Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜய வருட ரா‌சி பல‌ன்க‌ள்! -2014

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜய வருட ரா‌சி பல‌ன்க‌ள்! . 2014
K.P. Vidhyadharan 
சனி, 12 ஏப்ரல் 2014 (15:36 IST)
 
விஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான ஜய வருடம் பிறக்கிறது. 14.4.2014 திங்கட்கிழமை காலை மணி 6.06க்கு சுக்ல பட்சத்து சதுர்த்தசி திதி, ஹஸ்தம் நட்சத்திரம் 2ம் பாதம், கன்னி ராசி மேஷ லக்னம் முதலாம் பாதத்தில், நவாம்சத்தில் மேஷ லக்னம் ரிஷப ராசியில், வியாகாதம் நாம யோகம் வணிசை நாம கரணத்தில், சித்தயோகம், நேத்திரம் ஜீவனம், நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் முதல் சாமத்தில் காகம் நடைப் பயிலும் நேரத்தில் சந்திரன் மகா தசையில், ராகு புக்தியில், செவ்வாய் அந்தரத்தில், சந்திரன் ஓரையில் ஜய வருடம் சிறப்பாக பிறக்கிறது. 
 
ஜய வருட ரா‌சி பல‌ன்களை ஜோ‌திட‌‌ ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர். 
 
ஜய வருட ராசி பலன்கள் - மேஷம்
 
1397288075-6939.jpg
வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்த நீங்கள், ஏமாற்றங்கள், அவமானங்களை கண்டு அஞ்சமாட்டீர்கள். இந்த ஜய வருடம் உங்களுக்கு 6வது ராசியில் பிறப்பதால் அடிக்கடி வேலை விஷயமாகவோ, வெளியூர்களுக்கோ சென்று வரவேண்டியிருக்கும். சிலருக்கு வெளிமாநிலத்திலோ அல்லது வெளிநாட்டிலோ வேலை கிடைக்கும். 
 
வருடம் பிறக்கும் போது உங்களுடைய ராசிநாதனான செவ்வாய் வக்ரமாகி நிற்பதால் ஒவ்வாமை, உடலில் சோர்வும் களைப்பும் வந்து நீங்கும். வெளியூர்களுக்குச் செல்லும்போதும் சுயமாக வாகனத்தை ஓட்டும்போதும் கவனம் தேவை. சகோதர வகையில் பிரச்னைகள் இருந்தால் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் மனத்தாங்கல் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது எதுவாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள்.  
 
ஜூன் 12 வரை உங்கள் யோகாதிபதியான குருபகவான் 3ம் வீட்டில் முடங்கிக் கிடப்பதனால் காரியத் தடைகளும், உறவினர், நண்பர் பகையும் வந்துபோகும். இளைய சகோதர வகையில் செலவுகளும், பிரிவுகளும் வந்து நீங்கும். ஜூன் 13ந் தேதி முதல் குரு 4ம் வீட்டில் சென்று அமர்வதால் ஓரளவு பணவரவு அதிகரிக்கும். ஆனால், தாயாரின் உடல்நிலை பாதிக்கும். வாகனம் அடிக்கடி பழுதாகும். உறவினர்களில் சிலர் கண்டும் காணாமல் சென்று கொண்டிருப்பார்கள். 
 
பூர்வீகச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். பங்குச் சந்தையில் பணம் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். பேருந்து, புகை வண்டியில் படிகட்டுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. சாலைகளை கடக்கும்போதும் அவசரம் வேண்டாம். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை தாமதமின்றி செலுத்தப் பாருங்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் மனைவி வழியில் உதவிகள் உண்டு. வெளிவட்டாரத்தில் புகழடைவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். உத்தியோகம், உயர் கல்வியின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டியிருக்கும். 
 
ஜய வருட ராசி பலன்கள் - ரிஷபம்
 
1397288780-4374.jpg
மனதில் பட்டதை பளிச்சென்று பேசும் நீங்கள், மற்றவர்களின் தவறுகளை முகத்துக்கு நேரே சுட்டிக்காட்டுவீர்கள். உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் குரு பகவான் வலுவாக அமர்ந்திருக்கும்போது இந்த ஜய வருடம் பிறப்பதால் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் ஆதரவு கிட்டும். இந்தப் புத்தாண்டு உங்களின் 5ம் வீட்டில் பிறப்பதால் அடிப்படை வசதிகள் உயரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். வரன் தேடித்தேடி அலுத்துப்போன உங்களின் மகளுக்கு இந்த ஆண்டு திருமணமும் சீரும் சிறப்புமாக முடியும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் யாவும் சாதகமாக முடியும். உங்களை மறந்துபோன தூரத்து உறவினர்கள் தேடி வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். சொந்த ஊரிலுள்ள பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு.
 
ஜூன் 12ந் தேதி வரை உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதால் நினைத்த காரியங்கள் சுலபமாக முடியும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிட்டும். புது வாகனம் வாங்குவீர்கள். ஜூன் 13ந் தேதி முதல் வருடம் முடியும் வரை குரு 3ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள், திட்டங்கள் தாமதமாகி முடியும். ஒரே வேலையை இரண்டு, மூன்று முறை முயன்று போராடி முடிக்க வேண்டியது வரும். அவ்வப்போது சோர்வடைவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். இளைய சகோதர வகையில் சங்கடங்கள் வரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துபோகும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். 
 
ஜூன் 20ந் தேதி வரை ராகுபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் தொடர்வதால் உங்களின் சின்னச் சின்ன கனவுகள் நனவாகும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கி லோன் கிடைக்கும். ஆனால், கேது 12ல் மறைந்து நிற்பதால் திட்டமிடாத பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் சுயநலவாதிகளை கண்டறிவீர்கள்.
 
சில நாட்கள் தூக்கம் குறையும். ஜூன் 21ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 5ல் ராகு அமர்வதால் பிள்ளைகளின் பிடிவாத குணம் அதிகமாகும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கேது 21ந் தேதி முதல் லாப வீட்டில் நுழைவதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் திடீர் முன்னேற்றம் உண்டாகும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கோயில் விசேஷங்கள், சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். 

 


ஜய வருட ராசி பலன்கள் - மிதுனம்
 
1397289639-6595.jpg
காசு பணத்திற்காக விலை போகாத நீங்கள், கொள்கை, கோட்பாடுகளுடன் வாழ்பவர்கள். உங்களின் யோகாதிபதியான சுக்கிரன் 9ம் வீட்டில் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன் பன்மடங்கு பெருகும். புதிய வேலைக்கு முயற்சி செய்ததற்கெல்லாம் நல்ல பலன்கள் கிட்டும். சலசலப்போடு இருந்த குடும்பம் அமைதிப் பூங்காவாக மாறும். இந்த ஜய வருடம் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் பிறப்பதால் மாதக் கணக்கில் தள்ளிப்போன காரியங்களெல்லாம் விரைந்து முடிவடையும். 
 
பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தாயாரின் ஆரோக்யம் மேம்படும். சொத்து வாங்குவதற்காக திட்டமிட்டீர்களே! இப்போது அதற்கான முன் பணத்தைத் தருவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதியதாக வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். 
ஜூன் 12 வரை உங்கள் ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுங்கள். வாயுத் தொந்தர வால் நெஞ்சு வலிக்கும். யூரினரி இன்பெக்ஷன் வந்து செல்லும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. 
 
கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தை தவிர்க்கப் பாருங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். தண்ணீரை காய்ச்சி அருந்துங்கள். வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா என்று பார்த்து காசோலையைத் தருவது நல்லது. உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். ஜூன் 13ந் தேதி முதல் குரு 2ம் வீட்டில் சென்று அமர்வதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையும் திருப்பித் தருவீர்கள். 
 
குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். வழக்கால் இருந்த நெருக்கடிகள் வந்து நீங்கும். மழலை பாக்யம் கிடைக்கும். வீண் பழியிலிருந்து விடுபடுவீர்கள். சொத்துச் சேர்க்கையும் உண்டு. நீங்கள் சொல்லா ததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு விலகியிருந்த சொந்த-பந்தங்களெல்லாம் வலிய வந்து பேசுவார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்தி வைப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. 
 
ஜய வருட ராசி பலன்கள் - கடகம்
1397290183-2114.jpg
புரட்சிகரமான சிந்தனையுடைய நீங்கள், தனக்கென துன்பம் வந்தாலும் கூட அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயங்குவீர்கள். உங்களின் பாதகாதிபதியான சுக்கிரன் 8ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் இதுவரை கடினமானதாக இருந்த  காரியங்களை யெல்லாம் எளிமையாக முடித்துக் காட்டுவீர்கள். புதிய பொறுப்புகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். 
 
அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். இந்த ஜய வருடம் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் பிறப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகை பிறக்கும். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 
சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தள்ளிப்போன விஷயங்கள் முடியும். 
 
எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். பழைய சொத்தை விற்று புது வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். வீடு கட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். ஜூன் 12 வரை உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12ம் வீட்டில் குரு மறைந்து காணப்படுவதால் ஒரு பக்கம் பணவரவு இருந்தாலும் மறுபக்கம் அதற்கேற்ப செலவினங்களும் கூடிக் கொண்டே போகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று காணிக்கையை செலுத்துவீர்கள். 
 
ஜூன் 13ந் தேதி முதல் குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் உடல் நலத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை வந்து விலகும். தலைவலியாக இருந்தாலும் பெரியதாக பயம் தோன்றும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் புகையிலை சார்ந்த விஷயங்களை தவிர்க்க வேண்டும். மஞ்சள் காமாலை, காய்ச்சலால் சோர்வடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் வரும் சின்னச் சின்ன பிரச்னைகளையெல்லாம் பெரிதாக்கிக் கொண்டிருக்க வேண்டாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மூன்றாம் நபர் தலையீட்டை தவிர்ப்பது நல்லதாகும். ஈகோ பிரச்னையால் மன இறுக்கம் அதிகரிக்கும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஜய வருட ராசி பலன்கள் - சிம்மம்
1397290730-3883.jpg
தையும் மேலோட்டமாக பார்க்காமல் ஆழமாக அலசி ஆராய்வதில் வல்லவர்கள் நீங்கள்தான். உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் இந்த ஜய வருடம் பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கொப்பளிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு கட்டுவீர்கள். 
 
உங்களின் ராசியை சுக்கிரன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அழகு, இளமைக் கூடும். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி நவீன ரக வண்டி வாங்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். 
 
வைகாசி, ஆனி மாதங்களில் உங்கள் ராசிநாதன் சூரியன் பலம் பெற்றிருப்பதால் புது முயற்சிகள் யாவும் பலிதமாகும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள்.  
 
ஜூன் 12 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் குரு தொடர்வதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். 
 
மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். மழலை பாக்யம் கிட்டும். ஜூன் 13ந் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 12ல் மறைவதால் வீண் விரயம், ஏமாற்றம், தூக்கமின்மை, செலவுகள் வந்துபோகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை 
கவனமாகக் கையாளுங்கள். பணப் பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
 
ஜூன் 20ந் தேதி வரை கேது 9ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையாரின் ஆரோக்யம் பாதிக்கும். சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வரக்கூடும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். தந்தை வழிச் சொத்துக்களை பெறுவதில் பிரச்னைகள் வந்து நீங்கும். ஜூன் 20ந் தேதி வரை ராகு 3ம் வீட்டில் இருப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மனோபலம் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. வேற்று மதத்தவர், மொழியினரால் பயனடைவீர்கள். தடைபட்ட திருமணம் கூடி வரும். 
 
ஜய வருட ராசி பலன்கள் - கன்னி
1397291186-3495.jpg
ஈரப் பார்வையால் எல்லோரையும் தன் வசம் ஈர்க்கும் நீங்கள் எப்போதும் இதயத்திலிருந்து பேசுவீர்கள். உங்கள் ராசிநாதனான புதன் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் தடைகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தோற்றப் பொலிவு கூடும். நட்பு வட்டம் விரிவடையும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். உறவினர்கள் உங்களை புரிந்துகொண்டு வலிய வந்து உதவுவார்கள். 
 
பூர்வீகச் சொத்தை உங்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைப்பீர்கள்.  
உங்கள் ராசியிலேயே இந்த ஜய வருடம் பிறப்பதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். அவ்வப்போது கோபப்படுவீர்கள். அடிக்கடி தலைவலி, வாயுப் பிரச்னையால் நெஞ்சு எரிச்சல், தோலில் நமைச்சல், நரம்புக் கோளாறு வந்து நீங்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். அவசர முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள்.
 
வருடம் பிறக்கும்போது செவ்வாய் வக்ரமாகி உங்கள் ராசிக்குள் அமர்ந்திருப்பதுடன், சுக்கிரனும் 6ம் வீட்டில் பலவீனமாகி நிற்பதால் மன இறுக்கம் அதிகமாகும். பணப் பற்றாக்குறை ஏற்படும். மின்சார சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் பிணக்குகள் வரும். சொத்துப் பிரச்னையை சுமுகமாக தீர்க்கப் பாருங்கள். எதிர்தரப்பு வாய்தாவால் வழக்குகள் தள்ளிப்போகும். 
 
ஆனி, ஆடி, மார்கழி, மாசி மாதங்களில் திடீர் திருப்பங்களும், யோகங்களும் உண்டாகும். ஜூன் 12 வரை குரு 10ல் தொடர்வதால் வேலைச்
சுமையால் அசதி, சோர்வு வந்து நீங்கும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, இரவல் வாங்கவோ வேண்டாம். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். உங்களை யாரும் மதிக்கவில்லை, யாருமே புரிந்து கொள்ளவில்லையே என்றெல்லாம் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்கிற பயமும் வரும். 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஜய வருட ராசி பலன்கள் - துலாம்
1397291651-4176.jpg
எல்லோரும் எல்லாம் பெறவேண்டும் என்று நினைக்கும் பொதுவுடைமைவாதிகளே! உங்கள் ராசிநாதனான சுக்கிரன் வலுவாக 5ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஜய வருடம் பிறப்பதால் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். புதிய யோசனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். அனுபவப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். 
 
மழலை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தந்து உற்சாகப்படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்தை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்களை வாங்குவீர்கள். இந்த வருடம் உங்கள் ராசிக்கு விரயஸ்தானமான 12ம் வீட்டில் பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயமும் உண்டாகும். வெளியூர் பயணங்கள் உண்டு. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சில நாட்களில் தூக்கம் குறையும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனதை வாட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த கோயில்களுக்கு குடும்பத்தாருடன் சென்று வருவீர்கள். வீட்டை விரிவுப் படுத்திக் கட்டுவீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பி சொந்த விஷயங்களையெல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். 
 
ஜூன் 12 வரை குருபகவான் 9ம் வீட்டில் நிற்ப தால் பிரச்னைகளை தொலைநோக்குப் பார்வையு டன் தீர்க்கும் சூட்சுமத்தை உணர்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை விரைந்து முடிப்பீர்கள். வங்கிக் கடனின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து மணமகள் அமைவார். மகளின் உயர்கல்வி சிறப்பாக அமையும். 
 
உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். ஜூன் 13ந் தேதி முதல் குரு 10ம் வீட்டில் நுழைவதால் யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சில நேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். எல்லோரும் பாரபட்சமாக உங்களிடம் நடந்து கொள்வதாக குறைக் கூறுவீர்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் நகை, பணத்தையெல்லாம் வங்கியில் பாதுகாப்பாக வைத்துச் செல்வது நல்லது. வீட்டில் களவுபோக வாய்ப்பிருக்கிறது. சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். 
 
ஜய வருட ராசி பலன்கள் - விருச்சிகம்
 
1397292819-1834.jpg
அதிரடியாக செயல்பட்டு உடனடியாக தீர்வு காண்பதில் வல்லவர்களே! உங்களின் ராசிநாதனான செவ்வாய் லாப வீட்டில் இருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள்.
 
உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். இந்த ஜய வருடம் உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது பிறப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கனிவு பிறக்கும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். 
 
ஜூன் 12 வரை குருபகவான் 8ல் மறைந்து நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாய மடைவீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பலவருடங்கள் நெருக்கமாக பழகியவர்கள் கூட உங்களை குறை கூறுவார்கள். 
 
ஜூன் 13ந் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் நுழைவதால் திடீர் பணவரவு, யோகமெல்லாம் உண்டாகும். உங்களைப்பற்றிய இமேஜ் ஒருபடி உயரும். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் குறையும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். மகளின் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சொந்த-பந்தங்களின் சுயரூபம் அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.   
   
ஜூன் 20ந் தேதி வரை கேது உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்பதால் வேற்று மதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். கோயிலை புதுப்பிக்க நன்கொடை வழங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஜூன் 21ந் தேதி முதல் கேது ராசிக்கு 5ம் வீட்டில் நுழைவதால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். சிலர் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். உறவினர்களில் சிலர் உங்களை காரியம் ஆகும் வரை பயன்படுத்திக் கொண்டு விலகு கிறார்கள் என்று ஆதங்கப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தை அதிகம் செலவு செய்து சீர் செய்வீர்கள்.  
 
ஜூன் 20ந் தேதி வரை ராகு ராசிக்கு 12ம் வீட்டில் மறைந்திருப்பதால் பழைய பகை, கடனை நினைத்து கலங்குவீர்கள். அடுத்தவர்களின் குடும்ப விஷயத்தில் அத்துமீறித் தலையிட வேண்டாம். தாயாருக்கு கை, முழங்கால் வலி, சிறுசிறு அறுவை சிகிச்சை வந்துபோகும். எதிர்காலம் பற்றிய பயம் வரும். ஜூன் 21ந் தேதி முதல் ராகு லாப வீட்டில் நுழைவதால் எதிர்ப்புகள் விலகும். ஷேர் மூலம் பணம் வரும். வேற்று மொழி பேசுபவர்கள் நண்பர்களாவார்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். தடைப்பட்ட கல்யாணம் கூடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். சொந்த ஊரில் மதிப்பும் மரியாதையும் கூடும். கடன் பிரச்னைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். உங்களை ஏளனமாகவும், இழிவாகவும் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். புது பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். சிலர் அயல்நாடு செல்வீர்கள்.  

 


ஜய வருட ராசி பலன்கள் - தனுசு
 
1397293185-7117.jpg
பொதுவாக அமைதியை விரும்பும் நீங்கள், தர்க்கம் என வந்து விட்டால் இடியாக முழங்குவீர்கள். இந்த ஜய வருடம் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் பிறப்பதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குடும்ப வருமானம் உயரும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 
 
உங்கள் ராசிக்கு சாதகமான நட்சத்திரத்தில் புதன் சென்று கொண்டிருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உற்சாகமாக எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். சிலர் வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் அமைப்பீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். நினைத்திருந்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். 
 
ஜூன் 12 வரை உங்கள் ராசிநாதனான குருபகவான் 7ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் திருமணம், சீமந்தம் என அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தள்ளிப்போன கல்யாணம் கூடி வரும். புண்ணிய தலங்களுக்குச் சென்று முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள். நண்பர் வீட்டுக் கல்யாணத்தை திறம்பட எடுத்து நடத்துவீர்கள். வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். 
 
ஜூன் 13ந் தேதி முதல் குருபகவான் ராசிக்கு 8ல் சென்று மறைவ தால் வீண் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில வேலைகளை போராடி முடிக்க வேண்டியது வரும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பெயர், புகழ், கௌரவம் குறைந்து விடுமோ என்ற ஒரு பயம் வரும். வாகனத்தை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. 
 
ஜய வருட ராசி பலன்கள் - மகரம்
1397287977-5217.jpg
 
மனசாட்சி ஒதுக்கும் செயல்களை மந்திரியே சொன்னாலும் செய்ய மறுப்பவர்களே! உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் இந்த ஜய வருடம் பிறப்பதால் தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். உங்கள் மீது உங்களுக்கே இருந்து வந்த அவநம்பிக்கைகள் நீங்கும். சாதிக்கும் எண்ணம் உருவாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வி.ஐ.பிகள் அறிமுகம் கிடைக்கும். ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சமூகத்தில் மதிக்கத்தகுந்த அளவிற்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். 
 
உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் சுக்கிரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மாதக் கணக்கில் தடைப்பட்டு தள்ளிப்போன காரியங்களெல்லாம் விரைந்து முடியும். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். பூர்வீகச் சொத்தின் பங்கை கேட்டு வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். படித்துப் பட்டம் வாங்கியும் உங்கள் கல்வித் தகுதிக்கேற்ப உத்தியோகம் இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். 
 
ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் திடீர் பணவரவு, வீடு, ஜூன் 12 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்து கிடப்பதால் முதல் முயற்சியிலேயே சில வேலைகளை முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிப்பீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். வீண் பழிகள் வரக்கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். 
 
ஜூன் 13ந் தேதி முதல் குரு 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அழகும் இளமையும் கூடும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு விரைவில் கூடிவரும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த சிறு சிறு பிரச்னைகள் நீங்கும். இருவரும் மனம் விட்டுப் பேசி செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஜய வருட ராசி பலன்கள் - கும்பம்
1397294235-7167.jpg
உள்ளம் அழுதாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் நகைச்சுவையாக பேசுபவர்களே! உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் குரு வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஜய வருடம் பிறப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தள்ளிப்போன அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். 
 
வீடு கட்ட அரசாங்க அனுமதி கிடைக்கும். வங்கிக் கடன் உதவியும் கிட்டும். மனைவி உங்களின் புதுத் திட்டங்களை ஆதரிப்பார். மனைவி வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயமும் உண்டாகும். சவால்களை சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி பைசல் செய்வீர்கள்.
 
ஆனி, ஆடி, ஆவணி மாதப் பிற்பகுதி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் ஓரளவு பணவரவும், பதவியும் வந்து சேரும். மகளுக்கு திருமணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 8ல் செவ்வாய் நிற்கும்போது ஜய வருடம் பிறப்பதால் அடிவயிற்றில் வலி, சிறுசிறு விபத்துகள், சகோதர வகையில் மனத்தாங்கல், சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துபோதும். இரவு நேரப் பிரயாணங்களின் போது உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அதுபோல சுயமாக வாகனத்தை ஓட்டும்போது வேகத்தை குறைத்து ஓட்டுங்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.
 
ஜூன் 12ந் தேதி வரை குருபகவான் சாதகமாக இருப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். ஜூன் 13ந் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் மறைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்ப மிட்டு வைக்க வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்த முயற்சிப்பார்கள். 
 
ஜய வருட ராசி பலன்கள் - மீனம்
1397294666-6286.jpg
 
யார் மனதும் புண்படாதபடி பேசும் நீங்கள், ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்டிருப்பீர்கள். உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் இந்த ஜய வருடம் பிறப்பதால் உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். அழகும் இளமையும் கூடும். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வாட்டி வதைத்துக் கொண்டிருந்த பிரச்னைகளுக்கெல்லாம் இனி தீர்வு கிடைக்கும். தள்ளிப்போன திருமணம் உடனே முடியும். உங்கள் பலவீனங்களையெல்லாம் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்வீர்கள்.  
 
சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரத்தில் செல்லும்போதும் இந்த வருடம் பிறப்பதால் வீராவேசமாகப் பேசுவதைவிட, கனிவாகப் பேசி எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பது தான் நல்லது. பணப்பற்றாக்குறையைப் போக்க கூடுதலாக உழைப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும். உங்களைப்பற்றிய நல்ல அபிப்ராயம் மனைவிவழி உறவினர்கள் மத்தியில் அதிகரிக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். 
 
ஜூன் 12 வரை உங்கள் ராசிநாதனான குருபகவான் 4ம் வீட்டில் நிற்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். அவருடன் வீண் பிரச்னைகள் வந்துபோகும். உங்களைப்பற்றிய விமர்சனங்களும் அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்களும் ஏற்படும். ஜூன் 13ந் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் நுழைவதால் வசதி, வாய்ப்புகள் ஓரளவு பெருகும். வருமானத்தை உயர்த்த அதிரடி திட்டங்கள் தீட்டி உழைப்பீர்கள். பிரபலங்கள், தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். கல்யாணம், கச்சேரி என்று வீடு களைகட்டும். மனை வாங்கிப் போட்டு வெகுநாட்களாகிவிட்டதே! அதில் இப்போது வீடு கட்டி முடிப்பீர்கள். 
 
எவ்வளவோ சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் குழந்தை பாக்யம் தள்ளிப் போனவர்களுக்கு அழகான வாரிசு உருவாகும். பிள்ளைகளிடம் இருந்த பிடிவாத குணம் மாறும். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனின் கூடாநட்பு விலகும். பொறுப்பாக நடந்து கொள்வார். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். கண்டும், காணாமல் சென்று கொண்டிருந்த சொந்த-பந்தங்கள் வலிய வந்து உறவாடுவார்கள். அரசாங்க விஷயங்களில் இருந்து வந்த தேக்க நிலை மாறும்.  

http://tamil.webdunia.com/article/special-astro-predictions/jaya-tamil-new-year-rasi-predictions-114041200027_1.html

  • கருத்துக்கள உறவுகள்

 

 
ஜய வருட ராசி பலன்கள் - கடகம்
1397290183-2114.jpg
 
புரட்சிகரமான சிந்தனையுடைய நீங்கள், தனக்கென துன்பம் வந்தாலும் கூட அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயங்குவீர்கள். 
------
கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும்.

 

எனது ராசிக்கு கூறியுள்ள பலன்கள்.... அத்த‌னையும் உண்மை. :rolleyes: 

இணைப்பிற்கு... நன்றி கறுப்பி. :)

  • கருத்துக்கள உறவுகள்
ஈரப் பார்வையால் எல்லோரையும் தன் வசம் ஈர்க்கும் நீங்கள் எப்போதும் இதயத்திலிருந்து பேசுவீர்கள். உங்கள் ராசிநாதனான புதன் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் தடைகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தோற்றப் பொலிவு கூடும். நட்பு வட்டம் விரிவடையும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். உறவினர்கள் உங்களை புரிந்துகொண்டு வலிய வந்து உதவுவார்கள். 
 

 

 

நன்றிகள், கறுப்பி...! 
பிறந்ததுக்கே, நீங்கள் இணைத்த ராசி பலன் தான், என்னை ஒரு மனுசனா மதிச்சிருக்கு! :D
 
தொடர்ந்து எழுதின பலனில, கவிட்டுக்கொட்டினது வேற விஷயம்! :o
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எண்டைக்கு இவள் பாவிக்கு வாழ்க்கைப்பட்டேனோ அண்டு தொடக்கம் சாத்திரம் பாக்கிறதையே விட்டுட்டன்...... :D
 
மனுசிக்கு ஏழரைச்சனியெண்டால் எனக்கும் அதுதான்
   "      பொங்குசனியெண்டால்                "                     "
   "      குரு பெயர்ச்சியெண்டால்             "                     "
   "      செவ்வாய் தோசமெண்டால்        "                     "
 
தகவலுக்கு நன்றி கறுப்பி. :)
  • கருத்துக்கள உறவுகள்

மகரத்துக்கும் ,கும்பத்துக்கும் ஓகே ..எனக்கும் ஓகே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது ராசிக்கு கூறியுள்ள பலன்கள்.... அத்த‌னையும் உண்மை. :rolleyes: 

இணைப்பிற்கு... நன்றி கறுப்பி. :)

கனவுத் தொல்லையால் அவதிப்பட்டிருக்றீர்கள் என்று மட்டும் தெரியுது

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில மூண்டு  சிங்கங்கள், ம்... பார்ப்போம்...! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.