடையம் எப்படியோ உண்ணாவிரத புகழ் செல்வம் அடைக்கலநாதனுக்கு கிடைத்து விட்டது.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த விவகாரத்தை தான் கையிலெடுத்தால் அது தேர்தலில் வாக்குகளை சுவீகரிப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்ற நினைப்பும், சிவில் சமுக அமைப்புகளை இந்த விவகாரத்தை கையிலெடுக்க விட்டால் தான் காணாமல் போய்விடுவேன் என்ற பயமும் ஒன்று சேர, உடனே முந்திக்கொண்டு அடுத்த மாதம் 12ம் திகதி, (அதாவது பிரஜைகள் குழுக்கள் தீர்மானித்திருந்த நாளுக்கு 06 நாள்கள் முன்னராக) மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்தார். செல்வம் அடைக்கலநாதனின் இந்த அறிவிப்பால் தாம் நடத்தவிருந்த போராட்டத்தை பிரஜைகள் குழுக்கள் இயல்பாகவே கைவிட நேர்ந்தது.

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துக்கொண்ட ஒரு சமுகத்தின் சமகால பிரச்சினையை இருவேறு குழுக்களாக, இருவேறு நாள்களில் பிரிந்து நின்று வெளிக்கொணர்வது அழகும் ஆரோக்கியமும் அற்றது. ஒருமித்த குரலில் உரக்க சொல்வதே பிரச்சினைக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமையும். எனவே செல்வம் அடைக்கலநாதனின் அறிவிப்பு தமக்கு முன்னர் வெளியாகியதால், “யார் குத்தினாலும் பரவாயில்லை அரிசி ஆகினால் சரி, அதாவது இங்கு போராட்டத்தை யார் நடத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல, எமது பிரச்சினைகளை எப்படி வெளிப்படுத்தப்போகிறோம் என்பதே முக்கியம்” என்று பிரஜைகள் குழுக்கள் தமக்குள் சமரசம் செய்து கொண்டு, செல்வம் அடைக்கலநாதன் அறிவித்த படி 12.03.2014 அன்று நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்வதென முடிவு செய்து கொண்டன.

ஆனால் 12.03.2014 அன்று நடந்தது என்ன?

செல்வம் அடைக்கலநாதனுக்கு அறிக்கைகளை விடுவதும் பின்னர் அவற்றை கடாசி குப்பைத்தொட்டிகளுக்குள் வீசியெறிவதும் சர்வ சாதாரணமானதும், பழக்க தோஸமும் ஆகிவிட்டது. சாகும் வரையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்து விட்டு, எப்படி இன்றுவரை அவரால் உயிருடன் இருக்க முடிகின்றதோ, அதேபோல கடந்த 12.03.2014 அன்றும் தமிழ் பேசும் உலகத்தார் அனைவரினதும் முகங்களில் விபூதியால் பெரியதாய் ஒரு நாமத்தை போட்டு விட்டு, தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று தன்னுடைய அலுவல்களை மட்டும் கவனிக்க தொடங்கி விட்டார்.

இன்று (12.03.2014) மாபெரும் போராட்டத்தை நடத்துவதாக ஊடகங்கள் வாயிலாக பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறோமே, அது பற்றி எவ்வித செயலும் இல்லாமல் இருக்கிறேனே, மக்கள் என்ன நினைப்பார்கள், படித்தவர்கள் என்ன எடை போடுவார்கள், ஊடகங்கள் கேள்வி கேட்குமே என்ற பயம், மனச்சாட்சி உறுத்தல் செல்வம் அடைக்கலநாதனுக்கு சிறுதுளி அளவு தானும் இல்லை.

மனச்சாட்சி உறுத்தல், பயம் இந்த இரண்டும் செல்வம் அடைக்கலநாதனுக்கு இருந்திருந்தால், தனிப்பட்ட தேவைகள், எதிர்பார்ப்புகள், நலன்கள் இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இதய சுத்தியுடன் போராட்டத்தை நடத்துவதாக அவர் முடிவு செய்திருந்தால், போராட்டம் ஒத்தி வைக்கப்படுகின்றது என்றோ, அல்லது போராட்டம் நடைபெறாததன் காரணத்தை விளக்கியோ ஒரு ஊடக அறிக்கையையாவது அவர் விடுத்திருக்கலாம். ஆனால் அவர் அதைக்கூட செய்யவில்லை.

பொழுது விடிந்தால் ஊடகங்களில் படத்தோடு தன்னைப்பற்றிய நல்ல செய்திகள் வர வேண்டும். எல்லோருடைய கவனத்தையும் அதன்பால் தன் பக்கம் திருப்ப வேண்டும் என்கிற இவரது உடக மயக்க வருத்தம், அரசியலுக்கு அப்பால் நின்று மண் சார்ந்து, மக்கள் சார்ந்து உளத்தூய்மையுடன் மிகத்தீவிரமாக பணி செய்கின்ற பிரஜைகள் குழுக்களின் செயல்பாடுகளுக்கு ஆப்பு வைத்திருக்கிறது. உண்மையில் இது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு செல்வம் அடைக்கலநாதனால் இழைக்கப்பட்ட அநீதி ஆகும்.

கேள்வி கேளுங்கள் ஊடகவியலாளர்களே!

அடுத்த மாதம் 12ம் திகதி (12.03.2014 அன்று) மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் விடுத்த அறிவிப்பை, தாங்கள் பணி புரியும் ஊடக நிறுவனங்களுக்கு செய்தியாக அனுப்பி வைத்த நீங்கள், கடந்த 12.03.2014 அன்று அறிவித்தபடி போராட்டம் நடைபெறவில்லை என்றவுடன் நீங்கள் உங்கள் ஊடக கருவிகளுடன் செல்வம் அடைக்கலநாதனை முற்றுகையிடவில்லை. உங்கள் கேள்வி கணைகளால் அவரை நீங்கள் துளைத்தெடுக்கவில்லை. உங்கள் கேள்விகளால் அவரை நீங்கள் ஒரு ஏமாற்று பேர் வழி, மோசடி பேர் வழி என்று இந்த மக்களுக்கு அடையாளப்படுத்தவும் இல்லை. இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க கூடியவாறு எப்போது நீங்கள் செய்தியறிக்கைகளை இடப்போகின்றீர்கள்? உங்களுக்கு அந்த கடமையுணர்வு வரவே வராதா? இப்போதெல்லாம் மக்கள் கேள்வி கேட்க தொடங்கி விட்டார்கள். நீங்கள் எப்போது கேள்வி கேட்க தொடங்கப்போகின்றீர்கள்?

பாரே பார்த்திருக்க முழந்தாழிட்டான்! அந்தோ பரிதாபம் அடைக்கலமானான்!

வடமாகாணசபை தேர்தலில் ரெலோ கட்சி உறுப்பினர்கள் அதிகப்படியான வாக்குகளுடன் வெற்றி பெற வேண்டும், இலங்கை தமிழரசுக்கட்சிக்கு அடுத்தப்படியாக அதிகளவான உறுப்பினர்களுடன் இரண்டாவது பெரும்பான்மையை மாகாணசபையில் பெற வேண்டும் என்பதை இலாப நோக்கமாகக்கொண்டு “தேசிய பிரச்சினைக்கு 2013 ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக” பாராளுமன்றத்தில் 26.11.2012 திங்கள் கிழமை நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் செல்வம் அடைக்கலநாதன் அறிவித்திருந்தார். வடமாகாணசபை தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 06ம், 09ம் இலக்கங்களில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட இவரது கட்சி வேட்பாளர்கள் கூட “2012 நவம்பர் சிறீலங்கா நாடாளுமன்றில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சூளுரைத்தான் தலைவன்.” “தன்மானத்தமிழன்.” “வீரத்தமிழன்.” என்றெல்லாம் போஸ்டர் அடித்து படுதீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மிகவும் விழிப்பாக இருந்த வவுனியா மாவட்ட தமிழ் மக்கள், இவர்களின் ஆளை மசக்கும் பிரசார உத்திகளுக்கு பின்னால் இழுபட்டுப்போகாமல், சூழ்ச்சிகளுக்கு எடுபடாமல், வவுனியா மண்ணில் ரெலோவுக்கு ஒரு ஆசனம் கூட கிடைத்து விடாமல், பார்த்துப்பார்த்து தமது வாக்குகளால் துரத்தியடித்தார்கள்.

வடமாகாணசபை தேர்தல் காலத்தின் கடைசி நேரங்களில் கூட செல்வம் அடைக்கலநாதனிடம், அவரது உண்ணாவிரத அறிவிப்பை மீள ஞாபகப்படுத்தி 08.10.2013 அன்று ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது, “ஆமாம், பாராளுமன்றத்தில் அறிவித்தது போல், நவம்பரில் திட்டமிட்டபடி சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். அதில் எந்த மாற்றுக்கருத்துக்கும், குழப்பத்துக்கும் இடம் இல்லை.” என்று பொய்க்கு மேல் பொய் கூறி ஊடகங்களினதும், தமிழ் மக்களினதும் தலையில் மிளகாய் அரைத்தார் செல்வம் அடைக்கலநாதன்.

இங்கு யாரும் தியாகி திலீபன்கள் இல்லை!

“சாகும் வரையிலான உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்” என்று அறிவிப்பு விடுத்து, ஈழ மண்ணில் என்றைக்கு இவர் தியாகி திலீபனின் உயிரோட்டமான உன்னத அகிம்சை போராட்டத்துக்கு களங்கம் கற்பித்தாரோ, இழுக்குச்சேர்த்தாரோ, என்றைக்கு “சாகும் வரை உண்ணாவிரதம்” என்ற சொல்பதத்தை கொச்சைப்படுத்தினாரோ, அதை நகைப்புக்குரியதாக்கினாரோ, அன்றிலிருந்தே செல்வம் அடைக்கலநாதனின் எந்த ஒரு செய்திகளையும், ஊடக அறிக்கைகளையும் ஊடகங்கள் கண்டுகொள்ளாமலேயே விட்டிருக்க வேண்டும். அவரது முகத்தில் திருப்பி அரைந்தால் போல் அவற்றை பிரசுரிக்காமல் புறக்கணித்திருக்க வேண்டும்.

பகிரங்கமாகவே அறிக்கை விட்டு அதை செயல்படுத்தாமல், தாயகம், தமிழகம், புலம் என்று வாழும் அனைத்து தமிழ் மக்களையும் முட்டாளாக்கியிருக்கிறார் செல்வம் அடைக்கலநாதன். மக்களை முட்டாளாக்க அவர் ஊடகங்களை ஒரு கருவியாக பயன்படுத்தியிருக்கிறார். தமிழ் மக்களின் காதில் பூச்சுற்றி, அவர்களின் நெற்றியில் பட்டை போட்டு, முகத்தில் நாமம் வரைந்து, சாம்பிராணி புகை போடும் செல்வம் அடைக்கலநாதனின் பேச்சுகளுக்கும், அறிக்கைகளுக்கும் தொடர்ந்தும் முக்கியத்துவம் கொடுத்து, அவரை ஆதரித்து, ஊடகங்கள் இனியும் செல்வம் அடைக்கலநாதனின் ஏமாற்று வேலைகளுக்கு துணை போகப்போகின்றனவா? ஒவ்வொரு செய்தித்தளங்கள் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தாமாகவே கெடுத்துக்கொள்ளப்போகின்றனவா? செல்வம் அடைக்கலநாதனின் பசப்பு, மழுப்பல், உலுத்தல் வார்த்தைகளை செய்திகளாக வெளியிட்டு அவநம்பிக்கைகளையும், நம்பிக்கையீனங்களையும் மக்கள் மனதில் தொடர்ந்தும் விதைக்கப்போகின்றனவா? என்பதே தமிழ் பேசும் மக்கள் அனைவரினதும் ஒருமித்த கேள்வி!

“நாம் எப்போதும் பேச்சுக்கு குறைந்தளவு முக்கியத்துவமே கொடுத்து வருகின்றோம். செயலால் வளர்ந்த பின்பே நாம் பேசத்தொடங்க வேண்டும்.” என்று தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் அரும்பெரும் தாரக மந்திரத்தை உலகுக்கு உதிர்த்திருந்தார். கடுகளவும் பிசகாமல், இம்மியளவும் கேள்விக்கு உட்படுத்த முடியாமல் அதேபோல வாழ்ந்தும் சாதித்தும் காட்டியிருந்தார். அவரும் அவர் வழி வந்தவர்களும் எங்கே? இவர்கள் எங்கே?

வடபிராந்திய ஊடகவியலாளர்,

 

-(இ)ராஜபறவை-

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=105963&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.