Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள் ஊடகங்களில் இருந்து

Featured Replies

  • தொடங்கியவர்

ரி.ஆர்.ஓ.நிதியில் 5 1/2 கோடி மட்டுமே மத்திய வங்கியில் மீதி!

விடுதலைப்புலிகள் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகளை உடைய தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பெயரில் மத்திய வங்கியிலிருக்கும் வைப்புக் கணக்குகள் சம்பந்தமாக மத்திய வங்கி அண்மையில் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து வெளியாகியிருக்கும் தகவல்களுக்கேற்ப, மேற்படி ரீ.ஆர்.ஓ. அமைப்பினர் வெளிநாடுகளிலிருந்து கடல்கோள் அனர்த்தங்களுக்கான நிவாரணங்களுக்கென்று சுமார் 400 கோடி ரூபா வரையான பெருந்தொகையைப் பெற்று மத்திய வங்கியில் வைப்புச் செய்திருந்ததாகவும் அத் தொகையில் 394 கோடி ரூபா வரையான தொகை மேற்படி புனர்வாழ்வு அமைப்பால் மீள எடுக்கப்பட்டு விட்டதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய வங்கியின் விசாரணைகளிலிருந்து வெளியாகியிருக்கும் தகவல்களில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மேற்படி ரி.ஆர்.ஓ. அமைப்பின் மத்திய வங்கியிலுள்ள வைப்புக் கணக்கு காட்டும் விபரங்களுக்கேற்ப அதுவரையில் கடல்கோள் அனர்த்த நிவாரணங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட 400 கோடி ரூபாவரையான நிதி அந்த அமைப்பின் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாகவும் ஆயினும் நடப்பு வருடம், அதாவது 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அந்த வைப்புக்கணக்கில் ரூபா ஐந்து கோடியே அறுபத்து மூன்று இலட்சம் மட்டும் மீதியாக இருந்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எனவே, கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி மத்திய வங்கி மேற்படி ரி.ஆர்.ஓ. அமைப்பின் பேரில் வங்கியிலிருக்கும் வைப்புக் கணக்கு மீதான கொடுக்கல் வாங்கல்களைத் தடை செய்த பொழுது கணக்கிலிருந்த வைப்புப் பணத்தில் பெரும் பங்கு எடுக்கப்பட்டு விட்டதென்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மேலும் இவ்வாறு தமிழர் புனர்வாழ்வு அமைப்புக்குக் கிடைத்த அனர்த்த நிதிகள் பற்றிய விபரங்களுக்கேற்ப ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெவ் நிறுவனம், மற்றும் சேவ் த சில்றன், அக்ஷன் எயிட், உலக தொழில் நிறுவனம் ஆகியனவும் கடற்ல்கோள் அனர்த்த நிவாரணங்களுக்கான மனிதாபிமான உதவியாகப் பெருந்தொகை நிதிகளை மேற்படி அமைப்புக்கு வழங்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இவ்வாறு கிடைத்த பெருந்தொகையான நிதிகளையும் வைப்புச் செய்வதற்கும், கொடுக்கல் வாங்கல்களைச் செய்வதற்கும் ஏதுவாக இந்தத் தமிழர் புனர்வாழ்வு அமைப்பு 164 வைப்புக் கணக்குகளைப் பேணி வந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைப்புக் கணக்குகளை மக்கள் வங்கி, இலங்கை வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி, வர்த்தக வங்கி, செலான் வங்கி, சி.ஏ.பி.சி. வங்கி, ஸ்ரான்டேர்ட் சார்டெட் வங்கி ஆகிய வங்கிகளில் ரி.ஆர்.ஓ.நிறுவனம் வைத்துள்ளது.

ரி.ஆர்.ஓ.அமைப்பு இவ்வாறு குறித்த வங்கிகளில் வைத்திருந்த 164 வங்கிக் கணக்குகளிலும் 148 வைப்புக் கணக்குகள் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த வங்கிக் கிளைகளிலேயே திறக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது. -லங்காதீப: 9.10.2006

http://www.thinakkural.com/news/2006/10/11...s_page12638.htm

  • Replies 62
  • Views 17.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஒரே நாளில் நான்கு பிரதேசங்களை விட்டு புலிகளை விரட்டியடிப்பு

கிழக்கு மாகாணப் பிராந்தியங்களில் புலிகள் அமைப்பினருக்கு எதிராக அண்மைக் காலங்களில் பாதுகாப்புப் படையினர் தொடுத்து வரும் தீவிர தாக்குதல்களின் தொடர்ச்சியாக கடந்த 8 ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதல்களில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பிரதேசங்களை விட்டு புலிகள் இயக்கத்தினரை படையினர் துரத்தியடித்ததாகவும் தொடர்ந்து அப் பிரதேசங்களை படையினர் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும் பாதுகாப்புத் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, புலிகள் இயக்கத்தினருக்கு எதிராக படையினர் தீவிர தாக்குதல்களை கந்தல்காடு, கங்கை, மணியரசங்குளம், இறால்குழி ஆகிய நான்கு பிரதேசங்களிலும் மேற்கொண்டு அப்பகுதிகளிலிருந்து புலிகள் இயக்கத்தினரை விரட்டியுள்ளதாக பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தப் பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக கூடுதலாக நடமாடி தமது நடவடிக்கைகளை அதிகரித்து வந்துள்ளதாகவும் இவ்வாறு அவர்களின் செயற்பாடுகள் பற்றி கிராமவாசிகள் தரப்பிலிருந்து தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்தே படையினர் இவ்வாறு தாக்குதல்களை ஆரம்பித்ததாக பாதுகாப்புத் துறை கூறியுள்ளது.

மேலும் குறித்த கந்தல்காடு, கங்கை, மணியரசங்குளம், இறால்குழி ஆகிய பிரதேசங்களிலம் அவற்றை அண்டிய பகுதிகளிலும் புலிகள் இயக்கத்தினர் தமது நடவடிக்கைகளை அதிகரித்து வந்ததால் திருகோணமலை துறைமுகம், கடற்படை முகாம்கள் மற்றும் மூதூர் இராணுவ மத்திய நிலையங்கள் அமைந்திருக்கும் தீவிர பாதுகாப்புப் பகுதிகளில் முப்படையினருக்கும் பொதுமக்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்ததாகவும் இதன் காரணமாகவே, படையினர் துரிதமாகச் செயற்பட்டு குறித்த நான்கு பிரதேசங்களிலிருந்தும் புலிகள் இயக்க பயங்கரவாதிகளை விரட்டியடித்து பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருந்ததாகவு

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனுக்கும் தமிழ்ச்செல்வனுக்கும் இடையே அதிகாரப் போட்டி

விடுதலைப் புலிகள் அமைப்பின் உயர் மட்டத் தலைவர்கள் அடங்கிய நிர்வாக சபையில் கருத்து வேறுபாடு காரணமாக உட்பூசலும் பிளவும் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் இயக்கத்தின் ஏனைய பிரமுக தலைவர்களுக்கும் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வனுக்கும் மற்றும் சில முக்கிய உறுப்பினர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இயக்கத்துக்குள்ளேயே இரண்டு பிரிவினராகப் பிரிந்து செயற்பட ஆரம்பித்திருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பிரபாகரனுக்கும் தமிழ்ச்செல்வனுக்குமிடையே இதுவரை வெளிப்படையாக மோதல்கள் ஏற்படவில்லையெனவும் இவ்வாறு பிரபாகரனை முன்னிலைப்படுத்தி அல்லது பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு குழுவினரும் தமிழ்ச் செல்வனை முன்னிலைப்படுத்தும் ஒரு குழுவுமாக இரண்டு குழுவினர் விடுதலைப் புலிகள் அமைப்பில் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இரண்டு குழுவினருக்குமிடையே கருத்து மோதல்கள் தற்போது தான் வெளிப்படையாகத் தோன்ற ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு புலிகள் அமைப்பில் இரண்டு குழுக்கள் இயங்குவதாகக் கூறப்படும் நிலையில், தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமான குழுவினர் தமிழ்ச் செல்வனுக்கு எதிராக தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளில் நடைமுறையிலுள்ள அரசியல் நிலைமை பற்றியும் யுத்த நிலைமைபற்றியும் தமிழ்ச் செல்வனுக்கு ஏற்ற முறையில் தலைவர் பிரபாகரனுக்கு அறிவிப்பதில்லை என வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழர் கூட்டணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் புதுடில்லியில் இந்தியத் தலைவர்களை சந்திக்க முடியாமல் போன விடயத்திலும் தமிழ்ச் செல்வன் மீது குற்றச் சாட்டு கூறப்பட்டுள்ளது. இதேவேளை புலிகள் இயக்கத்தின் படை நடவடிக்கை பற்றிய பாதுகாப்பு பேச்சாளர் இளந்திரையன் பிரபாகரனைச் சார்ந்த குழுவைச் சேர்ந்தவரெனவும் அண்மையில் அவர் வெளியிடும் அறிக்கைகளுக்கு எதிராக தமிழ்ச் செல்வன் மாறுபட்ட அறிக்கைகளை விட ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு புலிகள் அமைப்பில் இயங்குவதாகக் கருதப்படும் இரண்டு குழுக்களில் தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமாக செயற்படும் குழுவில் புலிகள் அமைப்பின் நிதித்துறைச் செயலாளர் தமிழேந்தி, புலிகள் இயக்கப் பொலிஸ் பிரிவுத் தலைவர் ஜி.நடேசன், கல்வித்துறைப் பொறுப்பாளர் இளங்குமரன், கடற்புலிகள் பிரிவுத் தலைவர் சூசை, நீதித்துறை பொறுப்பாளர் பரா, பாதுகாப்புச் பேச்சாளர் இளந்திரையன் ஆகியோர் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறே புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வனுக்கு விசுவாசமாகச் செயற்படும் குழுவில் புலிகள் இயக்க புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், புலித்தேவன், பிரபல பிரதேசத் தலைவர்கள் சொர்ணம் மற்றும் எழிலன், பானு ஆகியோர் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

-லங்காதீப: 15.10.2006-

http://www.thinakkural.com/news/2006/10/19...s_page13240.htm

  • கருத்துக்கள உறவுகள்

புலனாய்வு எச்சரிக்கையை கவனியாத முகமாலை இராணுவ நடவடிக்கை

முகமாலையில் பாதுகாப்புப் படையினர் பாரிய தாக்குதல்களை நடத்தத் திட்டமிடுவதாகவும் அதற்குத் தயாராக இராணுவச் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் விடுதலைப்புலிகள் அமைப்பு முன்னரே யுத்தநிறுத்த கண்காணிப்பு குழுவினருக்கு முறைப்பாடு செய்திருந்தது. ஆயினும், இராணுவத் தரப்பில் புலிகள் இயக்கத்தின் இவ்வாறான முறைப்பாடுகளை நிராகரித்து மறுப்புத் தெரிவித்துவிட்டது.

பின்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவு புலிகளின் இந்த முறைப்பாடு சம்பந்தமாக தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு முகமாலையில் பாதுகாப்புப் படையினரின் முகாம்களை அண்டிய எல்லையோரப் பிரதேசங்களில் புலிகள் இயக்கப் போராளிகள் பெருந்தொகையில் திரண்டிருப்பதாகப் பாதுகாப்புத் துறையினருக்கு அறிவித்திருந்தது.

தொடர்ந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் படையினர் தரப்புக்கு அறிவித்திருந்த புலனாய்வு தகவல்களில் புலிகள் இயக்கத்தினர் முகமாலைப் பகுதியில் பாரிய தாக்குதல்களை நடத்தப்போகிறார்கள் எனவும், அத்துடன், இவ்வாறான தாக்குதலுக்காக புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வேறு பிரதேசங்களிலிருந்து பெருந்தொகையான இயக்க உறுப்பினர்களையும் மேலதிக ஆயுதங்களையும் புலிகள் இயக்கத் தலைவர்கள் கொண்டு வந்துள்ளதாகவும் முன்கூட்டியே பாதுகாப்புத் துறைக்கு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

இவ்வாறு புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் புலிகள் அமைப்பு முன்கூட்டியே முகமாலைப் பிரதேசத்தில் தமது போராளிகளையும் ஆயுதங்களையும் குவித்து வருவது பற்றிப் பாதுகாப்பு அடிப்படையில் கவனமாகச் சிந்தித்துப் பார்த்து அதற்குப் பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்த பின்னரே குறித்த இராணுவ நடவடிக்கையை ஆரம்பிப்பதற்காக அரசியல் தலைவர்களிடம் பாதுகாப்புத்துறையின் தலைவர்களிடமும் அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிலைப்பாடு ஏன் அப்பொழுது இல்லாமல் போனது என்பதே தற்போது கிளப்பப்படும் கேள்வியாக உள்ளது.

-லங்காதீப விமர்சனம்: 17.10.2006-

http://www.thinakkural.com/news/2006/10/19...s_page13239.htm

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படையினர் ஆயுதங்களை ஒப்படைக்கும் போதே தற்கொலை தாக்குதல் நடாத்தப்பட்டது

கடந்த 16 ஆம் திகதி தம்புள்ள ஹபரண வீதியிலுள்ள திகம்பதன சந்தியில் வைத்து கடற்படையினர் பயணம் செய்யும் வாகனங்கள் மீது புலிகள் இயக்கத்தின் தற்கொலைப் படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் காயங்களுக்குள்ளாகி தம்புள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கடற்படையின் மின்சாரப் பிரிவைச் சேர்ந்த சுதேஷ் யசன்ன அட்டிபொல எனப்படும் கடற்படைவீரர் மேற்படி தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பற்றித் தெரிவிக்கையில், கடற்படையினர் ஆயுதங்களை ஒப்படைத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே புலிகள் இயக்கத்தினரின் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் அவர் தெரிவிக்கையில் கடந்த 16 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு மேற்படி கடற்படையினர் வீடுகளுக்குச் செல்வதற்காக விடுமுறையில் காங்கேசன் துறையிலிருந்து புறப்பட்டதாகவும், திருகோணமலையை அடைந்த பின்னர் அங்கிருந்து ஹபரணைக்கு பஸ்களில் புறப்பட்டதாகவும் இவ்வாறு கடற்படையினர், இராணுவத்தினர் உட்பட சுமார் 300 படையினர் கடற்படைக்குச் சொந்தமான 13 பஸ்களில் பிரயாணம் செய்து பிற்பகல் 1.25 மணியளவில் ஹபரணை சந்தியைக் கடந்து திகம்பதன சந்தியை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேற்படி, திகம்பதன சந்தியிலிருந்து படையினர் கொழும்பு செல்லும் பஸ்களில் பயணம் செய்வதாகவும், இவ்வாறு பயணம் செய்வதற்கு முன்னர் அவர்களிடமிருக்கும் துப்பாக்கி, குண்டு துளைக்காத கவசம் ஆகியவற்றை உரிய பாதுகாப்பு அதிகாரிகளிடம் அந்த இடத்தில் வைத்தே திரும்ப ஒப்படைப்பதாகவும் இவ்வாறு சம்பவதினம் கடற்படையினர் ஆயுதங்கள் கவசங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே வெள்ளைநிற சிறியரக கொள்கலன் வாகனம் ஒன்று திடீரென்று வேகமாக வந்து அவ்விடத்தில் பஸ் வண்டியுடன் மோதி வெடித்ததாக மேலும் மேற்படி கடற்படை வீரர் கூறியுள்ளார்.

-லங்காதீப: 17.10. 2006-

http://www.thinakkural.com/news/2006/10/19...s_page13237.htm

  • கருத்துக்கள உறவுகள்

ஹபரணையில் வெடித்துச் சிதறிய சாரதியின் முகம் புன்சிரிப்புடன் காணப்பட்டதாம்

கடந்த 16 ஆம் திகதி ஹபரணை பிரதேசத்தில் திகம்பொத்தான பகுதியில் கடற்படை வீரர்களை பலிகொண்ட வெடிபொருட்கள் ஏற்றி வந்த கொள்கலன் லொறியைச் செலுத்தி வந்த சாரதியின் சிதறிய உடல் பகுதிகள் மேற்படி சம்பவத்தின் பின்னர் படையினரால் கண்டெடுக்கப்பட்டன. தற்போது அந்த உடல் பகுதிகள் குருநாகல் வைத்தியசாலையில் இறந்த சடலங்கள அறையில் வைக்கப்பட்டுள்ளன.

புலிகள் இயக்க தற்கொலைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட வெடிபொருட்கள் நிரப்பிய லொறி மூலமான இந்தப் பயங்கரமான தாக்குதலின் போது சாரதியின் உடல் வேறு, தலைவேறு, கை, கால்கள் வேறாக வெடித்துச் சிதறி விட்டதாகவும் பின்னர் உடலின் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டு ஒன்றாகச் சேர்த்து எடுக்கப்பட்ட நிலையிலேயே குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும், உடல் பகுதிகள் சிதறி விட்ட போதும் அவருடைய தலை அவ்வளவாகச் சேதப்படாதநிலையில் அடையாளம் காணக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தாக்குதலின் போது உடல் சிதறடிக்கப்பட்டு முகப்பகுதி வேறாக வீசப்பட்ட நிலையிலும், அந்தச் சாரதியின் முகம் புன்சிரிப்புடன் காணப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறியுள்ளன. தொடர்ந்து அந்தத் தலைப்பகுதி ஏற்ற முறையில் மேலும் சரி செய்யப்பட்டு வைக்கப்படுவதற்காக கொழும்புக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இராணுவப் பாதுகாப்புடனேயே அந்தச் சாரதியின் உடல்பகுதிகள் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி வெடிபொருட்களடங்கிய லொறி மூலமாக புலிகள் இயக்க தற்கொலைப் படைப் பயங்கரவாதிகள் மேற்கொண்ட இந்தப் பாரிய வெடிப்புத் தாக்குதலின் போதுஉயிரிழந்தவர்களின் உடல் பகுதிகள் ஸ்தலத்திலிருந்து 55 அடிக்கு அப்பாலும் வீசப்பட்டதாகவும் அவ்வாறு ஏனைய கடற்படை வீரர்களின் இறந்த உடல்களுடனேயே இந்தப் புலிகள் இயக்கச் சாரதியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,படையினர் இந்தச் சாரதியின்உடலைக் கண்டெடுத்தபோது அவரின் உடல்பகுதிகள் சாரதி இருக்கையுடனேயே வீசப்பட்டுக் கிடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

-திவயின-18-10-2006

  • தொடங்கியவர்

ஜெனீவாவில் புலிகளுக்கு எதிராக சிங்கள, தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

[25 - October - 2006] [Font Size - A - A - A]

சுவிற்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் மனிதப் படுகொலைகள் உட்பட அனைத்துப் பயங்கரவாத செயற்பாடுகளையும் கைவிட்டு சமாதான முயற்சிகளில் அர்ப்பணத்துடன் ஈடுபட வேண்டுமெனக் கோரியும் அழுத்தம் கொடுக்கும் நோக்கத்திலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருப்பதாகவும் இந்த ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை பிற்பகல் ஜெனீவா நகரில் ஆரம்பமாகும் எனவும் சுவிற்சர்லாந்து ஷ்ரீலங்கா நாட்டவர் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷ்ரீலங்கா அரசாங்கத் தரப்புகளும், விடுதலைப்புலிகள் இயக்கத் தரப்பினரும் ஜெனீவாவில் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளவிருக்கும் நிலையில் உத்தேச பேச்சுவார்த்தை நிகழ்வுக்கு முன்னதாகவே ஜெனீவா நகரில் புலிகள் இயக்கத்தினருக்கு எதிராக நடத்தப்படவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றுவதற்காக பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, சைப்பிரஸ் போன்ற நாடுகளிலிருந்து அங்கு வாழும் ஷ்ரீலங்கா நாட்டவர்கள் பெருந்தொகையில் ஜெனீவா நகருக்கு வரவுள்ளனர் எனவும் மேற்படி ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புலிகள் இயக்கத்தினரை பயங்கரவாத செயற்பாடுகளைக் கைவிட்டு உண்மையான அர்ப்பணத்துடன் சமாதான நடவடிக்கைகளில் பங்கு பற்றும்படி சர்வதேசம் அறியும்படி பாரிய அழுத்தத்தைக் கொடுப்பதே உத்தேச ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளின் நோக்கமென ஜெனீவாவிலுள்ள சிங்கள இனத்தவர்களின் அமைப்பைச் சேர்ந்த மேற்படி ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர் ஒருவர் லங்காதீபவுக்கு கூறியுள்ளார். மேலும் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்திலும் ஊர்வலத்திலும் ஐரோப்பாவிலுள்ள 5 நாடுகளில் வசிக்கும் சிங்கள இன மக்களைப் போலவே அங்கு வாழும் ஷ்ரீலங்கா நாட்டைச் சேர்ந்த தமிழ் மக்களும் பெருந்தொகையில் பங்கு பற்றவிருப்பதாக மேற்படி ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார். -லங்காதீப: 23.10.2006-

http://www.thinakkural.com/news/2006/10/25...s_page13688.htm

  • தொடங்கியவர்

யோகநாதன், லொக்பெயர் தம்பதியே ஜேர்மனி நிதியுதவியை நிறுத்தியதற்கு காரணம்

[25 - October - 2006] [Font Size - A - A - A]

ஜேர்மனியில் இயங்கி வரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சர்வதேச பிரிவு கிளை அலுவலகத்தினால் ஷ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிரான மாநாடு ஒன்று ஜேர்மனியில் பேட்போல் நகரில் நடத்தப்படுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவு

  • தொடங்கியவர்

சிறுவர்கள் புலிப்படையில் சேர்க்கப்பட்டிருப்பதை நிரூபிக்கும் காலி துறைமுகத் தாக்குதல்

சிறிலங்காவின் தெற்கு கடற் பிராந்தியத்தில் பிரதான துறைமுகமாக விளங்கும் காலி துறைமுகத்தில் நிலைகொண்டிருக்கும் கடற்படையினரின் தக்ஷிண கடற்படை முகாம் தொடர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் நோக்கத்தில் கடந்த வாரம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவினர் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல் முயற்சி கடற்படையினரால் முறியடிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த கடற்பிரதேசப் பகுதிகளில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் இவ்வாறு காலித் துறைமுகத்தில் தக்ஷிண கடற்படையினர் முகாம்களைத் தாக்கவந்த புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் எட்டுப் பேரின் சடலங்கள் காலிப் பிரதேசத்திலுள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையில் படையினரால் ஒப்படைக்கப்பட்டன. இந்த எட்டுப்பேரின் சடலங்கள் சம்பந்தப்பட்ட மரண பரிசாதனை கடந்த 22 ஆம் திகதி பிற்பகல் குறித்த கராப்பிட்டிய வைத்தியசாலையில் நடத்தப்பட்டதாகவும் இந்த சடலப் பரிசோதனைகளின்போது தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப மேற்படி புலிகள் இயக்கத்தினரின் சடலங்கள் எனக்கருதப்படும் எட்டு இறந்த உடல்களிலும் ஒன்று 18 வயதுக்குக்கும் கீழ்ப்பட்ட வயதுடைய புலிப்படையைச் சேர்ந்த சிறுவன் ஒருவனின் உடல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மரண பரிசோதனைகள் காலி கராப்பிட்டிய வைத்திய பீடத்தைச் சேர்ந்த விரிவுரையாளரும், விசேட வைத்திய நிபுணருமான நீதிமன்ற மரண விசாரணை வைத்திய அதிகாரி யூ.பி.பி.பெரேரா, விசேட வைத்திய நிபுணருமான நீதிமன்ற மரண விசாரணை வைத்திய அதிகாரி எச்.எம்.மஹிந்த ஆகியோர் உட்பட வைத்திய நிபுணர்கள் குழுவினால் நடத்தப்பட்டுள்ளன. இந்தச் சடலப் பரிசோதனைகளின்போது மேற்படி உயிரிழந்த சிறுவனின் கைவிரல் அடையாளப் பரிசோதனை மற்றும் டி.என்.ஏ.பரிசோதனைக்காக உடலின் பகுதிகள் பெறப்பட்டதாக குறித்த மரணவிசாரணைக் குழுவின் தலைவராகிய விசேட வைத்திய நிபுணர் யூ.பி.பி.பெரேரா கூறியுள்ளார். மேலும் இறந்த அந்த சிறுவனின் உடல் பகுதிகளை அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்படும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இயக்கத்தினரை பயங்கரவாத செயற்பாடுகளைக் கைவிட்டு உண்மையான அர்ப்பணத்துடன் சமாதான நடவடிக்கைகளில் பங்கு பற்றும்படி சர்வதேசம் அறியும்படி பாரிய அழுத்தத்தைக் கொடுப்பதே உத்தேச ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளின் நோக்கமென ஜெனீவாவிலுள்ள சிங்கள இனத்தவர்களின் அமைப்பைச் சேர்ந்த மேற்படி ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர் ஒருவர் லங்காதீபவுக்கு கூறியுள்ளார். மேலும் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்திலும் ஊர்வலத்திலும் ஐரோப்பாவிலுள்ள 5 நாடுகளில் வசிக்கும் சிங்கள இன மக்களைப் போலவே அங்கு வாழும் ஷ்ரீலங்கா நாட்டைச் சேர்ந்த தமிழ் மக்களும் பெருந்தொகையில் பங்கு பற்றவிருப்பதாக மேற்படி ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார். -லங்காதீப: 23.10.2006-

http://www.thinakkural.com/news/2006/10/25...s_page13688.htm

ஜெனிவாவில் தமிழர்கள் சிங்கள அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்யலாம் தானே

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் நிதி சேகரிக்கும் சர்வதேச வலையமைப்பு அழிக்கப்பட வேண்டும் என்கிறது வாஷிங்டன் ரைம்ஸ்

ஐக்கிய அமெரிக்காவின் பிரபல செய்திப் பத்திரிகையாகிய `வாஷிங்டன் ரைம்ஸ்' நாளேட்டில் கடந்த 18 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள ஆசிரியபீடம் சார்ந்த முக்கிய கட்டுரையொன்றில் ஸ்ரீ லங்காவின் இனப்பிரச்சினை மற்றும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் பற்றித் தெரிவிக்கப்பட்டிருக்கும் விமர்சனங்களில் ஸ்ரீ லங்காவில் யுத்த அனர்த்தத்தின் மத்தியில் வாழுகின்ற மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான ஒரே வழி அங்கு விடுதலைப் புலிகள் அமைப்பு அதன் தாக்குதல் நடவடிக்கைகளைக் கைவிட்டு சமாதானத்துக்காக அர்ப்பணத்துடன் செயற்படும்படியாக சர்வதேசம் அவர்களுக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுப்பதும் அத்துடன், அவ்வாறு அழுத்தம் கொடுப்பதற்குச் சாதகமாக உலகம் முழுவதும் புலிகள் அமைப்பினரால் நிதி உதவிகளைச் சேகரிப்பதற்காக ஏற்படுத்தியிருக்கும் தொடர்புகளின் வலையமைப்பை அழித்துவிடுவதுமே எனத் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வாஷிங்டன் ரைம்ஸ் நாளேட்டில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரை அந்தப் பத்திரிகையின் சொந்த விமர்சனம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அண்மையில் புலிகள் இயக்கத்தினரின் தாக்குதல்களில் 100 க்கும் அதிகமாக ஸ்ரீ லங்கா கடற்படையினர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னரே புலிகள் இயக்கத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் மேற்படி ஆசிரிய பீட விமர்சனக் கட்டுரையை கடந்த 18 ஆம் திகதி புதன்கிழமை வாஷிங்டன் ரைம்ஸ் வெளியிட்டுள்ளது.

மேற்படி கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் விமர்சனங்களுக்கேற்ப ஸ்ரீ லங்காவில் நடைமுறையிலிருக்கும் நியாயமான யுத்த நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை நடத்துவதில் ஸ்ரீ லங்கா அரசாங்கம் காட்டிவரும் தீவிர ஈடுபாட்டை விடுதலைப் புலிகள் அமைப்பும் காட்ட வேண்டுமெனவும், கடந்த இரண்டு தசாப்தங்களாக இவ்வாறான உண்மையான சமாதான ஈடுபாட்டைக் காட்டும் முயற்சிகள் புலிகள் இயக்கம் சார்பில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது யுத்த நிறுத்தம், சமாதானம் சம்பந்தப்பட்ட ஈடுபாட்டை அவர்கள் வெளியிட்டிருப்பதன் காரணம் யாதெனில், மீண்டும் யுத்த ஆயுதங்கள் உபகரணங்களை இரகசியமாக வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொண்டு மீண்டும் யுத்தத்தை ஆரம்பிப்பதே என `வாஷிங்டன் ரைம்ஸ்' கூறியுள்ளது.

மேலும், புலிகள் அமைப்புக்கு உண்மையில் சமாதானத்திலும் சகவாழ்விலும் நம்பிக்கை கிடையாதெனவும் அவர்களின் ஒரே நோக்கம் யுத்தத்தின் மூலம் மேலும் பிரதேசங்களை வென்றெடுப்பதே எனவும் குறிப்பிட்டுள்ளது அந்தப் பிரபல அமெரிக்கப் பத்திரிகை.

ஆயினும், இவ்வகையில் ஸ்ரீ லங்கா அரசு செயற்படாது நேர்மையான முறையில் நடந்துகொள்வதாக அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. மேலும், புலிகள் அமைப்புக்கு தமிழ் மக்களின் உண்மையான ஆதரவு கிடையாதெனவும், புலிகள் இயக்கத்தினர் தம்மை எதிர்க்கும் தமிழ் மக்களை வன்முறை, பலாத்காரம் மூலமாக வாய்மூடச் செய்துள்ளனர் என்றும் `வாஷிங்டன் ரைம்ஸ்' எடுத்துக் காட்டியுள்ளது.

தற்போது அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலர் றிச்சர்ட் பௌச்சர் ஸ்ரீ லங்காவுக்கு மேற்கொண்டிருக்கும் விஜயத்தை சிறந்த சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் தாக்குதல் நடவடிக்கைகள் பற்றிய அமெரிக்க அரசாங்கத்தின் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமெனவும் அத்துடன், புலிகள் இயக்கத்தினர் ஊலக நாடுகளில் நிதி சேகரித்து வருவதற்கு ஏதுவான அவர்களின் சர்வதேசத் தொடர்புகளின் வலையமைப்பை அழிக்கும்படி உலக நாடுகளுக்கு அறிவிக்க வேண்டுமெனவும் றிச்சர்ட் பௌச்சரைக் கோரியுள்ளது `வாஷிங்டன் ரைம்ஸ்' பத்திரிகை.

லங்காதீப: 22.10.2006.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

"புலிகளின் குரல்" மீதான தாக்குதலுக்கு புலிகளின் பதில் தாக்குதல் எங்கே?

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒலிபரப்புச் சேவையாகிய `புலிகளின் குரல்' ஒலிபரப்பப்படும் வானொலி நிலையமும் மற்றும் ஒலிபரப்புத் தொடர்புக் கோபுரங்களும் அந்த நிலையங்களைச் சுற்றியுள்ள சுமார் ஒரு சதுரகிலோமீற்றர் பரப்புள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள ஏனைய கட்டிடங்களும் கடந்த 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.45 மணிக்கு விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களில் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதை புலிகள் அமைப்பும் ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும், இந்தத் தாக்குதலில் அழிக்கப்பட்ட ஒலிபரப்புக் கோபுர உபகரணங்களின் பெறுமதி மட்டுமே 30 கோடி ரூபாவுக்கு மேற்பட்டதென புலிகள் அமைப்பினர் தமது இணையத்தளம் மூலம் தெரிவித்துள்ளனர். மேலும், வான் தாக்குதல்களின்போது துரைநாதர், ஹரிதாஸ் எனப்படும் இரண்டு புலிகள் இயக்க உறுப்பினர்கள் காயங்களுக்குள்ளானதாகவும் மேற்படி இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு `புலிகளின் குரல்' வானொலி நிலையங்கள், கோபுர உபகரணங்கள் அழிக்கப்பட்டுவிட்டாலும் வேறு ஒலிபரப்பு முறைகள் மூலம் `புலிகளின் குரல்' வழமைபோல் ஒலிபரப்பப்படுமெனவும் குறித்த புலிகள் அமைப்பின் இணையத்தளத்தில் புலிகள் அமைப்பு அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், `புலிகளின் குரல்' ஒலிபரப்பு நிலையம் வான் தாக்குதலில் அழிக்கப்பட்டுவிட்டதற்குப் பதில் நடவடிக்கையாக ஷ்ரீலங்கா அரச ஒலிபரப்பு நிலையம், ரூபவாஹினி நிலையங்கள் மீது புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்தக்கூடிய சாத்தியப்பாடு இருப்பதாகவும் எனவே, இந்த நிலையங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டுமெனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

புலிகள் அமைப்பின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கான சாத்தியப்பாடு சம்பந்தமாக அண்மையில் புலனாய்வுப் பிரிவினர் மூலமாக அவுஸ்திரேலிய அரசாங்கத் தரப்பிலிருந்து எச்சரிக்கை செய்வதற்காக தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கேற்ப கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையமோ அல்லது விமானப் படை முகாம்களோ புலிகள் அமைப்புகளின் அடுத்த தாக்குதல் இலக்குகளாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனாலேயே அவுஸ்திரேலியாவின் சுற்றுலாத்துறை அமைச்சு ஸ்ரீ லங்காவுக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலிய நாட்டவர்கள் ஒருமுறைக்கு இரண்டு முறை சிந்தித்துப்பார்த்த பின்னரே ஷ்ரீலங்காவுக்கு பயணம் செய்யும்படியும் அறிவுறுத்தியுள்ளது.

லங்காதீப விமர்சனம்:22.10.2006.

http://www.thinakkural.com/news/2006/10/26...s_page13763.htm

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாரிசில் புலிகளின் தொலைக்காட்சி சேவைக்காக பெருமளவில் சொத்துகள் கொள்வனவு

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஐரோப்பிய தொலைக்காட்சி சேவையாகிய ரி.ரி.என். (Tamil Televisoin Network) பிரான்சின் தலைநகர் பாரிசிலிருந்து செயற்பட்டு வருகிறது. புலிகளின் இந்தத் தொலைக்காட்சி சேவையின் தலைமை நிலையம் பாரிசில் அமைந்துள்ள போதிலுள் அதன் மற்றுமொரு அலுவலகம் சுவிற்சர்லாந்தில் சூரிச் நகரில் இயங்கிவருகிறது. இந்த நிலையம் புலிகள் அமைப்பின் ரி.ரி.என். தொலைக்காட்சி சேவையின் அலுவலகமாகச் செயற்படும் அதேவேளை புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவுக்காகச் சர்வதேச ரீதியில் செயற்படும் அனைத்து புலிகள் இயக்க உளவாளிகள் மற்றும் ஆதரவாளர்களின் புலனாய்வு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளும் இந்த ரி.ரி.என். தொலைக்காட்சி சேவையின் செய்மதித் தொடர்பு மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புலிகள் அமைப்பின் இந்த தொலைக்காட்சி சேவையின் லண்டன் மாநகரை மையமாகக் கொண்ட செயற்பாடுகளுக்கான பணிப்பாளராக இருப்பவர் மாகன் என்பவராகும். லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் புலிகள் அமைப்பின் ஐரோப்பிய வானொலிச் சேவையாகிய ஐ.பி.சி. ஒலிபரப்புச் சேவையின் தலைவராக ராமராஜ் என்பவர் செயற்பட்டு வருகிறார். இந்த இருவரும் ரி.ரி.என். தொலைக்காட்சி சேவையின் லண்டன் பணிப்பாளர் மாகனும் அண்மையில் லண்டனிலிருந்து ஷ்ரீலங்காவுக்கு வந்து பின்னர் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பிரதேசத்திற்குச் சென்றுள்ளளார்கள் எனவும் அங்கு அவர்கள் இருவரும் புலிகள் இயக்கத்தின் பிரதான முகாம் ஒன்றில் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றுள்ளார்கள் எனவும் மேலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இயங்கும் ரி.ரி.என். தொலைக்காட்சி சேவைக்காக அண்மையில் 100,000 யூரோ பெறுமதியான சொத்துகள் பாரிசில் விலைக்கு வாங்கப்பட்டிருப்பதாகவும் இதற்கான பணத்தை லண்டனில் புலிகள் இயக்கத்துக்காகச் செயற்படும் சாந்தன் எனப்படும் புலிகள் அமைப்பின் நிதி முகவரே கொடுத்துள்ளார் என்றும் பிரிட்டனில் வாழும் தமிழ் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட இயக்க நிதியிலிருந்தே பாரிசில் சொத்துக் கொள்வனவுக்கான பணத்தை அவர் வழங்கியுள்ளார் என்றும் மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரான்ஸ் நாட்டின் ஊடக அமைப்புகளின் ஒன்றியமாகிய ஐ.எஸ்.ஏ. எனப்படும் பிரான்ஸ் ஊடக கவுன்சில் இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பினால் சட்டவிரோதமாக ஐரோப்பாவில் நடத்திவரும் ஊடக நிலையங்கள் பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இதைத் தொடர்ந்து பாரிசில் அமைந்துள்ள புலிகள் ரி.ரி.என். தொலைக்காட்சிச் சேவை நிலையம் மற்றும் இலண்டனில் செயற்பட்டுவரும் புலிகள் இயக்க ஒலிபரப்புச் சேவையாகிய ஐ.பி.சி. (IBC) ஆகிய ஊடக சேவைகளைப் பற்றி விரிவான விசாரணைகள் பாரிசிலுள்ள பிரான்ஸ் ஊடக கவுன்சிலால் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புலிகள் அமைப்பின் இந்த ரி.ரி.என். தொலைக்காட்சி அதன் செய்மதி சேவை மற்றும் ஐ.பி.சி. ஒலிபரப்புச் சேவை ஆகியவற்றுக்கு எதிராகச் சட்டநடவடிக்கைகளை எடுப்பதற்காக பிரான்ஸ் நீதி அமைச்சை சேர்ந்த அரச வழக்கு தொடுப்புப் பிரிவின் பணிப்பாளருக்கு மேற்படி பிரான்ஸ் ஊடக கவுன்சில் அறிவிப்புக் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - திவயின: 02.11.2006.

http://www.thinakkural.com/news/2006/11/6/...s_page14602.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.