Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முற்போக்கு தமிழ் தேசியகட்சி என்ற பெயரில் புதியகட்சி ஒன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முற்போக்கு தமிழ் தேசியகட்சி என்ற பெயரில் புதியகட்சி ஒன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்:

 

 

newparty_CI.jpg

அரச  ஆதரவு மற்றும் தீவிர எதிர்ப்பு அரசியல் போக்கின் மத்தியில் நடுநிலை வகிக்கும் வகையில் செயற்படப்போவதாக கூறி; முற்போக்கு தமிழ் தேசிய கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இக்கட்சியின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று யாழிலுள்ள விடுதியொன்றில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் ஆரம்பம் தொடர்பாக ஊடகவியிலாளர் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது. இதன்போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாயகமாக அறிவிக்கப்பட்ட விஜயகாந்த் கருத்து வெளியிடுகையில்,

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களுக்காகவே முற்போக்கு தமிழ் தேசிய கட்சி இன்று ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. இங்கு பல தமிழ் கட்சிகள் இருந்தாலும், அவையனைத்தும் தேர்தல் வாக்குகளுக்காக செயற்படுகின்ற அதே வேளையில், அக்கட்சியின் பிரதிநிதிகளும் தமது கதிரைகளை முன்னிலைப்படுத்தியே செயற்பட்டு வருகின்றனர். தமிழ் மக்களுடைய வாழ்வாதாரம், பொருளாதாரம் என்பனவற்றினை மேம்படுத்தி அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகளையே எமது கட்சி தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளது. இந்தக் கட்சிக்கு கல்விமான்கள் புத்திஜீவிகள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரவித்துள்ளதுடன், பலர் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

இங்குள்ள மக்களுக்கு எது தேவையோ அதற்கேற்ற வகையிலேயே கட்சியின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். தமிழ் மக்களுக்காக செயற்படுகின்ற எந்தக் கட்சியுடனும் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். ஆகவே, எமது கட்சியைப் பலப்படுத்தி, எமது செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

ஈபிடிபி கட்சியின் யாழ்.மாநகரசபை உறுப்பினராக இருந்து வந்திருந்த விஜயகாந்த் இக்கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ள நிலையில் இக்கட்சியினை தோற்றுவித்துள்ளார். அவரது கட்சியின் தலைவராக பாடசாலை அதிபரொருவரும் மற்றைய பதவிகளில் வைத்தியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களென பலரும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105543/language/ta-IN/----.aspx#.U0n7XeDkh5k.facebook

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.