Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வயல் விழா, கலம் கட்டி மீன்பிடி..., சிறுவர் சந்தை

Featured Replies

DSC03898.JPG

-நவரத்தினம் கபில்நாத்

விவசாயத்தை மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கமளிக்கும் வயல் விழா வவுனியா முருகனூர் விவசாய பண்ணையில் வெள்ளிக்கிழமை (4) இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வெப்பம் நிலை காரணமாக, வவுனியா மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கான விளக்கங்களையும் மற்றும் தொழில்நுட்ப யுக்திகளை ஆராய்ந்து கொள்ளவதற்கான வழிவகைகளையும் விவசாய விரிவாக்கல் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.

இந் நிகழ்வில் வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வட மாகாண விவசாய பணிப்பாளர், வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி மாகாண பணிப்பாளர் அ. சகிலாபானு உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
DSC03884.JPG
DSC03890.JPG
 
கலம் கட்டி மீன்பிடி...

DSC00580.JPG
-குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாணத்து கடல்நீர் ஏரிகளில் கலம் கட்டி மீன்பிடி நடவடிக்கைகள் தற்போது அதிகரித்து வருகின்றன. ஆழம் குறைந்த கடல்நீரேரிகளில் சூரிய ஒளியின் தாக்கம் நேரடியாக உள்ளமையால் பெருமளவு கடல்தாவரங்கள் வளர்கின்றன. இதனால் மீன்களின் இனபெருக்கமும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

காக்கைதீவு, நாவாந்துறை, யாழ்.பண்ணையினை அண்டிய பகுதிகளில் இவ்வாறான மீன்பிடிகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

இவற்றில் இறால், கணவாய், நண்டு உள்ளிட்டவை அதிகளவில் பிடிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
DSC00584.JPG
 
 
 சிறுவர் சந்தை
123%20%282%29.jpg
-எஸ்.சசிக்குமார்

தம்பலகாமம் கிருபை முன்பள்ளி சிறார்களின் சிறுவர் சந்தையொன்று புதன்கிழமை (2) பாடசாலை முன்றலில் நடைபெற்றது.

இச் சிறுவர் சந்தை நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி ஸ்ரீபதி, தம்பலகாமம் இராணுவ முகாம் வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறுவர்கள் தாம் கொண்டு வந்த பொருட்களைவிற்பனை செய்தனர்.
123%20%284%29.jpg
123%20%287%29.jpg
123%20%288%29.jpg
123%20%2810%29.jpg
 

 

Edited by Athavan CH

ஐங்கரநேசன் அண்ணாவின் செயற்பாடுகள் எமது சமூகத்திற்கு மிகவும் தேவையானது.

புலம்பெயர் சமூகம் உதவி இவரின் செயற்பாடுகளை விரிவு படுத்தவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.