Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவிலாறு தொடக்கம் மண்டைதீவு வரை ஒரு இராணுவ ஆய்வு.

Featured Replies

சிறப்புப் பார்வை

மாவிலாறு தொடக்கம் மண்டைதீவு வரை ஒரு இராணுவ ஆய்வு.

http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai

அருமை இப்போது தமிழன் படையின் பலத்தை தம் அறிவிப்பாளர் வீரா மூலம் புலிகல் சொன்னதாகவே எண்ணவேண்டியுள்ளது.அதுவும் இறுதியில் கேள்விகளுடன் முடிக்கப்பட்ட தொகுப்பு நம்பிக்கையை மீளகொண்டுவந்துள்ளது

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

அன்புடன்

ஈழவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி

:arrow: அதை தரவிறக்கம் செய்து பார்வயிட இங்கே அழுத்துங்கள் (Windows Media Player அவசியம்)

நல்லதோர் முயற்ச்சி, இது தமிழர் விடுதலை ஆதரவாளர்கள் பார்க்க வேண்டிய ஒர் பார்வை.

ஆனாலும், உலகத்திற்க்கு உண்மை நிலையை கொன்டுபோக வேண்டும், உலகம் உன்மையை அறிய வேண்டும். அதற்க்காக யாரும் முயற்ச்சி செய்ததாகவோ, முயற்ச்சி செய்வதாகவோ தெரியவில்லை.

அது ஆங்கிலத்தில் எல்லோருக்கும் இலகுவாக புரியக்கூடியதாகவும் இருக்கவேன்டும்.

அன்மையில், நடந்த செஞ்சோலை படுகொலையை விடியோ வாயிலாக தெரிந்த எல்லோருக்கும் எடுத்துச் சொல்ல வெளிக்கிட்டேன். ஒரு கிழமைக்குப் பின் கொடுக்கப்பட்ட வலைப்பகுதியில் அது கானப்படவில்லை. அதை நான் தரமிரக்கிப் பார்த்தப்படியால் அங்கு பதிவு செயப்பட்டிருந்தது. அனேகருக்கு CD யில் பதிந்து கொடுக்ககூடியதாக இருந்தது.

ஆனாலும், அது மிகவும் நீன்டதாக இருப்பதால் எனது Mobile Phone ல் போட்டு காட்டக்கூடியதாக இருக்கவில்லை. அதை எடிட் பண்ணி சிரியதாக்கி மோபைலில் போட்டு காட்டினேன்.

இன்று உலகம் வெகு விறைவாக போய் கொண்டிருக்கிறது. சனங்கள் நின்று 15-20 நிமிடங்களுக்கு அதை பர்க்க மாட்டாது.

எனவே, நாங்களும் தற்க்காளத்திக்கு ஏற்றவாறு எமது தொடர்பு உபாய முறைகளைப் பிரயோகிக்க வேண்டும்.

எனவே, இங்கு யாழ் களத்தை சேர்ந்தவர்கள் இப்படியான காரியங்களைப் பற்றி கலந்தாலோசிக்காமல் அற்ப சொற்ப்ப காறியங்களிலும், ஒருவரை ஒருவர் சீண்டுவதிலும், ஒரு சில வேளைகளில் ஒருவரை ஒருவர் தடவிக்கொள்வதிலும் காலத்தை விரயமாற்க்குவதை தவிர்த்து, கால சமோய சித்தமாக சிந்திக்க தலைப்பட வேண்டும்.

உங்களுக்குத் தெரிந்த வலை கள நிர்வாகிகள்/ ஆசிரியர்கள் இருந்தால் அவர்களிடம் எடுத்துக் கூறுங்கள்.

- சிந்திப்போம், செயற்படுவோம் -

ஈழவன் உதை கொண்டே காட்டி மிச்ச பந்தயத்தை கட்டுங்கோ.

மனித அவலத்தை எல்லாருக்கும் காட்டுங்கோ. உதுகளை காட்டி வீராப்பு கதைக்காதேங்கோ.

ஈழவன் உதை கொண்டே காட்டி மிச்ச பந்தயத்தை கட்டுங்கோ.

மனித அவலத்தை எல்லாருக்கும் காட்டுங்கோ. உதுகளை காட்டி வீராப்பு கதைக்காதேங்கோ.

:):D நக்கல் என்னால் முடிந்ததை நான் செய்கின்றேன் எனது பல்கலைகழக விரிவுரையாளர்கள்,என்சக மாணவர்கள் கு எடுத்துக்கூறிக்கொண்டே இருக்கின்றேன்.ஒரு விரிவுரையாளர் கடந்த மாவீரர் தினத்துக்கு வருகைதர வைத்தேன் ஏன் சாவிலிம் வாழ்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரை கூட ஆற்றினார்.எனக்கு ஒரு விருப்பம் எம் கள உறவுகளில் யாராவது எமது விடுதலை போராட்டம் சம்பந்தமான விவரணபடங்களை ஒன்றிணத்து ஒரு தகவல் பெட்டகமாக ஆக்குவதற்கு உதவுவீர்களா.அது ஆங்கில மொழியிலும் இருக்கவேண்டும் அதன் மூலம் எமக்கு தெரிந்தவர்கள்,எம் தொகுதி பாராளமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பும் போது விரைவில் ஆதார பூர்வமாக எமது நிலையை விளங்கபடுத்தலாம்.

அன்புடன்

ஈழவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:):D:D:D:D
  • தொடங்கியவர்

புலிகளின் வேட்டய பாத்தீங்களா. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைக்கு தமிழ் சமுதாயம் சினிமாவிலே மூழ்கிப்போய் தத்தளிக்கிறது... அதிலிருந்து விடுவித்தப்பாடில்லை. உலகத்திலே சினிமாவிலே சாதனை படைத்தவர்கள் தமிழர் மாத்திரமே. ஒரு வருடத்தில் அதிகூடிய எண்ணிக்கையில் வெளிவருவது தமிழ் படங்களே. அனேகர் இதைப்பற்றி டம்பம் அடித்துக் கொண்டிருக்கிரார்கள்.... இதன் அனர்த்தத்தை யாரும் புரிந்து கொண்டதாக இல்லை.

இந்த சினிமா போக்கிலெ சிந்திக்க தொடங்கிய இந்த தமிழ் சனத்திற்க்கு தமிழ் விடுதலை போராட்டத்தின் முழுநோக்கும் ஒர் சினிமாவைப் போலவே காட்சி தருகின்றது.

முழுமையான விடுதலையின் நோக்கை கொண்டவர்களாகவோ அதைப் பின்பற்றுகிறவர்களாகவோ தெரியவில்லை

ஈழவன்:

இப்ப, உங்கள் தேவையே உண்மையான அவசியமானதாகவும் அவசரமானதகவும் காணப்படுகின்றது. யாரும் முன்வருவார்களா?????

~ சிந்திப்போம் - செயற்படுவோம் ~

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவன் உதை கொண்டே காட்டி மிச்ச பந்தயத்தை கட்டுங்கோ.

மனித அவலத்தை எல்லாருக்கும் காட்டுங்கோ. உதுகளை காட்டி வீராப்பு கதைக்காதேங்கோ.

கூட்டத்தில் நின்று கல்லெறிவது மட்டும் தான் முடியுது. அது தான் சனம் அங்கால புழுகித் தள்ளுவதை நம்புது. அதற்கு என்ன தீர்வு வைச்சிருக்கு எண்டு கேட்டால் கப்சிப்!

கூட்டத்தில் நின்று கல்லெறிவது மட்டும் தான் முடியுது. அது தான் சனம் அங்கால புழுகித் தள்ளுவதை நம்புது. அதற்கு என்ன தீர்வு வைச்சிருக்கு எண்டு கேட்டால் கப்சிப்!

இங்க சிலதுகள் அண்ணாந்து கொண்டே எச்தில் துபேக்கில கூட்டத்தில் இருந்து கல் எறிவது பரவாயில்லை.சும்மா இருந்து தெசியத்துக்கு ஆதரவு ஆதரவு எண்டு வாய்கிழிய சில கழுதைகளுக்கு வாயை விட்டல் வேறோண்டும் தெரியாது.உங்கல் ஆதரவை கொண்டுபோய் குப்பையில போடுங்க அண்ணாத்தை

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம். சம்புூர் போகுது என்றால் இங்கால் அழுது கொண்டும், நகைச்சுவைப் பகுதியில் சிரித்து விளையாடிய கழுதைகளையும் நாமும் பார்த்தனாங்கள். சும்மா கருத்து வைக்க வேண்டும் என்பதற்காக கத்திக் குழறும் கழுதைகளை அறியாதது அல்ல.

தேசியத்துக்கு ஆதரவு என்று ஒரே கொள்கையில் அவங்கள் இருக்கின்றார்கள், புலத்தில் இருந்தபடி, வெற்றி பெற்றால் தான் ஆதரவு என்று வாய் கிளியக் கத்தும் கழுதைகளுக்கு, சூடு வைத்தால் தான் திருந்துங்கள்!

எங்கள் ஆதரவை எங்கே கொண்டு போய்ப் போட வேணும் எண்டு தீர்மானிப்பதற்கு நீர் யார் எண்டு தெரியவில்லை அண்ணாத்தை. அப்படிப் பெரிய பதவியில் இருக்கின்றீரோ! கேவலம்!

சும்மா வியாக்கியானம் கததித்து பொழுதை போக்கும் கழுதைகளீன் சகோதரர்களை எங்களூக்கு தெரியும் அண்ணாத்தை அண்ணாந்து பாத்து கொண்டு துப்ப்ரிர கும்பல் யாரு எண்டு யாழ் அறியும்.

திண்டுவிட்டு ஏவறைவிடுவதற்கு இங்கு சில கூட்டம் வருக்குது துயவன்!!!.

தெசியத்துக்கு ஆதரவு எண்டு கொண்டு இங்கயிருந்து பினாதிர கழுதை கூட்டங்களையும் தெர்ரியும் குழம்பிய இந்தியக்குட்டைக்குள் மீன்பிடிக்க நினைக்கும் மந்திகள் யாரேண்டு உங்களுக்கு தெரியுமா தூயவன்

ஓமோம் தூயவன் சாம்பூர் பிடித்திடாங்கள் எண்டு நீங்கள் வீட்டில வேலைக்கு போகாமல் கறுப்பு உடை அணிந்து சோகம் கொண்ட்டாடினீங்க எண்டு இங்கு எல்லாருக்கும் தெரியும்.

அது சரி ஒரு சதம் செலவழிக்காமல் காசை போத்திக்கொண்டு வாய்கிளிய ஆதரவு ஆதரவு எண்டு சொல்லிறதை விட உங்கள் ஆதரவை கொண்டு போய் போட சொன்ன இடத்தில் போடலாமே.

:lol::lol::D

கூட்டத்தில் நின்று கல்லெறிவது மட்டும் தான் முடியுது. அது தான் சனம் அங்கால புழுகித் தள்ளுவதை நம்புது. அதற்கு என்ன தீர்வு வைச்சிருக்கு எண்டு கேட்டால் கப்சிப்!

மக்கள் புழுகுகளை நம்பினால் எல்லாரும் போட்டி போட்டி கொண்டு புழுகுவதா? புலிகளிற்கு வால்பிடிப்பதும் மிகுதிக்கு புழுகி மக்களை மகிழ்விப்பதற்கு பெயர் தான் தேசிய ஆதரவு ஊடகமா? மக்கள் புழுகுகளை நம்பாது தெளிவும் விளிப்புணர்வும் பெறக்கூடிய நிலையிக்கு அவர்களை பக்குவப்படுத்திற மாபெரும் கடமை ஊடகங்களிற்கு இருக்கு. இன்று புலம்பெயர்ந்த சமூகத்தில் அவர்களை நோக்கி இயங்குகின்ற ஊடகங்களில் ஆங்கிலத்தில் உள்ள சிலவற்றை தவிர மிகுதி அனைத்தும் tabloid பாணியில் தான் இயங்குகின்றன. tabloid பாணியில் இயங்குபவை மக்களை சிந்திக்க தூண்டாது தெளிவு பெற உதவாது விளிப்புணர்வு அடையவும் உதவபோவது இல்லை. அவை பொழுது போக்கவும் உணர்ச்சிப்பசிக்கு தீனியாக 5 நிமிட அவதானத்தை பெறுபவையாகத்தான் இருக்கப்போகிறது. மற்றவர்களுடன் கருத்தாடும் பொழுது விளக்கங்கள் கொடுக்கும் பொழுது குறிப்பாக புலம்பெயர்ந்தவர்கள் தமது அடுத்த சந்ததிக்கு, வேற்று இனத்தவர்களிற்கு விளக்கம் கொடுக்கும் பொழுது எத்தனை தடவை எமது புலம்பெயர்ந்த சமூகத்தில் இயங்கும் ஊடகங்களில் வெளிவருபவற்றை மேற்கோள்காட்டியே இல்லை உதவியாக ஆதாரமாக வைத்து உங்கள் நிலைப்பாட்டை விளக்கக்கூடியதாக இருக்கிறது?

தற்போது உள்ள நாட்டு நிலமைகள் பற்றி இங்கு பரிமாறப்படும் கருத்துக்களும் பல்வேறுபட்ட ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் கண்ணோட்டங்கள் கலந்துரையாடல்கள் கட்டுரைகள் என்பன ஒரு அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட இனத்தின் நியாயமான தேசிய விடுதலைப்போராட்டத்தைப்பற்ற

குறுகிய கண்ணோட்டத்தில் இராணுவ வெற்றிச் செய்திகளை சொல்லித்தான் எமது போராட்டத்தின் ஆதரவை தக்கவைக்கலாம் என்ற பரிதாப நிலையில் இருக்கு என்பது நகைப்பிற்கிடமானது. அதுவும் தற்போதைய பிரகடனப்படுத்தப்படாத சண்டைகளும் யுத்தநிறுத்தத்தில் இருந்து 2 தரப்புமே வெளியேறாத சூழ்நிலையை விளங்கிக் கொள்ள முடியாத அறிவிலிகளாக தெளிவற்ற நிலையில் எமது மக்கள் இருக்கிறார்கள் என்றால் அதுதான் எமது மோசமான பலவீனமாக எதிர்காலத்தில் இருக்கப் போகிறது.

எமது ஊடகங்களில் வரும் செய்திகள், கட்டுரைகள், கலந்துரையாடல்கள், கண்ணோட்டங்களில் எத்தனை வீதம் இராணுபார்வையில் எத்தனைவீதம் மனிதாபிமான பார்வையில் இருக்கிறது? இங்கு களத்தில் நடத்தப்படும் கருத்தாடல்களில் எத்தனைவீதம் அங்கு நடக்கும் மனித அவலங்கள் பற்றியது?

இராணுவ வெற்றிகளை அவசர அவசரமாக புலம்பெயர்ந்தவர்களிற்கு அறிவித்து என்ன பயன் வரப்போகுது? தற்பாதுகாப்பு யுத்தத்தில் இடுபடுபவதாக சொல்லப்படுகிறது சிறீலங்கா அரசபடைகள் யுத்த நிறுத்த விதிகளை மீறி பலவிதமான அடக்கு முறைகளை பயணத்தடை, பொருளாதார தடை, அப்பாவி மக்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் படுகொலைகள் என்று நீண்டு செல்கிறது. இவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து வெளியிட்டு தமிழர்கள் யுத்தநிறுத்தத்தின் பெயரால் சர்வதேச கண்காணிப்புக்குழுவின் முன்னிலையில் அடக்கப்படுகிறார்கள் படுகொலைசெய்யப்படுகிறார்கள் இன அழிப்பு நடைபெடுகிறது என்ற கண்ணோட்டத்திற்கு இல்லாத முன்னுரிமை ஏன் தற்பொழுது இராணுவ கண்ணோட்டத்திற்கு? பிரகடனப்படுத்தப்பட்ட போரில் 2 தரப்பும் முழு அளவில் யுத்தத்தில் ஈடுபடும் பொழுது இராணுவ கண்ணோட்டத்தில் தமிழர் படையின் முன்னேற்றங்களை வெற்றிகளை தேவைக்கு ஏற்ற அளவில் அறிவிப்பது வேறு விடையம்.

ஊடகங்கள் இராணுவ கண்ணோட்டத்தின் மூலம் என்னவென்று புலம்பெயர்ந்த மக்களை பரப்புரைக்கு தயார்படுத்தும்? அவை சொல்லும் செய்தி எல்லாம் அடித்துபிடிக்கலாம் வெற்றிச்செய்தியை உங்கள் சின்னத்திரை ஊடாக எதிர்பாருங்கள் என்பதைவிட? இதற்கு பிறகு மக்கள் பரப்புரை பற்றி சிந்திப்பார்களோ? சரி அப்படி சிந்திக்கு முனைவர்களிற்கும் எப்படி இந்த கண்ணோட்டங்கள் உதவப் போகிறது? வெளிநாடுகளில் உள்ள மற்ற இனத்தவரோடு உறவாடி தாயகத்து நிலமைகளை விவரிக்க இந்த ஊடகங்கள் ஆதாரங்கள் விவரணங்களை ஏதாவது தருகின்றனவா? அவர்களிடம் என்னத் சொல்ல? மறைன் அடிக்கும் புத்தம் புது pf89 ஆலை அடிக்கப்போறாங்கள் எங்கடை பெடியள், தேசிய தலமையின் சுட்டுவிரலை பாத்துக் கொண்டு இருக்கிறம் எண்ணுவதா?

இன்றுள்ள கள நிலமைக்கும் புலம்பெயர்ந்த மக்களிடம் எதிர்பார்க்கப்படும் பணிகள் பங்களிப்புகளிற்கும் ஊடகங்களின் நடத்தைக்கும் பாரிய முரண்பாடுகள் இருக்கு.

இந்த இணைப்பை பாருங்கள்

??????

****

இவை உண்மையோ

**** இணைப்பு நீக்கப்பட்டுள்ளது - மோகன்

இராணுவக் கண்ணோட்டங்களோடு, மனிதாபிமானப் பிரச்சனைகளையும் விவாதியுங்கள் என்ற கருப்பொருளில் நீங்கள் சொல்லியிருந்தால் அது ஒரு வேளை நியாயமாக இருக்கலாம். ஆனால், மனிதாபிமானத்தைப் பற்றி மட்டுமே கதையுங்கள் என்று சொல்லி, ராணுவ வெற்றிகளைப் பற்றிக் கதைக்கவே கூடாது என்று சொல்வதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை.

வெற்றியே இல்லை என்றால், அந்தப் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டு விடும். அதைப் பற்றிக் காலங்களில் வெளிப்படுத்தித் தான் ஆகவேண்டும். எனவே இதைத் தான் கதைக்க வேண்டும் என்று குறுகிய வட்டமாக நீங்கள் சொல்லி வந்தால், அவர்களின் வட்டத்திற்கும், உங்களின் வட்டத்திற்கும் என்ன வேறுபாடு!

இதுதான் எனது கருத்தும்....!

குறுகிய கண்ணோட்டத்தில் இராணுவ வெற்றிச் செய்திகளை சொல்லித்தான் எமது போராட்டத்தின் ஆதரவை தக்கவைக்கலாம் என்ற பரிதாப நிலையில் இருக்கு என்பது நகைப்பிற்கிடமானது. அதுவும் தற்போதைய பிரகடனப்படுத்தப்படாத சண்டைகளும் யுத்தநிறுத்தத்தில் இருந்து 2 தரப்புமே வெளியேறாத சூழ்நிலையை விளங்கிக் கொள்ள முடியாத அறிவிலிகளாக தெளிவற்ற நிலையில் எமது மக்கள் இருக்கிறார்கள் என்றால் அதுதான் எமது மோசமான பலவீனமாக எதிர்காலத்தில் இருக்கப் போகிறது.

எமது ஊடகங்களில் வரும் செய்திகள், கட்டுரைகள், கலந்துரையாடல்கள், கண்ணோட்டங்களில் எத்தனை வீதம் இராணுபார்வையில் எத்தனைவீதம் மனிதாபிமான பார்வையில் இருக்கிறது? இங்கு களத்தில் நடத்தப்படும் கருத்தாடல்களில் எத்தனைவீதம் அங்கு நடக்கும் மனித அவலங்கள் பற்றியது?

வெற்றிகள் அற்ற போராட்டம் என்பதை யாரும் வரவேற்பார்கள் என்கிறீர்களா..??? உதாரணத்துக்கு பல அமைப்புக்கள் தோண்றின அரசியல் வேலையும் செய்து மனிதாபிமானம் பேசி குப்பை கொட்டுகிறார்கள்...! அவர்கள் உண்மையான மனிதாபிமானிகளா என்பது வேற கதை...! இப்போ அவர்களுக்கான மக்களின் ஆதரவு நிலைதான் என்ன...??

போராட்ட ஆரம்பகாலத்தில் மனிதாபிமானம் எல்லாம் பேசி சுற்றி வந்தவர்கள்... இந்திய அரசின் ஆசை வார்த்தைக்கு இணைக்கி ஆயுதப்பயிற்சி எடுத்தார்கள்... போராடாமல் மறைந்து வாழ்ந்து திரிந்து, கையில் இருந்த ஆயுதம் தந்த உற்சாகத்தில் மற்றய குழுக்களுக்கு மிரட்டல் விட்டவாறும் திரிந்தனர்....( ஆதாரம் நிதர்சனம் வெளியீடான "விடுதலை தீப்பொறி" DVDயில் தலைவரின் சொற்கள்...) ஒருநாள் சண்டைக்களங்களை கண்டவர்கள் மிரண்டு எழுந்தபோது ஓடி ஒழிந்து கொண்டனர்... பயத்தில் ஒழிந்து கொண்டவர்கள் இப்போ பேசும் மனித உரிமைகளையும், ஜனநாயகம் எனும் கேவலத்தயும் தான் அவர்களால் பேசமுடிகிறது...! அவர்களுக்கு மக்களினதான ஆதரவு என்ன..??? அவர்களால் தங்களின் உரிமைகளை வெல்ல முடியும் எண்று மக்களை நம்பவைக்க முடிகிறதா...???

உலகநாடுகளை ஏமாற்ற வேண்டுமானால் சமாதான வேடத்தையும் ஜனநாயக வேடத்தையும் போடலாம்...! ஆனால் வெற்றிகள் இல்லாது தாயகம் மீட்பது என்பதை இலங்கை படைகளை பற்றி தெரிந்தவர்களிடம் சொன்னால் எடுபடாது... சொந்த மண்ணில் பயந்து ஓடி ஒளிந்தவர்கள்தான் புலம் பெயர்ந்தவர்கள்... ஆனால் அவர்களும், புலத்து மக்கள் எல்லாம் எதிரியாய் பார்ப்பது சிங்கள அரசியல் வாதிகளையும், இராணுவத்தினரையும்தான்..! சிங்கள மக்களை கொல்லப்படுவதை இட்டு கவலை கொண்டவர்கள்தான் எல்லோரும்.... மனிதாபிமானம் அற்றவர்களாக அவர்களை சித்தரிப்பது மிக கொடூரமான செயல்...!

இந்த இணைப்பை பாருங்கள்

??????

****

இவை உண்மையோ

போர் போர் என்று முழக்கி...அழிஞ்சதெல்லாம்..தமிழ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதைப் பார்த்தும் திருந்தாத ஜென்மங்கள்..... வியாக்கியானம் எழுதினம்.

போரின் அழிவுகள் அல்ல வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது. பெறப்படும் வெற்றி..அது அரசியல் ரீதியாக இருக்கட்டும்..இராஜதந்திர ரீதியா இருக்கட்டும்..குறைந்த இழப்புகளுடனான இராணுவ வெற்றிகளாட்டும்..பெருமிழப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகள் சும்மா வியாக்கியானம் எழுதாமல் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானதாக இந்த படங்கள் இருப்பதால் உமது எதிர்ப்பை காட்டலாம் தானே..?

கிட்லர் காலத்தில் இருந்து எதிரிகள் இப்படியான படங்களைப் பிரசுரித்து எதிராளிகளினதும் மக்களினதும் மனோ வலிமையை சிதறடிக்க முனைவது ஒன்றும் புதிதல்ல..! அமெரிக்கா கூட செய்கிறது. அதையெல்லாம் ஏன் சர்வதேச சட்டங்கள் தடுக்கவில்லை. புரூண்டியில்..நடந்தவை என்ன...??! இப்படிப் பல உதாரணங்கள். இவற்றைத் தவிர்க்க வேண்டியது புலிகளே அன்றி..சர்வதேசச் சட்டங்கள் அல்ல..! போராளிகளின் உடலை எதிரியிடம் கையளிப்பதால் வரும் பாதங்களை போர்க்களத்தில் உள்ளவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்..! களச்சமர்களின் தீவிரத்தன்மையையே இப்படங்கள் சுட்டிக்காட்டுகின்றன..! இவை வெளியில் சொல்லப்படுவதற்கு மாறாக...உள்ளதாகவே தென்படுகிறது..! :shock: :roll: :idea:

புலிகளுக்கு சண்டை பற்றி அறிவுரை வளங்க விரும்புபவர்கள் களத்தில் சண்டைபிடித்து அங்கு இருந்து அதனை பற்றி அறிந்த பின்னர் வளங்குவது நல்லது...!

சண்டை என்பது திட்டமிட்டவாறு நடப்பது மட்டும் அல்ல...! அணியில் இருக்கும் ஒருவர் விடும் சிறு தவறு கூட பலரின் உயிரைக்குடிக்கும்...! அதுகாகத்தான் கடுமையான பயிற்ச்சி இலகுவான சண்டை எண்று கிட்டண்ணா பயிற்ச்சிக்கான தேவையை சொன்னவர்... அப்படி இருந்து தவறுகள் நடப்பதை தடுக்க முடியாது...!

இதனை களமுனைகள் கண்டவர்கள் அறிவார்கள்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.