Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவிபிள்ளையின் அறிக்கை வரவேற்கத்தக்கது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்து மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையினை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
733807-17102725.jpg
 
25ஆவது ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் இடம்பெற்ற, ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் அறிக்கை தொடர்பான விவாதத்தின் போது, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பின்வருமாரு குறிப்பிட்டார்.
 
நாங்கள் இந்த அவைக்கு பல எழுத்து மூல அறிக்கைகளை சமர்ப்பித்திருக்கிறோம். இறுதியாக எம்மால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், 2013 ஆம் ஆண்டு நிரந்தர மக்கள் தீப்பாயத்தினால் கடந்த கால போரின் போதும், தற்போதும் இலங்கைத் தீவில் இன அழிப்பு நடைபெற்று வருகிறது என்று தீர்ப்பளிக்கப்பட்டமையை  சுட்டிக்காட்டியிருந்தோம்
 
நாங்கள் ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை கவனமாக படித்தோம். அதன் பிரகாரம், மூன்று பிரதான பிரிவுகளில் எங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கின்றோம்.
 
இலங்கைத் தீவில் மீள் நல்லிணக்கம் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. எத்தகைய மீள் நல்லிணக்கமும் தற்போதைய இலங்கை அரச கட்டமைப்புக்குள், எண்ணிக்கையில் குறைந்த சனத்தொகையையுடைய தமிழர் தேசமும், எண்ணிக்கையில் அதிக சனத்தொகையை கொண்ட சிங்கள தேசமும் உள்வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும். 
 
சிங்கள தேசத்திற்கு தமிழர் தேசத்துடன் எத்தகைய மீள்நல்லிணக்கத்தையும் மேற்கொள்ளும் நோக்கம் இல்லை என்பதுடன், தமிழர் தேசத்தை சிங்கள பௌத்த இலங்கை என்பதற்குள் ஒன்று கலப்பதையே விரும்புகிறது.
 
உண்மையில் மாற்றுவழி எதுவும் இல்லாததால், தமிழ் மக்களுக்கு தற்போது இருக்கக்கூடிய பரிகாரம் என்பது நாட்டைவிட்டு வெளியேறுவது அல்லது சிங்கள தேசத்துக்குள் ஒன்று கலந்து விடுவதாகும்.
 
பொறுப்பு கூறுவதை பொறுத்த மட்டில், நடைபெற்ற பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் சர்வதேசம் நம்பத் தகுந்த விசாரணையும், அத்துடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கூடானதோ அல்லது தற்காலிக சிறப்பு தீர்ப்பாயத்துக்கூடானதுமான நீதிமுறைச் செயற்பாட்டின் மூலமே பரிகாரம் காணப்பட வேண்டும். 
 
இதற்கு எந்தவித்தித்திலும் குறைவான தரத்திலான விசாரணையானது, மனிதாபிமான சட்டத்தின் பிரயோகத்தையும் சர்வதேச நீதிக்கோட்பாட்டையும் பலவீனமடையச் செய்யும்என குறிப்பிட்டார்.
 

உண்மையில் தமிழ் இனத்தின் பெரிய போர் வாளாக இருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செய்து வரும் வேலைத் திட்டங்கள் யாராலும் செய்ய முடியாதவை . அவருக்கு உலகத் தமிழர் சார்பில் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தமிழ் இனத்தின் பெரிய போர் வாளாக இருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செய்து வரும் வேலைத் திட்டங்கள் யாராலும் செய்ய முடியாதவை . அவருக்கு உலகத் தமிழர் சார்பில் நன்றிகள்

 நன்றிகள்

 

புலிக்குப்பிறந்தது..............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.