Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னாபிரிக்காவின் நடுநிலையாளர் பாத்திரம் – கூட்டமைப்பு பச்சைக்கொடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SURESH_TNA.jpg

சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் வடக்கு, கிழக்குப் பகுதியில் அச்சமற்ற- இயல்பான சூழ்நிலை திரும்ப வேண்டும் என்று தென்னாபிரிக்கத் தரப்பிடம் தாம் வலியுறுத்தியதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

தென்னாபிரிக்கா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான உயர்மட்டக்குழு நேற்று கொழும்பு திரும்பியுள்ள நிலையில், அந்தப் குழுவில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தமது பயணம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். 

“தென்னாபிரிக்காவின் அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் அமைந்தது. 

ஆபிரிக்கத் தேசியக் காங்கிரசின் துணைத் தலைவர் சிறில் ராமபோசா தலைமையிலான குழுவினர் சிறிலங்கா வந்து பல்வேறு தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளனர். 

சிறிலங்கா அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுக்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தடைப்பட்டுள்ள நிலையில், அதை மீள ஆரம்பிப்பது குறித்த பேச்சுக்களை முன்னெடுக்க தென்னாபிரிக்கா முன்வந்துள்ளது. 

ஒரு நடுநிலையாளராக இல்லாவிட்டாலும், அனுசரணையாளர் என்ற வகையில் சிறிலங்கா அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே அவர்கள் செயற்படுவார்கள். 

சிறிலங்கா அரசின் வேண்டுகோளின்படியே அனுசரணையாளர் எனும் பொறுப்பை தென்னாபிரிக்கா ஏற்றுள்ளது. 

அதை தாங்களும் வரவேற்கிறோம். 

பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு முன்னர் வடக்கு,கிழக்குப் பகுதியில் மக்களிடையே அச்ச உணர்வற்ற இயல்பான நிலை திரும்ப வேண்டும் என்பதை எமது தரப்பு தென்னாபிரிக்கத் தரப்பிடம் வலியுறுத்தியது. 

சிறில் ரமபோசா தலைமையிலான குழுவினர் சிறிலங்கா வந்து சென்ற பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த விடயங்கள் தெளிவாகும். 

அரசியல் தீர்வுத் திட்டத்தின் அவசியம் குறித்து அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140414110323

இன்னும் ஒரு 5 வருடம் இழுவுண்டு, சர்வதேச விசாரணைகளில் இருந்து காப்பாற்றி, முழுஇலங்கையும் சிங்கள நாடாக்குவதற்கு கூட்டமைபின் தலைசெய்யும் சதி. கடைசியில் சிங்களம் தமிழர்களுக்கும், தென்னாபிரிக்காவிற்கும் பே பே.. இருந்து பாருங்கள்..ஜெனிவாவில் காப்பாற்ற முடியாதை..தென்னாபிரிக்க மூலம் சாதிக்கும் குறுக்கு வழி...உலகத்தை விலத்த போடப்படும் நாடகம்.. உசாராகுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா தென்னாபிரிக்காவை வைத்து தனது காயை நகர்த்த முயல்கிறது என்ற சந்தேகம் எனக்கும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் புலிகளுக்கும் கூட்டமைப்புக்கும் உள்ள வேறுபாடு.

 

புலிகள் மக்களட்டச் சொல்லிட்டு வெளிப்படையத்தான்.. பேசுவாங்க. யார் மத்தியஸ்தர் என்று மக்களட்டச் சொல்லிட்டுத்தான்.. அவைட பங்களிப்பு என்ன என்பதை மக்களோட எண்ணத்துக்கு ஏற்ப வரையறுத்திட்டுத்தான் பேசுவாங்க. அவங்கள பயங்கரவாதிகள் ஆக்கிட்டாங்க.

 

கூட்டமைப்பு எல்லாத்தையும் மக்களுக்கும் மண்ணுக்கும் மறைச்சு ரகசியமா மூடிமறைச்சு முடிவெடுத்துச் செய்யினம். மக்களின் உணர்வுகளுக்கு கொஞ்சமும் மரியாதையில்லை. சர்வதேச விசாரணைக்கு எதிராக வாக்களித்த தென்னாபிரிக்கா.. எப்படி எங்களுக்கு நடுநிலை வகிக்க முடியும்.

 

சந்திரிக்கா அம்மையாரும் தென்னாபிரிக்காவை இந்தப் பிரச்சனைக்க நுழைக்க வெளிக்கிட புலிகள் திறமையாகக் காய் நகர்த்தி அதனை தடுத்தார்கள். நோர்வேயை கொண்டு வந்தார்கள். நோர்வே தென்னாபிரிக்கா அளவிற்கு தமிழர்களின் வலியை உணராத நாடாகத் தெரியவில்லை..! உணர்ந்தும் எதையும் செய்ய முடியாத நாடாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது தான் உண்மை. ஆனால் தென்னாபிரிக்கா..?????! :icon_idea:

இன்னும் ஒரு 5 வருடம் இழுவுண்டு, சர்வதேச விசாரணைகளில் இருந்து காப்பாற்றி, முழுஇலங்கையும் சிங்கள நாடாக்குவதற்கு கூட்டமைபின் தலைசெய்யும் சதி. கடைசியில் சிங்களம் தமிழர்களுக்கும், தென்னாபிரிக்காவிற்கும் பே பே.. இருந்து பாருங்கள்..ஜெனிவாவில் காப்பாற்ற முடியாதை..தென்னாபிரிக்க மூலம் சாதிக்கும் குறுக்கு வழி...உலகத்தை விலத்த போடப்படும் நாடகம்.. உசாராகுங்கள்..

அது வேறு டிப்பார்ற்மென்ட் இது வேற டிப்பார்மென்ட்  . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அது வேறு டிப்பார்ற்மென்ட் இது வேற டிப்பார்மென்ட்  . :icon_mrgreen:

 

 

செய்கிறது ஒரே சுத்துமாத்து தான். :)

தமிழரசுக்கட்சியில் தந்தை செல்வா ஒருவர் மட்டுமே ஒரு நேர்மையான அரசியல்வாதி அவருக்கு பிறகு வந்தவர்கள் எல்லாம் ஈழம், தனி நாடு என்று வடக்கிலும், கிழக்கிலும் தமிழ்மக்களின் வாக்குகளுக்கு போலி முழக்கங்கள் இட்டு தேர்தலில் வென்று பின்னர் கொழும்பில் போய் சிங்களவர்களுடன் இன்றும் விருந்தும் மருந்துக்கும்(குடி) மயங்கி தமிழர்களுக்கு(இலட்சியத்திற்கு) எதிராக மாறி(கதிகாமரை கொடுத்து)இன்றுவரை சிங்ககொடிதூக்கி விருந்துகளில் கலந்துண்டு தன் சொந்த வாழ்க்கை இலட்சியங்களை தமிழர்பெயரால் நடத்தும்... இவர்களினால் தான் எமக்கு எதுவும் இன்றுவரை கிடையாமல் தமிழ்மக்களின் வாழ்க்கை சீரழிந்து போய் உள்ளது... மற்ற இனங்களில் சொந்த இனத்திற்கு தான் முதல் இடம்.. எதிர்காலத்தில் மக்கள் விழிப்பு பெறாவிட்டால் இலவு காத்த கிளி கதைதான்.. இதுவரைக்கும் எதாவது நன்மை தமிழ்மக்களுக்கு இவர்களால் கிடைத்துள்ளதா? புலம் மக்களால் தான் சிங்களத்தை சர்வதேச விசாரணைகளிலிருந்து காப்பாற்ற முடியவில்லை என்பதை இவர்களை அடக்கி தாருங்கள் என சிங்களத்திடம் அழுவதும் இவர்களே என கசிகிறது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.