Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசத்துடன் இணைந்து செயற்படும் புலிகளை உயிருடனோ பிணமாகவோ பிடிக்க வேண்டும்:ஹெல உறுமய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அரசாங்கம் காலம் தாழ்த்தியமையினாலேயே பிரிவினை வாதம் மீள உருவாக்கப்பட்டுள்ளது. நாடு திரும்பியவுடன் கூட்டமைப்பின் உறுப்பினர்களான சம்பந்தன் சுமந்திரன் சுரேஷ் பிரமேச்சந்திரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகிய நால்வரையும் கைது செய்வதுடன்  விடுதலைப் புலி உறுப்பினர்களை கண்டறியும் விசாரணைக் குழுவொன்றினை உடனடியாக ஸ்தாபிக்க வேண்டும் என்று கோரியுள்ள அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய  சர்வதேசத்துடன்  இணைந்து செயற்பட்டு வரும் விடுதலைப்புலி உறுப்பினர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க வேண்டும். போராட்டத்திற்கு நாமும் தயார் எனவும் தெரிவித்துள்ளது. 
uthaya-gammanbila_3.jpg
ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதே இவ்வாறு நேற்று முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண அமைச்சர்  உதய கம்மன்பில தெரிவிக்கையில், 
 
விடுதலைப்புலி தீவிரவாதிகள் அழிக்கப்பட்டவுடனேயே பிரிவினைவாத சக்திகளையும் அழித்திருக்க வேண்டும். அன்று அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை முற்றாக தடை செய்திருந்தால் இன்று இலங்கையில் எவரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டிருக்காது. விடுதலைப்புலிகளை கட்டுப்படுத்திய பின்னர் அரசாங்கம் மனிதாபிமானமாக நடந்து கொண்டது. கைது செய்யப்பட்ட 11 ஆயிரத்திற்கும் அதிகமான விடுதலைப்புலிகளை புனர்வாழ்வளித்து சமூகத்தில் சேர்த்துக் கொண்டோம். ஆனால் அவர்களை மீண்டும் தூண்டி விட்டு நாட்டில் ஆயுத போராட்டமொன்றினை உருவாக்கும் வகையில் பிரிவினைவாத தலைமைச் சக்திகள் முயற்சிக்கின்றன.
 
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அன்று  விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர். ஆனால் இன்று அரசியல் போர்வையில் நாட்டிற்கு எதிராக செயற்பட்டு வருகின்றார். அதேபோல் சுமந்திரன் ஒரு கொடிய விஷப்பாம்பு. சர்வதேசத்தினை இலங்கைக்கு எதிராக திருப்பி போராட்டத்தினை தூண்டுவதில் சுமந்திரனுக்கு  முழுப்பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. சுரேஸ் பிரமேச்சந்திரன் அனந்தி சசிதரன் ஆகியோரும் அவ்வரிசையில் உள்ளனர். எனவே நாட்டிற்கு எதிராக சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சம்பந்தன் சுமந்திரன் சுரேஸ் பிரமேச்சந்திரன் ஆகிய மூவரையும் நாடு திரும்பிய உடன் உடனடியாக கைது செய்ய வேண்டும். அதேபோல் இன்று இலங்கைக்கு வெளியில் இருந்து கொண்டு நாட்டை நாசமாக்கும் வகையில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் செயற்பட்டு வருகின்றனர். இவர்களின் செயற்பாட்டை முழுமையாக   கட்டுப்படுத்த வேண்டுமாயின் இலங்கையில் சுயாதீன விசாரணைக் குழுவொன்றினை உருவாக்கி இவர்கள் தொடர்பிலான முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
இலங்கையில் விடுதலைப்புலிகளை உருவாக்குவதில் முக்கிய பங்கினை வி. உருத்திரகுமார், நெடியவன்,  விநாயகம், சுரேந்திரன் மற்றும் அடேல் பாலசிங்கம் போன்றோரும்  இமானுவேல் ஆகிய மத குருமாரும் செயற்பட்டு வருகின்றனர். சர்வதேச அமைப்புக்களின்  பணத்திற்காக இலங்கைக்குள் போராட்டங்களை உருவாக்கும் செயற்பாட்டில் இவர்கள் இறங்கியுள்ளனர்.
 
ஜெனீவா தீர்மானம் நிறைவேறிய பின்னர் இலங்கையில் மீண்டும் விடுதலைப்புலிகளின் கொள்கை உறுதியாக்கப்பட்டுள்ளது. எனவே இதனை உடனடியாக தடுக்க வேண்டும் என்றார். 
 
 

Edited by தமிழரசு

யாருப்பா இவர் விடிய காத்தால குரைக்கிறது?

முதலில் இவரின் சக்கரவர்த்தி லண்டன், டொரோண்டோ, சென்னை வரமுடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.