Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தேசங்களுக்கு விரிவுபடுத்தப்படும் ‘புலிவேட்டை’ – செயற்பாட்டாளர்களும், அமைப்புக்களும் இலக்கு!

Featured Replies

மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் உயிரூட்டம் பெறுவதைத் தடுத்தும் நிறுத்தும் எதிர்ப்புரட்சி நடவடிக்கைளின் போர்வையில் தமிழீழ தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘புலிவேட்டையை’ புலம்பெயர்தேசங்களுக்கு விரிவுபடுத்துவதற்கான ஆயத்தங்களை சிங்களம் மேற்கொண்டுள்ளது.

இதற்கான முன்னோடியாக புலம்பெயர் தேசங்களில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுமுக அமைப்புக்கள் எனக் கருதப்படும் அமைப்புக்களையும், அவ் அமைப்புக்களுக்கு தலைமை தாங்குபவர்கள் எனக் கருதப்படுவோரையும் தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தலை சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சு தயாரித்திருப்பதாக கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் இளையோர் அமைப்பு, தமிழீழ மக்களவை, உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் இயக்கம், கனடிய தமிழ் கொங்கிரஸ், கனடிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் நிவாரண நிதியம் உள்ளடங்கலான பதினாறு புலம்பெயர் அமைப்புக்கள் சிறீலங்கா அரசாங்கத்தின் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று தற்பொழுது தமிழ்த் தேசிய செயற்பாடுகளிலிருந்து முற்றுமுழுதாக ஒதுங்கியுள்ள பேரின்பநாயகம் நெடியவன், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்கலாநிதி இம்மானுவேல் அடிகளார் போன்றவர்கள் சிறீலங்கா அரசாங்கத்தின் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதனைவிட புலம்பெயர் தேசங்களில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் எனக் கருதப்படுவோரின் விபரக் கோவைகளை அவர்கள் வசிக்கும் நாடுகளின் அரசாங்கங்களிடம் கையளிப்பதற்கும், இவர்களைத் தேடப்படும் நபர்களாக அனைத்துலக காவல்துறையின் (இன்ரர்போல்) பட்டியலில் இணைப்பதற்கும் சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக டெய்லி மிரர் நாளேடு குறிப்பிட்டுள்ளது.

 

http://www.sankathi24.com/news/39975/64//d,fullart.aspx

அப்பாடியோவ்... பில்டப்பிற்கு குறைவில்லை.

ரோகம் ஜெனோசைட்ரத்னா இப்பிடி தான் புரளி தொடக்கி $53,000 தண்டம் கட்ட வேண்டி வந்திருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

சங்கதி இதைப்பற்றி எழுதுவது என்பது ஆச்சரியமாக உள்ளது. வழமை போல நடேசன் அண்ணாவின் மின்னஞ்சலைக் களவெடுத்து எழுதுவுதும், மற்றய அமைப்புக்களைப் பற்றியே தூர்வாரிக் கொண்டிருப்பதையும் தானே செய்ய வேண்டும்?

தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று தடைசெய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்மனித்துள்ளது.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் கொண்டு வந்த பிரேணை வெற்றிபெற்ற நிலையில், அரசாங்கம் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதுவும் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்காவினால் 28.9.2001ல் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 மூலமாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இரட்டை கோபுரங்களில் தாக்குதல் அடுத்து ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா சமர்பித்த இந்ந பிரேரணை, வெளிநாடுகளில் இருந்து தீவிரவாத அமைப்புக்களை தடை செய்யும் அதிகாரம் கொண்டது.

இதன் அடிப்படையில்,இலங்கை அரசாங்கம் அமெரிக்கா உட்பட கனடா,பிரித்தானியா ,நோர்வே, இத்தாலி,சுவிட்சர்லாந்து,பிரான்ஸ்,அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இயங்கும் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்களை தடைசெய்து பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த இயக்கங்களில் நியுயோர்க்கிலிருந்து செயல்படும் இடைக்கால தமிழீழ அரசாங்கம்;,கத்தோலிக்க குரு. அருட்தந்தை. இமானுவேலின் அகில உலக தமிழ் முன்னணி, நெடியவனின் விடுதலைப்புலிகள் அமைப்பு, விநாயகம் என்று அழைக்கப்படும் விநாயக மூர்த்தியின் புலிகள் ஆதரவு இயக்கம் ஆகியவை அடங்;கும்.

வெளிவிவகார அமைச்சு ஜி.எல் பீரிசினால் முழு விபரங்கள் இந்த வாரம் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் பதினைந்து மேலதிக இயக்கங்களும் இப்போது தடைசெய்யப்படுகின்றன.இலங்கையிலிருந்து இந்த இயக்கங்களுடன் தொடர்பு வைத்து கொள்பவர்களும் அவற்றின் நிதி உதவிகளை பெறுவோரும் குற்றவாளிகளாக காணப்படுவார்கள்
முக்கியமாக பின் வருபவர்களிடம் தொடர்பு வைத்திருக்கும் எவரும் குற்றவாளிகளாக கருதபட்டு கைது செய்யப்படலாம்:
1.    நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன்
2.    குத்தோலிக்க மத குரு அருட்தந்தை. இமானுவேல்
3.    விஸ்வநாதன் ருத்திரகுமாரன்
4.    விநாயகம் எனப்படும் சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி
இவர்களும், இவர்களது இயக்கங்களும் தடைசெய்யப்பட்டமை என்று அந்தந்த நாடுகளுக்கு தெரிவிக்க இலங்கை அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தடைசெய்யப்படவுள்ள இயக்கங்கள்

1.தமிழீழ விடுதலை புலிகள்
2.தமிழ் புனர்வாழ்வு அமைப்பு
3.தமிழ் ஒருங்கிணைப்பு குழு
4.பிரித்தானிய தமிழ் மன்றம்
5.உலக தமிழ் இயக்கம்
6.கனேடிய தழிழ் காங்கிரஸ்
7.அவுஸ்திரேலிய தழிழ் காங்கிரஸ்
8.உலக தமிழ் மன்றம்
9.கனேடிய தழிழர்களுக்கான தேசிய பேரவை
10. தேசிய தழிழ் பேரவை
11.தமிழ் இளைஞ்சர் அமைப்பு
12.உலக தழிழர் ஒருங்கமைப்பு குழு
13.தழிழீழ நாடு கடந்த அரசாங்கம்
14.தழிழீழ மக்கள் கூட்டம்
15.உலக தழிழ் நிவாரண நிதியம்
16.தலைமை காரியாலய குழு
ஆகிய அமைப்புகளுக்கே தடைவிதிக்கப்படவுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/105274--15-.html

  • கருத்துக்கள உறவுகள்

5862e8059a94cccc7dfdc6eba5b9a08a.jpg

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையதாக நம்பப்படும் 15 பயங்கரவாத இயக்கங்களை தடைசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் கொண்டு வந்த பிரேணை வெற்றிபெற்ற நிலையில் அரசாங்கம் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
 
அத்துடன் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்காவினால் 28.9.2001ல் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 மூலமாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
 
இரட்டை கோபுரங்களில் தாக்குதலை அடுத்து ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா சமர்பித்த இந்ந பிரேரணைக்கு வெளிநாடுகளில் இருந்து தீவிரவாத அமைப்புக்களை தடை செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டது.
 
இதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அமெரிக்கா, கனடா,பிரித்தானியா நோர்வே, இத்தாலி,சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இயங்கும் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்களை தடைசெய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
இதில்  நியூயோர்க்கிலிருந்து செயல்படும் இடைக்கால தமிழீழ அரசாங்கம்;,கத்தோலிக்க குரு. அருட்தந்தை. இமானுவேலின் அகில உலக தமிழ் முன்னணி, நெடியவனின் விடுதலைப்புலிகள் அமைப்பு, விநாயக மூர்த்தியின் புலிகள் ஆதரவு இயக்கம் ஆகியவை உள்ளடங்கும்.
 
மேலும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் 15 மேலதிக இயக்கங்களும் தடைசெய்யப்படவுள்ளன அவையாவன
 
1.தமிழீழ விடுதலைப் புலிகள்
2.தமிழ் புனர்வாழ்வு அமைப்பு
3..தமிழ் ஒருங்கிணைப்பு குழு
4.பிரித்தானிய தமிழ் மன்றம்
5.உலக தமிழ் இயக்கம்
6.கனேடிய தழிழ் காங்கிரஸ்
7.அவுஸ்திரேலிய தழிழ் காங்கிரஸ்
8.உலக தமிழ் மன்றம்
9.கனேடிய தழிழர்களுக்கான தேசிய பேரவை
10.தேசிய தழிழ் பேரவை
11.தமிழ் இளைஞர் அமைப்பு
12.உலக தழிழர் ஒருங்கமைப்பு குழு
13.தழிழீழ நாடு கடந்த அரசாங்கம்
14.தழிழீழ மக்கள் கூட்டம்
15.உலக தழிழ் நிவாரண நிதியம்
16.தலைமை காரியாலய குழு
 
ஆகிய அமைப்புக்களாகும்
 
மேலும் இலங்கையிலிருந்து இந்த இயக்கங்களுடன் தொடர்பு வைத்து கொள்பவர்களும் அவற்றின் நிதி உதவிகளை பெறுவோரும் குற்றவாளிகளாக கருதப்படுவதுடன் கைதும் செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

http://www.onlineuthayan.com/News_More.php?id=355332811901229997

கொமெடி உச்சிக்கட்டம்.

டெயிலி மிரர் காரன் அவிழ்துவிடுறான்.

என்ன ஆதாரம் இருக்கிறது?

சும்மா வாயை குடுத்து வேண்டி கட்ட போயினம்.

ரோகன் ஜெனோசைட் ரத்தினம் $53000 தண்ட காசு கேட்டு ராஜபக்சே குடும்பம் கொடுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ

சிறீலங்கா  இப்ப அனுமதிச்சு

வேலை  செய்ய விட்டுட்டு இருக்கிற  மாதிரி...............

அவனவன் படுகிற  பாடு

அதில் இருப்பவனுக்குத்தான் தெரியும்...

 

ஆனால் ஒன்று  மட்டும் தெரிகிறது

கலைத்துக்கலைத்து

ஓட இடமின்றி

தமிழன் திரும்பும் காலம் விரைவில் வரப்போகுது..

அதற்கு வெளிநாடுகளும் சாட்சிகளாகவும் 

ஆதரிப்பொர்களாகவும் மாற இந்த கலைத்தல் உதவப்போகுது

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
புலம்பெயர் செயற்பாட்டாளர்களின் குடும்பங்களை தாயகத்தில் வேட்டையாடும் நடவடிக்கை ஆரம்பம்?
 
01 ஏப்ரல் 2014
 
கரவெட்டி அல்வாய் தெற்கில் 61 வயதுடைய கணபதிப்பிள்ளை யோகராணி பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-
 
புலம்பெயர் செயற்பாட்டாளர்களின் குடும்பங்களை தாயகத்தில் வேட்டையாடும் நடவடிக்கை ஆரம்பம்?
விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புக்களை ஒருபுறம் இலங்கை அரசு தடை செய்துள்ள நிலையில் மறுபுறம் புலம்பெயர் செயற்பாட்டாளர்களது குடும்பங்களை தாயகத்தில் வேட்டையாடும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது.
 
 
அவ்வகையில் கரவெட்டி அல்வாய் தெற்கினை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழு பிள்ளைகளின் தாயாரான கணபதிப்பிள்ளை யோகராணி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பிள்ளைகள் அனைவரும் புலம்பெயர் தேசங்களில் வசித்து வருவதாகவும் அவர்களை தொடர்புபடுத்தியே இக்கைது இடம்பெற்றுள்ளதாகவும் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.
 
கைதான பெண்மணிக்கு கொழும்பிலும் வீடொன்று உள்ளதாகவும் அங்கு தங்கியிருந்த நிலையிலேயே அவர் கைதாகி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.
 
முன்னதாக வடமராட்சியின் கரவெட்டி அல்வாயிலுள்ள வீட்டிற்கு வெள்ளைவான் நபர்கள் தேடிச் சென்றிருந்ததாகவும் அதன் தொடர்;ச்சியாகவே கொழும்பில் அவர் கைதாகி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105043/language/ta-IN/article.aspx

ஜெனிவாவில் அமெரிக்காவை ஒருமாதிரி சமாளித்தாலும் புலம் பெயர் அமைப்புகளினால் செய்யப்பட்ட பிரச்சாரங்கள், நடவடிக்கைகளினால் இடுப்பு உடைய இலங்கை விழுந்துபொய்முகம் கிழிந்து, தூக்குகயிறு கண்முன் தெரிவதால்..அடாத்தான இப்படி பூச்சாண்டி வேலைகளில் இறங்கியுள்ளது.. முள்ளிவாய்க்கால் அழிவிற்கு தண்டணையில் இருந்து இனி தப்புவதற்கு வழி தேடுகிறது.. இதில் ஒன்று தான் புலம் பெயர்தமிழ்மக்களை வெருட்டல்..உருட்டல்.. புலம் பெயர்மக்கள் இன்னும் நெருக்கமாக ஆளும், எதிர்கட்சிகளுடன் நெருக்கமான உறவுகளைப்பேணி.. இலங்கையின் தந்திரங்களை அவர்களுக்கு புரியச்செய்து..வெளி நாடுகளில் இலங்கையை முற்றாக முடக்கும் நடவடிக்கைகளை உடன் தொடங்கவேண்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.